Thursday, 10 October 2013

திருமணம் அமைவது இல்லை.

ஒரு ஜாதகத்தில் லக்னம்  என்று ஓன்று இருக்கும் இல்லையா.... அதை ஓன்று என்று வைத்து கொண்டால் அதில் இருந்து கேந்திரம் என்று சொல்ல கூடிய 4 , 7 , 10 ம் இடங்களிலோ,  அல்லது திரிகோணம் என்று சொல்ல கூடிய 5 , 9 ம் இடங்களிலோ 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் அமைவது இல்லை. 
சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3 , 7 , 10 ம் இடத்தை பார்பார்.  அந்த வகையில்  லக்னாதிபதியாக வருகிற கிரகத்தையும், சந்திரனையும் சனி பகவான் பார்த்தால்,  அந்த அமைப்பை உடைய ஜாதகருக்கு திருமணம் நடப்பதில்லை. 

ஏன்?

பொதுவாக ஜாதகத்தில் சனி சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலே புனர்பூ தோசம் என்று பெயர்.   அது வாலிபத்தில் திருமணத்தை நடத்த விடாது.  நெருங்கி வந்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு விலகி போய்விடும். 

அடுத்து...

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய 7 ம் இடத்தில் சந்திரன்,  சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்து இருந்தால் மனபந்தால் ஏறும் அமைப்புக்கு மறுப்பு வந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 5 ம் அதிபதியாக வரக்கூடிய கிரகம்,  ராகு அல்லது கேதுவுடன்  சேர்ந்தால் திருமணம் நடப்பதில்லை,  அல்லது குழந்தைகள் பிறப்பது இல்லை. 

நான்கு கிரகங்கள் பத்தாம் பாவத்தில் இருந்தாலும்,  நாற்பது  வயதுக்கு முன் திருமணம் நடக்காது.   இப்படி பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஜோதிடர் சொல்லி முடித்து விட்டு சாம்பசிவத்தை ஏறிட்டு பார்த்தார். 

பிரமை பிடித்த மாதிரி இருந்த சாம்பசிவத்தை ஜோதிடரின் குரல் தான் இயல்பு  நிலைக்கு திருப்பியது. 

பிள்ளைவாள் ... இந்த பொண்ணோட ஜாதகத்திலே கிரக பாதிப்புகள் இருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக கவலை பட வேண்டாம்.  காயம் சின்னதா இருக்கும் போதே மருந்து போடணும் .  நம்மில் பலர்.. காயம் புரை ஓடிய பிறகுதான் அதை பற்றியே கவலை படுறது.

போகட்டும்... நான் பரிகாரம் சொல்றேன்.  செய்யுங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.

என்ன ஜோசியரே செய்யணும்?

பார்வதி சுயம்வர ஹோமம் செய்யணும்.  செய்தால் கல்யாணம் நடக்கும்.  உங்களுக்கு தெரிந்த ஐயரை கேட்டு,  ரொம்ப சுத்தமா, நியதிமாறாமல் ஹோமம் செய்தால் திருமணம் நடக்கும்.  செய்யுங்கோ. 

1 comment:

  1. check this link https://www.facebook.com/pages/Astamasitthigal/155320701329800?fref=nf

    ReplyDelete