Saturday, 30 November 2013

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டதி,ரேவதி இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டிவிடுவது நல்லது!!

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டதி,ரேவதி இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் ஒருவர் இறந்துவிட்டால் 6 மாதம் வரை பேயாக அலைவார்கள்...என் உறவினர் ..அவிட்டத்தில் இறந்தார்..அவர் இறந்து 6மாதத்தில் அந்த ஊரில் 10 பேரை 6 மாதத்தில் பயமுறுத்தி உயிரிழக்க செய்தார்..தன் பேரனையும் விட்டுவைக்கவில்லை..தாத்தா வர்றார் என்னைகூப்பிடுறார் என 8 வயது குழந்தை சொல்லிக்கொண்டே இறந்தது...அவர்கள் வீட்டு வேலைக்கார பெண்,இவர் ஆவி ரூபத்தில் வந்து பயமுறுத்துவதை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொண்டாள்..அவரது நெருங்கிய நண்பருக்கு அடிக்கடி காட்சி கொடுத்ததால் அவரும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்..

தன் அப்பாவின் ஜிப்பாவை ஆசையாக அணிந்துகொண்ட மகனை விரட்டி விரட்டி மேலே ஏறி அமர்ந்து மூச்சுதிணறலை உண்டாக்கினார்..தினமும் ஆவி ரூபத்தில் வீட்டுக்கு வந்து விடுவார் இவர் வருவதை சோதனை செய்ய வீட்டில் வாயிலில் மணல் பரப்பி வைத்தனர் அதில் லேசாக பாதமும் தெரிந்தது...சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் காலையில் அது குறைந்திருக்கும் .பூனைகள்,நாய்கள் தினமும் வீட்டை சுற்றி சுற்றி ஊளையிட்டன..அழுதன...

மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அக்காலத்தில் மீண்டும் இறந்தவர் வரக்கூடாது எனவும் மேலோகம் சென்றுவிடவேண்டும் எனவும் வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டுக்கு கொண்டு போவார்களாம்..சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்கனும்னு சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்..இப்போது 16ஆம் நாள் காரியம் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை அடங்க்யிருக்கும்படி செய்வதால் பெரிய பாதிப்பு வருவதில்லை..எனினும் மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டிவிடுவது முடிந்தவரைக்கும் நல்லது!!

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete