Sunday, 3 November 2013

டூ வீலரில் செல்வோர் கவனத்துக்கு :

டூ வீலரில் செல்வோர் கவனத்துக்கு : 

1) பைக்கில் ஏறும் முன்பு மனதளவில் சில நொடிகள் தயார் செய்து கொண்டு உக்காரவும் .. 

2) மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.

3) இறுக்கமான ஜீன்ஸ் லாம் அணிய வேணாம் நண்பர்களே !!

4) சைடு மிரர் எப்பவும் வண்டியில் இருக்க வேண்டும் .. ஸ்டைல் பண்றேன்னு எடுத்துடாதீங்க .. பின்னாடி வரும் வண்டிகள் கூட உங்கள் மீது மோதலாம் ... எனவே உங்கள் கவனம் பின்னாடி என்ன நடக்குது ன்னு அப்பப்போ இருக்கணும் ..

5) வண்டி ஸ்டார்ட் செய்த வுடன் சைடு ஸ்டான்ட் எடுத்தாச்சா ன்னு பாருங்க ..

6) ரொம்ப வேகம் வேண்டாம் .. அதுவும் ட்ராபிக் நிறைந்த பகுதி எனில் 30 கி.மீ க்கு மேல வேணாம் ..அப்புறம் உங்களை பேலன்ஸ் பண்ணிக்க முடியாது ... கீழே விழ நிறைய வாய்ப்பு இருக்கு ..

7) எதற்கெடுத்தாலும் முந்தி செல்வது , அடிக்கடி கட் பண்ணி ஓட்டுறது , வளைவில் ரொம்ப சாய்ந்து கொண்டு வளைப்பது இதெல்லாம் வேண்டாமே !

 செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவது , ஹெல்மெட் க்குள் வைத்து பேசுவது , ஹெட் போனில் பேசுவது , பாட்டுக் கேட்டுக் கொண்டே பேசுவது தயவு செய்து தவிருங்கள் ..

9) சிக்னலில் ரொம்ப அவசரம் காட்ட வேணாம் .. ரெட் சிக்னல் விழப் போகிறது என தெரிந்தால் , உங்கள் வலது கையை உடனே உயர்த்தி பின்னாடி வரும் வண்டிகளுக்கு சிக்னல் காட்டவும் .. இல்லாவிட்டால் உங்களை அறியாமல் பின்னாடி வேகமாய் வந்து உங்களை மொத வாய்ப்புகள் மிக அதிகம் ...

10 ) தயவு செய்து குடித்து விட்டு வண்டி ஓட்டாதீங்க ... குடிபழக்கம் கொண்டவர் நண்பர் வைத்து வண்டியில் போங்க ..

11 ) வண்டி ஓட்டும் போது தீவிர சிந்தனை வேண்டாம் .. உங்கள் கண்கள் , காதுகள் ரெண்டையும் ரொம்ப சார்ப்பா வைத்துக் கொள்ளவும் ..

12 ) மழைக் காலங்களில் மெதுவாக செல்லவும் ... டயர்கள் வழுக்கி விட சான்ஸ் அதிகம் .. வண்டி டயர்கள் பட்டன்கள் தேய்ந்து விட்டால் , புது டயர் மாத்தவும் .. இல்லாவிட்டால் சறுக்கி விழ வாய்ப்புகள் மிக அதிகம் ..

# பார்த்து பைக் டிரைவ் பண்ணுங்க பிரெண்ட்ஸ் .. சில விஷயங்கள் கேள்விப் பட்டதில் இருந்து மனசு வலிக்குது நம்மை நாம் தான் காத்துக் கொள்ள முடியும் .

1 comment: