Friday, 8 November 2013

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் என ஆகிவிட்டு..முன்பெல்லாம் வாழை இலையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்..இது சரியா..?> முதலில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது சரியான்னு பார்ப்போம்..

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதுதான் 
காந்த அலைகள் 
நம்மை சுற்றி,உலகை சுற்றி,இந்த அண்டம் முழுவதும் காந்த அலைகள் எப்போதும் இருக்கின்றன..பூமியில் புயல்,வெள்ளம்,பல்வேறு பருவநிலை மாற்ரங்கள் நிகழ்கின்றன..கருவில் குழந்தை உருவாகும்போதே சூரியனின் காந்த அலைகளும் மற்ற கிரகங்களின் காந்த அலைகளும் தாயின் கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும்...கரு உருவான நாளில் ,பிறக்கும் நாளில் சூரியன் மற்றும் பிற கிரகங்களில் காந்த சக்தியின் அளவுக்கு ஏற்ப குழந்தையின் வீரியம்,மனபலம்,செயல்பாடு தீர்மானிக்கப்படுகிறது..செல்போனில் ஒவ்வொன்றுக்கும்,எத்தனையோ வித்தியாசம் இருக்கிறதே அதுபோலத்தான்..நம் உடலிலும் காணப்படும் காந்த சக்தி எந்த உறுப்பில் குறைகிறதோ அங்கு நோய் உண்டாகிறது..!!
மங்கள்யான் ,
முருகன் அருளால் செவ்வாய்க்கு விண்கலம் மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டுவிட்டது.....24 நாட்கள் பூமியை சுற்றிவிட்டு அதன்பிந்தான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்கு போகப்போகிறது...இப்போது ஏவியதில் வெற்றி அவ்வளவுதான்..முழுமையான வெற்றியா என்பது 24 நாட்களுக்கு பின்னர் தெரியவரும்..செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியாச்சே இனிமேல் செவ்வாய் தோசம் அப்படீன்னு ஜோசியர்கள் யாரையும் பயமுறுத்த முடியாதே..என்றார் ஒருவர்..

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? செவ்வாயில் இருந்து வெளிப்படும் ஒளி மனிதர்களை பாதித்துக்கொண்டுதான் இருக்கும்..ஒவ்வொரு பெரிய கிரகமும் ஒவ்வொரு தாக்கத்தை உண்டாக்கிதான் எல்லா இயக்கமும் நடைபெறுகிறது ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஒளி அளவுகள் தான் காரணம்..சந்திராயன் சந்திரனுக்கு போனதால் பெள்ர்ணமி அன்று கடல் பொங்காமலா இருக்கு..? தினம் அலை கடலில் எழும்ப காரணம் சந்திரனின் ஒளிதான் அதுபோல ஒவ்வொரு கிரகத்தின் ஒளியும் பூமியில் ஒவ்வொரு விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன..

குருவில் இருந்து வெளிப்படும் மஞ்சள் நிற கதிரும்,சூரியனில் இருந்து வெளிப்படும் ஒரு வாயுவும் இணைந்துதான் பூமியில் உயிர்கள் உண்டாக காரணம்!!



உங்கள் தட்டில் உணவா...விஷமா ? மூன்று வகையான அரிசிகள் .....

ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.


சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1,

பரணி,கேட்டை, மகம் ,அவிட்டத்தில்,என்ன பிறந்தால் பலன் கொடுக்கும்..

பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார் என்பதும்,,யில் பிறந்தால் கோட்டை கட்டி வாழ்வார் என்றும் அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையிலும் தங்கம் புரளும் என்பதும்,மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆள்வார் என்பதும் ஜோதிட பழமொழிகள்....ஆனால் இது முழுமையாக பலிக்குமா..என கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்..காரணம் நட்சத்திரம் மட்டுமே எல்லாவற்றையும் கொடுத்துவிடாது..கிரகங்கள் அமைப்பும் இருந்தால்தான் வேலை செய்யும்..மகத்தில்தான் ஜெயலலிதா பிறந்தார்..தமிழகத்தை ஆளவில்லையா..என கேட்கலாம்..மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்தான் அந்த பலன் கொடுக்கும்..அதுவும் செவ்வாய்,குரு,சூரியன் போன்ற அரச கிரகங்கள் அவருக்கு பலமாக இருந்ததால் அவர் அரசாள முடிந்தது..தரணி ஆண்டாலும்,கோட்டை கட்டி வாழ்ந்தாலும் அரச கிரகங்கள் எனப்படும் குரு,செவ்வாய்,சூரியன் ஜாதகத்தில் ஒன்றுக்கொன்று மறையாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்..அப்படி இருந்தால் மேற்கண்ட பழமொழிகள் நிச்சயம் பலிக்கும்!!


No comments:

Post a Comment