Tuesday, 10 December 2013

பிரார்த்தனையின் நோக்கம் என்ன?

எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? இது பற்றி ஆங்கில தத்துவ மேதையும் ஆன்மிகக் கருத்துகளை அழகாக அளித்தவருமான டாக்டர் நார்மன் வின்சென்ட் பீல் பின்வருமாறு கூறுகிறார்:
நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.
பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் இருப்பதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.
பஸ்ஸில் பயணம் செய்யும்போதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப்பதாகப் பாவனை செய்து கொண்டு குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.
எப்போதும் “அது வேண்டும் இது வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.
உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும் சம்பாதித்துத் தரும் என்று உறுதியாக நம்புங்கள்.
பிரார்த்தனையின்போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.
கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவற்றைவிட அவர் கொடுத்ததும், கொடுப்பதும் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்.
ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.
உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரிவர நடத்தாதவர்களும் நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி என்பதை உணருங்கள்.
யார் யாருடைய நன்மை வேண்டிப் பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு – பிரார்த்தனை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்குப் பலன் கிடைக்கும். நாம் பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது ஆண்டவன் நமக்கு மிகவும் அருகில் வருகிறான் என்பதை உணருங்கள். இது எம்மதத்தவருக்கும் பொருந்தும்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete