Sunday, 1 December 2013

மொட்டை அடித்தல் ஏன் ?

மொட்டை அடித்தல் ஏன் ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு? 
...
ஆன்மீக ரீதியாக - தலையான பொருள் முடி. ஒவொரு மனிதருக்கும் தலை முடியானது கிரிடம் போன்றது. எங்கள் கிரிடத்தை உன் முன்னால் இறக்கி வைக்கிறோம் என்று இறைவனிடத்தில் வேண்டி முடி இறக்குதல் செய்கின்றனர். (முந்தய காலங்களில் இளவரசர்களை, அரச பதவியில் அமரவைப்பதர்க்கு முடிசூட்டு விழா (கிரிடம் சூட்டுவர்) என்று சொல்வது வழக்கம்.)

அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர்க்கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கு போழுது அந்த கர்ப்பையில் உள்ள மல ஜலங்களோடு மிதந்து கொண்டு இருக்கும் அப்படி இருக்கும் வேளையில் அந்த குழந்தையின் மயிர்கால்கள் வழியாக அந்த கெட்ட நீர் உள்சென்று ஊறி இருக்கும் ஆகையால் அதை குல தெய்வம் பெயர் சொல்லி மொட்டை அடிப்பது வழக்கம். அப்படி செய்யாமல் இருக்கும் குழைந்தகளுக்கு தலையில் சிரங்கு, புண் போன்றவை வருவதை பார்த்து இருப்பிர்கள்.

குழந்தை தாயின் கருப்பையில் வளரும் பொழுதே முடியும், நகமும் வளரும் ஆகவே அவைகளும் மனித உருப்புகளில் ஒன்று தான் ஆனால் அவை மீண்டும் வளரும் உருப்புகள்

1 comment:

  1. பிறந்த முடி எடுப்பதால், நோய் வராது குழந்தைகளுக்கு. மண்டைக் கரப்பான், பொடுகு, அழுக்கு போன்றவைகளால், குழந்தைகளுக்கு நோய் வரும். 10 அல்லது 12 வயது வரையுமே, முடியெடுத்து, அதன்பின் வளர விட்டால், முடி, அழகாக, நெருக்கமாக, செம்பட்டை இல்லாமல், நரை திரை(இளநரை) இல்லாமல், முடி பளபளப்பாக இருக்கும். அழகாகவும் இருக்கும். பெண்களுக்கு கூந்தல் அழகு ஒரு தனிச்சிறப்பு. தழைய தழைய பின்னி, அருமையாக உடை உடுத்தி(அடிவயிறு தெரியாமல், பாதி உடம்பு, பின்னாலும், முன்னாலும் தெரியாமல் உடை அணிவது பெண்களுக்கே ஒரு தனி அழகு.) வருவது, தேவலோகத்தில் இருந்து, தேவதை இறங்கிவருவதுபோன்று இருக்கும். அதற்காகவே, அந்த காலத்தில் 10 வயது வரை மொட்டை அடித்துவிடுவார்கள். முக்கியமான காரணம்.. மண்டை (தலை) சம்பந்தமான நோய்கள் நெருங்காது என்பதே.

    ReplyDelete