Sunday 1 December 2013

பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?

பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?

""ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு "நித்யபிரதோஷம்' என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா..வெ.சாமி. அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா.. பிரதோஷம் பற்றியதான எனது விளக்கமும் அளிக்கிறேன் அய்யா..!

    Fri. 7, Oct. 2022 at 8.03 am.

    பிரதோஷம்....!

    பிரதோஷம் என்பதன் விரிவான விளக்கம்....!

    பிரதோஷம்= ப்ர + தோஷம்.

    ப்ர என்றால் அளவு கடந்த...
    தோஷம் என்றால் தீமை என்றும் பொருள்.

    பிரதோஷங்கள் மூன்று வகைப்படும்.

    அவை...

    * உத்தமப் பிரதோஷம்
    * மத்திமப் பிரதோஷம்
    * அதமப் பிரதோஷம்.

    * உத்தமப் பிரதோஷம் என்பது...

    சூரியன் உதயமானது முதல், மறுநாள் சூரிய உதயம் வரை... திரியோதசி திதி இருந்தால்... அந்நாள் உத்தமப் பிரதோஷம் ஆகும்.

    * மத்திமப் பிரதோஷம் என்பது....

    சூரியன் மறைந்த நேரம் முதல, மறுநாள் சூரியன் மறையும் வரை திரியோதசி இருந்தால்.... அந்நாள் மத்திமப் பிரதோஷம் ஆகும்.

    * அதமப் பிரதோஷம் என்பது....

    சூரியன் மறைவிற்குப் பின்னால் திரியோதசி வந்து, மறுநாள் 25− நாழிகைக்குள் இத்திதி மறையுமானால், அந்நாள் அதமப் பிரதோஷம் ஆகும்.

    இப்பிரதோஷக் காலம் ....

    சுக்கில பட்சம் அதாவது வளர்பிறை...
    கிருஷ்ண பட்சம் அதாவது தேய்பிறை ..
    இந்த இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரியோதசி திதியில்... சூரிய அஸ்தமனத்திற்கு... 3 3/4 அதாவது மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னிருந்து... விண்ணில் நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம்..சுமார் மாலை 4.45 முதல் 6.30 வரை உள்ள காலம்... பிரதோஷக் காலம் ஆகும்.

    எப்போதுமே... அமாவாசை, பெளர்ணமி நாட்களின் முன்னே... மூன்றாம் நாளில்..;இப்பிரதோஷம் வரும்..என அறிக.

    சிவபெருமான்.... பாற்கடலைக் கடைந்த போது... முதன் முதலில் ஆலகால விஷம்(நஞ்சு) தோன்றியது.

    உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்
    கும்... அளவு கடந்த "தொல்லை" தோன்றிய நேரம்.

    ஆகவே... மக்களின் துயர் நீங்க... ஆலகால நஞ்சினை...சிவபிரான் "அமிழ்தம்" போல் உண்டார்.

    இறைவனின் வயிற்றினுள்...அனைத்து உயிர்களும் இருப்பதால்... விஷத்தை உண்டால், அனைத்து உயிர்களீம் அழிந்து விடுமே... என்ற அச்ச உணர்வால் அம்மை... அப்பனின் கழுத்தினை இறுகப் பிடித்தார். நஞ்சு உட்செல்லாமல் கண்டத்திலேயே நின்றது. உயிர்கள் காக்கப்பட்டன.
    இது தான் பிரதோஷம் ஆகும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete