Sunday, 1 December 2013

ஆத்திகன். நாத்திகன்.

பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.

மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.

அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.

ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.

நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.

உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.

பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது. 

3 comments:

  1. கோயில் சிலைகளை எந்த நாத்திகனும் இது வரை திருடியதில்லை. எல்லா திருட்டு பயல்களும் ஆத்திகர்கள் தான். கொலை செய்வதற்கும், கொள்ளை அடிக்கும் முன்பும் படையல் போடுபவன் எல்லாம் யார்? ஆத்திகனா நாத்திகனா . மதுரை ஆயிரங்கால் மண்டபத்தை 65 ரூபாய்க்கு இங்கிலாந்து வெள்ளை காரனிடம் விற்றவன்,திருவரங்க கோயில் பணியாளர்களை கூலி தராமல் ஆற்றில் தள்ளி கொலை செய்தவன் , தில்லை நடராசர் கோயிலின் 4000 தங்க தகடுகளை திருடி தின்றவனும், 13000 பேரை மதத்தின் பெயரை சொல்லி கழு ஏற்றியவனும் சுத்தமான ஆத்திகன் தான் நாத்திகன் அல்ல.

    65% ஆத்திகர்களை கொண்ட கேரளா தான் நாட்டிலேயே கற்பழிப்பில் முதலில் வகிக்கிறது.

    ஆத்திகனின் நிலை எப்படி சந்தி சிரிக்கிறது பாருங்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஒரு முறை கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவில், நாத்திகன், கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஒவ்வொரு ஊரிலும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மனிதரிடமும் சொல்கிறான்.அவன் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று எத்தனைமுறை என்னுடைய நாமத்தை (கடவுள்) உச்சரித்தானோ, அத்தனை முறை அவன் என்னை கூப்பிட்டான், என்னைத் தேடினான். ஆகவே, கடவுள் இல்லை என்று சொன்ன நாத்திகனையும், இறைவன் ஆசீர்வதித்தார் என்றார். உண்மைதானே அய்யா.

    ReplyDelete