Saturday, 21 December 2013

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

பஞ்சபூதங்களில் ஒன்றான "நிலம்" மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை "நைருதி மூலை/குபேர மூலை" என்றும் கூறுவர். 
FILE

தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது. 

அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது. 

மேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. 

அக்னி மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க்கூடாதவை!

பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை "தென்கிழக்கு" மூலையாகும். இதனை "அக்னி மூலை" என்றும் கூறுவர். 
WD

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:

சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
பூஜை அறை

தென்கிழக்கு மூலையில் வரகூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):

குடும்ப‌த் தலைவன்/தலைவி படுக்கையறை
பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
கழிவுநீர் தொட்டி
கார் போர்டிகோ 
குளியலறை / கழிவறை
உள்மூலை படிக்கட்டு 
வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு.
மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank)

Friday, 13 December 2013

புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!

பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.
அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
புற்று நோய்க்கு என்ன காரணம்? பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும்.
ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.
அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல்.
கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல்.(குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல். எந்தெந்த பகுதியில் ஏற்படும்
புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று. மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண். (இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே’ என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா? தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.
சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா? ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும்.
முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர்.
சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று போன்றவையாகும்.
புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா? காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன.
மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு மேஜர் ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இப்போது எளிதான ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று ரிஸ்க்தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை:
1. ஆபரேஷன்,
2. கீமோ தெரபி(மெடிக்கல் ட்ரீட்மென்ட்),
3. ரேடியேஷன்(எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

ஒ‌ர் இடத்தின் பிரதானமாக கருதப்படும் வடகிழக்கு மூலை!

 
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவு தாவரங்கள் முதல் பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும்.
FILE

இதன் அடிப்படையில் இயற்கையோடு ஒத்து நாம் ஒரு கட்டடம் கட்ட நினைக்கும்போது பஞ்சபூதங்களின் தன்மைக்கு ஒப்பும் வகையில் அதனை நாம் நம் வசப்படுத்திக் கொள்ளுமாறு அமைக்க வேண்டும். அந்த வகையில் வாஸ்துவின் மூலைகளில் பிரதானமானது வடகிழக்கு மூலையாகும். இம்மூலை பஞ்சபூதங்களின் முதல் கூறான நீரின் இருப்பிடமாகும். வடகிழக்கு மூலையை "ஈசான்ய மூலை" என்றும் கூறுவர்.

ஈசான்ய மூலை என்றதும் இது ஈசனுக்குரிய மூலை என்று பலரால் கூறப்படுகின்றது. இது தவறான கருத்து என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும். வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் வரும் இடமாக கருதப்படுவதால், இந்த மூலையை ஒரு இடத்தின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மூலையாக கருதலாம்.

அது மட்டுமல்லாமல்...
 
 
 
இந்த மூலை நீரின் ஆதாரம் என்பதால், வடகிழக்கு வெளி மூலையில் ஆழ்துளை கிணறு, நீர் தேக்கும் தொட்டி, கிணறு போன்றவற்றை அமைத்துக்கொள்ளவது சால சிறந்தது.

மேலும் வடகிழக்கு மூலை அறையை குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும் மற்றும் வடகிழக்கு அறையை தியானம் செய்வதற்கும், குழந்தைகள் / பெரியவர்கள் படுத்து உறங்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்.

வட‌கிழ‌க்கு மூலையில் வரக்கூடாதவை:
• பூஜையறை
• குடும்ப தலைவன்/தலைவி படுத்து உறங்கும் அறை
• குளியலறை
• சமையல் அறை
• பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
• உட்புற மூலை படிக்கட்டு
• வெளிப்புற மூலை படிக்கட்டு
• கழிவுநீர் தொட்டி (Septic Tank)
• மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank)
• மரங்கள்
Inverter / EB-Box / Generator
• போர்டிகோ (Portico).

Tuesday, 10 December 2013

பிரார்த்தனையின் நோக்கம் என்ன?

எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? இது பற்றி ஆங்கில தத்துவ மேதையும் ஆன்மிகக் கருத்துகளை அழகாக அளித்தவருமான டாக்டர் நார்மன் வின்சென்ட் பீல் பின்வருமாறு கூறுகிறார்:
நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.
பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் இருப்பதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.
பஸ்ஸில் பயணம் செய்யும்போதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப்பதாகப் பாவனை செய்து கொண்டு குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.
எப்போதும் “அது வேண்டும் இது வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.
உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும் சம்பாதித்துத் தரும் என்று உறுதியாக நம்புங்கள்.
பிரார்த்தனையின்போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.
கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவற்றைவிட அவர் கொடுத்ததும், கொடுப்பதும் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்.
ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.
உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரிவர நடத்தாதவர்களும் நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி என்பதை உணருங்கள்.
யார் யாருடைய நன்மை வேண்டிப் பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு – பிரார்த்தனை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்குப் பலன் கிடைக்கும். நாம் பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது ஆண்டவன் நமக்கு மிகவும் அருகில் வருகிறான் என்பதை உணருங்கள். இது எம்மதத்தவருக்கும் பொருந்தும்.

Monday, 9 December 2013

2014 Subha Muhurtham Dates For Marriage Tamil Calendar

January 2014 Subha Muhurtham Dates:
  • 03 January 2014, Friday – Margazhi-19
  • 05 January 2014, Sunday – Margazhi-21
  • 23 January 2014, Thursday – Thai-10
February 2014 Subha Muhurtham Dates:
  • 02 February 2014, Sunday – Thai – 20
  • 06 February 2014, Thursday – Thai – 24
  • 12 February 2014, Wednesday – Thai – 30
  • 17 February 2014, Monday – Masi – 05
  • 19 February 2014, Wednesday – Masi – 07
  • 20 February 2014, Thursday – Masi – 08
  • 24 February 2014, Monday – Masi – 12
  • 26 February 2014, Wednesday – Masi – 14
March 2014 Subha Muhurtham Dates:
  • 12 March 2014, Wednesday – Masi – 28
  • 19 March 2014, Wednesday – Panguni-05
  • 26 March 2014, Wednesday – Panguni-12
  • 27 March 2014, Thursday – Panguni-13
  • 28 March 2014, Friday – Panguni-14
April 2014 Subha Muhurtham Dates:
  • 09 April 2014, Wednesday – Panguni-26
  • 18 April 2014, Friday – Chithirai-05
  • 20 April 2014, Sunday – Chithirai-07
  • 24 April 2014, Thursday – Chithirai-11
  • 25 April 2014, Friday – Chithirai-12
  • 27 April 2014, Sunday – Chithirai-14
May 2014 Subha Muhurtham Dates:
  • 05 May 2014, Monday – Chithirai-22
  • 11 May 2014, Sunday – Chithirai-28
  • 12 May 2014, Monday – Chithirai-29
  • 25 May 2014, Sunday – Vaikasi-11
  • 26 May 2014, Monday – Vaikasi-12
June 2014 Subha Muhurtham Dates:
  • 01 June 2014, Sunday – Vaikasi-18
  • 02 June 2014, Monday – Vaikasi-19
  • 04 June 2014, Wednesday – Vaikasi-21
  • 04 June 2014, Wednesday – Vaikasi-21
  • 05 June 2014, Thursday – Vaikasi-22
  • 08 June 2014, Sunday – Vaikasi-25
  • 09 June 2014, Monday – Vaikasi-26
  • 12 June 2014, Thursday – Vaikasi-29
  • 18 June 2014, Wednesday – Aani-04
  • 22 June 2014, Sunday – Aani-08
  • 25 June 2014, Wednesday – Aani-11
  • 29 June 2014, Sunday – Aani-15
  • 30 June 2014, Monday – Aani-16
July 2014 Subha Muhurtham Dates:
  • 02 July 2014, Wednesday – Aani-18
  • 04 July 2014, Friday – Aani-20
  • 07 July 2014, Monday – Aani-23
  • 09 July 2014, Wednesday – Aani-25
  • 11 July 2014, Friday – Aani-27
  • 14 July 2014, Monday – Aani-30
August 2014 Subha Muhurtham Dates:
  • 20 August 2014, Wednesday – Aavani-04
  • 22 August 2014, Friday – Aavani-06
  • 27 August 2014, Wednesday – Aavani-11
  • 29 August 2014, Friday – Aavani-13
  • 31 August 2014, Sunday – Aavani-15
September 2014 Subha Muhurtham Dates:
  • 04 September 2014, Thursday – Aavani-19
  • 07 September 2014, Sunday – Aavani-22
  • 10 September 2014, Wednesday – Aavani-25
  • 10 September 2014, Wednesday – Aavani-25
  • 11 September 2014, Thursday – Aavani-26
  • 12 September 2014, Friday – Aavani-27
  • 15 September 2014, Monday – Aavani-30
  • 18 September 2014, Thursday – Purattasi-02
  • 26 September 2014, Friday – Purattasi-10
  • 29 September 2014, Monday – Purattasi-13
October 2014 Subha Muhurtham Dates:
  • 03 October 2014, Friday – Purattasi-17
  • 06 October 2014, Monday – Purattasi-20
  • 10 October 2014, Friday – Purattasi-24
  • 13 October 2014, Monday – Purattasi-27
  • 30 October 2014, Thursday – Iyppasi-13
November 2014 Subha Muhurtham Dates:
  • 02 November 2014, Sunday – Iyppasi-16
  • 02 November 2014, Sunday – Iyppasi-16
  • 09 November 2014, Sunday – Iyppasi-23
  • 10 November 2014, Monday – Iyppasi-24
  • 12 November 2014, Wednesday – Iyppasi-26
  • 13 November 2014, Thursday – Iyppasi-27
  • 20 November 2014, Thursday – Karthigai-04
  • 21 November 2014, Friday – Karthigai-05
  • 27 November 2014, Thursday – Karthigai-11
December 2014 Subha Muhurtham Dates:
  • 01 December 2014, Monday – Karthigai-15
  • 10 December 2014, Wednesday – Karthigai-24
  • 10 December 2014, Wednesday – Karthigai-24

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது: மகனே, மகளே! உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையை, மதிப்பை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே உங்களது நன்மைக்காகச் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.
* ஆடி ஓடி விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுவோம். பொறுத்துக் கொள்ளுங்கள்!
* செய், சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது என்று வருவதெல்லாம் இயல்புதான். பெரிதுபடுத்தாதீர்கள்.
* எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே!
*நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாங்கள் பக்கத்தில் துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு.
*நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகளான உங்கள் மீதுதான்.
*மொபைலில் நீங்கள் நீண்ட நேரம் பேசுவது தவறல்லதான். ஆனால் காலத்தின், பணத்தின் அருமையை யோசியுங்கள்.
*நல்ல பொருளைத் தொலைத்து விட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான். பாசமில்லாத கொடியவர்கள் அல்லவே நாங்கள்?
* உங்களுக்குப் பிடித்தமான உடைகளை வாங்கித் தருகிறோம். ஆனால் அது நம் குடும்ப கவுரவத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்று யோசியுங்கள்.
* உங்களை அரவணைப்பதைவிட, உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் உள்ளது? அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.
*நீங்கள் சினிமாவில் வரும் ஆரவார இசையை ரசிக்கலாம். அதே நேரம் பெரியவர்களான நாங்கள் ரசிக்கும் பக்திப் பாடல்களையும் கேட்க மறுக்காதீர்கள். கேலி செய்யாதீர்கள்.
*உங்களுக்கு உயர்ந்த லட்சியம் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
* கண்மணிகளே! டி.வி. பாருங்கள். தடுக்கவில்லை. மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடக் கூடாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா டி.வி பார்க்காதே என எச்சரிக்கிறோம், நச்சரிக்கவில்லை.
*உங்கள் நன்மைக்காக உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுகாதாரமான பழக்கங்கள் இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?
* நாங்கள் வேலையாக இருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை வெட்டித்தரவா, அதைக் கொண்டு போய் அங்கு வைக்கவா என்று கேட்டு சிறு உதவி செய்து உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாமே!
* உங்கள் ஆற்றலைப் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என எங்களிடம் கூறுங்கள்.
* வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். சாதனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!
* படிப்பின் சுமை, வீட்டுச்சுமை அதிகம் உள்ளதால் உங்களை நாங்கள் வீட்டு வேலை செய்ய அதிகம் ஏவுவதில்லை. உங்களைப் புறக்கணிக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.
* நீங்கள் பெரியவர்களான எங்களைக் கேலி செய்வதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தோன்றும்படிகூட நடந்து விடாதீர்கள். எங்களால் அவற்றைக் தாங்கிக் கொள்ள முடியாது.
*எங்கள் கவலைகளை எல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்னை, கவலை என்று திணித்து வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது : * அம்மா அப்பாக்களே, உங்கள் பிள்ளையாகிய நான் சொல்லும் சில நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நான் ஏதாவது நல்ல வேலையைச் செய்தால் என்னைத் தவறாமல் பாராட்டுங்கள்; மனம் திறந்து ஊக்குவியுங்கள்.
* உங்களுக்குச் சிலவற்றைக் கற்றுத் தர என்னையும் அனுமதியுங்கள். நீங்களே என்றும் கற்றுத் தருபவராக இருக்காதீர்கள்.
* பொது இடங்களில் என் மீது உங்களின் அதிகப் பாசத்தைக் கொட்டி வெளிப்படுத்தாதீர்கள். அப்போது நான் நெளிவேன்.
* உங்கள் இளம்வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.
* நான் அதிகம் விரும்பும் விளையாட்டுக்கள், கொஞ்சம் ஊர் சுற்றுவது போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.
* என் தனிமைக்கும் சிறிது மதிப்பளியுங்கள்.
* நான் ஏதாவது கேட்டுவிட்டால் உடனே, இல்லை அல்லது உனக்கு அது வேண்டாம் என்பதைவிட, சரி, செய், நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற வார்த்தைகளை அதிகம் கூறுங்கள்.
* சிறிய காரியங்களுக்காக நீங்கள் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். எனக்கும் அவற்றைக் கற்றுக் கொடுங்கள்.
* நான் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிர்ணயத்துச் சொல்லுங்கள். ஒரேடியாக டி.வி.யைப் பார்க்காதே என்று சொல்லிவிடாதீர்கள்.
* வாழ்நாள் முழுவதற்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.
* அம்மாவே, என்னிடம் உங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறி, என் வளர்ச்சியில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குடும்ப வேலைகள் முன்னிட்டு நான் எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.
* நல்ல விஷயங்களை எனக்கு விளக்கிக் கூற நேரம் ஒதுக்குங்கள். விளக்கினால் மட்டும் போதாது, நான் அதைப் புரிந்து கொண்டேனா என என்னை விசாரியுங்கள்.
* சிறிது வளர்ந்ததும் சில சமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை மனதில் கொள்ளாதீர்கள்.
* சில நேரங்களில் என்னை விட்டு விலகியிருங்கள். எப்போதும் என்னைப் பொத்திப் பொத்தி வைக்காதீர்கள்.
* சில சமயங்களில் நான் நடந்து கொள்வது உங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.
* குடும்பப் பிரச்னைகள் அல்லது மற்ற பிரச்னைகள் பற்றியும், பணப் பிரச்னை, வீட்டுப் பிரச்னை போன்றவற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் கூறாமல் தவிர்த்தால் பிறகு தானாகத் தெரியவரும்போது என் மனம் மிகவும் புண்படும்.
* பல விளையாட்டுகளைக் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
* நீங்கள் என்னிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
* நான் தவறு செய்யும்போது, தவறைப் புரிய வைத்து மன்னிப்பு கேட்கப் பழக்குங்கள்.
* உணவு விஷயத்தில் நான் கேட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து கொடுக்காதீர்கள்.
* நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.
* என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.
* எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா?

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள். 

ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே அதனை நம்ப வேண்டும்.

வாஸ்துவில் கூறப்படும் உண்மைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தே இருக்கிறது என்கிறபோது அது எப்படி மதம் சார்ந்த விஷயமாக கருதப்படும். 

எந்த நிலையிலும் வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. 

எனவே சூரியனை ஆதாரமாகவும், பூமியை இருப்பிடமாகவும் வைத்துள்ள நம் மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது அடிப்படையான ஒன்றாகும். இது என்றைக்குமே மதத்தின் கோட்பாட்டுக்குள் வராது.

Saturday, 7 December 2013

ஆண்களின் மூளைக்கும் பெண்களின் மூளைக்கும் இடையிலான வித்தியாசம்..

ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்கள் மற்றும் பெண்களின் திறனை பற்றி கூறப்படும் சில பாரம்பரியமான கருத்துகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களால் ஒரு வரைபடத்தை வாசிக்க முடியும், இதற்கு மாறாக, பெண்களோ வழி கேட்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களின் மூளைகளில் இடது மற்றும் வலது அரைக்கோளத்திற்கு இடையே உள்ள நரம்பு இணைப்பு சற்று அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் மூளைகளில் நடத்தப்பட்ட ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு மாறாக, முன்னிருந்து பின் பக்கம் இணைக்கப்பட்டுள்ள ஆண்களின் மூளை, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செய்கிறது. உணர்ந்து அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது. ஆனால் குழந்தையிலிருந்து வளரும் பொழுது ஒருவரின் பாலின வேறுபாடுகள் சற்று தாமதமாகவே தோன்றும். 13 வயதிற்கு கீழ் இருக்கும் சிறார்களில் சிலரில் தான் இந்த வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால் பதின்பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் இந்த வேறுபாடுகள் தெளிவாக காணப்பட்டன.

Thursday, 5 December 2013

செவ்வாய் தோஷம் என்பது என்னவென்று தெரியுமா!

செவ்வாய் தோஷம் என்றாலே அலறித்துடிப்பவர்கள்தான் அதிகம். ஏன் என்றால் கல்யாணம் என்பது பெரும் பாடாக அமைந்துவிடும் என்பதால்.
அனால் செவ்வாய் தோஷம் அவ்வளவு ஆபத்தானதா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பது குறித்து முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதப் படித்து பயன் பெறுங்கள்!
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம், அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
2 -  இடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.
4 – ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.
7 – ம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.
8 – ம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் அங்காரகன் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷமில்லை.

நல்ல நேரம் பார்க்க ஜோசியர் எதுக்குங்க? நாங்களே பார்க்கலாம் வாங்க

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம்.
ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.
மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்.
பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.
செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.
ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.
வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி
பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.  அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.
ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ…
கிழமை பகல் நேரம்இரவு நேரம்
ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00
குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.
கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாதம் தேதிகள்
சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19
வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.
தின ஓரையில் பயன்கள்:  ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.  உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.
(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.
கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித… ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பல்லியை கொல்வதால் எற்படும் தோஷம்! பரிகாரம் என்ன?

மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும்.
அதற்கு பரிகாரம் என்ன?
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.
பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.

வீடு கட்டுபவர்களுக்கான மனையடி சாஸ்திரபலன்……

மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடி நன்மை, 7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி பிரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.
அவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்
ரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்
வீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:
வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம்.

Wednesday, 4 December 2013

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?

திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும்.

அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளா
baby

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு!

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ”ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,” என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை.
பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
eye

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.
மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.
ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.
மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.
சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.
விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.
மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.
பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.
அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.
பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.