Sunday 16 February 2014

நாகதோசம்

லக்னத்திலோ இரண்டம் பாவத்திலோ ராகுவோ கேதுவோ இருப்பது நாகதோசம் என்று சொல்கிறோம்..லக்னம் என்பது குணத்தை சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் நல்ல குணத்தை தராது..கோபம்,பிடிவாதம்,பிறர் வெறுக்கும்படி நடந்துகொள்வதை சொல்கிறது...இதற்கு நேர் எதிர் 7ஆம் பவத்தில் ராகுவோ கேதுவோ இருக்கும்...அது கணவன் அல்லது மனைவியை பற்றியும் தாம்பத்திய சுகம் பற்றியும் சொல்லும் இடமாகும்....லக்னத்தில் எப்படி குனத்தை பாதிக்கிறதோ வெறுப்பு உண்டாக்குகிறதோ அதே போலத்தான் கணவன் / மனைவியின் குணத்தையும் கெடுக்கும் 7ஆம் இட ராகு /கேது...

இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் 8ஆம் பாவத்தில் கேது இருக்கும்..இரண்டாம் இடம் வருமானத்தை சொல்லும் இடம்..குடும்பத்தை சொல்லும் இடம்...பேச்சு எப்படி இருக்கும் என சொல்லும் இடம்...ராகு -திருடன் எனில் கேது சாமியார் அதாவது ஒண்ணுமில்லாதவன் என அர்த்தம்..இரண்டில் ராகு இருந்தால் கபடமான வஞ்சகமான பேச்சு..கேது இருப்பின் பேசினாலே பகை...வருமானம் கேது இருப்பின் தடை..ராகு இருந்தால் குறுக்கு வழி வருமானம் ..8ஆம் இடம் என்பது அதிர்ஷ்டத்தை சொல்வது ....ஆயுளை சொல்வது ..கணவன் /மனைவியின் பேச்சு தன்மை பற்றி சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் அந்த ஸ்தனங்கள் எல்லாம் கெடும்..இதனால்தான் நாகதோசம் என்றால் மக்கள் பயப்படக்காரணம்..!! பரிகாரமும் செய்கிறார்கள்..

No comments:

Post a Comment