Thursday, 13 February 2014

கொலஸ்ட்ரால் (Cholesterol) நல்லதா? அல்லது கெட்டதா?

கொழுப்பு (Fat or Lipids) கொலஸ்ட்ரால் (Cholesterolநல்லதா? அல்லது கெட்டதா? என்று பார்க்கப்போனால் அது நல்லது என்று உங்களுக்குப் பதில்கிடைக்கும். அப்படியிருக்க கொலஸ்ட்ரால் என்றால் மக்கள் பயப்படுவது ஏன்? அதைப் பற்றி விபரமாக அறிந்தால் அந்தப் பயமும் போய் விடும்.
கொழுப்பு என்பது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஒரு முக்கியமான சத்துப் பொருள். நமது தினசரி உணவில் குறிப்பிட்ட அளவு கண்டிப்பாகஇடம்பெற வேண்டிய பொருளும் கூட.
நம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்றிலிருந்தும் தான் பெறுகிறோம். இவற்றை சக்திமையங்கள் என்று அழைழப்பது மிகப் பொருத்தமானது. உணவு மூலமாக கிடைக்கும் சக்தியை கலோரி என்ற அலகால் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டிலிருந்து 4 கலோரி சக்தியும், ஒரு கிராம் புரதத்திலிருந்து அதே 4 கலோரி சக்தியும் கிடைக்கும் அதே சமயத்தில்கொழுப்பில் இருந்து 9 கலோரி சக்தி கிடைக்கிறது. சக்தியை வழங்குவதோடு கொழுப்பு அதன் வேலையை முடித்து விடவில்லை. மேலும் பல்வேறுசெயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது.
கொழுப்பு என்ற கூட்டுக் குடும்பத்தில் கொலஸ்ஸட்ராலும் ஒரு உறுப்பினர். நமது ரத்த ஓட்டத்தில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால் வடிவத்தில்தான்காணப்படுகிறது. கொழுப்பு வகைகளில் இதுதான் மிகப் பிரபலமானது. மனிதன் உட்பட அனைத்து விலங்குகளின் உடலில் உள்ள செல்களின் வெளிப்புறசவ்வில் இது காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள கொலஸ்ட்ரால் உணவின் மூலம் கிடைப்பதாலும், கல்லீரல் உற்பத்தி செய்வதாலும் வந்துசேர்கிறது.
கல்லீரலால் தினமும் இரண்டு கிராம் கொலஸ்ட்ரால் தயாரிக்கப்பட்டு ரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகிறது. ஆனால் ரத்தத்தில் உள்ளகொலஸ்ட்ராலின் அளவு 150-300 மி.கி./100 மி.லி. தான். சாப்பிட்ட பிறகு, உணவில் உள்ள கொலஸ்ட்ராலலைக் குடல்பகுதிகள் உறிஞ்சிக்கொண்டு ரத்தஓட்டத்துக்கு அனுப்பி வைக்கின்றன. அதிகப்படியான கொலஸ்ட்ராலை ரத்தத்தில் இருந்து வெளியேற்றும் வேலையையும் கல்லீரலே கவனித்துக்கொள்கிறது.
சாப்பிட்டபிறகு ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலை கல்லீரல் வெளியே அனுப்புகிறது. அதேசமயம், சாப்பிடாத நேரங்களில் கொலஸ்ட்ராலைகல்லீரல் உற்பத்தி செய்து ரத்தத்தில் செலுத்துகிறது.
நமது உடலுக்குத் தேவையான சக்தியில் 60-70 சதவீதம் கார்போஹைட்ரேட்டிலிருந்தும் 10-20 சதவீதம் புரதத்தில் இருந்தும் 20-25 சதவீதம் கொழுப்பில்இருந்தும் கிடைக்க வேண்டும். மீதமுள்ள சக்தி தாது உப்புகளில் இருந்தும், வைட்டமின்களிலிருந்தும் கிடைக்க வேண்டும். சமச்சீர் உணவில் இருக்கவேண்டிய விகிதாச்சாரம் இதுதான்.
ஏன் இந்த வித்தியாசம் எனில், கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கும் சக்தி, கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட நல்லது. நம் உடலுக்கும்ஏற்றது. நம் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை வழங்குவது கார்போஹைட்ரேட்தான்.
கொழுப்பை அதிகமாக சாப்பிடுவதால் விகிதாச்சார உணவில் மாற்றம் ஏற்படுகின்றது. உடலுக்குள் கொழுப்பின் அளவு கூடக்கூட இதயம் பல்வேறுவகைகளில் பாதிப்புக்குள்ளாகிறது. மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற அபாயங்கள் உருவாகின்றன. கொழுப்பை குறைத்து சாப்பிட்டாலும்புற்றுநோய் , வாதம் ஏற்படக் காரணமாகிறது.
கொழுப்பில் நல்லது, தீயது என்று இரு பிரிவுகள் இருக்கின்றன.நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயதை ஒதுக்கிவிட வேண்டும் என்பதுசாத்தியமில்லை. உணவுப் பொருட்களில் நல்லது தீயது இரண்டும் சேர்;ந்தே இருக்கின்றன. எனவே நல்லது அதிகமாக உள்ள அதேசமயம் தீயதுகுறைவாக உள்ள உணவுப் பொருட்களை உடடகொள்வதே புத்திசாலித்தனமாகும்.
கொழுப்பு அமிலங்கள்; (Fatty Acids), ஆல்கஹால் வகையைச் சேர்ந்த கிளைசரால் (Glycerol) ஆகியவை சேர்ந்து கொண்டால் கிடைப்பதுதான் கொழுப்பு. இதை டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) என்றும்  சொல்கிறார்கள். கார்பன், ஹைட்ரஜன், கொஞ்சம் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் பிணைப்புதான்கொழுப்பாக ஆகிறது.
கொழுப்பை ஆங்கிலத்தில் Fats, Lipids, Oils எனப் பலவிதங்களில் குறிப்பிடுகிறார்கள். திடநிலையில் உள்ள கொழுப்புக்கு Fats என்றும் திரவநிலையிலுள்ளதற்கு Oils என்றும் திடம், திரவம் என இரண்டு வகைக் கொழுப்புகளையும் குறிக்கLipids என்றும் பெயர்.
கொழுப்பில் அடங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் அவற்றை உருவாக்கும் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையிலும் அவற்றிற்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கையிலும் உள்ள வித்தியாசம்தான் ஒவ்வொரு கொழுப்பு அமிலத்தையும் வேறுபடுத்துகிறது.
கொழுப்பு அமிலத்தில் கார்பன் அணுவும் ஹைட்ரஜன் அணுவும் பிணைந்திருந்தால் அது பூரிதமான கொழுப்பு அமிலமாக (Saturated Fatty Acid) கருதப்படுகிறது. இத்தகைய பூரிதமான கொழுப்பு அமிலங்களைக்கொண்ட கொழுப்புதான் பூரிதமான கொழுப்பு (Saturated Fat) என அழைக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, சில கொழுப்பு அமிலங்களில் ஒரு கார்பன் அணு, இரே ஒரு ஹைட்ரஜன் அணுவோடு பிணைந்து இருக்கும். அதோடு பக்கத்தில் உள்ள கார்பன் அணுNவுhடு இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு உள்ளதை பூரிதமாகத கொழுப்பு அமிலம் என்றும் இந்த அமிலங்களைக் கொண்டதை பூரிதமாகாத கொழுப்பு (Unsaturated Fat)என்றும் சொல்வார்கள்.
பூரிதமாகாத கொழுப்பிலேயே கார்பன் அணு பக்கத்தில் உள்ள கார்பன் அணுவோடு ஒரே ஒரு இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அதை ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்பு (Mono-Unstaturated Fat) என்றும், கார்பன் அணு பக்கத்தில் உள்ள கார்பன் அணுவோடு ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அதற்குப் பல பூரிதமாகாத கொழுப்பு (Poly-Unsaturated Fat)என்றும் பெயர்.
நாம் உட்கொள்ளும் கொழுப்பு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முதல் வகைக் கொழுப்பு கண்ணுக்குத் தெரியக் கூடியது. எண்ணெய், நெய் போன்றவை இதற்கு உதாரணங்கள். தானியங்கள், பயறுகள் போன்ற உணவுகளின் மூலமாகக் கிடைக்கும் கொழுப்பு கண்ணுக்குத் தெரியாத கொழுப்பாக வகைப்படுத்தப்படுகிறது.
கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்:
அனைத்து மாமிச உணவுகளிலும் கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது. மீன், ஆட்டு இறைச்சி, பிற இறைச்சி வகைகள், முட்டைம ஞ்சள் கரு, மீன் எண்ணெய், கல்லீரல் ஆகிய உணவுகளில் கொழுப்பு சத்து மிகுதியாக காணப்படுகிறது. விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பில் கொழுப்பு அமிலங்கள் போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் அதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவை மிகுதியாக இருக்கின்றன.
தாவர உணவுகள்:கோயா பீன்ஸ், முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, பாதாம் பருப்பு ஆகிய தாவர உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலான எண்ணெய் வித்துகளிலும் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது.சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் ஆகியவைகளிலும் கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது.
வனஸ்பதி, டால்டா, வெண்ணெய், பால், நெய் ஆகியவற்றிலும் கொழுப்புச் சத்து மிகுதியாக இருப்பினும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவை இல்லை.
தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளது பழங்களில் அலிப்பேரை(Avocade)யில் கொழுப்புசத்து அதிகமாக உள்ளது.
கொழுப்பு சத்தால் கிடைக்கும் பலன்கள்:
உடலின் இயக்கத்துக்கு தேவைப்படும் சக்தியைத் தருவது மட்டுமில்லாமல் சக்தியை சேமித்து வைக்கும் கிடங்காகவும் கொழுப்பு செயல்படுகிறது.
நமது உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாகச் சேரும் சக்தி கிளைக்கோஜென்னாகவும், புரதமாகவும் சேர்த்து வைக்கப்படுவதைக் காட்டிலும் கொழுப்பு வடிவில் சக்தியை சேமிப்பது மிகவும் எளிதானது. மற்ற இருவடிவங்களில் சேமிப்பற்குத் தேவைப்படுவதைவிட குறைந்த அளவு சக்தி மற்றும் தண்ணீரே கொழுப்பாக சேமித்து வைக்கப்படுவதற்கு போதுமானது.
தேவைப்படும் நேரங்களில் இந்த சேமிப்பிலிருந்து சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்கிறது.
நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப் பாதுகாக்கும் சவ்வு உருவாக, கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக் கூடியவை. இந்த விட்டமின்கள் அனைத்தும் கொழுப்பில் கரையக் கூடிய தன்மை உடையவை என்பதால் இவை ஜீரணமாகி உட்கிரகிக்கப்படுவதற்கு கொழுப்பு அத்தியாவசியமானதாக இருக்கிறது.
நமது உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கும்  கொழுப்பு உதவி செய்கிறது. தோலுக்கு அடியில் படிந்துள்ள கொழுப்பு, அதிக வெப்பத்தால் உடல் வியர்வையை அதிகமாக வெளியேற்றுவதால் உடலின் வெப்பம் குறைந்து விடாமல் தடுக்கிறது.
தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாகப் பராமரிப்பதும் கொழுப்பின் வேலைகளுள் ஒன்று. இதன்மூலம் வெளிப்புற அதிர்வுகளில் இருந்து உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இயங்கவும் கொழுப்பு தேவை.ஸ்டீராய்ட் ஹார்மோன்களின் உற்பத்தியிலும், முறைப்படுத்துதலிலும் கொழுப்புக்கு இன்றியமையாத பங்குண்டு.
நரம்புகளில் உணர்வுகளைக் கடத்துவது, ஞாபகங்களைச் சேமிப்பது, திசுக்களின் கட்டமைப்பு ஆகியவற்றிலும் கொழுப்புக்கு முக்கியமான பங்குண்டு. செல்களின் சவ்வில் பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருப்பது கொழுப்பு சத்துதான்.
சில குறிப்பிட்ட நோய்கள் உடலைத் தாக்காதவண்ணம் தடுக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது கொழுப்பு. ரத்த ஓட்டத்தில் ஏதேனும் ஒரு பொருள் பாதுகாப்பான அளவைத் தாண்டிவிட்டால், அதை அப்படியே கடத்திக் கொண்டு போய் கொழுப்பு திசுவில் சேமித்து வைத்து விடுகிறது. உடல் அந்த அபாயப் பொருளை ஏதாவது ஒரு வழியில் வெளியேற்றும் வரை அதைப் பிடித்து வைத்துக் கொள்வது கொழுப்பு திசுதான்.
உணவுக்கு மணத்தையும், சுவையையும் சேர்ப்பது, ரத்த உறைதலைத் தாமதப்படுத்துவது ஆகிய வேலைகளிலும் கொழுப்பு ஈடுபடுகிறது. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு ஊட்டச் சத்து தேவையை நிறைவேற்றக்கூடிய இதை கொழுப்புச் சத்தில் இருந்து மட்டுமே பெற முடியும்.
கொழுப்பு அமிலங்கள்:
நம் உடலிலுள்ள பல அத்தியவசியமான இயக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது கொழுப்பு அமிலங்கள்தான்.நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லையும் சுற்றி அமைந்துள்ள பிளாஸ்மா சவ்வில் பிராதானமான இடம்பிடித்திருக்கின்றன கொழுப்பு அமிலங்கள்.
பூரிதமான கொழுப்பு அமிலங்கள்:
Lauric acid, Myristic acid, Palmitic acid, Stearic acid ஆகிய அமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. இந்த அமிலங்கள் இவற்றில் உள்ள கார்பன் அணுக்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன. இந்தக் கொழுப்பு அமிலங்களைக் கொண்டதுதான் பூரிதமான கொழுப்பு எனப்படுகிறது.
வெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், கரீம் வகைகள், பாலாடைக் கட்டி, இறைச்சி, சாக்லேட் ஆகியவைகளில் பூரிதமான கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.அதிகம் சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பூரிதமான கொழுப்பு அமிலங்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் வகைகளும், டிரைகிளிசைரடும் அதிகரிக்கும். இவை இரண்டுமே ஆபத்தானவை. இவை உடலில் அதிகமாக சேர்ந்தால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிந்து விடும்.இதன்காரணமாக நோயாளிகளுக்கு ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். இவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் உட்கொள்ளும் உணவில் பூரிதமான கொழுப்பு 7 சதவீதத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள்:
1. ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள்: Palmitoleic acid, Cis-Vaccenic acid, Oleic acid ஆகியவை பூரிதமாகாத கொழுப்பு வகையைச் சார்ந்தவை.
தாவர எண்ணெய்யில் குறிப்பாக ஆலிவ் எண்ணெய்யில் அதன் அளவு மிக அதிகம். கனோலா எண்ணெய், வேர்க்கடலை ஆகியவற்றிலும் அதிகமாக காணப்படுகிறது.பருப்புகள், தானியங்கள், அவகோடோ பழம் ஆகியவற்றிலும் அதிகமாக காணப்படுகிறது.
நமது உணவில் இதை 10 கிராம் வரை சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. ஒற்றை பூரிதமாகாத அமிலம் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகமாக்கக உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் இன்னொரு வகையான டிரைகிளிசைரடின் அளவையும் இது குறைக்கிறது.
சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துக் கொள்வது நல்லது.
2. பல பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள்: தாவர எண்ணெய்களிலும் மீன்களிலும் இவை அதிகமாக காணப்படுகின்றன. உடலில் இதயம் தொடர்பான நோய் வருவதை 19 சதவீதம் இது தடுக்கிறது.
ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தவைகள். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் உணவில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 6 கொழுப்பு அமிலம் தாவர எண்ணெய்யில் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு அமிலங்களுக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் என்று பெயர். கொலஸ்ட்ராலின் வளர்சிதை மாற்றத்திற்கும் இவை துணை புரிகின்றன. இதை உணவில் நாம் எடுத்துக் கொள்வது கட்டாயமாகிறது.
இந்த வகையின் கீழ்வரும் அமிலங்களாவன:
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty acid)
LinoLenic Acid, Eicosatrienoic Acid, Decosapentaenoic acid, Eico Sapentaenoic Acid, Cupanodronic Acid, Tetracosapentaenoic Acid, Tetracosahaxaenoic Acid.
கண் , மூளை மற்றும் நரம்பு தொடர்பான செயல்பாடுகளுக்கு ஒமேகா 3 பயன்படுகிறது.  ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு ரத்தத்தின் அடர்த்தியையும் குறைக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது.ரத்தக் குழாய்கள் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பதால் இதயநோய், மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
இந்தக் கொழுப்பு அமிலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கவனக்குறைபாடு, மிகை செயல்பாடு பாதிப்புக்கும் மருந்தாக பயன்படுகிறது.ரத்தக் கொலஸ்ட்ராலில் டிரைகிளிசரைடு கொழுப்பை 45 சதவீதமும், மிகவும் அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ராலை 50 சதவீதமும் குறைக்கிறது. கற்கும் திறனையும், நினைவாற்றலையும் வளர்க்க இந்த அமிலம் உதவுகிறது. தோலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமையைப் போக்கவும், பல்வேறு மனநோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
தினமும் ஆண்களுக்கு 1.6 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 1.1 கிராம் என்ற அளவிலும் இந்தக் கொழுப்பு அமிலம் தேவைப்படுகிறது.
ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகள்:
ஆலிவ், வால்நட்(அக்ரோட்), சோயா பீன்ஸ், Salmon, Herring, Anchovies, sardines, Tuna போன்ற கொழுப்பு அதிகம் உள்ள மீன் வகைகளிலும்; இந்த அமிலம் அதிகமாக காணப்படுகிறது.
Chia 64 சதவீதம், Kinifruit 62 சதவீதம், Perilla58 சதவீதம், Flax55 சதவீதம், Lingonberry 49 சதவீதம், Camelina 36 சதவீதம், Purslane 35 சதவீதம்,BlackRaspberry 33 சதவீதம் ஆகிய பிற உணவுகளிலும், அக்ரோட் 6.3 சதவீதம், Hazelnut.1 சதவீதம்,Pecannut.6 சதவீதம், Butternuts 8.7 சதவீதம் என்ற அளவுகளில் இந்த அமிலம் நிறைந்திருக்கிறது.
ஒமேகா -6 கொழுப்பு அமிலம்:
இந்த அமிலம் நமது உடலில் என்-6 இகோசானாய்ட்ஸ் (N-6 Eicosanoids) என்ற பொருளாக மாறிச் செய்ல்படுகிறது. நமது தோலின் தோற்றத்தையும், பளபளப்பையும், ரத்த நாளங்களின் வடிவத்தையும் பராமரிப்பதில் ஒமேகா-6 அமிலத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஒமேகா -3 அமிலத்தின் nஅளவையும், செயல்பாட்டையும் குறைப்பது இதன் வேலைகளில் ஒன்று.
முக்கிய ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்:Linoleic Acid, Gamma Linolenic Acid, Eicosamdiencoic Acid, Dihomo-gamma, Linolenic Acid, Arachidonic Acid, Doicosadienoic Acid, Adrenic Acid, Docosapentaen Acid, Calendic Acid ஆகியவை இந்த அமிலக் குடும்பத்தைச் சார்ந்தவைகள்.
ஒமேகா-6 அதிகம் உள்ள உணவுகள்:
முட்டை, கோழி வகை உணவுகள், தானியங்கள், தானியங்களில் தயாரிக்கப்படும் பிரட் வகைகள், பேக்கரி உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் அதிகமாக இந்த அமிலங்கள் உள்ளன.
சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சன்பிளவர் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், ஈவ்னிங் ப்ரைம்ரோஸ் (Evening Primrose Oil) எண்ணெய் போன்றவற்றில் இந்த வகைக் கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன.
நாம் சாப்பிடும் உணவில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் 4:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
ஒமேகா -9 கொழுப்பு அமிலம்:
இந்த அமிலம் விலங்குகளின் கொழுப்பிலிருந்தும், தாவர எண்ணெய்யிலிருந்தும் கிடைக்கிறது. Oleic Acid, Dicosenoic Acid, Mead Acid, Erucic Acid, Nervonic Acidஆகியவை இவ்வகை கொழுப்பு அமிலங்களை சேர்ந்தவை.
காணப்படும் உணவுகள்:
ஆலிவ் எண்ணெயிலும், வால்ஃப்ளவர் விதையிலும், கடுகு எண்ணெயிலும் இவை அதிகம் காணப்படுகின்றன. இது அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் வகையில் வராது. ஏனென்றால், நமது உடல் பிற பூரிதமாகாத கொழுப்பு அமிலங்களில் இருந்து இவற்றை தயாரித்துக் கொள்கிறது.
டிரான்ஸ் கொழுப்பு(Trans Fat):
திரவநிலையிலிருக்கும் பூரிதமாகாத கொழுப்பின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக ‘ஹைட்ரஜனேற்றம்’ செய்யப்படுவதால் இக் கொழுப்பு உருவாகிறது. இது திடநிலையில் இருக்கும். துரித உணவுகளிலும், பேக்கரி பொருள்களிலும், ஜங்க் ஃபுட்ஸ் என்று சொல்லப்படுகிற பொறிக்கப்பட்ட உணவுகளிலும் இந்த வகைக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலைப் பொறுத்தவரை வில்லனாகவே கருதப்படுகிறது.
 இருப்பதிலேயே மிக மோசமான கொழுப்பு என்று இதைக் குறிப்பிடலாம். செல்லைச் சுற்றியுள்ள சவ்வில் கொழுப்பு அமிலங்கள, இந்த கொழுப்பு அதிகமாக சேர்வதன் காரணமாக சேதமடைகின்றன. இதனால் சவ்வின் ஊடுருவும் தன்மையும் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இத்தகைய பாதிப்புக்குள்ளான சவ்வு முற்றிலுமாக சேதமடைந்து புற்றுநோய், ஆர்த்ரைடிஸ், இதய நோய்கள் போன்றவை ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் உருவாகும் வாய்ப்பை டிரான்ஸ் கொழுப்பு 93 சதவீதம் அதிகப்படுகிறது.
இந்த கொழுப்பு கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பொருட்கள் பாக்கெட்டின் மேல் உள்ள லேபிளில் Partially Hydrogenated என்று குறிப்பிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். Hydrogenated எனற வார்த்தை இருந்தாலே அது டிரான்ஸ் கொழுப்பு இருப்பதாககத் தான் அர்த்தம்.இதை மறைத்தே உணவு பக்கெட்டுகளில் குறிப்பிட்டிருப்பார்கள்.
அதைக் கண்டறிய வழி: லேபிளில் பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு மற்றும் மொத்தக் கொழுப்பின் அளவைக் குறிப்பிட்டிருப்பார்கள். பூரிதமான மற்றும் பூரிதமாகாத கொழுப்பு ஆகியவற்றைக் கூட்டி, மொத்த கொழுப்பில் இருந்து  அதைக் கழித்தால் வருகிற அளவுதான் டிரான்ஸ் கொழுப்பின் அளவு.
உடலுக்குத் தேவைப்படும் கொழுப்பின் அளவு:
கொழுப்பு மிக முக்கியமான சத்துப் பொருள் என்பதால், உணவு மூலமாகக் குறிப்பிட்டட அளவில் அது நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால்  எல்லோருக்கும் ஒரே அளவில் கொழுப்புச் சத்து தேவைப்படுவதில்லை.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிலோ எடைக்கு சுமார் 5 முதல் 7 கிராம் வரையும், சிறுவர்களுக்கு (3 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள்) சுமார்20 முதல் 50 கிராம் வரையும் 13 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், பெரியவர்களுக்கு 20 முதல் 60 கிராம் வரை கொழுப்புச் சத்து  அவர்களின் உழைப்பைப் பொறுத்தும் தேவைப்படும். தினமும் சுமார் 15 கிராம் அவசியமான கொழுப்பு அமிலங்கள் பெரியவர்களுகு;குத் தேவைப்படும்.
நமக்குத் தினந்தோறும் தேவைப்படும் சக்தியில் 30 சதவீதம் கொழுப்பு உணவுகளின் இருந்து கிடைக்க வேண்டும். அவற்றில், பூரிதமான கொழுப்பு 7 சதவீதத்திற்கும் குறைவானதாகவும் பல பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஒற்றைப் பூரிதமாகாத அமிலங்கள் 13 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தினமும் தேவைப்படும் கொலஸ்ட்ராலின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 200 மி.கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால்:
கொலஸ்ட்ரால் என்பது வெள்ளை நிறம் கொண்ட மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருள். இது நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து. உடல் அணுக்களின் வடிவத்திற்கும், அமைப்புக்கும் இன்றியமையாததது. பித்த நீர் உற்பத்திக்கும், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான், டெஸ்டோஸ்டிரான் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. நமது உடலைச் சுற்றியுள்ள செல்களின் சவ்விற்கும் இது இன்றியமையாதது.
இக் கொலஸ்ட்ரால் உணவின் மூலமாகவும், கல்லீரல் தயாரிப்பது மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.
கொழுப்புப் புரதத்தோடு கொலஸ்ட்டரால் சேரவில்லையென்றால் அது ரத்தத்தில்  திடப்பொருளாக மாறி அவற்றின் பணிகளை செவ்வனே செய்யமுடியாமல் உடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும். கொழுப்பு ரத்தத்தில் கரைவதில்லை.எனவே ரத்தத்தில் செல்ல கொலஸ்’ட்ராலுக்கு லிப்போபுரோட்டீன் (Lipoprotein) என்ற பொருள்தான் இதற்கு வாகனமாக பயன்படுகிறது. இதுவும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ப கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது.
லிப்போபுரோட்டினில் நான்கு வகைகள் உண்டு.
1. கைலோமைக்ரான் (chylomicron)
2. மிகக் குறைந்த அடத்த்தி உள்ள கொழுப்புப் புரதம் (very low Density Lipoproteiun -VLDL)
3. குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புப் புரதம் (Low Density Lipoprotein -LDL)
4. அதிக அடர்த்தி உள்ள கொழுப்புப் புரதம் (High density lipoprotein -HDL)
கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் மிகக் குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புப் புரதத்தோடு (விஎல்டில்) சேர்ந்து வி எல் டி எல் கொலஸ்ட்ராலாக மாறுகிறது. இது ரத்தத்தில் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி குறைந்த அடர்த்தி உள்ள (எல்.டி.எல்) கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றது.கல்லீரலில் உள்ள கொலஸ்ட்ராலை செல்களுக்கு கொண்டு செல்கிறது எல்டிஎல்.
இதுதான் கெட்ட கொலஸ்ட்ரால் எனக் கருதப்படுகிறது.கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால், உணவின் மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டும் இணைந்து உடலின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலின் அளவு சமயங்களில் அதிகமாகிவிடும். இதன் விளைவாக எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிக அளவில் உற்பத்தியாகும்.
ரத்தத்தில் கொலஸ்ட்ராலைச் சுமந்து செல்லும் எல்டிஎல் கொழுப்புப் புரதம் போகிற போக்கில் ரத்த நாளங்களின் சுவர்களில் இந்த அதிகப்படியான கொலஸ்ட்ராலைப் படிய வைத்து விடுகிறது. தொடர்ச்சியாக இப்படி கொலஸ்ட்ரால் படிந்து கொண்டே வருவதால், ரத்த நாளங்களின் சுவர்கள் தடித்துப் போய் நாளங்கள் குறுகலாகிவிடுகின்றன. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் இது படிவதால் ரத்தம் இயல்பான அளவிலும், வேகத்திலும் இதயத்திற்கு ரத்தம் போய்ச் சேராது.இதனால் போதுமான அளவு ஆக்ஸிஜன் இதயத்திற்கு கிடைக்காது. இதே போன்று மூளகை;குச் செல்லும் ரத்த நாளங்களிலும் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன.
ஆனால் ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் ஹீரோ. கெட்ட கொலஸ்ட்ராலின் வேலையை முறியடிப்பதே இதற்கு வேலை. இந்தக் கொலஸ்ட்ரால் உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும். ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் படிவத்தை சுரண்டி எடுத்து கல்லீரலின் வழியாக வெளியேற்றுவதே இந்த நல்ல கொலஸ்ட்ரால் செய்கிறது.
நமது உடலில் இருக்க வேண்டிய கொலஸ்ட்ராலின் அளவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கு :68-80 மி.கி./டெசிலிட்டர்
ஒரு வயதில் : 160 மி.கி./டெசி லிட்டர்
விடலைப் பருவம் வரை: 160 மி.கி./டெசிலிட்டர்
பருவமடைந்த வயதில் : 200 மி.கி./டெசிலிட்டர்.
இரண்டு விதமான அளவுகோலைக் கொண்டு கொலஸ்ட்ராலின் அளவு கணக்கிடப்படுகிறது. ஒன்று எடையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் எவ்வளவு மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்று அளவிடும் முறை. இரண்டாவது அளவு கோல், மூலக் கூறு எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் எவ்வளவு கொலஸ்ட்ரால் மூலக்கூறுகள் உள்ளது என்று கணக்கிடும் முறை.
பெரியவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு:
ஒரு டெசிலிட்டருக்கு 200 மி.கி. அளவுக்கும் தாழ்வாக அல்லது ஒரு லிட்டருக்கு 5.17 மி.மோல் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஹைச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு:
ஆண்கள் : ஒரு டெசிலிட்டருக்கு 40-50 மி.கி. அளவுக்கு குறைவாக அல்லது ஒரு லிட்டருக்கு 1.0-1.28 மி.மோலுக்கும் குறைவாக
பெண்கள்:  ஒரு டெசிலிட்டருக்கு 50-60 மி.கி. அளவுக்கு குறைவாக அல்லது ஒரு லிட்டருக்கு 1.28-1.54 மி.மோலுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
எல்டிஎல் கொலஸ்ட்ரால்:
ஒரு லிட்டருக்கு 100 மி.கி. அல்லது ஒரு லிட்டருக்கு 206 மி.மோலுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
டிரைகிளிசரைடு கொழுப்பு சத்து:
ஒரு டெசி லிட்டருக்கு 150 மி.கி. அல்லது ஒரு லிட்டருக்கு 1.69 மி.மோல் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் காரணிகள்:
1. உணவுப் பழக்கம்.
2. பரம்பரை
3. உடற்பயிற்சி இல்லாமை
4. புகை மற்றும் மது.
5. மன அழுத்தம்
6. பல்வேறு நோய்கள்.
7. சில மருந்துகள்
8. முதுமை
9. பாலினம்.
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்:
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரித்தவர்களுக்கு தோலில் மஞ்சள் படிவுகள் காணப்படும். இதை ஸாந்த லேஸ்மா(Xanthelasma) என்று சொல்வார்கள். பெரும்பாலும் கண்களுக்கு கீழே காணப்படும். இந்தக் கொழுப்பு படிவங்கள் நோயாளிகளின் தசை நாண்களிலும் படிய வாய்ப்புண்டு. இவர்களுக்கு மூட்டு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
ரத்தத்தில் டிரைகிளிசரைடு கொலஸ்ட்ரால் மிகுந்தவர்களுக்கு உடலில் கொப்புளங்கள் போல் கொலஸ்ட்ரால் படிவுகள் ஏற்படும். விழித்திரையில் பார்த்தால், ரத்த ஓட்டம் தெரியாது. ஏதோ பால் ஓடுவது போல் கொலஸ்ட்ரால் மிகுந்த இரத்தம் காட்சி அளிக்கும். இவர்களுக்கு கணைய அழற்சி ஏற்பட்டு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். மூளையில் ரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுவதால் பல்வேறு நரம்பு பாதிப்புகளும் ஏற்படும். கை,கால் பகுதிகளில் மதமதப்பு ஏற்படலாம். மூட்டு உபாதைகள் ஏற்படலாம். கண்கள் உலர்ந்து போகலாம். பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
உணவு கட்டுப்பாடுகள்:
இன்று சமையல் பயன்பாட்டுக்கு எண்ணற்ற எண்ணெய்கள் கிடைக்கின்றன. எண்ணெய் என்றாலே கொழுப்புதான். இருப்பினும், நாம் சமைக்கும் எண்ணெயில் பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் மிகுதியாகவும், பூரிதமான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு உள்ள எண்ணெய்யை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது.இதுதான் அடிப்படை விதி.
அதே சமயம் ஒற்றை மற்றும் பல பூரிதமாகதா கொழுப்பு நம் உடலில் சேர்வது மிகவும் நல்லது. குறிப்பாக பூரிதமாகாத கொழுப்பு வகையைச் சார்ந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் கொண்ட எண்ணெய்யைப் பயன்படுத்துவது உடலுக்கு நன்மை தரும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமும், ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் 1:1 முதல் 1:4 சதவீதத்தில் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஆக இந்தக் கலவை கொண்ட எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இத்தனை காம்பினேஷன்களும் ஒரே எண்ணெய்யில் கிடைப்பது என்பதை எதிர்பார்க்க முடியாது. சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil)பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் மிகுதியாகவும், பூரிதமான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருப்பதால் உணவைச் சமைப்பதற்கு இந்த எண்ணெய்யைப் பயன் படுத்தலாம். மேலும் ஆலிவ் எண்ணெய்யில் ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்பு (Mono-Unsaturated Fatty Acids)அமிலம்இருப்பதால் அது கொலஸ்ட்ரால் பாதிப்பை குறைக்கும். ஆனால் இந்த எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் முன்பாக பயன்படுத்துவதே நல்லது.
கடல் மீன்களான சாலமன், சார்டின்ஸ் ஆகிய மீன்களின் எண்ணெய்யில் ஒமேகா-3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக உள்ளன. ஒவ்வொரு எண்ணெய்யிலும் நமக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் கிடைக்காத காரணத்தால் இந்த இரண்டையும் மாறி மாறி இடையிடையே பயன்படுத்த வேண்டும்.
சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் வகைகள்:
Flax Seed Oil, Olive Oil, Canola Oil, Peanut Oil, Sunflower Oil (Saffola Oil), Sunflower Oil, Corn Oil.
Flaz seed Oil   எண்ணெய்யில் ஒமேகா-3 மற்றும் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் (PUFA)  1:1 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ALA(Alpha-Linolenic Acid) என்ற அமிலமாக இருப்பதால் இது சமையலுக்கு சிறந்த எண்ணெய்யாகக் கருதப்படுகிறது.
சமையலில் தவிர்க்க வேண்டிய எண்ணெய் வகைகள்:
தேங்காய் எண்ணெய், பாமாயில், வெண்ணெய், நெய், டால்டா, Palm Kernel Oil இவற்றில் பூரிதமான கொழுப்பும் டிரான்ஸ் கொழுப்பும் அதிகம். நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்கள் குறைவு. எனவே இவற்றை சமைக்கப் பயன்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு smoke point உண்டு. அதை அனுசரித்தே நாம் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு  எண்ணெய்யையும் அதன் smoke point க்கும் குறைவான வெப்பநிலையில் தான் சமைக்க வேண்டும். அதிகமான வெப்பநிலையில் சமைத்தால் அது கெட்ட கொழுப்பாக  Transfat ஆக மாற வாய்ப்புண்டு.
எனவே குழம்பு வைத்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். லேசான பொரியல், சமைத்தல் ஆகியவற்றுக்கு Canola, Walnut, Sunflower, Sesame Oil போன்றவற்றைப் பயன் படுத்தலாம். இவற்றின் ளஅழமந pழiவெ நடுத்தரமாக இருக்கும்.
பொரிப்பதற்கு Almond, Sunflower, Soyabean Oil ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை அதிக ளஅழமந pழiவெ கொண்டவை.
ஏற்கனவே பயன்படுத்திய -சூடாக்கிய-சமைத்த எண்ணெய்யை திரும்ப பயன்படுத்துவது கூடாது. ஒவ்வொரு முறையும் அது சூடேறுவதால் அதில் ஹைட்ரஜன் அதிகமாக சேர்ந்து Transfat ஆகிவிடும். இதனால் உடலுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும். புற்று நோய் வரக்கூட வாய்ப்புண்டு.
ஒருவர் தினமும் அதிகபட்சமாக 14 மி.லி. அளவு எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல.
உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்:
பொதுவாக எண்ணெய் விஷயத்தில் மட்டுமல்லாது மற்ற உணவு விஷயத்திலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
மாமிசத்தில் உள்ள தோல் மற்றும் கொழுப்பை சமைப்பதற்கு முன் நீக்கிவிட வேண்டும். கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும் விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை தவிர்த்து விடுவது நல்லது. நெய், வெண்ணெய், வனஸ்பதி, கிரீம், கொட்டை வகைகள் (முந்திரி, பாதாம் பருப்பு, சோயாபீன்ஸ்) போன்றவற்றையும் தவிர்த்து விட வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது குறைந்த கொழுப்பு உள்ள பாலைப் பயன்படுத்த வேண்டும்.
பிஸ்கட், கேக், சிப்ஸ் ஆகியவற்றை குறைந்த அளவே சாப்பிட வேண்டும். பொரியல் மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்த்து ‘கூட்டு’ செய்த உணவுகளை, வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மூன்று நேரமும் மாவுச் சத்து (அரிசி) உள்ள உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடலில் கொழுப்புச் சத்தாக மாறி கொலஸ்ட்ராலை அதிகரிக்கச்செய்து விடும். உணவில் அதிகஅளவு நார்ச்சத்தும், வைட்டமின்களும், தாது உப்புகளும் உள்ள பழங்கள், கீரைகள், முளைகட்டிய தானிய உணவுகள், பச்சைக் காய்கறிகள் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உடையது. தினமும் ஒரு கப் காய்கறி சாலட் அல்லது பழ சாலட் எடுத்துக் கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கலாம். சோயா விதைகளைப் பத்து நாளைக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் தரும்.
அதேபோல் முட்டையில் வெள்ளைக் கருவில் கொஞ்சம் கூட கொழுப்பு இல்லை. ஆனால் மஞ்சள் கருவில் 1330 மி.லி. அளவுக்கு கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கிறது. எனவே இதை சாப்பிடக் கூடாது.
வேர்க்கடலை, வாதாக்கொட்டை (Almonds), Beans மற்றும் Walnut, Hazel nuts, Pine nuts, Pistachiosஆகிய கொட்டை வகைக் ரத்தத்தில் செட்ட கொலஸ்ட்ராலின் அளவை நன்கு குறைக்கின்றன.
அக்ரோட் கொட்டையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் சக்திகள் ஆகியவை அடங்கியுள்ளன. அத்துடன் ஒமேகா-3 அமிலமும் நிறைந்துள்ளது. இவை ரத்தத்தில் டிரைகிளிசரைடு கொழுப்பை 10 சதவீதம் குறைக்கின்றன.
வாதாக் கொட்டை ரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவை 4.4 சதவீதம் குறைக்கும்.
pecans ரத்தத்தில் எல்டிஎல் சொலஸ்ட்ராலை 10.4 சதவீதமும், டிரைகிளிசரைடை 11.1 சதவீதமும் குறைப்பதோடு நல்ல கொலஸ்ட்ராலை 5.6 சதவீதம் அதிகரிக்கிறது.
முந்திரிக் கொட்டையில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. இது உடலுக்கு நல்லதல்ல. தினமும் 10-15 எண்ணிக்கை அளவு சாப்பிட்டால் போதும்.
முற்றிய தேங்காயிலும், கொப்பரையிலும் பூரிதமான கொழுப்பு அதிகம்.  எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். இளநீர் வழுக்கையில் ஓரளவே கொழுப்பு உள்ளது.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதற்கென்று ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். காலை-மாலை இரண்டு வேளையும் இருபது நிமிடங்கள் மெல்லோட்டமாக ஓடலாம். அல்லது நடைப் பயிற்சி செய்யலாம். இப்படிப்பட்ட நடைப்பயிற்சியை தினமும் செய்வதை வழக்கமாக கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள், வாரத்தில் குறைந்தது 4 முறையாவது செய்வது நல்லது. நடக்க முடியவில்லையென்றாலும், சைக்கிள் ஓட்டியும் பயிற்சி செய்யலாம். நீந்த விருப்பமுள்ளவர்கள் நீந்தலாம். பூப்பந்து, ஷெட்டில்காக், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தினமும் அரை மணி நேரமாவது பயிற்சி செய்வது நல்லது.
உடற்பயிற்சியால் சேமிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை சத்து நன்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான கொழுப்பும் சக்தியின் பயன்பாட்டுக்காக செலவழிக்கப்படுகிறது. அத்தோடு பயிற்சியின்போது அதிகளவு ஆக்ஸிஜன் தேவைவப்படுவதால் இதயமும் துடிப்பாக இயங்குகிறது. எனவே இந்தப் பயிற்சிகள் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் ரத்த நோய்கள், இதய நோய்கள், நீரழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும் உடலின் எடை குறைந்து சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றன.
புகைப் பழக்கம், மதுப் பழக்கம் ஆகியவற்றிற்கு தடை போட்டு விட வேண்டும். மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு பல வழிகளிலும் சிகிச்சையை மேற்கொண்டால்தான் கொலஸ்ட்ராலை சீரான அளவில் பராமரித்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
மருந்துகள்:
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய இரண்டு அம்சங்களோடு சேர்ந்து கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு மருந்து மிகவும் அவசியமானதாக இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும். மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. அடோர்வாஸ்டேட்டின் ((Atorvastatin)
2. சிம்வாஸ்டேனட்என்Simvastatin)
3. ரோஸுவாஸ்டேட்டின் (Rosuvastatin)
4. எஸிடிமிபீ (Ezetimibe)
5. லோவாஸ்டாட்டீன் ;(lovastatin)
6. புரோவாஸ்டேட்டீன்(Pravastatin)
7.  ஃபெனோஃபைப்ரேட் (Fenofibrate)
8. நிக்கோட்டினிக் அமிலம் (Nicotinic Acid)
9. செரிவாஸ்டேட்டின் (Cerivastatin)
10. பிஸாஃபைப்ரேட் (Bezafibrate)
11. போலிகோசனால் (Policosanol)
12. ஜெம்ஃபைபரோஸில்(Gemfibrozil)
இத்துடன் பல மருந்துகள் மற்றும் மூலிகை மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இறுதியாக-விழிப்புணர்வு:
பரம்பரைக் காரணங்களால் மட்டுமில்லாமல் நமது உணவு விஷயங்கள் மற்றும் அதிகமாக காணப்படும் நீரழிவு நோய் ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
பரம்பரைக் காரணங்களால் சிறுவயதிலேயே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் துவங்கி விடும். எனவே பரம்பரையாக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது என்றால், கொலஸ்ட்ரால் அளவுகள் சாதாரண அளவை விட பல மடங்குகள் உயர்ந்திருக்கும். நோய் அறிகுறிகளும், பிற பாதிப்புகளும் ஏற்படும். எனவே இவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பரம்பரைக் காரணங்கள், மரபணு கோளாறுகள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். இதனால் இவர்களின் வாரிசுகளுக்கு இப்பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.
சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரப்பி நோய்கள், தைராய்டு நோய்கள் போன்றவைகள் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக் கூடும். எனவே நோயாளிகளுக்கு இதுபோன்று ஏதாவது நோய் குறிப்பாக நீரழிவு, ரத்த அழுத்தம் இருக்கிறதாக என்பதைப் பார்க்க வேண்டும்.
புகை பிடிப்பவர்கள் அதை நிறுத்த வேண்டும்.
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உணவுகள் குறித்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், டின் உணவுகள் அதிக கலோரிகள் தருபவை. டிரான்ஸ் வகை கொழுப்பு நிறைந்தவை. நார்ச் சத்து குறைந்தவை. உப்பு மிகுந்தவை. வைட்டமின்களும், தாது உப்புகளும் குறைந்தவை. எனவே இது குறித்து விழிப்புணர்வு தேவை.
உடல் எடை பருமனாக இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்கள் இவற்றைக் குறைக்க வேண்டும்.
உணவில் அதிகளவு காய்கறி, கீரைகள், தானியங்கள், பழங்களைச் சேர்த்துக்  கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள்  தங்களின் ரத்த குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
சமைக்கும் எண்ணெய்யில் கவனம் தேவை. MUFA/PUFA, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
வெண்ணெய், நெய், டால்டா, கொழுப்பு மிகுந்த பால், இறைச்சி, கல்லீரல், சிறுநீரகம், இறால் ஆகிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், உழவவழளெநநன ழுடை ஆகிய பூரிதமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தவிர்த்து விட வேண்டும். பேக்கரி உணவுகள், கேக் வகைகளையும் தவிர்த்து விட வேண்டும்.
ஆலிவ் எண்ணெய், safflower எண்ணெய், Flax Seed Oil, Canola Oilஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் ஒமேகா-3 நிறைந்த மீன்கள், கொட்டைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் கொழுப்பின் அளவுகள்:
100 கிராம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து
உணவு                                                                                         கொழுப்பின் அளவு
கோழிக் கறி                                                                                     13.3 கிராம்
கல்லீரல் (ஆடு)                                                                                7.5 கிராம்.
ஆட்டுக் கறி                                                                                    13.3 கிராம்
பால்                                                                                                    11 கிராம்
பால் பொடி                                                                                       88 கிராம்
பதப்படுத்தப்பட்ட பால்                                                                  0.1 கிராம்
பதப்படுத்தப்பட்ட பால்பொடி                                                      0.8 கிராம்
மாட்டிறைச்சி                                                                                     2.6 கிராம்
வாத்து                                                                                                   4.8 கிராம்
புறா                                                                                                        4.9 கிராம்
கோழி முட்டை                                                                               13.3 கிராம்
வாத்து முட்டை                                                                              13.7 கிராம்
தயிர்                                                                                                       2.9 கிராம்
வாதாக் கொட்டை                                                                         58.9 கிராம்    
முந்திரிக் கொட்டை                                                                     46.9 கிராம்
தேங்காய்                                                                                           62 கிராம்
வேர்க்கடலை                                                                                  40.1 கிராம்
எள்                                                                                                        43.3 கிராம்
கடுகு                                                                                                    39.7 கிராம்
மிளகு                                                                                                     6.8 கிராம்
மஞ்சள்                                                                                                  5.1 கிராம்
தனியா                                                                                                14.1 னிராம்    
மிளகாய் வற்றல்                                                                              6.2 கிராம்    
ஏலக்காய்                                                                                              9.2 கிராம்
பெருங்காயம்                                                                                      4.1 கிராம்
100 கிராம் உணவில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு
உணவு                                                                                 கொலஸ்ட்ரால் அளவு (மி.கி.)
வெண்ணெய்                                                                                                  280
கிரீம்                                                                                                                  140
பால்                                                                                                                      11
மஞ்சள் கரு                                                                                                  1330
மீன்                                                                                                                       50
மூளை                                                                                                             2000
நெய்                                                                                                                    310
முட்டை வெள்ளைக் கரு                                                                               0
பாலாடைக் கட்டி                                                                                           100
மாட்டு மூளை                                                                                               2670
வெள்ளாட்டு கல்லீரல்                                                                                 323
மாட்டு சிறுநீரகம்                                                                                            340
வெள்ளாடு கொழுப்பு                                                                                    113
வெள்ளாடு                                                                                                           70
கோழி                                                                                                                    69
மாட்டிறைச்சி                                                                                                     65
காய்கறிகள்                                                                                                            0
பழங்கள்                                                                                                                   0
தானியங்கள்                                                                                                          0
சமையல் எண்ணெய்களில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு(சதவீதத்தில்)
எண்ணெய் வகைகள்             Saturated Fat                                       MUFA                           PUFA
வெண்ணெய்                                           66                                                     30                                   4
நெய்                                                            65                                                      32                                   3
தேங்காய் எண்ணெய்                          92                                                        6                                   2
Canola எண்ணெய்                                     6                                                      62                                32
Corn Oil                                                         13                                                       25                               62
பருத்திக்கொட்டை
எண்ணெய்                                                 24                                                        26                             50
Lard                                                                41                                                        47                             12
Margarine                                                      80                                                        14                              16
ஆலீவ் எண்ணெய்                                14                                                         73                               11
பாமாயில்                                                  52                                                         38                              10
நல்லெண்ணெய்                                    18                                                          49                              33    
சோயாபீன்ஸ் எண்ணெய்                  15                                                          24                              61    
சூரியகாந்தி எண்ணெய்                        11                                                         20                              69
SunFlower Oil   
(Saffola)                                                          10                                                         13                             77
Categories: Uncategorized | Leave a comment

வயிற்றுப் பிரச்சனைகளும், தீர்வும்!

 உங்கள் வயிற்றுக்கு நீங்கள் உற்ற நண்பன். அதே வயிற்றுக்கு நீங்கள் மோசமான எதிரியாகவும் இருக்க முடியும். உங்கள் ஜீரணமண்டலத்தைஒழுங்காக வைத்துக் கொண்டால் நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்எழுதிய ’வயிறு’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
நெஞ்செரிச்சல் (Heart Burn ):
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள்போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது. அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவைஇரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவுபோன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது.
அதே போல் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலே பொங்கி வரும்போது உணவுக்குழாய் தடுப்பிதழ் பலஹீனமாக இருப்பவர்களுக்கு இந்த அமிலம்உணவுக் குழாயின் உள் அறையின் மேல் பட்டு படர்ந்து விடுகின்றது. இந்த உள் அறைக்கு அமிலத்தின் வீரியத்தை தாங்கும் சக்தி இல்லை. இதனால் அந்தஉள் அறை பாதிக்கப்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ‘ரிஃப்ளக்ஸ் ஆக்ஷன்’ என்று சொல்வார்கள்.
சாப்பாட்டை கண் எதிரே பார்க்கும் போதும் இரைப்பையில் அமிலம் சுரப்பது இயற்கை. இந்த அமிலத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த-சமப்படுத்த சாப்பாட்டுடன் தண்ணீரையும் உட்கொள்வது அவசியம்.
காரசார உணவை கண்ணில் நீர்வர நாக்கு எரிய எரிய அடிக்கடி சாப்பிடும்போது உணவுக்குழாயின் உள் அறை செல்களில் மாற்றமேற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை முற்றி புற்று நோயாகக் கூட மாறலாம்.
அத்தோடு சில உணவுகள் வயிற்றின் அமிலத்தை மேலெழுப்பி உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளி, ஆரஞ்சு, ஐஸ் கிரீம், புளித்த கிரீம்கள், மசித்த உருளைக் கிழங்கு, காபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு சத்து அதிகமுள்ள கு;கீஸ், பேஸ்ட்டரீஸ் போன்ற உணவுகள் அமிலத்தை எதிர்க்களிக்கச் செய்யும். இவ்வுணவுகளை அன்றாடம் சேர்க்காமல் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
நெஞ்செரிச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் வரலாம். அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
சிகிச்சை:
எண்டோஸ்கோப்பி பண்ணி பாதிப்பை பரிசோதித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம்.
பொதுவாக இதற்கு ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை மருந்து மாத்திரை கொடுத்து உணவு கட்டுப்பாடுடன் சுரக்கும் அமில அளவை குறைத்து வால்லை இறுகச் செய்வது ஒருமுறை. மருந்து மாத்திரைகளில் குணமாகாத நெஞ்செரிச்சலுக்கு ஆபரேஷன் மூலமும் தீர்வு காணலாம்.
எண்டோஸ்கோப்பி மூலமே சரிபடுத்த தற்போது புதிய முறைகள் உருவாகி இருக்கிறது. இதை எண்டோசின்ச்(Endocinch ) என்று சொல்வார்கள். உணவுக் குழாயும் இரைப்பையும் சேருமிடத்தை எண்டோஸ்கோப் மூலம் பார்த்து அந்த இடத்தில் தையல் போட்டு விடுவது ஒருமுறை.
தற்போது நவீன சிகிச்சையாக ‘எண்டோஸ்கோபிக் சிமெண்ட் இன்செக்ஷன்’ என்ற முறை மூலம் சிமெண்ட் மாதிரியான பொருளை உணவுக் குழாய், இரைப்பையுடன் சேருமிடத்தில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் அது உள் சென்று இறுகி வால்வு போன்று வேலை செய்கிறது.
மற்றொரு முறையான ‘ரேடியோ ஃப்ரிகுவென்சி எனர்ஜி’ (Radio Frequency Energy ) மூலம் உணவுக்குழாயும் இரைப்பையும் சேருமிடத்தில் சுட்டுவிட முடியும். இப்படி சுடுவதால் அந்த இடங்களில் தசை நார்கள் அதிகமாகி, இறுகிவிடும். அதனால் நெஞ்செரிச்;சல் நின்று விடும்.
நெஞ்செரிச்சலால் வரக்கூடிய அடினோகார்ஸினோமா என்ற புற்றுநோய் இந்தியாவில் அதிகமாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்.
ஏப்பம்:
சாப்பிடும்போது நடுநடுவே பேசுவதாலோ, தண்ணீர் அருந்துவதாலோ நாம் நம்மை அறியாமலேய காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகின்றோம். இதனால் குறைந்த அளவு உண்டபோதும் வயிறு நிறைந்து விடுகின்றது. இதேபோல் தண்ணீரை அண்ணாந்து குடிக்கும்போதும், மூக்கடைப்பினால் வாயால் மூச்சு விடுவதினாலும் நான் காற்றை உள்ளே விழுங்குகிறோம். இதுதான் பிற்பாடு ஏப்பமாக வருகிறது.
விழுங்க முடியாமை(Dysphagia ):
பசி இல்லாமல் போவது, விழுங்க முடியாமல் தவிப்பது, எடை குறைவது  போன்ற அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டிருக்கிற குடல் புண் புற்று நோயாக மாற ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி போல் தோன்றுகிறது. இதைக் கண்டறிய எண்டோஸ்கோப்பி முறை அவசியம். உணவுக் குழாய்கு இடையே உணவு செல்ல இடைவெளி இல்லாமல் பக்கவாட்டுச் சுவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறதா? என்பதை கண்டறிவதும்  அவ்வாறிருப்பின் மருத்துவரை அணுகுவதும் அவசியம்.
உணவுக் குழாய் தசைகளால் ஆனாது. உணவுக் குழாயின் நெடுக்கிலும், பக்கவாட்டிலும் இருக்கும் தசைகள் இயங்கி உணவை உட்செலுத்த உணவு விழுங்கப்படுகின்றது. ஆனால் இந்த தசைகள் இறுகிப் போய் உணவு மேற்கொண்டு உள்ளிறங்காமல் அடைபட்டு போகும் நிலைமைக்கு அகலேசியா கார்டியா(Achalasia Cardia )என்று பெயர். இப்பிரச்சனை விளைவாக  உணவானது கீழிறங்கி இரைப்பையை அடையாமல், உணவுக்குழாயின் எந்த பகுதி இயங்காமல் இருக்கிறதோ அந்த இடத்திலேயே நின்று விடும். நாள் ஆக ஆக திரவ உணவும் கூட அதைத் தாண்டி கீழே இறங்காத நிலை ஏற்படும். உணவு இறங்கினால்தானே குடலுக்கு சென்று சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேரும். உணவுக்குழாயின் குறிப்பிட்ட இடத்தில் உணவு தங்கி அந்த இடமே பெருத்துவிடும். வாயில் துர்நாற்றமும் வீசும்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக இறுகிப்போன தசைகளை இயல்புக்கு கொண்டு வரும் ‘பலூன் டைலேஷன்’(Baloon Dilation) என்கிற சிகிச்சை செய்யப்படுகிறது.
விக்கல்(Hiccups ):
மர்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (diaphragm )எனப்படும். இந்த தசைப்பகுதி சொடுக்கலாக விரிந்து சுருங்கும்போது விக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம் , உதரவிதானம் அல்லது நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் என்று விக்கல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏன் மன உளைச்சல் கூட விக்கல் ஏற்பட காரணமாகிறது.
ஜீரணக் கோளாறு, புரதம் குறைந்த உணவைக் கொஞ்சம் மட்டும் எடுத்துக் கொள்வதும், கொழுப்பு சத்துள்ள உணவை அதிகமாக உடகொள்வதும் மேலும் உதரவிதானத்தின் தசைகளில் பாதிப்பிருந்தாலும் விக்கல் ஏற்பட காரணமாகிறது.
நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பு உதரவிதானம். அது மூச்சுவிடவும் நமக்குத் துணை புரிகிறது. கவனித்துப் பாருங்கள் மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். அதனால்தான் விக்கும் போது தண்ணீர் குடிக்கின்றனர்.தவிர அதிர்ச்சியாக எதைப் பேசினாலும், செய்தாலும் பக்கென்று ஒரு நிமிடம் மூச்சு நின்று நாம் விக்கித்துப் போய் விடுவோம். அதன்பலனாக விக்கலும் நின்றுவிடும். தம் பிடித்தாலோ, மூச்சை இழுத்துப் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்றுவிடும். அப்படியும் நிற்காத சமயத்தில் விக்கலை நிறுத்த மாத்திரை, மருந்து, ஊசி என்று பயன்படுத்துவது உதரவிதான தசையின் செயல்பாட்டை சரி செய்யும் சிகிச்சையே.
குடல் புண் (Ulcer):
வயிற்றுக்குள் புண் இருந்தால் பசியெடுக்கும்போது ஜீரணிப்பதற்காக அமிலம் வயிற்றில் உருவாகும். அது அந்தப் புண்ணில் படும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். இப்படி புண் இருப்பதை எண்டோஸ் கோப்பி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் ஆறிலிருந்து எட்டுவாரம் வரை மாத்திரை சாப்பிட்டு குடல்புண் நோயைக் குணப்படுத்திடலாம்.
அல்சரில் இரண்டு வகை இருக்கிறது.
1. கேஸ்ட்ரிக் அல்சர், இது இரைப்பையில் உருவாகும் புண்.
 
2. டியோடினல் அல்சர், இது குடலில் உருவாகும் புண்.
இரைப்பைக்கு ஒட்டின சிறு குடலின் முதல் பாகத்தில் முதல் இரண்டு அங்குலத்தில்தான் குடல் புண் உருவாகும்.
முன்பெல்லாம் இந்த இருவகையான புண்களையும் சேர்த்து பெப்டிக் அல்சர் என்றே கூறுவர்.
இரைப்பை ஒரு அமில மண்டலம். அமிலம் அதிகமாக சுரக்கச் சுரக்க அதை ஒட்டின மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு புண் வருகிறது. அமிலம் மேலே வந்து உணவுக் குழாயைப் பாதிக்கும்போது நெஞ்செரிச்சலும், இரைப்பையினுள் கசியும் போது இரைப்பை புண்ணும், சிறுகுடலில் படும்போது குடல் புண்ணும் உண்டாகிறது.
இரைப்பையில் உருவாகும் புண்ணை மூன்று வகையாக பிரிக்கலாம்.
அமிலம் குறைவாக இருக்கும் வகை ஒன்று, அமிலம் அதிகமாக இருக்கும் வகை இரண்டாவதும், அமிலம் அதிகமாக இருந்து சிறுகுடலில் அல்சர் உண்டாகி அதனால் அமிலம் வெளியே போக முடியாமல் தடைப்பட்டு புண்ணாகும் வகை மூன்றாவதாகவும் இருக்கிறது. இதை ப்ரி பைலோரிக் அல்சர் என்பர்.
அல்சருக்கு அடிப்படைக் காரணமாக ஹரி, வொரி, கறி (Hurry, Worry, Curry ) ஆகியவைகள் அமைகின்றன. ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும் போது மூளையிலிருந்து வயிற்றுக்குப் போகும் நரம்பு தூண்டப்பட்டு இரைப்பையில் அமிலம் அதிகமாக சுரக்க ஆரம்பிப்பதால் அல்சர் உண்டாக நேரிடும். மேலும் கிருமிகளினாலும் அல்சர் உருவாகும். ஹெச்-பைலோரி என்ற பாக்டீரியாவினால் அல்சர் வருகிறது. சுகாதாரமற்ற இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்பதினால் இந்த பாக்டீரிய்யா குடலுக்குள் புகுந்து புண்ணை உண்டு பண்ணுகிறது.
குடல் புண் நோயாளிக்கு உணவு உண்ட இரண்டு மணிநேரத்திற்பு; பின்தான் வலி ஏற்படும். உணவு உண்டு ஜீரணிக்கும் வரை அமிலம் குடல் புண் மேல் படாது. எனவே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்குப் பின்தான் வலி ஏற்படும். பெரும்பாலும் இரவு உணவிற்குப் பிறகு நடு இரவிலோ, விடியற்காலையிலோ வலி ஏற்படும்.
ஆனால் இரைப்பை புண் நோயாளிக்கு சாப்பிட்ட உடனேயே வலிக்க ஆரம்பிக்கும். இ;ந்த இரண்டு புண் உள்ளவர்களுக்கும் ரத்தக் கசிவு உண்டாகலாம், அடைப்பு உண்டாகலாம், ஓட்டை உண்டாகலாம். வேகஸ் என்ற நரம்புதான் மூளையிலிருந்து இரைப்பை வரை வந்து அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அறுவை சிகிச்சை மூலம் இந்த நரம்பை வெட்டிவிட்டால் அமிலம் சுரக்காது. அதெனால் குடல் புண்ணோ, இரைப்பை புண்ணோ உருவாகாது.
பித்தப்பை (Bile ):
பித்தப்பை கற்கள் உருவாகும் இடம் பித்தப்பைதான். இந்தக் கற்கள் பித்தப்பையின் எந்தப் பகுதிக்கு செல்கிறதோ அந்தப் பகுதியில் அடைப்பை உருவாக்கும். பித்தப்பையிலிருந்து பித்தக் கற்கள் நோய்த் தொற்றை உருவாக்கலாம். பித்தப்பையிலிருந்து நீர் வெளியே செல்லுமிடத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலையை உருவாக்கலாம்.

கற்களின் இடுக்கு ஓரங்களிலெல்லாம் பாக்டீரியா உருவாக வாய்ப்பு இருப்பதால் பித்தப்பையில் பித்த நாளங்களில் திரும்பத் திரும்ப நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு ரெக்கண்ட் கோலான்ஜைடிஸ் என்று சொல்லப்படும். பித்தக் கற்களால் ஏற்பட்ட அடைப்பால், பித்த நீர் நாளங்கள் வழியாக சீராக சென்று ரத்தத்தில் கலக்க முடியாமல் போகும்போது அப்ஸ்ட்ரக்டிவ் டைப் மஞ்சள் காமாலை உருவாகும். இப்படி அடைப்பினால் உருவான மஞ்சள் காமாலை தானாகச் சரியாகாது. அடைப்பை நீக்கினால்தான் சரியாகும்.பித்தக் குழாயிலிருந்து பித்த நீர் சிறுகுடலில் சேருமிடத்தில் பெரிய பித்த கற்கள் உருவாகி அங்கும் அடைப்பு ஏற்படலாம். இந்த நிலைக்கு கால் ஸ்டோன் இலியஸ்(Gallstone illieus ) எனப் பெயர். இப்படி பித்த கற்களால் பித்தப்பையில், பித்த நாளங்களில், ஈரலில், சிறு குடலில் பாதிப்பு ஏற்படுகிறது.
பித்தப்பையின் சுவரில் பாலிப் என்ற குடல் நீட்சிகளின் வளர்ச்சி அதிகமாவது கண்டறிந்தவுடனேயே அறுவை சிகிச்சை மூலம் உடனே பித்தப்பையை நீக்கி விட வேண்டும். இந்த நீட்சிகளின் வளர்ச்சியால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
பித்தப்பையின் சுவர் முழுவதிலும் ஒரு மெல்லிய கால்சியம் படிந்த மடிப்பு உருவாகும். இதைப் போர்ஸிலியன் கால் ப்ளாடர்(Porcelain Gall Bladder ) என்று பெயர்.
இந்த மடிப்பு உருவானால் உடனே பித்தப்பையை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் ஒன்று அது புற்று நோயாக மாறும் வாய்ப்புண்டு. அடுத்து தொற்று உருவானால் மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்.
பித்தப்பையை நீக்கிவிட்டால் அதிலிருந்து பித்த நீர் சுரக்காது. அதனால் ஜீரணம் நடைபெறாது என்று பலர் தவறாக எண்ணி பயப்படுகிறார்கள். பித்தநீரை கல்லீரல் 800சி.சிலி ருந்து 1000 சி.சி. வரை சுரக்கின்றது.பித்தப்பையில் 30-40சி.சி. வரையிலும் சேமிக்கப்படுகிறது.இதனால் தேவைக்கு அதிகமான 30-40 சி.சி. அளவு சேமிக்கப்படும் பித்தப்பையை நீக்குவதால் ஜீரண மண்டலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நிமூபணமாகியுள்ளது.
சரியாக விரிந்து சுருங்க முடியாத பித்தப்பையில்தான் பித்தக் கற்கள் உருவாகின்றன. அதனால் சரியாக வேலை செய்யாத நிலையில் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்கவே சுரக்காது. வேலை செய்யாத பழுது பட்ட பித்ப்பையினால் ஜீரணத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் எதிர்மறை பாதிப்புதான் நேரிடும் என்பதால் பழுதுபட்ட நிலையில் அதை வைத்துக் கொள்வதை விட நீக்கிவிடுவதே நமது உடலுக்கு நல்லது.
மஞ்சள் காமாலை (Jaundice )
சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, சாப்பாடு பிடிக்காமல் போவது, வாந்தி வருவது, மலம் களிமண் போன்று வெளியேறுவது, தோலில் அரிப்பு ஏற்படுவது, உடல் சோர்வு போன்றவைகள் மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்.
இது போன்றவற்றைத் தவிர்க்க ஹெபடைடிஸ் ஏ போன்ற தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஹெபடைடிஸ் பி க்கும் தடுப்பூசி உண்டு. அதை 0, 1, 6 என மூன்று மாதங்களில் ஒரே தேதியில் போட்டுக் கொள்வது அவசியம்.
இதைத் தவிர மஞ்சள்காமாலை பித்தப்பைக் கற்களாலும் உருவாகலாம். கணையத்தில், பித்தப்பையில், பித்த நீர் சுரக்கும் நாளங்களில் என்று எதிலாவது புற்றுநோய் ஆரம்பித்திருந்தாலும் மஞ்சள் காமாலை வரலாம்.
ஹெபடைடிஸ் குரூப் மஞ்சள் காமாலையாக இருப்பின் மருந்தினால் சிகிச்சை அளிப்பதும், சத்துள்ள உணவை ஆகாரமாக கொடுப்பதும், பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருமியை அழிக்க மருந்து கொடுப்பதும்தான் உரிய சிகிச்சையாக அமையும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும்போது சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போவதற்கு காரணம்  ரத்தத்தில் உள்ள பில்லிரூபின் என்கிற மஞ்சள் நிறமி அதிகமாவதுதான்.
ரத்தத்திலுள்ள அணுக்கள் எல்லாம் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகின்றன. அந்த அணுக்களையெல்லாம் 120 நாட்கள்தான் உயிர் வாழும். அதற்குப் பிறகு அந்த அணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு அழிகின்றன. அப்படி மண்ணீரலால் அணுக்ககள் உடைக்கப்படும்போது ‘பில்லிரூபின்’ என்ற பொருள் உருவாகிறது. அதன் பின் என்ஸைம், உப்பு சேர்ந்து ஈரலில் இணைந்த பில்லி ரூபினாக மாறுகிறது. பின் அது பித்த நாளங்களுக்குள் செல்கிறது.
பித்தக் குழாயிலிருந்து அந்த பில்லி ரூபின் சிறுககுடலுக்குள் இறங்கி செரிமானத்திற்கு உதவி அதாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டிலுள்ள கொடுப்பு மற்றும் சத்துக்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு பகுதி உறிஞ்சிக் கொள்ளப்பட்டு மற்றொரு பகுதி மனிதக் கழிவுடனும் வெளியேறுகறிது.
இந்த செய்முறைக்குப் பயன்படுவதுதான் இணைந்த பில்லிரூபின் (Conjugated Billrubin ) இந்த பில்லி ரூபின் அதிகமாகும் போது மஞ்சள் காமாலை வரும்.
ஒரு மனிதனுக்கு இருபத்தியோரு வயது வரை மட்டுமே சில தொற்று நோய்களைத் தவிர்க்க மண்ணீரலின் அவசியம் ஏற்படுகிறது. அதன்பிறகு அந்த உறுப்பை எடுத்து விடுவதால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.
ஈரலினால் உருவாகும் மஞ்சள்காமாலைக்கு ‘ஹெபாடிக் ஜாண்டிஸ்’ என்று பெயர்.
இணைந்த பில்லிரூபின் ஜுரணத்திற்காக பித்த நீரில் வரும் போது, அந்த பித்தக் குழாயில் தடை ஏற்பட்டிருந்தால் அப்ஸ்ட்ரக்டிவ் ஜானண்டிஸ் (Obstructive Jaundice ) உருவாகும்.
தடைகளினால் மஞசள்காமாலையை உருவாக்குபவை  பித்தப்பை கற்களினால் ஏற்படும் அடைப்பும், பித்தப்பையில் ஏற்படும் புற்றுநோயினால் ஏற்படும் அடைப்பும்,பித்த குழாய் சிறுகுடலோடு இணையுமிடத்தில் உண்டாகும் புற்றுநோயால் அடைப்பும்,பொது பித்தக் குழாயில் புழு அடைத்துக் கொண்டாலும் தடை ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.அடுத்து புற்று நோயினால் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.
 
இதற்கு அறுவைசிகிச்சைதான் சிறந்த மருந்து. ஆகவே இந்த மஞ்சள்காமாலையை அறுவை சிகிச்சை மஞ்சள் காமாலை என்கிறார்கள்.
ஆகவே மஞ்சள் காமாலை என்னும் போது காரணத்தைக் கண்டுபித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கணைய அழற்சி(Pancreatitis )
சீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகளில் கணையமும் ஒன்று. கணையத்தில் சுரக்கும் நீர் தன் நிலை விட்டு வெளியே வந்து கசிந்தால் ஒரு வெடிகுண்டு போல வயிற்றுக்குள்வெடித்துச் சிதறும் அளவு ஆபத்தானது. இதனால் உடனடி மரணம் நிகழவும் வாய்ப்புண்டு.
பித்தப்பை, பித்த நாளங்களில் ஏற்படும் கற்களினாலும், மதுப்பழக்கத்தினாலும் கணையம் வீங்கி விடுகின்றது. அத்தோடு நீர்க்கசிவும் ஏற்படுகிறது. இதனை கணைய அழற்சி என்கிறோம்.
பித்த நீர் செல்லும் பாதையில் கல் அடைத்துக் கொள்ளும்போது, அது கணைய நீர் செல்ல விடாமல் கசிவை ஏற்படுத்தும். மேலும் கணையம் வீங்கவும் செய்யும்.ஸ்டிராய்டு போன்ற மருந்துகள், அதிக மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, சரியாக சமைக்கப்படாத உணவுகளின் மூலம் உடலுக்குள் செல்லும் உருண்டைப் புழு(Round worm ) போன்றவற்றினாலும் கணைய அழற்சி ஏற்படலாம். சிகிச்சைக்குத் தரப்படும் மருந்துகளால்  ரத்த ஓட்டம் கணையத்திற்கு சரிவர செல்லாத நிலை இருந்தாலும் கணைய அழற்சி உருவாகிறது.
கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு, மூச்சு திணறல் என்று ஒருவித ஆபத்தான நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் நாட்பட்ட கணைய அழற்சி தோன்றியவர்கள் வயிற்றில் ஏற்படும் வலி முதுகுப்புறம் வரை பரவி பரவி செல்லும். இவர்களுக்கு இதிலிருந்து மீளு விப்பிள்ஸ் அறுவை சிகிச்சையும், பாங்க்ரியாடிக் ஜுஜூனோஸ்டமி என்ற அறுவை சிகிச்சை மூலம் சிறுகுடலோடு நேரடியாக நாளங்களை இணைத்தும் மற்றும் வலியை மூளைக்கு அறிவிக்கும் நரம்பை வெட்டி விடும் அறுவை சிகிச்சையினாலும் நோயாளியை நீண்டகாலம் வாழ வைக்கலாம்.
குடல் இறக்கம்(Hernia )
இடுப்புக்குக் கீழே சற்று வீக்கமும் வலியும் காலையில் எழுந்தால் வலியோ, வீக்கமோ இல்லாமலும் இருந்தால் இதை குடல் பிதுக்கம் என்று பெயர்.இது எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்குக் கூட உருவாகலாம்.
 
பிறந்த குழந்தைகளில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் ஹெர்னியாவால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது விரைகள் வயிற்றின் பின் சுவர் பக்கத்தில் இருக்கும். பின் அது இங்குவினல் கேனால் எனப்படும் பாதை வழியே நகர்ந்து கீழிறங்கி விதைப்பைக்குள் சென்று சேரும்.
அதன் பின்னர் அந்தப் பாதை பெரும்பாலானவர்களுக்கு இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஆனால் வெகு சிலருக்கு பிறவியிலேயே அது மூடப்படாமல் இருக்கும்.
இந்தப் பாதை வழியாக குடல் இறங்கி வருவதற்குப் பெயர் தான் இங்குவினல் ஹெர்னியா. இதை மறைமுக குடல் இறக்கம் என்பார்கள்.
கடல் இறங்கி வரும் பாதைக்கு முன்புறமுள்ள வயிற்று மேலுள்ள தசைகள் வயதாவதால் பலவீனப்பட்டு வருவது நேரிடையான ஹெர்னியா.
ஆரம்பத்தில் குடல் வெளிவரும்போது சிறு துவாரத்தை விரித்துக் கொண்டு வருவதால் ஒரு மாதிரி வலிக்கும். துவாரம் பெரிதாகிவிட்டால் வலி போய்விடும். மாலை நேரத்தில் வீக்கமிருக்கும். படுத்துக் காலையில் எழுந்தால் வலி முழுவதுமாக மறைந்து விடும்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வந்திருக்கும் ஹெர்னியாவைப் போக்கும் அறுவை சிகிச்சைக்கு ஹெர்னியோடமி என்பார்கள்.
ஒரு முறை அறுவை சிகிச்சை செய்த பிறகு பக்க தசைகள் பலவீனப்பட்டு தையல் விட்டுப் போனால் மீண்டும் ஹெர்னியா உருவாகலாம். இதற்குப் பெயர் ரெக்கரண்ட் ஹெர்னியா (Recurrent Hernia ).
நோயாளிகளின் நோய்க்குத் தகுந்தவலாறு சோதித்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்து குடல் இறக்கத்தை குணப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
வடுவில் குடல் இறக்கம் (Incisional Hernia )
குடல்வால், பித்தப்பை நீக்குதல், சிசேரியன், கர்ப்பப்பையை நீக்குதல் போன்ற வயிற்றைக் கிழித்து செய்யும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பலருக்கும் ஹெர்னியா உருவாகும் வாய்ப்பு உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிழிந்த இடத்தில் தையல் போட்டு விட்டாலும் அந்த இடத்தின் வழியாக குடல் இறக்கம் வருவதை இன்சிஷனல் ஹெர்னியா என்று கூறுவர்.
பொதுவாக அறுவை சிகிச்சை செய்த ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் இந்த நிலை உண்டாகும். இதற்கு காரணம் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால், உடலில் புரதச் சத்து குறைந்திருந்தால், ரத்தச் சோகையினால், அறுவை சிகிச்சைக்குப் பின் சரியான ஓய்வின்றி அளவுக்கதிகமாக உடற்பயிற்சி மற்றும் வேலைப் பளுவின் காரணமாகவும, அளவுக்கதிகமான உடல் பருமன், அறுவை சிகிச்சைக்குப் பின் சரியான பொருட்களை பயன்படுத்தி தையல்  போடாமல்இருந்திருந்தால், தையலை தள்ளி தள்ளிபோட்டிருந்தால் இந்த குடல் இறக்கம் வரலாம்.
இதனால் குடல் அடைபடுவது அரிது. இதற்கு வயிற்று சுவர் வலிமையற்றுப் போவதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த வடுவில் குடல் இறக்கம் ஏற்படாமலிருக்க
1. உடல் பருமன் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. தீவிர இருமலுக்கு உடனடி சிகிச்சை பெறுவது நல்லது.
3. மலச்சிக்கலைத் தவிருங்கள்.
4. சிறுநீர் கழிக்க சிரமப்பட்டால் சிகிச்சைக்கு செல்லுங்கள்.
5. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை தவிருங்கள்.
6. புகைபிடிப்பதை தவிருங்கள்.
7. அடிக்கடி கருத்தரிக்கும் வாய்ப்பைத் தவிருங்கள்.
குடல்வால் வீக்கம் (Appendix-Appendicitis )
சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் இரண்டு அங்குல நீளத்துக்கு இது உள்ளது. ஏழு முதல் பத்து செ.மீ. அளவுள்ள இதன் துவாரமும் மிகச் சிறியது. திடீரென ஏற்படும் அழற்சி, நாட்பட்ட அழற்சி என குடல்வால் வீக்கம் இரண்டு வகைப்படும். இதுமட்டுமின்றி இரண்டுக்கும் நடுவே கீழ்பட்ட நெடுநாள் அழற்சி என்பதும் உண்டு.
குடல்வாலில் உணவுப் பொருள் போய் அடைத்துக் கொள்ளும்போது அதன் வாய் மூடிக் கொண்டு ஒரு பை போல ஆகிறது. இதனால் குல்வாலுக்குள் பாக்டீரியாக்கள் பெருகிகின்றன. இதனால் குடல்வாலின் உட்சுவரும் அதை ஒட்டிய பகுதியும் வீங்கி பாதிக்கப்படுகிறது. சில சமயம் இதில் மல இறுக்கத்தினால் அடைப்பும் ஏற்படலாம். சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழக் கொட்டை, பழக்கத்தினால் கடித்து விழுங்கப்படும் நகம் போன்ற வேறெந்த அந்நியப் பொருளும் அடைப்பை ஏற்படுத்தலாம்.
சிறுகுடல் பெருங்குடல் சேருமிடத்தில் குடல்வால் இருக்கிறது. அதன் சுவரில் நெறித்திசுக்கள் (Lymphatic Tissues ) அதிகமாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தினால் சிறுகுடலின் இறுதிப் பகுதியிலோ, பெருங்குடலின் தொடக்கத்திலோ பாக்டீரியாக்களினால் பாதிப்பு ஏற்படுமானால் உடனடியாக குடல் வாலிலுள்ள நெறித் திசுக்கள் வீங்கும்.
இந்த வீக்கத்தினால் குடல் வாலில் அடைப்பு ஏற்பட்டு அழற்சி உண்டாகிறது. குடல் வாலில் ஜீரணிக்கப்பட்ட உணவு திரவ நிலையில் வருவதனால் பெரும்பாலும் அடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் இன்று ஜங்க் ஃபுட் எனப்படும் கேக், ஜாம், மாமிசம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சாக்லெட் போன்றவைகளில் செல்லுலோஸ் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும். இதனால் உணவுப் பொருள்களுடன் உறிஞ்சப்படும் நீரின் அளவு குறைந்து மலம் இறுகி கடினமாகிறது. இப்படி இறுகிய மலம் பெருங்குடலிலேயே அதிகநாள் தங்கும்போது ஒரு கல் போன்று காணப்படும். இதை மலக்கல் (Faecolitn )என்பார்கள். இந்த மலக்கல் குடல்வாலின் வாய்ப் பகுதி பக்கம் செல்லும்போது அதை மூடி போட்டு அடைப்பது போல அடைத்து வீங்கச் செய்து விடுகிறது. சீரை, காய்கறி, சலட், பழவகைகளில்இந்த செல்லுலோஸ் அதிகமிருக்கிறது. அதனால் இது உணவுப் பொருளுடன் நீரையும் அதிக அளவில் உறிஞ்சுp மலத்தை இளகச் செய்து மிருதுவாக்குகிறது. இதனால் மலத்தின் அளவும் அதிகமாகிறது.
இந்த நோய் உருவாகியதும் தோன்றக் கூடிய அறிகுறிகள்: அடிவயிற்றில் தொப்புளிலிருந்து பொறுக்கமுடியாத வலி  ஏற்பட்டு அந்த வலி வலது புறமாக கீழ்நோக்கி நகரும். வலி ஏற்படும்போது வாந்தி, பசியின்மை ஏற்படும். மிக மோசமான நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்யாவிடின் இறக்கவும் நேரிடலாம்.
ஒருமுறை அறுவை சிகிச்சை செய்தபின் அப்பெண்டிசைடிஸ் திரும்ப வராது. ஏனென்றால் அதை வெட்டி அப்புறப்படுத்தி தான் சிகிச்சையே நடைபெறுகிறது.
மலச்சிக்கல் (Constipation )
பொதுவாக சுற்றுப்புறச் சூழல், உணவு பழக்க வழக்கங்கள், எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் எல்லாம் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கின்றன.
 
மேற்கத்திய நாடுகளில் நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளான பர்கர், பிட்ஸா, நூடுல்ஸ் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது குடலில் பைகள் போன்ற தசைகள் தடித்து வளர்ந்து இருக்கும். இதில் கழிவுப் பொருள் சென்று தேங்கிக் கொள்வதால் அடைப்பும் ஏற்படலாம். சில சமயங்களில் ஓட்டையும் விழலாம். இதனை ‘டைவர்டிகுலர் நோய்’ என்பர்.
இந்த டைவர்டிகுலர் பிரச்சனையினால் மலச்சிக்கல் உண்டாகாது. ஆனால் மலச்சிக்கலினால் டைவர்டிகுலர் பிரச்சனை உண்டாகும்.
மலச்சிக்கல் இருந்தால் அவசரப்படாமல் கழிவிடத்தில் பொறுமையாக அமர்ந்து மலம் கழிக்க முயற்சிக்க வேண்டும்.நிறைய  தண்ணீர், பழரசங்கள், நார்ச்சத்துள்ள ஆகாரங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் என்று சேர்த்துக் கொள்வது இப்பிரச்சனையை குறைக்கும் அல்லது தவிர்க்கும் வழிமுறை.
அசைவப் பிரியர்கள் அதனுடன் காய்கறிகள், சாம் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கொழுப்புச் சத்தும், புரேட்டீன் சத்தும் சேருமளவு உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதில்லை. நார்ச்சத்து கிடைக்காததினால் வெளியேறும் மலத்தின் அளவும் குறைகிறது. இதனால் வயிற்றுத் தசைகள் அசைவும் குறைந்து போகிறது. மேலும் பெருங்குடலின் அசைவு மெதுவாக இருப்பதாலும், மலம் வெளியேறும் கேஸ்ட்ரோ காலிக் ரிஃப்ளெக்ஸ் இல்லாமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
வயதாக வயதாக  பெருங்குடலின் சுவரிலுள்ள தசைகள் பலவீனப்படும். அந்தத் தசைகளோடு இணைந்திருக்கும் நரம்புகளும் தளர்ச்சியடையும். பெருங்குடலின் சுவரை ஒட்டியுள்ள தசைகளுக்கு வேலை செய்யும் வேகம் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும். இப்படி வயதாவதினால் வரும் மலச் சிக்கலுக்கு சினைல் மலச்சிக்கல் என்று பெயர்.
இளம்வயதினர்களுக்கு கூட மலச்சிக்கல் வருவதுண்டு. அதேபோல் பெருங்குடல் புற்றுநோய் வந்தால் தசையை சுருக்கிப் பிடித்துக் கொள்ளும்.அப்பொழுதும் மலம் வெளியேறாமல் மலச்சிக்கல் உருவாகும்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை, பழம் இவற்றை சாப்பிட பழக்கப்படுத்திக் கொள்வதுதான் மிகப் புத்திசாலித்தனம். அப்படி சாப்பிட இயலாதவர்கள் காய்கறிகளிலும், பழங்களிலும் இருக்கும் நார்ச்சகத்தை மட்டும் கடைந்தெடுத்து மாவாக்கி பவுடர் வடிவில் வருகிறது. அதை டாக்டரின் சிபாரிசுடன் எடுத்துக் கொள்வது நல்லது. இது புண்ணாக்குதான். டப்பாக்களில் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது பெருங்குடல் சுவர் இதை உறிஞ்ச முடியாது. அதனால் இந்த ஹஸ்க்கினால் நீரை நன்றாக இழுத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கெட்டியான இறுகிப்போன மலத்தை கூட இது அடித்து வெளியில் கொண்டு வந்து விடும்.இத்துடன் சர்க்கரைiயும் சேர்த்து வெளியேற்றும். எனவே சர்க்கரை வியாதிக்காரர்களு;கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். ஹஸ்க் சாப்பிடுவதை நிறுத்தினாலும் மலம் வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கொழுப்பைச் சேர்த்து வெளியேற்றுவது இதனால் சாத்தியமாகும். இது மண் மாதிரி இருக்கம். இதை தண்ணீரில் கரைத்து கூழ்போல் ஆக்கி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மலச்சிக்கலுக்கு மற்றொரு காரணமாக பெருங்குடல் புண் விளங்குகிறது. இந்தப் புண் இருப்பதால் தசை இறுக்கமாக இருக்கும். இதனால் மலம் இறுகிப் போய் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறும்போது சிறிது ரத்தக் கசிவு கூட இருக்கும். மலச் சிக்கலுக்கான காரணத்தை தெரிந்து கொண்டால் சிக்கலுக்கு விடை கொடுத்துவிடால்.
வயிற்று சங்கடம்.
சாப்பிட்ட உடனே மலம் கழிக்கணும் என்ற உணர்வு வந்து மலம் கழிக்கச் சென்றால் காத்து போகுதே ஒழிய மலம் வெளிவராது. வயிறு உப்பிசமானது மாதிரியும் இருக்கும்.
சிறுகுடலில், பெருங்குடலில் உள்ள தசைகளின் அளவு அல்லது அசைவின்மை என்ற இந்த இரண்டு காரணங்களினாலும் இப்பிரச்சனை உருவாகிறது. வயிறு உப்புசம், காற்று வெளியேறுவது, மலச் சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் இதனால் ஏற்படும். ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். வயிற்றை சுருட்டி இழுத்துப் பிடிக்கும். உணர்வும் உருவாகும்.
இந்தப் பிரச்சனைகளை சட்டென்று நிறுத்த முடியாது. நன்கு பரிசோதித்து பிறகு மருந்து சாப்பிட வேண்டும். இது உயிருக்கு ஆபத்தான விசயமல்ல. வயிற்றுக்கு பிரச்சனை உண்டாக்கும் பண்டங்களை ஒதுக்குவதுதான் நல்லது.
வயிற்று அசௌகரியப் பிரச்சனை உள்ளவர்களுக்கு அது மலச் சிக்கலாக இருந்தாலும், வயிற்றுப் போக்காக இருந்தாலும்   வயிற்றில் மலமிருக்கும் வரைதான் வலியும் சங்கடமும் இருக்கும். அது வெளியேறிவிட்டால் வலி நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்.இதுதான் இந்த நோய்க்கான அறிகுறி.மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு மலம் மிக இறுகி புழுக்கை வடிவில் வெளியேறுமே ஒழிய ரத்தம் கசியாது.
மேற்கூறிய வயிற்று அசௌகரியங்கள் உள்ளவர்கள் நார்ச்சத்து அடங்கிய பவுடர், ஸிரப் போன்ற மருந்துகளை பல வருடங்கள்  தொடர்ந்து எடுக்க வேண்டும்.
ஒட்டுதல்கள் (Adhesion )
வயிற்று சம்பந்தப்பட்ட பகுதியில் செய்யப்படும் எந்தவித அறுவை சிகிச்சையாக இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் புண் ஆறும்போது, உடலில் இரைப்பையை ஒட்டி இருக்கும் ஓமெண்டம் என்கிற கொழுப்புப் பொருள் அறுவை சிகிச்சை செய்த தழும்பின் உட்பக்கத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். சிலசமயம் சிறுகுடல், பெருங்குடல்களுக்கிடையேகூட இந்த ஓமெண்டம் ஒட்டிக் கொள்ளும். குடலில் ஓட்டை உருவாவது, சீழ் வடிவது போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த ஒட்டுதல் உருவாவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக இந்த ஒட்டுதல் ஏற்பட்டதற்கான அறிகுறி வெளியே தெரியாது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஒட்டுதல் ஏற்பட்டிருப்பதனால் உண்டாகும் வலி தெரியும். வயிற்றுக்குள் காரணமில்லாமல் வலிக்கும். சிறுகுடல் ஒட்டுதல் மோசமாக இருந்தால் சுருட்டிக் கொண்டு இருப்பது போல வலி உணர்வார்கள். வயிறு உப்பிக் கொள்ளும். மலம் கழிப்பது கஷ்டமாக இருக்கும். வாந்தி வரும். இந்த மாதிரி அறிகுறிகள் ஏற்படும்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை. ஒட்டுதலை நீக்கினாலே வலி நின்றுவிடும். இதை முற்றவிட்டால் குணப்படுத்துவது மிகவும் கஷ்டம்.
ஒட்டுதலை சுலபமாக லாபராஸ்கோபிக் மூலம் நீக்கிவிடலாம்.
மூலம் (Piles )
ஆசனவாயின் அருகில் உள்ள ரத்தக் குழாய்கள் வீங்கி விடுவதினால் மலம் வெளிவரும்போது ரத்தக் கசிவு இருக்கும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு வயதுவரையரையின்றி ஆண்-பெண் பேதமின்றி மூலநோய் ஏற்பட்டுவிடும். மலத்தில் சிவப்பு நிறத்தில் ரதடதம் போவது ஒன்றுதான் இதன் அடையாளம். தொடக்க நிலையில் வலி இருக்காது. முற்றின நிலையில் ஆசனவாயே வெளியே தொங்கும் உணர்வுடன் வலி ஏற்படும். அப்படியின்றி கருஞ்சிவப்பு நிறத்திலோ அல்லது கருமையான நிறத்திலோ மலம் வெளியேறினால் அது மூலம் இல்லை.
இதன் ஆரம்பநிலையில் மருந்துகள் மூலமும், செலனோதெரபி, லேசர் இன்ஃப்ரா ரெட் மற்றும் ரப்பர் பேண்ட் லிகேஷன் (Rubber Band Ligation ) போன்றவைகள் மூலம் சிகிச்சை தர இயலும். முற்றிய நிலையில் லேசர் அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வைத் தரும்.நிறைய பேருக்கு மூல நோயுடன் பிஷர் என்கிற மற்றொரு உபாதையும் சேர்ந்து வந்து விடுகிறது. இதில் ரத்தக் கசிவுடன் ஆசனவாயின் கடைசிப் பகுதியில் வெடிப்பேற்பட்டு அரிப்பும் இருக்கும். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்விருந்தாலும் ரத்தம், வலி, மலம் இறுகிப் போவதினால் எரிச்சல் எல்லாமுமாய் சேர்ந்து அசௌகரியத்தின் உச்சநிலை ஏற்படும்.  இதற்கு ஆசனவாயில் சிறிது பிளவை ஏற்படுத்தி செய்யும் சிகிச்சைதான் பலனளிக்கும்.
மூலத்திற்கு நான்கு நிலைகள் உண்டு.
ஆரம்ப நிலை மூலத்தின் போது மலம் வெளியேறும்போது ரத்தத் துளிகள் சிதறல்களாக வெளிப்படும். அடுத்த நிலையில் மலம் வெளியேறும்போது ஆசனவாயிலிருந்து சதை கொஞ்சம் வெளியே வரும். இந்த நிலையிலும் நோயாளியின் சதையை உள்ளே திரும் தள்ள முடியும். மூன்றாவது நிலையில் ஆசன வாயிலிருந்து வெளியே வரும் சதையை திரும்ப உள்ளுக்கு தள்ளவே முடியாது. நான்காவது நிலைதான் சிக்கல்கள் உருவாகும் நிலை. அந்த நிலையில் ஆசனவாய்க்கு வெளியே வரும் சதை அழுகிய நிலையில் இருக்கும். வெளியே வந்து சதை தொங்கும் நிலையை புரோலாப்ஸ் என்று சொல்வார்கள்;. ரத்தம் வராமல் சதை அழுகியுள்ள நிலையை நெக்ரோஸிஸ் என்று சொல்வார்கள்.
பெருங்குடல் புற்றுநோய், குடல் நீட்சிகள், குடல் புண், காசநோய் ஆகியவற்றுக்கும் கூட மூலம் ஒரு அறிகுறியாக தென்படும்.
மூலம் இருக்கும் அத்தனைப் பேருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சிக்கலுக்கேற்ப அறிகுறிகள் தென்படுபவர்களுக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
புற்று நோய் (cancer)
ஜீரண மண்டலத்தில் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், கணையம், பெருங்குடல் ஆகிய உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.
1. உணவுக் குழாய் புற்றுநோய்:
எந்த ஒரு நபருக்காவது நாற்பத்தைந்து வயதுக்கு மேல் உணவை விழுங்குவதில் கஷ்டம் இருக்குமானால், நெஞ்சில் அடைப்பு, ஏப்பம், பசியின்மை, அஜீரணம், எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உணவுக் குழாயில் புற்றுநோய் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.இந்தப் புற்றுநோய் யாருக்கு அதிகம் வருகிறது என்றால், கருகலாக பொறித்த, வறுத்தெடுத்த உணவை உண்பவர்களின் உணவுக்குழாயில் இந்தக் கருகல் ஹைட்ரோ கார்பன் ரசாயனமாக மாறி படிந்து விடுகிறது. இந்தப்படிவு தசைகளின் செல்களில் மறுவிளைவை உண்டாக்கும்போது செல்கள் பன்மடங்காகத் தேவையின்றி பெருகிப் புற்றுநோயை உண்டாக்குகிறது.
இரண்டாவதாக மது மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவர்களுக்கும் இந்த நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம். ரத்த சோகையோடு உணவு விழுங்க முடியாத நிலை, உணவுக் குழாய் அடிப்பகுதியில் பிறவியிலேயே சுருக்கம்(Oesophageal Web ), இரைப்பை ஏற்றம் ஆகியவை இப்புற்றுநோயை உண்டாக்கலாம்.
ஊட்டச் சத்துக்களான தாதுப் பொருட்கள் பற்றாக்குறை, உயிர்ச்சத்து குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை, டீ முதலிய பானங்களை மிகச் சூடாக அருந்துதல் ஆகியவை உணவுக் குழாய் புற்று நோய் உண்டாகக் காரணங்களாக அமைகின்றன.
வழிவழியாக வரும் பரம்பரை வியாதியான ‘டைலோசிஸ்’(Tylosis ) உள்ளவர்களுக்கும் இப்புற்றுநோய் உண்டாகலாம்.
எண்டோஸ்கோப்பி மூலம் இந்த நோயின் பிரச்சனையைக் கண்டுபிடித்து உணவு விழுங்குவதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதும், அறுவை சிகிச்சை மூலமாக விழுங்கிய பொருள் உள்ளே செல்ல குழாய் மூலம் உணவுக்குழாயையே செயற்கையாக உருவாக்கிக் கொடுப்பதும், ஆரம்பநிலையில் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பதும் நவீன சிகிச்சையால் சாத்தியமே!
2. இரைப்பை புற்றுநோய்:
வயிற்று வலிபோல் ஆரம்பித்து, இரைப்பை புண்ணாக மாறி, நாள்பட்ட புண்ணாகக் கவனிக்கப்படாமல் இருந்து அது இரைப்பை புற்று நோயாக மாறுகிறது.
உலோகத் தொழிலில் ஈடுபடுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி வேலையில் ஈடுபடுபவர்களுக்கெல்லாம் இரைப்பை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. உருளைக் கிழங்கு போன்ற மாவுச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதாலும் இந்நோய் வர வாய்ப்பு அதிகம்.
ஹைச்-பைலோரி கிருமியும் இரைப்பை புற்றுநோயை உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேல் இரைப்பையில் பாக்டீரியாக்களைக் கொல்லும் அமிலத்தின் வீரியம் குறைந்து இரைப்பையின் சவ்வுப் படலத்தில் பாக்டீரியாக்கள் வாழ ஆரம்பித்து விடுகின்றன. இதனால் இரைப்பைக்குள் வரும் உணவோடு இந்த பாக்டீரியாக்கள் எதிர்வினை புரிந்து புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருளாக உணவினை மாற்றிவிடும்.
நாம் உண்ணும் உணவிலுள்ள நைட்ரேட்டை இரைப்பையிலுள்ள ரிக்டோஸ் என்ற நொதிப்பொருள் ‘ரைட்ரேட்டாக’ மாற்றுகிறது. இந்த நொதிப்பொருள் குறைவதாலும் புற்று நோய் உருவாகும்.
இரைப்பையில் எந்த மேஜர் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் புற்றுநோய் உருவாக வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, கேஸ்ட்ரோ ஜுஜூனாஸ்டோமி என்ற அறுவை சிகிச்சையை செய்யும் பொழுது இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் இடையில் இணைப்புக் குழாய் பொருத்துவார்கள். இதனால் சிறுகுடலில் இருக்கும் பித்தம் கொஞ்ச நேரம் இரைப்பையின் சுவரில் தங்கி இருந்து, பின்தான் வெளியேற்றப்படும். அப்படி தங்கியிருக்கும்போது இந்த பித்தமானது இரைப்பையின் உள் சுவரின் சவ்வுப் படலத்தில் திரும்பத் திரும்பப் பட்டு அங்கிருக்கும் மியூகோசாவைப் புற்றுநோயாக மாற்றுகிறது.
இரைப்பையின் உள் சுவரில் காணப்படும் பாலிப்ஸ் எனப்படும் குடல் நீட்சிகள் புற்றுநோயாக மாறலாம். மெனிட்ரியர் (Menetrier ) எனப்படும் நோய் இரைப்பையின் உள் சுவரைத் தடித்துப் போகச்செய்வதாலும் இரைப்பை புற்று நோய் வரலாம். ‘ஏ’ குரூப் ரத்தம் உள்ளவாக்களுக்கு இந்த அணுவின் கார்போஹைடிரேட் தொடர் சங்கிலி இருப்பதால் இரைப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
நெஞ்சுக் குழியில் வலி, பசி இல்லாத உணர்வு, வயிறு உப்பிவிட்ட உணர்வு, வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு, ஜீரணத்தில் கோளாறு போன்ற உணர்வு, வாந்தி, வயிற்றுப் புண், வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, பெருங்குடலில் அடைப்பு போன்றவை இரைப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக உள்ளன. பிரச்சனை முற்றும் வரை காத்திருக்காமல் நோய்க்கான துவக்கநிலை அறிகுறிகள் தோன்றிய உடனேயே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. கல்லீரல் புற்று நோய்:
கல்லீரலில் ஆனானப்பட்ட கல்லீரலில் மறுவிளைவு ஏற்படுத்துகிற ரசாயனப்பொருளோ, வைரஸோ தாக்கும்போது செல்கள் அழியும். பின் மீண்டும் உருவாகும்போது ஏதேனும் ஒரு செல் நோய் செல்லாக மாறலாம்.
அதுமட்டுமின்றி, தொடர்ந்து மது அருந்துவதால் ஈரல் கெட்டுபோய் பின் அதன் செல்கள் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறும்போது நோய் செல் உருவாகலாம். அவை பிற்பாடு புற்றுநோயை உண்டாக்கலாம்.
இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ‘ஹிமோகுரோமோடோஸிஸ்’ என்ற வேதிப்பொருள் தூண்டல் ஏற்பட்டும் ஈரல் புற்று நோய் வரலாம்.
வேர்க்கடலையை சில மாதங்கள் சரியாக பாதுகாக்காமல் வைத்திருக்கும்போது ஒருவகை காளான் அதில் உருவாகுகிறது. அது ‘அஃப்ளாடாக்ஸின்’ (Aflatoxin ) எனும் விஷத்தன்மையை உண்டாக்குகிறது. அந்த வேர்க்கடலையை உண்ணும்போது அது ஈரல் செல்களைத் தூண்டிவிட்டு, பன்மடங்காகப் பெருகச் செய்து ஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.
கர்பத்தடை மாத்திரைகளை நீண்ட நாள் பயன்படுத்துவதும், ஸ்டிராய்டு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதும், மதுப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவையும் கல்லீரல் புற்றுநோய் உருவாகக் காரணமாகின்றன.
வில்சன் நோய், ஹீமோகுரோமோடாஸிஸ் என்ற இரண்டு நோய்களிலும் வெளியேற வேண்டிய தாமிரச் சத்து, இரும்புச் சத்து வெளியேறாமல் ஈரலைத் தாக்குவதால் வீக்கம் உண்டாகி ஈரலில் புற்றுநோய் உருவாகிறது.
இந்தப் புற்றுநோய் வந்தால் கல்லீரல் வீங்கி இருக்கலாம். மேல் வயிற்றின் வலப்பக்கமாக தொட்டுப் பார்த்தால் அதை எளிதில் உணரலாம். பசி இருக்காது. அடிவயிறு நிரம்பி இருக்கும் உணர்வு இருக்கும். உடை குறைவு ஏற்படும். மஞ்சள் காமாலை நோயாகவும் இது வெளிப்படலாம். இதன்காரணமாக மலம் கறுப்பாக வெளியேறும். சிலசமயம் ரத்தவாந்தி ஏற்படும். உடல் களைப்பு, அடிக்கடி ஜுரம் வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நோயின் ஆரம்ப நிலையாக இருக்க வேண்டும்.
4. கணையப் புற்றுநோய்:
காற்றில் இருக்கும் மாசு இந்நோய் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது. தொடர்ந்த மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், அதிக காபி அருந்துவது, கொழுப்பு சத்து நிறைந்த உணவை தொடர்ந்து உண்பது இந்நோய் உருவாக காரணமாகின்றன.
கணைய புற்று வர வாய்ப்புள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டான இரு வருடங்களுக்குள் புற்றுநோய் ஏற்பட்டு விடுகின்றது.
கணையம் மூன்று பகுதிகளாக உள்ளது.
அதன் தலைப்பகுதயின் பின் பகுதியில்தான் பித்த நீர் குழாயம், கணைய நீர் குழாயும் சேர்ந்து சிறு குடலுக்குள் செல்லும் அதனால் கணையத்தின் புற்நோய் அதன் பின் பகுதியில் பரவும்போது பித்தநீர்குழாயிலும் பரவுகிறது.
கணையத்தின் தலைப்பகுதியில்தான் புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. வால்பகுதியில் புற்றுநோய் வர வாய்ப்பு குறைவுதான். கணையத்தின் எந்தப் பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் அறிகுறிகள் தோன்றுகின்றன.
தலைப்பகுதியில் புற்றுநோய் இருக்கும் போது பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மஞ்சள் காமாலை வரும். கணையத்தின் வால் பகுதியில் புற்றுநோய் தோன்றினால் மண்ணீரலிலுள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். கணையத்தின் புற்றுநோய் காரணமாக கணைய நீர் சுரப்பது குறைய நாளடைவில் கணைய அழற்சி உருவாகிறது.
அடிவயிற்றில் வலி, எடைக்குறைவு, மஞ்சள் காமாலை ஆகியவை கணையப் புற்றிற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.
5. பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய்:
குடல் நீட்சிகள் இருந்தால் மலக்குடல் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.அல்சரேட்டிவ் கொலிடிஸ் (Ulcerative Colitis ) எனப்படும் பெருங்குடல் சுவரில் புண் இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய் இருப்பின் அடுத்தவர்களுக்கும் வரவாய்ப்பிருக்கிறது.
பெருங்குடலில் பெரிய பகுதி மலக்குடல். பெருங்குடல் வயிற்றுக்கு அருகில் இருக்கும். மலக்குடல் மிகவும் கீழே இருக்கும். இந்த இரண்டிலும் புற்றுநோய் வரக் காரணங்கள் ஒன்றாய் இருக்கின்றன. புற்றுநோயால் மலம் வெளியேறாமல் அடைப்பு ஏறடபடும் அளவிற்கு அது போக கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகலாம்.
மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்கள் அடைப்பு ஏற்படுவதற்கு முன் ஆரம்பநிலையிலேயே வந்தால் தகுந்த முறையில் சிகிச்சையை அளித்து நல்ல முறையில் அவர்களை நீண்ட நாள் வாழச் செய்ய முடியும்.
Categories: Uncategorized | Leave a comment

ரத்த சோகையின் காரணங்களும் அதற்கான தீர்வும்

ரத்த சோகை
 
ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில்ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இந்த ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. 
 
இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்துவிடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
 
ஏற்பட காரணங்கள்
 
ரத்த சோகைக்கான காரணம் ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக்கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை:
 
1.இரத்த சிவப்பணுக்களின் (Red blood cells) தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும். (Dyshaemopoietic anemia)
 
2.வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை (bone marrow) யினாலும் ரத்தச் சோகை உண்டாகும். 
 
3.இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் (aemolytic anemia) இரத்தச் சோகை ஏற்படும். இரத்தம் அதிகம் வெளியேறுவதால் (Haemorrhagic anemia)
 
4. இரத்தம் மாசுபடுதல்
5. வயிற்றில் அல்சர்
6. வயிற்றில் கட்டி
7 வயிற்றில் வீக்கம்
8. வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும்.
9. வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.  
 
10.குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு.போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.
 
மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.
 
இரத்தச் சோகையின் அறிகுறிகள்
1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படல்.
3. முகத்தில் வீக்கம் உண்டாதல், நகங்களில் குழி விழுதல்
4. கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்
5.உடல் நலம்சரியில்லாதது போன்ற உணர்வு
6. மூச்சுவிடுவதில் சிரமம்.
7. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது.
8.குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை
 
இதெல்லாம் போக, தலைவலி, நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரம்மாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம் உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.
 
சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.அதற்குப் பிறகு சிதைந்துவிடும். ஆனால், சில நோய்களின் காரணமாக, ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்துவிடும். அப்படி நடக்கும்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ்என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம். 
 
ரத்தசோகை இருப்பது சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்த்த்தில் 11 -15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும். ஒருவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாக அர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப் போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். 
 
இரத்த சோகையால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்:
 
பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
 
சோர்வு: ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போக்க்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாகஒருவர் தீவிர மன அழுத்த நோயாளிகும் வாய்ப்பும் இருக்கிறது.
 
நோய்க்குள்ளாகும் வாய்ப்பு: ஆரோக்கியமானவர்களைவிட, ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக் குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை “பம்ப்” செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்க்க்கூடும். ரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில்உடலில் இருப்பது அவசியம்.
 
இரத்த சோகைக்கான மருத்துவம்
 
இரும்புக்குறைபாடு – உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.
 
உணவுப் பழக்கம்: நோயாளி இரும்புச் சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.
 
வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.
 
இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும்,
 
திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச்சோகை நீங்கும்.
 
மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை நீங்கும்.
Categories: Uncategorized | Leave a comment

எலும்பே நலமா?

 
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
செல்லமே..செல்லமே!
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
மேனி எழில்!
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
சர்க்கரையை சமாளிப்போம்!
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
வாங்க பழகலாம்!
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

No comments:

Post a Comment