சனீஸ்வரன் வர்றான்…தொல்லை கொடுக்கப்போறான்… என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு.
ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார்.
அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார். சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம்.
நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது.
தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம்.
இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம்.
அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.
No comments:
Post a Comment