Saturday, 15 March 2014

தானம் செய்தால் சனி தோஷம் விலகும்

சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை.  இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. 

அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. 

ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை.  இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். 

அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார். சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். 

நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம்  போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. 

தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். 

இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். 

அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது

33 comments:

  1. Thu. 05, Jan. 2023 at 6.53 am

    நாடிப் பயிற்சி − 76

    கடந்த பாடத்தில்...மலக்குறி பற்றி பார்த்தோம்.

    இன்று நாம் பார்க்கப் போவது
    முக்குணங்களின் மெய் நிறம்....!

    மெய் − உடம்பு.

    முக்குற்றங்களின் மெய் நிறம் :

    வாதரோகியின் உடல் கறுத்தும்....

    பித்தரோகியின் உடல் மஞ்சள் மற்றும் சிவந்த நிறமாயும்....

    சிலேத்துமரோகியின் உடல் வெளுத்தும்..

    தொந்தரோகியின் உடல் தொந்தத்திற்கு ஏற்ப இரு கலப்பு நிறமாயும்....

    சன்னிபாதரோகியுடல் பல நிறங்களை உடையதாயும் இருக்கும்.

    அடூத்து... இம்மெய்நிறத்தால் ஒருவன் சாவதை அறிதல் எங்ஙெனமெனில்...

    * உடல் சூரியனைப் போல நற்சிவப்பும்,மினுமினுப்பும் காணில் இரண்டு திங்களில் சாவான்.

    * திங்களைப் போன்ற சிவந்த வெண்ணிறமும், மினுமினுப்பும் காணில் மூன்று திங்களிலும்.....

    * செவ்வாய்ப் போல செந்நெருப்பு நிறமும், மினுமினுப்பும் காணில் நான்கு திங்களிலும்....

    * வியாழனைப்பால் பொன்னாறமும், மினுமினுப்பும் காணில் ஐந்து திங்களிலும்.....

    * வெள்ளியைப் போன்ற வெண்ணிறமும், மினுமினுப்பும் காணில் ஆறு திங்களிலும்.....

    * சனியைப் போல கறு நிறமும், மினுமினுப்பும் காணில் ஏழு திங்களி லும்....

    * கரும்பச்சை நிறமும், மினுமினுப்பும் காணில் எட்டு திங்களிலும்... உயிர் நீங்கும்.

    * மேலும்... உடலில் மேற்கூறிய நிறங்கள் இல்லாது, மினுமினுப்பு மட்டும் காணில்..அதற்கு மருந்து பயன்படாது, அஃது அக்கணமே அழியும்.

    அடுத்து... உடலின் தன்மை, வெம்மை யால் முக்குற்றங்கள் அறிதல்...! (ஏற்கெனவே பார்த்துள்ளோம்...மீண்டும் அனைவரின் ஞாபகத்திற்காக)

    * வாதத்தால் பிணிக்கப்பட்ட நோயாளியின் உடல், சிறிது வெப்ப மாயும்.....

    * பித்தப் பிணியாளர்களுக்கு, உடல் மிகு வெப்பமாயும்....

    * ஐய நோயினருக்கு உடல் தட்பமாயும், வியர்வை விடுதல் போன்றும்.....

    * கலப்பு நோயாளர்களுக்கு, உடல் கறுத்து குற்றயளவாயிருக்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  2. Sun. 22, Jan. 2023 at 7.02 pm.

    1) சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள்....
    *முடிந்த முடிபு.*

    2) முதன் முதலில் தமிழ் மொழியில் "சித்தாந்தம்" என்னும் சொல்லைக் கையாண்டவர்.....
    *திருமூலர்.*

    3) சைவ சித்தாந்தம் என்னும் தொடரைக் கையாண்ட ஆகமங்
    களில் ஏதேனும் ஒன்று...
    *காமிக ஆகமம்.*

    4) சைவ சமயத்தின் இலக்கியக் கருவூலம் என்று கூறப்படுவன....
    *பன்னிரு திருமுறைகள்.*

    5) சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் இடம் பெற்ற பழந்தமிழ் நூல்.... *திருக்குறள்.*

    6) சைவ சமயக்குரவர்
    கள் நால்வர்....
    *ஞானசம்பந்தர்.*
    *நாவுக்கரசர்.*
    *சுந்தரர்.*
    *மணிவாசகர்.*

    7) சம்பந்தர் முதலிய மூவர் அருளியது....
    *தேவாரம்.*

    8) மணிவாசகர் அருளியது.... *திருவாசகம்.*

    9) திருக்கயிலாய பரம்பரை....
    *திருநந்திதேவரால்... கயிலையில் தொடங்கி வைக்கப் பெற்ற பரம்பரை.*

    10) சைலாதி மரபாவது... *திருநந்திதேவரை முதல் வராகக் கொண்ட மரபு.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. Mon. 23, Jan. 2023 at 7.10 am.

    11) சைலாதி என்பவர்...
    *திருநந்திதேவர்.*

    12) சந்தானம் என்பது...
    *குருசிஷ்ய பரம்பரை.*

    13) சந்தானம் என்பது...
    * அகச்சந்தானம், புறச் சந்தானம்.*

    14) கயிலாயத்துள்ளேயே
    வளர்ந்த மரபு....
    *அகச்சந்தானம்.*

    15) கயிலாயத்துக்கு வெளியே பூஉலகில் வளர்ந்த மரபு....
    *புறச்சந்தானம்.*

    16) அகச்சந்தானாச்சாரி யர் நால்வர்....
    *திருநந்திதேவர்.*
    *சனற்குமாரர்.*
    *சத்தியஞான தரிசினி.*
    *பரஞ்சோதி முனிவர்.*

    17) புறச்சந்தானாச்சாரி யர் நால்வர்....
    *மெய்கண்டார்.*
    *அருணந்திசிவம்.*
    *மறைஞானசம்பந்தர்.*
    *உமாபதிசிவம்.*

    18) அகச்சந்தானத்தின் வேறு பெயர்....
    *தேவபரம்பரை.*

    19) புறச்சந்தானத்தின் வேறு பெயர்....
    *பூதபரம்பரை.*

    20) திருக்கயிலாய பரம்பரையின் வேறு பெயர்.....
    *சைலாதி மரபு.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. Tue. 24, Jan, 2023 at 4.30 am.

    21) பூதப்பரம்பரை என்பது...
    *புறச்சந்தானம்.*

    22) தேவபரம்பரை என்பது....
    *அகச்சந்தானம்.*

    23) மெய்கண்டார் அவதரித்த ஊர்....
    *திருப்பெண்ணாகடம்.*

    24) மெய்கண்டார் சித்தி பெற்ற ஊர்....
    *திருவெண்ணெய் நல்லூர்.*

    25) மெய்கண்டார் வாழ்ந்த ஊர்....
    *திருவெண்ணெய் நல்லூர்.*

    26) அருணந்திசிவம் அவதரித்து வாழ்ந்த ஊர்.... *திருத்துறையூர்.*

    27) அருணந்திசிவம் சித்தி பெற்ற ஊர்....
    *திருத்துறையூர்.*

    28) உமாபதிசிவம் பிறந்து வாழ்ந்த ஊர்....
    *சிதம்பரம்.*

    29) உமாபதிசிவம் சித்தி பெற்ற இடம்....
    *சிதம்பரத்தின் கீழ் எல்லையான கொற்றவன்குடி.*

    30) மெய்கண்டார்க்கு முற்பட்ட சித்தாந்த சாத்தி ரங்கள்....
    *திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம்

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  5. Fri. 21, Apr. 2023 at 9. 55 pm.

    *உண்மை விளக்கம் :*

    கடந்த பாடத்தில்...சுத்த மாயை, அசுத்த மாயை பார்த்தோம்...!

    இன்று பிரகிருதி மாயை பற்றி அறியலாம்....!

    பிரகிருதி என்ற சொல்லுக்குக் *காரணம்* என்று பொருள்.

    சுத்த மாயை, அசுத்த மாயை இவ்விரண்டு மாயைகளோடு, பிரகிருதி மாயையும் சேர்த்து.. *மும் மாயைகள்* என்பர்.

    பிரகிருதி மாயை என்பது தனித்த மாயை அல்ல. அசுத்த மாயையினின்று தோன்றிய காரியம் ஆகும்.

    அசுத்த மாயை சிறிதே மயக்கத்தை செய்யும். ஆனால், பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தரும்.

    அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்கும்.

    அவ்வாறே... பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்கும்.

    எனவே, சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும்... மேலாய் நிற்பது; அதன் உள்ளே நிற்பது, அதற்கும் உள்ளே நிற்பது என அறிந்து கொள்ளல் வேண்டும்.

    நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையில் இருந்து தான்.

    இந்த பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும்.

    சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம் முக்குணங்கள்.

    மணத்தினைத் தன் உள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்பு நிலை போல...
    பிரகிருதி மாயை, அம் முக்குணங்களை யும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும்.

    இவ்வாறு அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம்.

    மேற்கூறிய முக் குணங்களுக்குக் காரணமாதல் என்பதால்... பிரகிருதி எனப்பட்டது.

    தமிழில்... பிரகிருதி என்பது... மூலப்பகுதி எனப்படும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Sat. 22, Apr. 2023 at 4.30 am

    *சைவ சித்தாந்தத் தொடர்ச்சி :*

    631) *ஏது என்றால்....*
    காரணம்.

    632) *மூன்று ஏதுக்கள்.....*
    இயல்பு, காரியம், அநுபலத்தி.

    633) *இயல்பு ஏது என்பது...*
    இயல்பாய் உள்ள ஆற்றலை உணர்த்து வது.

    634) *காரிய ஏது என்பது....*
    காரணத்தை உணர்த்துவது.

    635) *அநுபலத்தி என்பது....*
    காரியம் இன்மையையும், காரணம் இன்மையையும் உணர்த்துவது.

    636) *அநுமானம் என்பது....*

    பூர்வ காட்சி அநுமானம், கருதல் அநுமானம், உரை அநுமானம்.. என மூவகை.

    637) *பூர்வகாட்சி அநுமானம் என்பது..*

    பிரத்தியட்ச அநுமானம் எனவும், திருட்டாநுமானம் எனவும் கூறப்படும்.

    638) *பூர்வகாட்சி அனுமானம் என்றால்...*

    முன்பு கண்ட காட்சியைக் கொண்டு அநுமானித்து அறிவதால் ஏற்படு வதைக் குறிக்கும். (அதாவது, வாசனை உடைய மலரை, வாசனை முதலிய ஏதுவைக் (காரணம்) கொண்டு, இந்த இடத்தில் மலர் உண்டு என்று அறிவது).

    639) *கருதல் அநுமானம் என்பது....*

    ஒருவன் சொல்லும் வார்த்தையைக் கொண்டு, அவனது அறிவின் எல்லையை அல்லது அவனறிவின் குறையை அநுமானித்து அறிவதைக் குறிக்கும்.

    640) *உரை அநுமானம் என்பது....*

    வேதாகமங்களில் சொன்னதைக் கொண்டு, சொல்லாத விவரங்களையும் அநுமானித்துத் துணிவதைக் குறிக்கும்.

    (எடுத்துக்காட்டாக, இந்த பிறவியில் நிகழும் இன்ப துன்பங்களுக்கு காரணம் முற்பிறவியில் செய்த கன்மங்களின் பயன் என்று வேதாகமங்கள் கூறும்; அதனைக் கொண்டு , இந்தப் பிறவியில் செய்யும் கன்மம் காரணமாக , அடுத்த பிறப்பில் இன்ப, துன்பம் விளையும் என்று அநுமானித்துத் துணிதல்....
    உரை அநுமானம் ஆகும்).


    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  7. Sat. 22, Apr. 2023 at 6.45 pm.

    *திருவருட்பயன் :*


    *குறள் − 7 :*

    எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்து, இறைவனது அடி ஒன்றையே பற்றாகப் பற்றி நிற்பவர்கள் அடியவர்கள்.

    உலகியலை மதியாத அவர்களைப் பார்த்து உலகவர் சிரிப்பர்.

    *அனுபவிக்க வேண்டிய உலக போகத்தை வெறுத்து, இப்படி இறைப் பித்துப் பிடித்துத் திரிகின்றனரே* என்று எண்ணிச் சிரிப்பர்.

    ஆனால் அடியவரோ உலகவரைப் பார்த்துச் சிரிப்பர்.

    நிலைபேறு உடைய திருவருளின்பம் எங்கும் நிறைந்து நிற்கவும், அதனை உணராது, அழிந்து போகும் சிற்றின்பத்தை நாடித் திரிகின்றனரே * என்று எண்ணிச் சிரிப்பர்.

    அடியவர்கள் அனைத்தையுமே , திருவருட் செயலாக உணர்வர்.

    *எச் செயலும் என்னதன்று, நின் செயலே" எனவும், உனக்கு எப்படிக் கருத்தோ அப்படியே செய்தருள்வாயாக எனவும் அருள் வழியில் நிற்பர்.

    என்னுயிர் நாதா ! என் அன்பே என்று அன்பால், அழுது, அரற்றி, அறிவழிந்து நிற்பர்.

    இவ்வாறு அன்பால் அகங்குழைந்து தன் வசமிழந்து நிற்கும் அடியவரை இறைவன் தன்னுள் அடக்கியிருக்கச் செய்வான். இறைவன் அவனைவிட்டு என்றும் அகலாதிருப்பான்.

    ஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும், இறைவனது முடியும் அடியும் காண முயன்ற செய்தியைத் தவறாது குறிப்பிட்டுள்ளார்.

    (ஞானசம்பந்தர் அருளிய பதிகந்தோறும் *ஒன்பதாம் திருப்பாடலில்* அமைந்திருப் பதைக் காணலாம்.)

    அவ்விருவரும், இறைவனைத் தொழுது நலம் பெற முயலாமல், தாமே தலைவர் என்ற தன் முனைப்புடன் இறைவனைத் தேடப் புகுந்து காணமாட்டாது அயர்ந்து விழுந்தனர்.

    பின் தெளிவு பெற்றுத் திருவைந்தெழுத் தினை ஓதி இறையருள் பெற்று உய்ந்தனர்.

    தேவர்கள் செய்யும் வழிபாடு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறார் மணிவாசகர்.

    அவர்கள் தம் வாழ்க்கை இன்பம் மிகுதற் பொருட்டே , இறைவனை வாழ்த்துவார் களாம்.

    எல்லா உயிரும் தம்மைப் பணிய, அதனால் தாம் உயர்வு அடைய வேண்டும். இப்பயன் கருதியே அவர்கள் இறைவனைப் பணிவார்களாம்.

    போகத்தில் மயங்கி, மேன்மேலும் அவ்வின்பத்தையே விழையும் அவர்கள் செய்யும் வழிபாடு எப்படி அன்பு கலந்த வழிபாடாக இருக்க முடியும் ?

    ஆகவே, *பற்று நீங்காத அவர்களை விட்டு இறைவன் அகன்று நிற்பான்.*

    இப்போ திருக்குறளுக்கு வருவோம்...!

    *அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன் :*

    *ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
    வானாடர் காணாத மன்.*

    செய்யுளை கவனியுங்கள்...

    இறைவன் எல்லாவிடத்திலும் நீங்காது இருப்பவனாயிற்றே.... அவன் எப்படி சிலரை விட்டு அகன்று நிற்க முடியும் ? என்று கேட்கலாம்.

    *அகன்று நிற்பான் என்பதற்கு, இடம் பெயர்ந்து நீங்குவான் என்பது கருத்து அல்ல.*

    *அவ்விடத்தில் இருந்தும் புலப்படாமல் இருப்பான் என்பதே கருத்தாகும்.*

    இவ்வாறு... இறைவன் சேய்மையில் இருக்கிறான் என்பதன் கருத்து...அவன் புலப்படாமல் மறைந்திருக்கிறான் என்பதே.

    இறைவன் அருகில் இருக்கிறான் என்பதற்குக் கருத்து அவன் வெளிப்பட்டு நிற்கிறான் என்பதாகும்.

    *"சேயாய் நணியானே"* என்பது திருவாசகம்.

    *இச்செய்யுளின் பொருள் :*

    வான் நாடர் காணாத − தேவர்களால் அறியப்படாத

    மன் − தலைவனாகிய இறைவன்

    அடியவர்க்கு − தனக்கு தொண்டு பூண்டு நிற்கும் அடியவரிடத்தில்

    ஆனா அறிவாய் − நீங்காத அறிவாய்

    அகலான் − அவருடனே இருப்பான்.

    *விளக்கம் :*

    தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் திறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான்.

    *இக் குறளின் மூலம் அறிந்து கொள்ளும் கருத்து :*

    *இறைவன் அடியவரிடத்தில் "தயிரில் நெய் போல" விளங்கி நிற்பான்.*

    *பாசப் பற்றுடைய வானவர் முதலியோரிடத்தில் அவ்வாறு விளங்குதல் இன்றி "பாலில் நெய் போல" மறைந்து நிற்பான்* என்பது இக்குறளின் கருத்தாக ஆசிரியர் உரைக்கிறார்.

    மீண்டும் அடுத்த பதிவில் ......!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  8. Sat. 22 , Apr. 2023 at 9. 13 pm.

    *தமிழ்த் தட்டெழுத்து சொற் சுருக்கங்கள் :*

    எழு . − எழுத்தால்

    திரு . − திருவாளர்

    த , வ . இயக்குநர் − தமிழ் வளர்ச்சி இயக்குநர்

    வ . எண் − வரிசை எண்

    சே . − சேர்க்கவும்

    மா . வே . அலுவலர் − மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்

    ஊ . ப . கோ − ஊதியப் பட்டியல் கோப்பு

    ஒ . ம் . − ஒப்பம்

    *அடுத்து.... :*

    *குறிகளின் விளக்கங்கள் :*

    // [ பு.பா.| அ.பா − புதிய பாரா அல்லது அடுத்த பாராவாக பிரித்து தட்டச்சு செய்க.

    # − இடம் விட்டு தட்டச்சு செய்யவும்.

    Â − குறிப்பிட்ட எழுத்துக்களை | நிறுத்தற் குறிகளை குறிக்கப்பட்ட இடத்தில் சேர்க்கவும்.

    எண்ணில் − குறிப்பிட்ட வார்த்தையை எண்ணில் மாற்று.

    எழுத்தால்/வார்த்தைகளில் − குறிப் பிட்ட எண்களை வார்த்தைகளில் மாற்று.

    மா. / மாற்று − குறிக்கப்பட்டவற்றை மாற்றித் தட்டச்சு செய்.

    ( − − − ) இருக்க / சரி / சே., − அடித்த வார்த்தையின் கீழ் புள்ளி இட்டிருந்தால் அடித்த வார்த்தையையும் சேர்த்து தட்டச்சு செய்.

    () இக் குறியை கிடைமட்டத்தில் காண்க − சேர்க்க, எழுத்துக்களை / வார்த்தை களை சேர்த்து தட்டச்சு செய்.

    *சில குறிகளை தட்டச்சு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.*

    ReplyDelete
  9. Next .....

    *HOW TO PUNCTUATE :*

    ' in Lakhs' , 'in thousand' போன்ற தலைப்பின் கீழ் வரும் இலக்கங்களை

    3 , 2 , 2 , 3 என்ற தொகுப்பு எண்களை அடிப்படையாக வைத்து எளிதில் அறியலாம்.

    உதாரணமாக ' in Lakhs ' என்ற தலைப்பின் கீழ் 3 4 5 8 7 என்ற இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்...

    இலட்சத்திற்கு 5 பூஜ்யங்கள். 3 , 2 , 2, 3 என்ற எண்களின் தொகுப்பிலிருந்து 5 எணணிக்கையை நீக்கி விடுங்கள்..
    ( 3 , 2 , 2 , 3 ). (2 , 3 அடிபெறும் என அறிக)

    மீதம் கிடைப்பது 2 , 3. ஆக 2 , 3 என்ற கணக்கில் பிரிக்க வேண்டும் என்பதே
    விடை.

    இதன்படி 3 4 5 8 7 என்ற இலக்கம்
    3 4 5 , 87 என்று பிரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் வரும் இலக்கங்கள் மட்டுமே மேற்கூறிய முறைப்படி வித்தியாசமாகப் பிரிக்கப்பட வேண்டும்...என்பதை மனதில் கொள்க.

    தலைப்பு : முறை : பிரிப்பது என மூன்று தலைப்பாக அட்டவணைப் போட்டுக் கொள்ளுங்கள்...!

    தலைப்பு முறை பிரிப்பது
    --------------- ------------ ----------------

    " 0 " in tens - ( 3 , 2 , 2 , 3 ) (3−அடிபடும்)
    பிரிப்பது... 3 , 45 , 87 என்று பிரிக்க வேண்டும்.

    " 0 0 " in hundred - 3 , 2 , 2 , 3 ( 3 − அடிபடும்) பிரிப்பது... 34 , 58 , 7

    " 0 0 0 " in thousand - 3 , 2 , 2 , 3 (3− அடிபடும்) பிரிப்பது... 3 , 45 , 87

    " 0 0 0 0 " in ten thousand - 3 , 2 , 2 , 3
    ( கடைசி 2 - அடிபடும் ) பிரிப்பது 34 , 58 , 7

    " 0 0 0 0 0 " in lakhs - 3 , 2 2 , 3 ( 2, 3 அடிபடும்) பிரிப்பது − 3 , 45 , 87

    " 0 0 0 0 0 0 " in ten lakhs - 3 , 2 , 2 , 3 (2,2,3 -அடிபடும்) பிரிப்பது − 3 , 458 , 7

    " Crores " என்பது இந்திய முறைப்படி பிரிப்பதில் 2−வது சுற்றில் ஆரம்பம் என்பதால், சாதாரணமாக பிரிப்பது போன்றே பிரிக்கப்பட வேண்டும்.

    " in Million " என்ற தலைப்பின் கீழ் வரும் இலக்கங்களை இடமிருந்து வலமாக மூன்று ( 3 ) இலக்கங்களுக்கு ஒருமுறை பிரிக்க வேண்டும்.

    பொதுவாக... " in Hectares ", population , " in tons " போன்ற தலைப்புகள் Million கணக்கில் பிரிக்கப்பட வேண்டும்.

    *குறிப்பு :*

    *வரிசைப்படி வரும் இலக்கங்களையும் Decimal புள்ளிக்கு வலது புறம் வரும் இலக்கங்களையும் பிரிக்கக் கூடாது.*

    *வருடங்கள், தொலைபேசி எண்கள், வரைவு ஓலைகள் மற்றும் பரிசுச் சீட்டு எண்கள் போன்றவைகள் வரிசைப்படி வரும் இலக்கங்கள் என அறிக.*

    மீண்டும் சந்திக்கலாம்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  10. Mon. 24, April, 2023 , at 7.41 am

    *உண்மை விளக்கம் :*

    பிரகிருதி மாயையை பார்த்து வருகிறோம்....!

    பிரகிருதி மாயை என்பது, தனித்த மாயை அன்று எனவும், அசுத்த மாயை யினின்று தோன்றிய காரியம் என்றும், பெருமயக்கத்தைத் தரக்கூடியது..இந்த பிரகிருதி மாயை எனறும் பார்த்தோம்.

    இன்று.....

    பிரகிருதி மாயையிலிருந்து தோன்று வது ஆன்ம தத்துவங்கள் −24−ம், அந்தக் கரணங்கள் − 4−ம் ஆகும்.

    இத்தகைய பிரகிருதியினின்று, உயிருக்கு உதவுவனவாகிய *அகக் கருவிகள்* முதலில் தோன்றும்.

    *அகக் கருவிகள் என்பது... அந்த கரணங்கள்.*

    இந்த அகக் கருவிகள்(அந்தகரணங்கள்) *சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என நான்கு* ஆகும்.

    *சித்தம் :*

    பிரகிருதிக்கு ... *அவ்வியத்தம்* என்ற பெயரும் உண்டு.

    முக்குணங்களும் வெளிப்படாத "காரண நிலையில் நிற்கும் பிரகிருதி", பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும். அந்நிலையில் அது *குண தத்துவம்* எனப்படும்.

    வெளிப்பட்ட குணங்கள் *வியத்தம்* எனவும்....

    வெளிப்படாது நிற்கும் குணத்தை.... அவ்வியத்தம் எனவும் கூறுவர்.

    *இக்குண தத்துவமே.... "சித்தம்" என்னும் அந்தக்கரணமாகும்.*

    சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.

    *அடுத்து.... புத்தி :*

    சித்தத்தில் ...முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு, வியத்தமாய் நிற்கையில்... குணதத்துவம் தான் சித்தம் என்னும் அந்தக்கரணம் என்பதாக பார்த்தோம்.

    முக்குணங்களும் சமமாய் நின்ற இக் *குணதத்துவத்தில் இருந்து தான் புத்தி என்னும், அந்தக்கரணம் தோன்றும்.*

    பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். அது சாத்துவிகம், இராசதம், தாமதம் என கடத்த பாடத்தில் பார்த்தோம்.

    இந்த புத்தியில் ... சாத்துவிக குணம் மிகுதியாகவும், இராசதம், தாமதம் (தாமசம்) குறைவாகவும் இருக்கும்.

    அதாவது...குணதத்துவத்தில் இருந்து புத்தியாய் பரிணமிக்கிறது.

    இவ்வாறு பரிணமித்த பின்பு, அக்குண தத்துவம், தன் நிலையில் நின்று தனக் குரிய செயலை எவ்வாறு செய்யும் ?

    இந்த ஐயம் நமக்கு எழ வேண்டும் அல்லவா ?

    இந்த ஐயத்தை...ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.

    பரிணாமத்தில் இரண்டு வகை உண்டு.

    ஒன்று... பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுவது.

    இம்மாற்றம் முழுப் பரிணாமம் ஆகும்.

    மற்றொன்று... வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால், அதன் ஒரு பகுதியில் புழுத் தோன்றும்.

    அவ்வாறு, ஒரு பகுதி மட்டுமே புழுவாக மாறுவதால்...இம்மாற்றம் *ஏகதேச பரிணாமம்* ஆகும்.

    பிரகிருதியில் இருந்து காரியங்கள் தோன்றுவது... பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அன்று;

    வெண்ணெயில் புழுத் தோன்றுவது போல ...ஏகதேச பரிணாமமே யாகையால்.... ஒரு தத்துவம், தனது ஒரு பகுதியில், வேறொரு தத்துவமாய் பரிணமிக்கும்.

    அவ்வாறு பரிணமித்த பின்பு, பரிணமியாது நின்ற பகுதி, முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும்.

    இப்போ புரிகிறதா...?

    * முக்குணங்களும் அறவே தோன்றாத நிலையைப் பார்த்தோம்.... அதுவே *பிரகிருதி.*

    * முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலையைப் பார்த்தோம்... அதுவே *குண தத்துவம்.*

    * முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும், ஏனையவை குறைந்தும் உள்ள நிலையைப் பார்த்தோம்.... அதுவே *புத்தி தத்துவம்.*

    இல்வாறு, இனி வரும் காரியங்களில் எல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும்,

    ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

    * இக் குணங்களுள், சாத்துவிக குணம்... *பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.*

    * இராசத குணம்.... *வன்மை, செயலூக்கம், கொடுமை * முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.

    * தாமத குணம்... *மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும்.*

    * இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது....!

    *சாத்துவிக குணம், இன்பத்திற்கும்....*

    *இராசத குணம், துன்பத்திற்கும்....*

    *தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும்.*

    குண தத்துவத்தில்... புத்தி தோன்றும் என பார்த்தோம்.

    *இவ் அந்தக்கரணமே... ஆன்மா யாதொன்றையும், *இஃது இன்னது* என்று நிச்சயம் செய்வதற்குரிய கருவியாகும்.*

    இக்கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்வதற்கேற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடையதாய் இருக்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  11. Mon. 24, Apr. 2023 at 2.13 m.

    *தட்டச்சுப் பொறி தொடர்ச்சி :*

    இன்று நாம் பார்க்கப் போவது...

    *TEST YOUR SPELLING CORRECTED :*

    *Wrong Spelling & Correct Spelling :*
    ------------------------ ------------------------

    * Acording − According

    * Accomodation - Accommodation

    * Advanse - Advance

    * Apreciate - Appreciate

    * Arange - Arrange

    * Assistent - Assistant

    * Asured - Assured

    * Atend - Attend

    * Atension - Attention

    * Atested - Attested

    * Begining - Beginning

    * Carefull - Careful

    * Catalog - Catalogue

    * Certifi - Certify

    * Cheep - Cheap

    * Comitte - Committee

    * Comission - Commission

    * Comodity - Commodity

    * Concurence - Concurrence

    * Condision - Condition

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  12. Mon. 24, Apr. 2023 at 7.55 pm.

    *திருவருட்பயன் :*

    *கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன் :*


    *குறள் − 8 :*

    *எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
    தங்குமவன் தானே தனி.*

    *பொருள் :*

    அவன் (தங்கும் + அவன்) − அவ் இறைவன்

    எங்கும் − எல்லா இடங்களிலும்

    எவையும் − அவ்விடங்களிலுள்ள சித்தும், சடமும் ஆகிய எல்லாப் பொருள்களிலும்

    நீர் உறு எரிபோல் − காய்ச்சிய நீரில் பொருந்திய வெப்பம் போல்

    ஏகம் தங்கும் − ஒன்றாய்க் கலந்து நிற்பான்

    தான் தனி(தானேதனி) − ஆயினும் அவன் பொருள் தன்மையால் வேறாகியே நிற்பான்.

    *இனி குறளுக்கான விளக்கத்தை அறிந்து கொள்வோம் :*

    நீர் வேறு, வெப்பம் வேறு. ஆனால் இவ்விரண்டும் சேர்ந்து நிற்கின்றன.

    வெப்பமானது நீரில் பொருந்தி அதனோடு ஒன்றாய்க் கலந்து நிற்கிறது. பார்ப்பதற்கு நீர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியான நிலை. ஆனால் நீரைத் தொட்டால் சுடும்.

    எனவே, வெப்பம் நீரோடு ஒன்றாய் நின்றாலும், அதன் சுடும் தன்மை தனியே புலப்படுவதால் அது நீீருக்கு வேறாகியே நிற்கிறது.

    அதுபோல்... இறைவன் உலகும் உயிரும் ஆகிய எல்லாவற்றோடும் கலந்து நிற்கிறான்.

    உலகப் பொருள்களைப் பார்க்கும் பொழுது அதனோடு கலந்திருக்கும் இறைவனது இருப்புச் சிறிதும் நமக்குப் புலப்படுவதில்லை.

    அவ்வாறே... உயிர்களாகிய நம்மிடத்தில் இறைவன் பொருந்தியிருக்கிறான் என்பதும் நமக்குச் சிறிதும் புலப்படுவதில்லை.

    இங்ஙனம்... *தனது இருப்பைச் சிறிதும் காட்டாமல்... உலகமே உள்ளது என்று சொல்லும்படியாகவும், உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியாகவும், இறைவன் , உலகோடும் உயிரோடும் ஒன்றுபட்டு நிற்கிறான்.*

    ஆனால், அப்படி ஒன்றுபட்டு நின்றாலும், தனது தன்மையால் இறைவன் அவற்றிற்கு வேறாய் நிற்பான்.

    காய்ச்சிய நீரில், வெப்பம் ஒன்றாயும், வேறாயும் நிற்றலைப் போன்று....இறைவன் வேறாய் நிற்பான்.

    இறைவன் சடமும் சித்தும் ஆகிய உலக உயிர்களாடு கலந்து ஒன்றாய் நிற்பான் எனில் அவ்வுலக உயிர்கள் எய்தும் மாற்றங்களை இறைவன் அடைவானோ என்ற ஐயம் எழலாம்...!

    அவ்வாறு, இறைவன் ஒன்றாக நின்றாலும், நீரில் கலந்து நிற்கின்ற வெப்பம் போல், பொருள் தன்மையால் அவற்றின் வேறாயும் நிற்பான்...ஆதலாலே அவற்றினது மாற்றங்கள் அவனைப் பற்றுவதில்லை.

    *மேற்கண்டவை எரியுறு நீர்−க்கான விளக்கம்.*

    மற்றொரு உதாரணம்...!

    வெந்நீரில்...உண்கலம் முதலியவற்றைக் கழுவுவர். அவ்வாறு கழுவும் போது... கழுவப்படுகிற பொருளின் மாசுகள் மட்டுமே அந்த நீரைப் பற்றுமேத் தவிர...அந்த நீரிலுள்ள வெப்பத்தைப் பற்றுவதில்லை.

    அந்த நீர் தான் மாசு அடையுமேத் தவிர, அதிலுள்ள வெப்பம் மாசு அடைவதில்லை.

    அவ்வாறு அந்த வெப்பம் மாசு அடைவதில்லை என்றால்...அந்த வெப்பமானது தனது தன்மையில் இருந்து மாறாது இருக்கிறது என்று தானே பொருள்.

    அதுபோல... இறைவன் உலகோடு பொருந்தி நின்றாலும், உலகக் குற்றங்களால் பற்றப்படாது, தன் இயல்பில் திரியாது, என்றும் ஒரு தன்மையனாய் இருக்கிறான்.

    *இதனாலயே...இறைவனைச் செம்பொருள் என்கிறோம்.*

    இறைவன் இயல்பாகவே பாசததில் படாத தூய தன்மையன் என்பதையும்...
    உலகப் பொருளில் தோய்வின்றி நிற்பவன் என்பதையும் வலியுறுத்தவே.. நமது ஆசிரியர்... *தானே தனி* என்றார்.

    திருவாசகத்தில் திருஅம்மானையில்...
    சேர்ந்தறியாக் கையானை என்று வருகிறது. (13−வது பாடல்).

    சிலர் இதற்கு பொருள் உரைப்பர்... சிவபெருமான் வேறொருவரைத் தொழுதறியாத கைகளை உடையவன்... என்று சிலர் அதற்குப் பொருள் உரைப்பர். அவ்வுரை பொருந்தாது. மட்டுமின்றி சிறந்த பொருளும் ஆகாது.

    ஏனெனில்... *சேர்ந்தறியாக் கையானை* என்பதன் பின் *எங்கும் செறிந்தானை என்றும் உள்ளது.

    இவ்விரு தொடர்களையும் இணைத்துப் பொருள் காணுதல் வேண்டும்.

    இதன் பொருள்....

    இறைவன் எல்லாப் பொருளிலும் கலந்து எங்கும் செறிந்திருக்கிறான். , ஆயினும் அப் பொருள்களின் தன்மையை அவன் சார மாட்டான். எதிலும் தோய்வின்றி நிற்பான்... இறைவன்.

    அதுபற்றியே பிற பொருள்களின் சேர்ந்தறியாத கையான் என்றார் மணிவாசகர்.

    *கை, என்பதற்கு ஒழுக்கம்* என்று பொருள்.

    மேற்கண்டவை.... தானே தனி என்பதற்கான விளக்கம்.

    *இக் குறளின் கருத்து :*

    *காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல, இறைவன் எல்லா உலகங்களிலும், உயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான்... அதே நேரத்தில்.... இறைவன் அவற்றிற்கு வேறாய் தனித்தும் நிற்கிறான் என்பதே.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  13. Tue. 25, Apr. 2023 at 7.20 am.

    *உண்மை விளக்கம் :*

    பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் அந்தகரணங்கள் பார்த்து வருகிறோம்.

    *குண தத்துவத்தில் இருந்து புத்தி தோன்றும்* எனப் பார்த்தோம்.*

    இன்று, அகங்காரம், மனம் பற்றி பார்க்கலாம்....!

    *புத்தி தத்துவத்தினின்று அகங்காரம் என்னும் அந்தகரணம் தோன்றும்.*

    இதில் இராசத குணம் மிகுதியாக இருக்கும்.

    ஏனைய இரு குணங்களும் (தாமத குணம், சாத்துவிக குணம்) குறைவாக இருக்கும்.

    யான் இதனை அறிவேன், யான் இதனைச் செய்வேன், யான் இதனை நுகர்வேன் என எச்செயலிலும், ஆன்மா முனைத்தெழுவதற்கு இந்த அகங்காரமே கருவியாகும்.

    இந்த அகங்காரம் அவ்வாறு எழுச்சி அடைவதற்கு காரணம்.... இராசத குணம் மிகுதியாக இருத்தலே ஆகும்.

    சிவஞானபோதம் 10−ஆம் நூற்பாவில் ஏதுவில் நாம் அறிந்திருப்போம்.

    யான் என்பது... ஞாதிரு எனவும், எனது என்பது, குணமாகிய ஞானமும், அந்த ஞானத்தினால் அறியப்படுவது ஞேயமும் என... யான், எனது என்பது... அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என அறிந்திருப்போம்.

    இப்போ அதற்குள் நாம் போக வேண்டாம். அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது.

    அதுபோல்... சிவஞான மாபாடியத்தில்.பெரும் பெயர் என்ற தலைப்பிலும் அறிந்திருக்கிறோம். (பெரும் பெயர் என்பது வேதங்களில் வரும் மகா வாக்கியம்).

    அதாவது... வடமொழியில்... *அறிபவனை ஞாதுரு எனவும்...
    *அவனது அறிவை, ஞானம் எனவும்...
    *அறியப்படும் பொருளை ஞேயம் எனவும்.... கூறுவர்.
    இம்மூன்றையும் *திரிபுடி* என்பர்.

    இம்மகாவாக்கியங்களால் குறிக்கப்படும் பொருள் யாதெனில்.... அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் அல்லது ஞாதுரு, ஞானம், ஞேயம் என்பதே.

    மேற்கூறியவை.. ஞாபகப்படுத்தலுக் காக கூறப்பட்டவை என அறிக.

    இவ்வாறு... எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே (ஆங்காரம்) காரணமாய் இருக்கிறது

    எனவே, இனித் தோன்றும் பல தத்துவங்களுக்கு இது காரணமாய் இருக்கிறது.

    எவ்வாறெனில்....

    அகங்காரம் குண இயல்பில் மூன்று கூறாய் நிற்கும்.

    அவை.... சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக் கூறு என்பன.

    *இந்த சாத்துவிக குணக் கூறு.... தைசத அகங்காரம் என்றும்.....*

    *இராசத குணக் கூறு, வைகாரிக அகங்காரம் என்றும்....*

    *தாமத குணக் கூறு.... பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும்.

    *அடுத்து... மனம் :*

    சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்திலிருந்து... மனம் என்னும் அந்தக் கரணம் தோன்றும்.

    இவ் அந்தக்கரணம் புறத்தேயுள்ளப் பொருளைச் சென்று பற்றும்.

    முன்னே கூறிய, சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் இம்மூன்றினோடு... மனமும் சேர, அந்தக் கரணம் நான்காயின என அறிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  14. Wed. 26, Apr. 2023 at 4.37 pm.

    *உண்மை விளக்கம் :*

    பிரகிருதி மாயையில் இருந்து தோன்றும் ஆன்ம தத்துவங்கள் 24, அந்தக்கரணங்கள் நான்கு பார்த்து வருகிறோம்.

    கடந்த பதிவில்... அகங்காரம், மனம் பார்த்தோம்.

    இன்று... *ஞானேந்திரியங்கள்* பற்றி அறிந்து கொள்ளலாம்....!

    ஞானேந்திரியங்கள் என்பது.... செவி, தோல், கண், நாக்கு மூக்கு என்பன.

    தமிழில்... அறிகருவிகள் என்றும், ஐம்பொறிகள் என்றும் கூறப்படும்.

    ஞானேந்திரியங்கள் ஐந்து, அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு எனக் கூறினேன்.

    இப்பெயர்கள் உறுப்புகளின் பெயர்களாய் இருப்பினும் அவ்வுறுப்புகள் ஞானேந்திரியங்கள் அல்ல...

    அப்போ ஞானேந்திரியம் என்பது....
    இவ்வுறுப்புகளில் நின்று, அவ்வப் புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே... ஞானேந்திரியங்கள் எனப்படும்.

    செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே... செவியிந்திரியம். இவ்வாறு கண்ணிந்திரியம்..என பிற இந்திரியங்களையும் கூற வேண்டும்.

    செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது கேட்டல் நிகழ்வதில்லை.

    இவ்வாறு பிற உறுப்புகளிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அதனதன் அறிவு நிகழாது.

    எனவே, உறுப்பு என்பது வேறு; இந்திரியம் என்பது வேறு.

    இந்த இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு... உறுப்பு இடமாக உள்ளது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    சரி... தைசத அகங்காரத்தினின்று மனம் தோன்றும் என கடந்த பாடத்தில் அறிந்தோம்.

    அவ்வகங்காரத்தினின்றே மனத்திற்கு பின்னர்... ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றுகிறது.

    மனதிற்கு பின் ஞானேந்திரியம் தோன்றியது என்றால்.... பொருந்துமா ?

    இவ் ஐயத்தை எவ்வாறு போக்குவது ?

    செவி முதலிய ஞானேந்திரியங்கள் வாயிலாக ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவது இந்த மனம் ஆகும்.

    அகக் கருவியாகிய மனம்.... இவ்வாறு புறத்தேயும் சென்று, புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் தொடர்பு கொள்கிறது.

    இவ்வாறு ஞானேந்திரியங்கள் கவர்ந்த வெளிப்புலன்களை மனமானது பற்றி அகத்தேயுள்ள புத்திக்குத் தருகிறது.

    இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் ஞானேந்தியங்களாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று, அகம், புறம் ஆகிய ஈரிடத்தேயும் விரைந்து செல்வதாய் உள்ளது.

    இதனால், ஏனைய அகக் கருவிகளைப் போல் அல்லாமல்.... மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களாடும் இசைந்து நிற்கும் .

    இவ்விசைவு, மனமும், ஞானேந்திரியங் களும் ஆகிய இவையிரண்டும் தைசத அகங்காரமாகிய ஓரிடத்தே தோன்றின என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

    அடுத்து.... சாத்துவிக குணம் பிரகாசமுடையது. ஆதலால் குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்த போது, நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்யும்..... புத்தி தோன்றியது.... எனப் பார்த்தோம்.

    அதுபோலவே இங்கும் பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து... *மனமும்,ஞானேந்திரியங்களும் தோன்றின.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  15. Wed. 26, Apr. 2023 at 8.25 pm.

    *திருவருட்பயன் − 9 :*

    இறைவன் ஓர வஞ்சனை உடையவன்..என்ற எண்ணம் சிலருக்கு உண்டு.

    எதனாலே என்றால்.... இறைவன் தன்னை அடைந்தவர்க்கு இன்பத்தைத் தருவான். தன்னை அடையாதவர்க்கு இன்பத்தைத் தராதவன்.

    இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்வதனால் அவன் ஓர வஞ்சனைக் காரன், ஓர வஞ்சனையுடையவன் என்றெல்லாம் எண்ணுகிறோம்.

    இறைவனது பெயர் சங்கரன். சங்கரன் என்றால்...எல்லா உயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவன் என்று பொருள்.

    சம் என்றால்....இன்பம்.
    கரன் என்றால்.... செய்பவன்.. என்று பொருள்.

    இவ்வாறு கருணை உள்ளம் கொண்ட இறைவன், ஒருபோதும் நடுநிலை மாறாத நடுவு நிலைமையனாகவே இருப்பார்.

    அவரவர் படுகின்ற துன்பங்களுக்கெல் லாம் காரணம், அவரவர் செய்த வினைகளே காரணம்.

    அடுத்தடுத்துத் துன்பம் வரும்போது... அவர்கள் ஆண்டவரைப் பழிக்கிறார்கள்.

    நான் படும் துன்பத்தைக் கண்டு வாழாதிருக்கிறானே..அவனுக்கு இரக்கமில்லையா ? கண்ணில்லையா என்றெல்லாம் பழிக்கிறார்கள்.

    ஆனால்...... இவர்கள் நல்வினைப் பயனால் இன்பத்தை அனுபவிக்கும் போது, நல்லன என்று இயைந்து அனுபவிக்கிறார்கள்.

    அப்போது அவர்கள் இறைவனை நினைப்பதில்லை. இறைவனுக்கு நல்லன செய்தமைக்கு நன்றியும் கூறுவதில்லை.

    ஆனால் , தீவினைப் பயன் வரும்போது மட்டும், அவர்கள் இறைவனை நினைக்கிறார்கள். துன்பத்தை நீக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இது என்ன முறை ஆகும் ?

    நல்வினையும், தீவினையும் ஆகிய இரண்டும் அவர்கள் முன் செய்து கொண்டவை தாமே. அவற்றுள் ஒன்றை மட்டும் விரும்பி ஏற்பதும், மற்றொன் றுக்கு (தீவினை) வருந்துவதும் பேதைமை தானே !

    ஒரு உதாரணத்துடன் கூறுகிறேன்....!

    உடல் நலம் பேணும் வழிகளை "மருத்துவ நூல்கள்* கூறுகின்றன.

    இன்ன காரணங்களால், இன்னயின்ன நோய்கள் வரலாம்..அதைத் தவிர்த்தால் அந்நோய்களின்றி இனிது வாழலாம் என்று மருத்துவ நூல்கள் அறிவுறுத்து கின்றன.

    ஆனால், பலர் அம் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதில்லை. அவற்றுக்கு மாறான வழியில் நடக்கிறார்கள். அதனிமித்தமே நோய்களை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

    இதன் காரணம்... இளமை மிடுக்கில் அந்த நோய்கள் மடங்கியிருக்கும். அப்போது நோய்கள் பெரிதாகத் தோன்றுவது இல்லை.

    அதே நேரத்தில், உடம்பில் வலிமை குறைகிற முதுமையில் அந்நோய்கள் பல்கிப் பெருகி வந்து தாக்கி உடம்பை வருத்தும்.

    அப்போ... அவர்கள் வேறு யாரையேனும் நொந்து கொள்கிறார்களா என்றால் இல்லை. அல்லது நொந்து கொள்ளத் தான் முடியுமா ? நோய்க்கு யார் காரணம் ?

    மருத்துவ நூல்கள் சொன்ன நல்வழியில் செல்லாது மாறி நடந்தமையால்... தமக்குத் தாமே நோயைத் தேடிக் கொண்டார்கள்.

    அதுபோல... *மெய்ந்நூல்கள் வினையிலிருந்து விடுபடும் வழிகளைக் கூறுகின்றன.*

    ReplyDelete
  16. *யான், எனது* என்னும் பற்றுக்களே வினைக்குக் காரணம்....அப்பற்றுக்களை நீக்கினால் வினையில்லை என்கிறது நூல்கள்.

    *எப்படி நீக்குவது ?*

    எப்படியென்றால்....

    இறைவனிடத்து வைக்கும் பற்றினாலேயே ... அப்பற்றுக்களை நீக்க முடியும்.... என மெய்ந்நூல்கள் கூறுகின்றன.

    *இறையன்பு உடையவர்க்கு அது வளர வளர, யான், எனது என்னும் பற்று மெல்ல மெல்ல நீங்கும்.*

    அவர்கள் அப் பற்றுக்களை முற்றிலும் விடுத்து ... *எல்லாம் அவன் செயல்* என இறைவழியில் நிற்பர்.

    அவர்களே.... *இறைவனை நண்ணியவர்கள்.*

    இறைவனை, மனம், மொழி, மெய் என்னும் மூன்றினாலும் பற்றினால் தீவினை பற்றாது ஒழியும் எனத் தேவாரத் திருமொழிகள் வலியுறுத்து கின்றன.

    உலகப் பற்றாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கின்றனர். அப் பற்றுக்களை விடாதபோது வினைகள் வந்து வருத்தத்தான் செய்யும்.

    அவ் வருத்தம் அவர்களாக தேடிக் கொண்டது தானே . அதற்கு இறைவனை நோவது ஏன் ?

    ReplyDelete
  17. இப்போ குறளுக்குள் வருவோம்....!

    *சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன் :*

    குறள்.... 9

    நலமிலன் நண்ணார்க்கு நண்ணி னர்க்கு நல்லன்
    சலமிலன் பேர் சங்கரன்.

    *மற்றொரு உதாரணமும் கூறுகிறேன் நன்கு கவனியுங்கள்...*

    குளிர் காலத்தில், வாடையும், பனியும் உடலை வருத்துகிறது. அருகிலேயே குளிர் காய்வதற்கேற்றவாறு தீ கொழுந்து விட்டு எரிகிறது.

    அத்தீயை அணுகி அமர்ந்தால் பனியும், நடுக்கமும் பறந்தோடிவிடும்... இன்பக் களிப்பை எய்தலாம்.

    அவ்வாறு செய்யாமல் , தீயை விட்டு விலகி நின்றால், வாடையும், பனியும் வருத்தத்தானே செய்யும்.

    அவ்வருத்தத்திற்கு எது காரணம் ? தீ காரணமா ? அல்லது அத்தீயை விட்டு விலகி நின்றது காரணமா ?

    ஆனால் அத்தீயின் மேல் யாரும் குற்றம் சொல்வதில்லை.

    காரணம்.... அது தன்னை யார் அணுகினாலும், அவரது குளிர் நடுக்கத்தை போக்கி அவர்க்கு நலம் செய்யும்.

    அதே நேரத்தில் அதை அணுகி நில்லாமல், விலகி நின்றதன் செயலே படும் துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.

    *இதுபோல்... வாடையும், பனியும் போல் உள்ளவை... உலகப் பற்றுக்கள்.*

    *குளிர் காயும் நெருப்புப் போல் இருப்பவன் இறைவன்.*

    *பற்றுக்களாகிய பனியிலும், குளிரிலும் அகப்பட்டுத் துன்புறுகின்றன உயிர்கள்.

    அவைபடும் துன்பத்திற்கு இறைவன் மேல் குற்றம் சுமத்தலாமோ ?

    *குளிர் காயும் நெருப்புப் போலத் தன்னை யா.....ர் அணுகினாலும், அவரது பிறவித் துன்பத்தைப் போக்கி பேரின்பத்தைத் தர இறைவன் காத்து இருக்கிறான்.*

    அவனை அணுகி நில்லாமல், உயிர்கள் விலகி நிற்பதே... அவைபடும் துன்பத்திற்குக் காரணம் .

    இறைவன், உலகப் பற்றை நீக்கித் தன்னையே புகலாக அடைந்த அன்பர்களை ஏற்றுக் கொண்டு அவர்க்கு வரும் வினைத் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தை வழங்குகிறான்.

    *பற்று நீங்காத ஏனையோரை, வினை வழியே செலுத்திப் பிறவித் துன்பத்தில் அழுந்துமாறு செய்வான்.

    அவரை வினை வழியே செலுத்துவதும்...அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள் ளும் பொருட்டேயாகும்.

    இக்கருத்துப்படவே.... *நண்ணினர்க்கு நல்லன் நண்ணார்க்கு நலமிலன்* என்றார் ஆசிரியர்.

    இவ்வாறு, தன்னைச் சார்ந்தார், சாராதார் ஆகிய இருவரிடத்தும் இறைவன் செய்யும் செயல்கள் வெவ்வேறாய் அமைந்தாலும்.... அவை யாவும் கருணைச் செய்ல்களே.

    *அன்பரிடத்துச் செய்வது... அறக் கருணை.*

    *அன்பு அல்லாதாரிடத்துச் செய்வது... மறக் கருணை.*

    இறைவன் எல்லா உயிர்களிடத்தும், உடனாக இருந்து, அவ்வுயிர்களுக்கு ஏற்ப நடத்துவான். அவனது செயல் யாவும் அருட்செயலே.

    எனவே, இதனை உணர்ந்தால்...*இறைவன் சலம் இலன் என்பதும், நடுவு நிலைமையன் என்பதும், சங்கரன் என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருந்தும் என்பதும் நன்கு விளங்கும்.

    ReplyDelete
  18. சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன் :*

    குறள்.... 9

    நலமிலன் நண்ணார்க்கு நண்ணி னர்க்கு நல்லன்
    சலமிலன் பேர் சங்கரன்.

    *மற்றொரு உதாரணமும் கூறுகிறேன் நன்கு கவனியுங்கள்...*

    குளிர் காலத்தில், வாடையும், பனியும் உடலை வருத்துகிறது. அருகிலேயே குளிர் காய்வதற்கேற்றவாறு தீ கொழுந்து விட்டு எரிகிறது.

    அத்தீயை அணுகி அமர்ந்தால் பனியும், நடுக்கமும் பறந்தோடிவிடும்... இன்பக் களிப்பை எய்தலாம்.

    அவ்வாறு செய்யாமல் , தீயை விட்டு விலகி நின்றால், வாடையும், பனியும் வருத்தத்தானே செய்யும்.

    அவ்வருத்தத்திற்கு எது காரணம் ? தீ காரணமா ? அல்லது அத்தீயை விட்டு விலகி நின்றது காரணமா ?

    ஆனால் அத்தீயின் மேல் யாரும் குற்றம் சொல்வதில்லை.

    காரணம்.... அது தன்னை யார் அணுகினாலும், அவரது குளிர் நடுக்கத்தை போக்கி அவர்க்கு நலம் செய்யும்.

    அதே நேரத்தில் அதை அணுகி நில்லாமல், விலகி நின்றதன் செயலே படும் துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.

    *இதுபோல்... வாடையும், பனியும் போல் உள்ளவை... உலகப் பற்றுக்கள்.*

    *குளிர் காயும் நெருப்புப் போல் இருப்பவன் இறைவன்.*

    *பற்றுக்களாகிய பனியிலும், குளிரிலும் அகப்பட்டுத் துன்புறுகின்றன உயிர்கள்.

    அவைபடும் துன்பத்திற்கு இறைவன் மேல் குற்றம் சுமத்தலாமோ ?

    *குளிர் காயும் நெருப்புப் போலத் தன்னை யா.....ர் அணுகினாலும், அவரது பிறவித் துன்பத்தைப் போக்கி பேரின்பத்தைத் தர இறைவன் காத்து இருக்கிறான்.*

    அவனை அணுகி நில்லாமல், உயிர்கள் விலகி நிற்பதே... அவைபடும் துன்பத்திற்குக் காரணம் .

    இறைவன், உலகப் பற்றை நீக்கித் தன்னையே புகலாக அடைந்த அன்பர்களை ஏற்றுக் கொண்டு அவர்க்கு வரும் வினைத் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தை வழங்குகிறான்.

    *பற்று நீங்காத ஏனையோரை, வினை வழியே செலுத்திப் பிறவித் துன்பத்தில் அழுந்துமாறு செய்வான்.

    அவரை வினை வழியே செலுத்துவதும்...அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள் ளும் பொருட்டேயாகும்.

    இக்கருத்துப்படவே.... *நண்ணினர்க்கு நல்லன் நண்ணார்க்கு நலமிலன்* என்றார் ஆசிரியர்.

    இவ்வாறு, தன்னைச் சார்ந்தார், சாராதார் ஆகிய இருவரிடத்தும் இறைவன் செய்யும் செயல்கள் வெவ்வேறாய் அமைந்தாலும்.... அவை யாவும் கருணைச் செய்ல்களே.

    *அன்பரிடத்துச் செய்வது... அறக் கருணை.*

    *அன்பு அல்லாதாரிடத்துச் செய்வது... மறக் கருணை.*

    இறைவன் எல்லா உயிர்களிடத்தும், உடனாக இருந்து, அவ்வுயிர்களுக்கு ஏற்ப நடத்துவான். அவனது செயல் யாவும் அருட்செயலே.

    எனவே, இதனை உணர்ந்தால்...*இறைவன் சலம் இலன் என்பதும், நடுவு நிலைமையன் என்பதும், சங்கரன் என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருந்தும் என்பதும் நன்கு விளங்கும்.

    *இச்செய்யுளின் பொருள்... !*

    நண்ணார்க்கு − தன்னைச் சாராதவர்க்கு.

    நலம் இலன் − இன்பம் செய்யான்.

    நண்ணினர்க்கு − தன்னைச் சார்ந்தவர்க்கு.

    நல்லன் − இன்பத்தைச் செய்வான்.

    சலம் இலன் − அவன் ஓர வஞ்சனை இல்லாதவன்.

    பேர் சங்கரன் − எல்லா உயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்குபவன் என்ற பொருளில்... உண்மை நூல்கள் அவனைச் சங்கரன் என்று குறிப்பிடுகின்றன.

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  19. Thu. 27, Apr. 2023 at 4.45 pm.

    *தட்டச்சுப் பொறி தொடர்ச்சி :*

    *TEST YOUR SPELLING CORRECTED :*

    Wrong Spelling : Correct spelling
    ------------------------ --------------------------

    * Controler - Controller

    * Convertion - Conversion

    * Confered - Conferred

    * Copis - Copies

    * Corect - Correct

    * Depty - Deputy

    * Depo - Depot

    * Deside - Decide

    * Efect - Effect

    * Exekution - Execution

    * Expantion - Expansion

    * Extention - Extension

    * Earli - Early.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  20. Thu. 27, April. 2023 at 9.47 pm.

    *திருவருட்பயன் :*

    *குறள் − 10 :*

    இறைவன் நம் அறிவில் உள்ளவனா யினும், அறிவிலே உள்ள மயக்கம் காரணமாக நாம் அவனை உணராமல் இருக்கிறோம்.

    அவனது இருப்பைக் குறித்தே ஐயப்படுகிறாம்.

    *இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
    அல்லும் பகல் அருளுகின்றானே

    என *திருமூலர் தனது திருவாய் மொழிந்தருளினார். பாடல் − 23. பின்பகுதி.*

    இதன் பொருள்....!

    எல்லாம் வல்ல ஆற்றலாளன் இறைவன். தீக்கடவுளை நடுக்கடலில் நிறுத்திக், கடல் புரண்டு கரை கடக்காதவாறு, நில் எனச் சொல்லிக் கடல் கரைக்குள்ளாக நிற்கக் கட்டளை இட்ட நீதிமான் கடவுள்

    இத்தகைய இறைவனை...இல்லை எனச் சொல்லாதீர்...!

    தேவர் முதலான, எல்லா உயிர்களையும், இரவும், பகலும் காத்து அருள் புரிபவன் நம் ஈசனே ! என்கிறார்.

    எனவே, இறைவனது இருப்பில் ஐயம் கொள்ள வேண்டாம் என... இம்முறையிலேயே ஆசிரியர் உமாபதி சிவமும் கூறுகிறார்.

    *இனிக் குறளுக்கு வருவோம்....!*

    *பிறவிக்கு மருந்து ஆவான் :*

    உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது
    மன்னு பவம் தீர்க்கும் மருந்து.

    இச்செய்யுள் கூறுவது யாதெனில்...!

    இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உளது; அஃது உங்களிடமே உள்ளது.

    அதாவது... உங்கள் அறிவினுள்ளே உள்ளது.

    அம்மருந்து தான் இறைவன்.

    அவன் உளனா, இலனா(ஐயம் இலது) என்று ஐயுற வேண்டுவதில்லை.

    அவனைப் புறத்தேத் தேடாமல், அகத்தே நோக்கி உணர முற்படுங்கள்.. என இச்செய்யுள் அறிவுறுத்துகிறது.

    இச் செய்யுளில்... *பவம்* என்ற சொல் *பிறவியைக்* குறிக்கும்.

    நமது ஆசிரியர்... பிறவியை நோய் என்று வெளிப்படையாகக் கூறாமல்... இறைவனை மருந்து என்று வெளிப்படக் கூறி இருப்பதனால்.... பிறவியை நோயாகக் கூறுகிறார்.

    பிறவி நோய் என்றால்.... "உடலைப்"பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, "உயிரைப்"பற்றி நின்று துன்புறுத்துவது ஆதலின் பிறவி நோய் எனப்பட்டது.

    சரி... நோய் துன்பத்தையையே விளைவிப்பது. ஆனால், பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கும்.

    அவ்வாறிருக்க... அதனை நோய் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும் ?

    ReplyDelete
  21. இவ்வுண்மையை... நாவுக்கரசர் ஒரு உவமையால் விளக்குகிறார்.

    அதாவது... *ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலை நீரை ஏற்றி அதில் ஆமையை இடுகின்றனர்.

    நீர் சிறிது சிறிதாக சூடேறுகிறது. ஆனால், அந்த ஆமை, தனக்கு வரப் போகும் அழிவை அறியாது, தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறதாம்.

    அந்த இன்பம்,அதற்குத் துன்பமாய் முடியப் போகிறதே !

    அதுபோல... உலகில் ஐம்புல நுகர்ச்சியால் லரும் இன்பம் இத்தகையதாகும்.

    எனவே, உலகில் சிறிது இன்பம் உளதாயினும், அது துன்பமாகவே முடியும். இது கண்கூடு.

    இதனால், பிறவி..., துன்பத்தையே விளைவிக்கும் என்பதால்... அது நோய் எனப்பட்டது.

    இந்தப் பிறவி நோய் என்பது... அறிவிலார்க்குச் சிறிதும் புலனாகாது.

    ஆனால் அறிவுடையார் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர்.

    எவ்வாறு ?

    பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன்.

    மந்திரமும், தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் என்று அருளினார் திருநாவுக்கரசர்.

    இவ்வுலகத்து மருந்துகள், வேறு வேறு இடங்களில் கிடைப்பன. அவற்றைப் பெற அலைதல் வேண்டும். அலைந்தும் கிடைக்காமலும் போகலாம் அல்லவா ?

    ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையதன்று. நோயுடையார்க்கு வேறாய் இல்லாது, அவரோடு ஒன்றாய் இருப்பது..

    இதுவே, உணர்வாய் உளது என்பது. (செய்யுளைப் பாருங்கள்....இவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்)

    மேலும், உலகத்து மருந்துகள் ... உடலுக்கு உரியவை. எனவே அது உண்பதற்கு உரியன.

    ஆனால், இறைவனாகிய மருந்தோ...உயிருக்கு உரியவை. ஆகவே, அஃது எண்ணுதற்கு உரியனவாகிறது.

    அதுபற்றியே... *உன்னும்* என்று அறிவுறுத்தினார் ஆசிரியர்.

    *உன்னும் என்றால்.... நினையுங்கள் என்று பொருள்.*

    *இச் செய்யுளின் பொருள் :*

    ஓவாது − ஒழியாமல்

    மன்னுபவம் − நிலைபெற்று நிற்கின்ற பிறவியாகிய நோயை.

    தீர்க்கும் மருந்து − தீர்க்கின்ற மருந்து,ஒன்று.

    உணர்வாய் − உங்களது அறிவிற்கு அறிவாய்.

    உளது − உங்களுடன் இருக்கின்றது.

    ஐயம் இலது − அதன் இருப்பில் நீங்கள் ஐயம் கொள்ள வேண்டா.

    உன்னும் − அதனை உள்முகமாக நோக்கி உணர முற்படுங்கள்.

    *இதன் கருத்து யாதெனில்....!*

    *இறைவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள்; இறைவனது இருப்பில் ஐயங் கொள்ள வேண்டாம் என்பதே .

    திருவருட்பயன் முதல் அதிகாரம் இனிதே முடிந்தது.

    அடுத்து இரண்டாம் அதிகாரமான ... உயிரவை நிலையை.. ஒரு வாரம் கழித்து மீண்டும் சந்திக்கலாம்...!

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  22. Fri. 28, Apr. 2023 at 7.37 am.

    *உண்மை விளக்கம் :*

    *இன்று கன்மேந்திரியங்கள் ஐந்து பற்றி பார்க்கலாம்...!*

    கடந்த பாடத்தில் அறிந்து கொண்டபடி...

    தைசத அகங்காரத்தினின்று மனமும்,ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகாரிக அகங்காரத்தில் இருந்து கன்மேந்திரியங்கள் ஐந்து தோன்றும்.

    கன்மேந்திரியங்கள் என்பது... வாய்,கால், கை, எருவாய், கருவாய் .

    இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும்.

    பேசுதல், நடத்தல் முதலிய தொழில் களைச் செய்தற்குக் கருவியாதலின் கன்மேந்திரியங்கள் எனப் பெயர் பெற்றன.

    தமிழில், தொழிற்கருவிகள் எனவும், செயற்பொறிகள் எனவும் கூறலாம்.

    இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே.... *பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல்* என்பன.

    கை... இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும், உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும்.

    அதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் என்பன எல்லாம் கையிந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும்.

    எருவாய் என மலக்கழிவு வாயினையேக் கூறினாலும், அஃது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும்.

    எனவே, மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப் படுத்துதல் என எருவாயின் தொழில்களாகக் கொள்ளப்பட வேண்டும்.

    சரி.... கருவாயும் கழித்தல் ஆகிய தொழிலைத் தானே செய்கிறது...அதனை எருவாய் என்பதில் அடக்கி விடலாமே;... அவ்வாறு செய்யாமல், தனி ஒரு இந்திரியமாக ஏன் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம் ?

    எருவாயின் செயலிலும், கருவாயின் செயலிலும் வேறுபாடு உண்டு.

    என்ன வேறுபாடு என்றால்.... எருவாயின் செயலை அடக்கினால்... அஃது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

    ஆனால் கருவாயின் செயலை அடக்கிலால்... அஃது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும்.

    இவ் வேறுபாட்டினால் தான், எருவாயும், கருவாயும் வெவ்வேறு இந்திரியங் களால் விளங்குகிறது.

    மட்டுமின்றி, கருவாயின் செயலால், இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும உண்டு் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஞானேந்திரியங்களைக் கூறும் போது, உறுப்புக்கள் இந்திரியமல்ல; அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் கடந்த பதிவில் பார்த்தோம். இது கன்மேந்திரியங்களுக்கும் பொருந்தும்.

    வாய், கால், முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங் கள் ஆகும்.

    மேலும் கன்மேந்திரியங்கள், தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின் றும் அவை தோன்றின... என அறிந்து கொள்ளல் வேண்டும்.

    *குறிப்பு :*

    அடியேன், திருப்பாதிரிப்புலியூர் ஒரு வார சைவ சித்தாந்தப் பயிற்சிக்கு செல்ல நேரிடுவதால்... மீண்டும் ஒரு வாரம் சென்று சந்திக்கலாம்.

    திருப்பாதிரிப்புலியூர் ஸ்தல சிறப்பு யாவருக்கும் ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது...என கவனத்தில் கொள்ளவும்.

    அடுத்த பதிவு தன்மாத்திரைகள் என ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  23. Wed. 10, May, 2023 at 7.39 pm.

    அம்மை நோய்......!

    வேப்பிலை (Melia Azadirachta - Leaves) :

    கிருமிகுட்ட மாந்தங் கெடுவிடஞ்சு ரங்கள்
    பொருமியம சூரிகையின் புண்க− ளொருமிக்க
    நிம்பத் திலையிருக்க நீடுலகி னீங்காமற் கம்பத் திலையிருக்கக் காண்.

    வேப்பிலையின் குணம்....!

    புழுக்கள், பெருவியாதி, மாந்தம், மகா விஷம், சுரரோகம், அம்மைக் கொப்பு ரணங்கள் முதலியவை ஒழியும்.

    செய்கை.... கிருமிநாசினி, சோபாநாசினி, உதரவாதஹரகாரி, ௯ஷீரநாசினி.

    கிருமி நாசினி(Anthelmintic) என்பது... வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சுகளை லெளியாக்கும் மருந்து.

    சோபா நாசினி (Deobstruent)என்பது.... வீக்கம், கட்டி, இவைகளைக் கரைக்கும் மருந்து.

    உதரவாதஹரகாரி (Carminative) என்பது .... வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி, வாயுவைக் கண்டிக்கும் மருந்து.

    ௯ஷீர நாசினி என்பது (Lactifuge).... தாய்ப்பாலை வறட்டும் மருந்து.

    *உபயோகிக்கும் முறை :*

    * வேப்பிலையையும், மிளகையும் சிறிது உப்புக்கூட்டி அரைத்துப் பெரியவர் களுக்கு, சுண்டைக்காய் அளவுடனும்,
    குழந்தைகளுக்கு , 2 குன்றி மணி அளவும், அந்தி சந்தி கொடுத்துவர வயிற்றிலுள்ள கிருமிகள் மடியும்.

    * வேப்பிலைக் கொழுந்து, ஓமம், மிளகு, வசம்பு, பூண்டு முதலியவற்றை ஓர் அளவாக எடுத்து அரைத்து, மேற்கண்டவாறு, உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுப் பொருமல், அஜீரணம், குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல் தீரும்.

    * வேப்பிலைக் கொழுந்தும், அதி மதுரச் சூரணமும் சமனெடையாகக் கூட்டிச் சிறிது நீர் விட்டு அரைத்துப் பட்டாணீப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி, *அம்மை கண்டவர்களுக்கு தினம் 3−வேளை கொடுக்க...அம்மையின் பூரிப்பு அடங்கும்.

    *வேப்பிலையை அம்மை கண்டவர் களிடத்தில் போட்டு வைக்க நோய் வன்மை பெறாது.*

    * அம்மை கண்டு இறங்குமுகமாயிருந்து ஸ்நானம் செய்விக்க வேண்டிய நீரில், இரவில் 2− கொத்து வேப்பிலையை போட்டு, சிறிது காய்ந்த சமயம் ஸ்நானம் செய்துவிக்க, அம்மையின் கொப்புளம் சுருங்கி விரைவில் ஆறும்.

    * வேப்பிலையின் கியாழத்தைக் கொண்டு,கிருமிகள் உண்டான விரணங்களை அலம்புவதினாலும்... அல்லது வேப்பிலையுடன் எள்ளு கூட்டி மெழுகு போல் அரைத்து, மேற்பூசுவதாலும் விரைவில் ஆறும்.

    *வேப்பிலையை தினந்தோறும், சிறிய அளவில் ஆரம்பித்து, நாளுக்கு நாள் அதிகப்படுத்திச் சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொண்டால்.. பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது. இதுவே வேம்பு கற்பம் ஆகும்.*

    *பெரும் பிணியும் வராது.*

    * பேய், பிசாசு, பூதகணம், குழந்தைகளுக்குக் காணும் தோஷம்(சோக்கம்) முதலியவற்றிற்கு ஒரு கொத்து வேப்பிலையைக் கோமியத்திலாவது, மஞ்சள் கரைத்த நீரிலாவது தோய்த்து முகத்திற்கு எதிரே, மந்திரிப்பது போல் சுழற்றி சுழற்றி அடிக்க, மூலிகையின் நெடி, நாசிக்கு ஏறி மூளையின் விகல்பத்தைச் சாந்தப் படுத்தும். கை கண்ட மருந்து இது.

    * வேப்பிலையையும், மஞசளையும் கூட்டி, அரைத்துச் சயித்தியத்திற்குத் தடவ குணமேற்படும். கட்டி, பருக்களுக்குத் தடவி வர அழுந்திவிடும். சீழ் கொண்டிருப்பின் உடைத்துக் கொள்ளும். *அம்மைக் கொப்புளங் களுக்குச் சிறந்த அவிழ்தம் ஆகும்.*

    * இதன் கொழுந்து இலையை, நல்லெண்ணெய் தடவி வதக்கிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்ட உடைத்துக் கொள்ளும்.

    * முற்றின வேப்பிலையுடன், ஒரு பிடி புழுங்கலரிசி சேர்த்து, இலைகள் தூளாகும்படி நன்கு இடித்து,அனைத்தையும், சட்டியில் இட்டு, கறுக வறுத்து,அதனில் ஒரு செம்பு நீர் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொடுக்கப் பேதி, கிராணி முதலியவைகள் தீரும்.

    வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  24. Sat. 13, May, 2023 at 5.05 pm.

    *ஆணவம் − பெயர்க் காரணம் :*

    ஆணவம் என்றவுடன் அதனை ஒரு பண்பாகவே நினைக்கத் தோன்றும்.

    மும்மலங்களுள் ஒன்றாகக் கூறப்படும் ஆணவம் என்பது *பண்பு அன்று. அது ஒரு பொருள்.*

    *அறியாமை என்னும் குணத்தை உடைய ஒரு *குணிப் பொருள்.*

    கண்ணை மறைக்கின்ற புற இருளைப் போல, அறிவை மறைக்கின்ற அக இருள் அது.

    உயிருக்கு இயல்பாய் உள்ள வியாபகத் தன்மையை மறைத்து , அதனைச் சிறுமைப்படுத்துவதால் − அதனைச் சிற்றறிவும், சிறுதொழிலும் உடையதாகச் செய்வதனால்− அணுத் தன்மைப்படுத்துவதால் ஆணவம் என்னும் காரணப் பெயரை உடையதாயிற்று.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  25. Sat, 13, May, 2023 at 5.23 pm.

    *ஆணவத்திற்கும், மாயைக்கும் உள்ள வேறுபாடு :*

    *ஆணவம் இருள் போன்றது. மாயை விளக்கொளி போன்றது.*

    *ஆணவம் உயிரோடு இயற்கையில் உள்ளது. மாயை உயிரோடு பின்பு சேர்ந்தது.*

    *ஆணவம் உயிரோடு கலந்து நிற்பது. மாயை உயிருக்கு வேறாய் நிற்பது.*

    *ஆணவம் காரணமின்றிக் கலந்து நிற்பது. மாயை காரணம் பற்றி வந்து சேர்ந்தது.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  26. Sat. 13, May, 2023 at 9.17 pm.

    *ஐந்து மலங்கள் :*

    ஆணவம், கன்மம், மாயை என மலங்கள் மூன்று என சொல்லப் பெறும்.

    மாயை ஒன்றேயாயினும், அதனைக் காரண நிலை, காரிய நிலை என இரண்டாக வைத்துக் கூறுவர்.

    அவற்றுள், காரண மாயையே மும்மலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவது.

    இந்த காரண மாயை இறையருளால்...
    தனு, கரண, புவன போகங்களாக விரிந்து காரியப்படும்.

    அக் காரியங்களாகிய உடம்பும், கருவி யும், உலகும், நுகர் பொருளும் ஆகிய இவற்றை, அதாவது மாயையின் காரிய நிலையை *மாயேயம்* என்ற சொல்லால் குறிப்பர்.

    இம்மாயேயமும் தனியொரு மலமாகக் கொள்ளப்படும்.

    அதனோடு திரோதான சத்தியையும் கூட்டி, ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என மலங்கள் ஐந்து என்பர்.

    நீத்தல் விண்ணப்பம் 29−ல் பார்த்தீங்கன்னா....

    *மலங்கள் ஐந்தால்* சுழல்வன் தயிரில் பொரு மத்தெனவே ... என வரும் திருவாசகப் பகுதியில் இவ் வழக்கினைக் காணலாம்.

    *திரோதான சத்தி :*

    அருள் என்றும், சத்தி என்றும் குறிக்கப் பட்ட இறைவனது ஆற்றல் ... *மறைப்பாற்றல்* ஆகும்.

    இம் மறைப்பாற்றலுக்கு வடமொழியில் திரோதான சத்தி என்று சொல்லப் படும்.

    இந்த திரோதான சத்தி உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்தி உயிர்களுக்குப் புறப் பொருள்களைக் காட்டித் தன்னைக் காணவொட்டாமற் செய்யும்.

    அதாவது...மும்மலங்களையும் செயற் படுத்தி, உயிர்களை உலக வாழ்வில் பிணிப்புண்டு நிற்கும்படி செய்யும்.

    *மலங்களின் வழியாக உயிர்களைச் செலுத்துதல் பற்றி திரோதான சத்தி யும் மலம் என்று கூறப்படுவதாயிற்று.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  27. Sat. 13, May, 2023 at 10.15 pm.

    *சந்திரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    அம்புலி, இந்து, உடுபதி, கலாநிதி, கலையினன், குபேரன், குழவி, சசி, சோமன், தண்சுடர், திங்கள், மதி, மதியம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  28. Sat. 13, May, 2023 at 10.15 pm.

    *சந்திரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    அம்புலி, இந்து, உடுபதி, கலாநிதி, கலையினன், குபேரன், குழவி, சசி, சோமன், தண்சுடர், திங்கள், மதி, மதியம்.


    * செவ்வாய்க்கு வழங்கும் வேறு பெயர்கள் :*

    அழல் , அங்காரகன் , ஆரல் , உதிரன் , குஜன் , குருதி , நிலமகன் , மங்கலன் , சேய்.


    * புதனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    அருணன், கணக்கன், செளம்யன், தேர்ப்பாகன், நற்கோள், பண்டிதன், பாகன், மாலவன், மால்.


    * குருவுக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    வியாழன், அரசன், அந்தணன், ஆசான், சிகண்டி, சிவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, பிருஹஸ்பதி, மறையோன்.


    * சுக்கிரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    அசுரமந்திரி, உசனன், வெள்ளி, கவி, சுங்கன், பார்கவன், பிருகு, மழைக்கோள், காப்பியன், சல்லியன்.


    * சனிக்கு வழங்கும் பிற பெயர்கள் :*

    அந்தகன், கரியவன், காரி, செளரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  29. Sun. 14, May, 2023 at 6.45 am.

    *சோதிடவியல் − 1 :*


    பாரத தேசத்தின் வடமொழி, இலக்கிய வரலாற்றைக் காணும் பொழுது, முதல் இடத்தில் இருப்பவை....

    இருக்கு வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதமாகும்.

    இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக....

    சிஷை, வியாகரணம்,சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் மற்றும் கல்பம் ஆகிய ஆறும் கூறப்பட்டுள்ளது.

    இவற்றுள் சோதிட சாஸ்திரம் வேதத்தின் கண்களாகப் போற்றப்படுகிறது.

    நான்கு வேதங்களுக்கும், நான்கு வகை சோதிடம் இருந்தது. (சாம வேதத்தின் ஜோதிடம் தற்போது கிடைக்கவில்லை)

    * இருக்கு வேதத்தின் சோதிடம்.... ஆர்ச்ச சோதிடம்.

    * யசுர் வேதத்தின் சோதிடம்.... யாஜூஷஜ்யாதிஷம் எனப்படும்.

    * அதர்வண வேதத்தின் சோதிடம்....
    ஆதர்வண ஜ்யோதிஷம் எனப்படும்.

    இதில் நூற்றியறுபத்திரண்டு சுலோகங்கள் காணப்படுகின்றன.
    இதை லககர் என்பவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது.

    இதற்குப் பின் வந்த சோதிட நூல் ஜ்யோதிஷ வேதாந்தமாகும். இதில் முப்பத்தாறு சுலோகங்கள்.... இருக்கு வேதத்தைச் சார்ந்தனவாகவும், நாற்பத்தாறு சுலோகங்கள் யசுர் வேதத்தைச் சார்ந்தனவாகவும் உள்ளன.

    இந்த வேதாந்தத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமே சோதிட சாத்திரம் எனப்படுகிறது.

    இக்காலத்தில் நிமித்தங்களுக்கு முக்கியத்துலம் கொடுக்கப்படுகிறது.

    எடுத்துக்காட்டாக...

    இராமாயணத்தில், இராமனுக்கும், சுக்ரீவனுக்கும் நட்பு மலர்ந்த பொழுது, அநுமன் தீமூட்டி, அத்தீயை அவர்கள் நட்புக்கு சாட்சியாக்கினான்.

    அப்பொழுது வாலிக்கும், இராவணனுக்கும், சீதைக்கும், இடது கண் துடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    *ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை பயக்கும். மாறாக ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் "கெடுதல்" உண்டாகும் என்பது நிமித்த நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்தாகும்.

    எனவே, இராமனுக்கும், சுக்ரீவனுக்கும் மலர்ந்த நட்பால், இராவணனுக்கும், வாலிக்கும் அழிவு நேரப் போவதையும், சீதைக்கு நன்மையுண்டாகப் போவதை யும் இதனால் வால்மீகி அறிவித்துள் ளார்.

    அதுபோல் கனவுகளின் பலன்களும், அக்காலத்தில் அறியப்பட்டிருநந்தது.

    சுந்தரகாண்டத்தில் சீதை அரக்கியர் களால் தூன்புறுத்தப்பட்டபொழுது, அவ் அரக்கியர்களுள் ஒருத்தியான திரிசடை என்பவள், தான் கண்ட கனவினைக் கூறி, அதனால் சீதைக்கு வரப்போகும் நன்மைகளையும், இராவணனுக்கும் மற்ற அவன் கூட்டத்தாருக்கும், வரப்போகும் தீமைகளையும் எடுத்துரைக்கிறாள்.

    இதன் வாயிலாக... கனவுகளின் மூலம் வரப்போகும் நிகழ்ச்சி, நன்மை பயக்குமா இல்லையா,என முன் கூட்டியே அறியும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததை அறியலாம்.

    இராமபிரான் பிறந்த பொழுது ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தனவாகக் கூறப்படுகிறது.

    இராமபிரான் பிறந்த நாள் (நட்சத்திரம்) புனர் பூசம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் கடக இலக்கனத்தில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளமை யால், இதிகாச காலங்களில், கோள்களின் உச்சம், நீசம், நட்சத்திரங் கள் எனப்படும் நாள்கள், அந்நாட்களுக்கு உடைய தேவதைகள், இலக்கனம் முதலிய வீடுகளை பற்றிய தெளீவான அறிவாற்றல் இருந்ததெனக் கூற முடிகிறது.

    எச்செயலையும் தொடங்குவதற்கான நாள், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும் அறிந்திருந்தனர்.

    அநுமன் இலங்கைக்குச் சென்றீ, சீதையைக் கண்டு திரும்பிய பின், இராவணன் மீது போர்தொடுக்க இராமன் எண்ணினான். அப்பொழுது இராமன் தனது சேனைத் தலைவர்களிடம் இன்று "உத்ரபல்குனி" நட்சத்திரம். இது எனக்கு"நன்மை தரும் ஆறாவது நட்சத்திரமாகும். இன்று போருக்குக் கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றான்.

    இதன் மூலம் இதிகாச காலங்களில், தான் பிறந்த நாள் முதல் அன்றைய நாள் வரை எண்ணிப் பலன்களை முடிவெடுக்கும் ... *தாராபலன்* எனும் நட்சத்திரப் பலன்களையும் நன்கு அறிந்திருந்தனர் என நன்கு புலனாகிறது..

    இவ்வாறு வேத காலத்தில் துவங்கிய வேதாங்க சோதிடம் , இதிகாசபுராண காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றுப் பின் இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சியையும் அடைந்தது.

    குறிப்பு :*

    அடிப்படையை நன்கு தெரிந்து கொண்டோமானால்...சோதிடம் கற்க மிக சுலபமாக இருக்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  30. Tue. 16, May. 2023 at 4.30 am.

    சோதிடவியல் − 2

    சோதிடவியல் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது எனக் கடந்த பாடத்தில் பார்த்தோம்...

    தொடர்ந்து....

    காசியப சம்ஹிதையின்படி சோதிடவியலின் முதல் நூலாசிரியர்களாகப் பதினெட்டு பேர்கள் போற்றப்படுகின்றனர்.

    அவர்கள்.....

    *சூர்ய, அத்ரி, கர்க, லோமஸ, மனு, பிதாமஹ, பராசர, மரீசி, பெளலச, செளனக, வ்யாஸ, கஸ்யப, மனு, ச்யவன, வசிஷ்ட, நார்த, அங்கிர, யவன.*

    இவர்கள் பெயரால் 18 சித்தாந்தங்கள் காணப்படுகின்றன.
    அவை....

    சூரிய சித்தாந்தம், பிதாமஹர் நான்முகன் சித்தாந்தம், வியாசர் சித்தாந்தம், வசிஷ்ட சித்தாந்தம்,
    அத்ரி சித்தாந்தம், பராசர சித்தாந்தம்,
    காசியப சித்தாந்தம், நாரத சித்தாந்தம், கர்க சித்தாந்தம், மரீசி சித்தாந்தம்,
    மனு சித்தாந்தம், ஆங்கிரஸ சித்தாந்தம்(அங்கிர), லோமஸ சித்தாந்தம், பெளலச சித்தாந்தம், ச்யவந சித்தாந்தம், யவன சித்தாந்தம்,
    மனுசித்தாந்தம் மற்றும் செளனக சித்தாந்தம்.ஆகும்

    இதில் சூரிய சித்தாந்தம் தற்பொழுது வழக்கில் அதிகமாகக் காணப்படு கிறது.

    சோதிட சாத்திரத்தின் வரலாற்றை வராகமிகிரருககு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என இருவகையாக பிரிக்கலாம்.

    கி.பி 587−ல் (கிறிஸ்துவுக்குப் பின்) இறந்த , வராகமிகிரர் சோதிடம் மற்றும் வான நூல் சாத்திரத்தில் தலை சிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார்.

    இவருடைய பஞ்சசித்தாந்திகா எனும் நூலில் காணப்படுவன... பைதாமக சித்தாந்தம், ரோமக சித்தாந்தம், பைலிஸ சித்தாந்தம், சூர்ய சித்தாந்தம் மற்றும் வசிஷ்ட சித்தாந்தம் ஆகும்.

    கி.பி. 169−ல் யவனேஸ்வரர் என்பவரால் இயற்றப்பட்ட, யவன ஜாதகம் எனும் நூலே சோதிடவியலில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது.

    ஸ்பூர்ஜித்துவஜன் என்பவரால்
    கி.பி. 268−ல் நான்காயிரம் சுலோகங்கள் கொண்ட யவன ஜாதகம் என்ற பெயருடைய நூல் இயற்றப் பட்டது.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  31. Sun. 21, May. 2024 at 9.15 pm.

    *சோதிடவியல் −3 :*

    *சோதிடவியலின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பார்த்து வருகிறோம்.*

    *தொடர்ந்து.....*

    *வராகமிகிரர் :*

    இவர் கி.பி. 587 − வரை வாழ்ந்திருந்தார் ஊன தெரிய வருகிறது.

    இந்தியச் சோதிடவியலிலும்,வானவியலிலும் இவர் தம் கருத்துக்களே பெரும்பாலும் பின்பற்றப்பட்டன.

    *இவருடைய படைப்புகள் :*

    இவரால் இயற்றப்பட்ட நூல்கள் :

    பஞ்ச சித்தாந்திகா, பிருஹத் சம்ஹிதை,பிருஹத் சாதகம் (பிருஹத் ஹோரா சாத் திரம்), பிருஹத் யாத்திரை, லகு ஜாதகம் மற்றும் பிருஹத் விவாக படலம்.

    சோதிடவியலைப் பொருத்தவரை இவர் கிரேக்கர்களின் நூல்களைத் தழுவியுள்ளார் என்பது சிலர் கருத்து.

    *வராகமிகிரருக்கு"பிற்பட்ட காலம் :*

    வராகமிரருடைய மைந்தராகிய பிருதுசயன் என்பவர் ஹோராஷட் பஞ்சாசிகா எனும் நூலை இயற்றி யுள்ளார்.

    கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பட்டோத்பலர் என்பவர் வராகமிகிரரின் நூலுக்கும், பிருதுயசரின் நூலுக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார்.

    போஜராஜனால், வித்வத்ஜன வல்லபம் எனும் நூல் இயற்றப்பட்டுள்ளது. மிகச் சிறந்த கனித மேதையாகிய பாஸ்கராச்சாரியார் கி.பி. 1172−ல் லீலாவதி, பீஜ கணிதம், கிரஹ கணிதம் மற்றும் கோள் கணிதம் எனும் நாற்பெரும் பிரிவுகளைக் கொண்ட, சித்தாந்த சிரோமணி எனும் நூலை இயற்றியுள்ளார்.

    இவர் கி.பி. 1188−ல் கரணகுதுகலம் எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

    பட்டோத்பலருக்கு முற்பட்டவர் சாராவளியை இயற்றிய கல்யாணவர்மர் ஆவார்.

    கி.பி. 12−ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, கணிதம் மற்றும் வானவியலைக் காட்டிலும், சோதிடத்தில் பல நூல்கள் தோன்றலாயின.

    இக்காலத்தில் தான்... *சாமுத்திரிகா ல௯ஷணம், கைரேகை, பிரஸ்னம் எனும் தனி பிரிவுகள் தோன்றி வளர்ந்தன.*

    பலன்களை நிர்ணயிப்பதில், பலதீபிகை, ஜாதகாதேசம், ஜாதக சந்திரிகை, பிருஹத் பாராசரீயம் முதலிய நூல்கள்
    குறிப்பிடத்தக்கன.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  32. Tue. 30, May, 2023 at 8.23 pm.

    திருமணப் பொருத்தம் நாமாகவே பார்க்கலாம் வாங்க .......!

    பகுதி − 1

    நட்சத்திரங்களும் ராசிகளும் :

    * சோதிட சாஸ்திரப்படி நட்சத்திரங்கள் மொத்தம் − 27.

    * ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
    4 − பாதங்கள் உண்டு.

    * பாதம் என்றால் பாகம் (பகுதி) என்று பொருள்.

    * ஒரு நட்சத்திரத்திற்கு 4 − பாதம் வீதம் 27 − நட்சத்திரத்திற்கு மொத்தம்....
    27 × 4 =108 பாதங்கள் ஆகும்.

    [[ 108 என்ற எண் சாத்திரங்களில் மிக முக்கியமான எண்ணாகக் கருதப்படு கிறது.

    108 − ஸ்தோத்திரம், 108 − தீர்த்தங்கள், 108− திருப்பதிகள்..என இப்படியாக பல உண்டு. ]]

    * இந்த 108 பாதங்களும்
    12 − ராசிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    * ஒரு ராசிக்கு 9 − பாதங்கள் வீதம்
    12 − ராசிகளுக்கு மொத்தம் 12× 9 = 108 பாதங்கள் ஆகும்.

    இப்போ...

    * அசுபதி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்கள் 1−ஆம் பாதம்... இதற்கு ராசி பார்த்தீங்கன்னா ... மேஷம்.

    * கார்த்திகை 2−3−4−பாதம்; ரோகிணி மிருகசீ ரிஷம் 1−2−பாதம். இதற்கான ராசி − ரிஷபம்.

    * மிருகசீ ரிஷம் 3−4− பாதம்; திருவாதிரை, புனர் பூசம் 1−2−3− பாதம். இதற்கான ராசி − மிதுனம்

    * புனர் பூசம் − 4−ஆம் பாதம், பூசம், ஆயில்பம்− இதற்கான ராசி− கடகம்.

    * மகம், பூரம், உத்திரம் 1−ஆம் பாதம். இதற்கான ராசி பார்த்தீங்கன்னா − சிம்மம்.

    * உத்திரம் 2−3−4 −பாதம், ஹஸ்தம், சித்திரை − 1−2−பாதம். ராசி பார்த்தீங்கன்னா − கன்னி.

    * சித்திரை 3−4− பாதம், சுவாதி, விசாகம் 1−2−3− பாதம். ராசி − துலாம்.

    * விசாகம் 4−ஆம் பாதம், அனுஷம், கேட்டை. ராசி − விருச்சிகம்.

    * மூலம், பூராடம், உத்திராடம் 1−ஆம் பாதம். ராசியோ − தனுசு.

    * உத்திராடம் 2−3−4− பாதம், திருவோணம், அவிட்டம் 1−2−3 −பாதம். ராசி − மகரம்.

    * அவிட்டம் 2−3− பாதம், சதயம், பூரட்டாதி 1−2−3− பாதம். ராசி − கும்பம்.

    * பூரட்டாதி 4−ஆம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி. ராசி பார்த்தீங்கன்னா − மீனம்.

    இந்த மேற்கண்ட 27− நட்சத்திரங்களில்
    * கார்த்திகை, மிருகசீ ரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி − ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும்.... *காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.*

    காரணம்.... *இந்த நட்சத்திரங்கள் ஒரு பாதமோ அல்லது இரண்டு பாதமோ ஒரு ராசியிலும், மீதி அடுத்த ராசியிலும் இருக்கும்.*

    *மற்ற 18− நட்சத்திரங்களின் 4− பாதங் களும், ஒரே ராசியிலே முழுவதுமாக இருக்கும்.*

    உதாரணமாக.... *அசுபதி நட்சத்திரத்தில் எல்லோருமே மேஷ ராசியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர்.*

    ஆனால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,"மேஷ ராசியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது ரிஷப ராசியைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பர்.

    மேற்கண்டவற்றை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மேலும், அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  33. Thu. 01, June, 2023 at 10.24 pm.

    *சோதிடம் :*

    இன்று நாம் பார்க்கப்போவது....

    *விவாகப் பொருத்தம் விபரம் :*

    *தினப் பொருத்தம் :*

    பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து , மாப்பிள்ளையின் நட்சத்திரம் வரை எண்ணிக் கொண்ட தொகையை, 9−ஆல் வகுக்க வரும் மீதி... 3, 5, 7 என வந்தால் அசுபம். மற்றவை சுபம்.

    உதாரணமாக.... பெண் நட்சத்திரம் − அசுபதி என வைத்துக் கொள்ளுங்கள்...மாப்பிள்ளை நட்சத்திரம் − கார்த்திகை என எடுத்துக் கொண்டால்... அசுபதியில் இருந்து எண்ணிவர, கார்த்திகை − 3 ஆகிறது. இதை 9−ஆல் வகுக்க முடியாது.

    எனவே, 3− என்ற எண்ணை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி −3 வருவதால், இது அசுபம்....கூடாது.

    மற்றொரு எடுத்துக்காட்டு...

    பெண் நட்சத்திரம் கார்த்திகை ,
    மாப்பிள்ளை நட்சத்திரம் அசுபதி என வையுங்கள்...

    கார்த்திகையிலிருந்து அசுபதி வரை எண்ண − 26 வருகிறது. இதை 9−ஆல் வகுக்க மீதி − 8 வருகிறது. 8 − வரு வதால் சுபம். உத்தமம்.

    பெண், ஆண் நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக வரும்போது, ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி
    ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் உத்தமம்.

    அசுபதி, கார்த்திகை, மிருகசீ ரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மத்திமம்.

    *மற்றவை கூடாது.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete