Wednesday 26 March 2014

ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?



ஜோதிட நூல்கள் சிலவற்றில் புதனும், சந்திரனும் லக்னத்தில் ஒன்றாக இருந்தால் அந்தப் பெண் அனைத்து கலைகளும் அறிந்தவளாக இருப்பாள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா?

பொதுவாகவே லக்னத்தில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருப்பது நல்ல அமைப்புதான். இதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்கள் பல கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என ‘சந்திர காவியம’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மகரம் ஆகிய வீடுகளில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. விருச்சிகத்தில் சந்திரன், புதன் சேர்க்கை பலனளிக்காது.

மீனத்தில் சந்திரன்+புதன் இருந்து சுபகிரகப் பார்வை (குரு) இல்லாவிட்டால் கல்வி தடைபடும். மேலும் சந்திரனும், புதனும் கிரக யுத்தம் (5 பாகைக்குள் இருக்கக் கூடாது) செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒருவேளை சந்திரனும், புதனும் 5 பாகைக்குள் இருந்தால் அந்த ஜாதகர் பலவற்றை தெரிந்து வைத்திருந்தாலும், அதனால் அவருக்கு எந்தப் பலனும் இருக்காது என்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் சந்திரன், புதன் சேர்க்கையை சனி பார்த்தாலும் பலன் கிடைக்காது.

No comments:

Post a Comment