Monday, 28 April 2014

மல மாசம்:விஷ மாசம் என்றால் என்ன?

1.மல மாசம்:

ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அது "மல மாஸம்" எனப்படும்.
ஆனால் சித்திரை,வைகாசி ஆகிய மாசத்தில் இவ்வாரு இரண்டு பௌர்ணமியோ,இரண்டு அமாவாசையோ சம்பவித்தால் இந்த தோஷம் கிடையாது.

மேற்படி மல மாஸத்தில் சீமந்தம்,நாமகரணம், போன்ற அதே மாசத்தில் செய்யக்கூடிய சுப நிகழ்ச்சிகளை தவிர நல்ல நாள் பார்த்து வைக்கக்கூடிய கல்யாணம் போன்ற விசேஷங்களை செய்யக்கூடாது.

E.g விஜய வருடம் (2013) ஐப்பசி மாதம் இரண்டு பௌர்ணமி வருவதால் அந்த மாதம் மல மாதமாகும்.
இதில் கல்யாணம் போன்றவைகளை செய்யக்கூடாது.

ஆனால் இன்றைய அவசர யுகத்தில் மக்கள் இதை கடைபிடிக்க முடியாத பக்ஷத்தில் தக்க ஜோதிடரை அல்லது சிறந்த வைதீகரை,ஆலய அர்ச்சகரை கலந்தாலோசித்து தக்க பரிகாரத்தை செய்து சுபங்களை செய்யலாம்.

2.விஷ மாசம்:
ஒரு தமிழ் மாதத்தில் பௌர்ணமியோ,அமாவாசையோ ஏற்படவில்லை எனில் அது "விஷ மாசம்" எனப்படும்.
ஆனால் சித்திரை,வைகாசி மாதத்திற்கு இந்த தோஷம் இல்லை.

மல மாதம் போலவே வலைகாப்பு,பெயர் சூட்டுதல் போன்ற அந்த மாதமே செய்யவேண்டிய சுப நிகழ்ச்சிகளை தவிர மற்ற சுபங்களை செய்யக்கூடாது.
அவசியம் செய்யவேண்டுமெனில்
தக்க ஜோதிடர்/புரோகிதர்/ஆலய அர்ச்சகரை அனுகி உரிய பரிகாரத்தை செய்து சுபங்களை செய்யலாம்.

No comments:

Post a Comment