Monday, 5 May 2014

மறைந்த புதன் நிறைந்த கலை

மறைந்த புதன் நிறைந்த கலை -
========================================
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வக்கிர அஸ்தமனம் ஆகும் போது அதிபுத்திசாலியாக இருப்பார்கள் இதையே மறைந்த புதன் நிறைந்த கலை என்கிறோம்.இதுவே சில சமயங்களில் இவர்களுக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில், தீவிரவாத தொடர்புகளில் துணை போக வாய்ப்புகள் ஏற்படுத்திவிடும.
புதன் வக்கிர அஸ்தமனம்
==========================
புதன் சூரியனை சுற்றி வரும் போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன் வருகின்றது. பூமியின் வேகமும் புதனின் வேகமும் வித்தியாசம் ஏற்படுகிறது. இதனால் புதன் வக்கிரகதியில் பின்னோக்கி வருவது போல் தோன்றுகிறது.
இவ்வாறு புதன் வக்கிர கதியில் சஞ்சரிப்பது போல் தோன்றும் காலத்தில் கிட்டத்தட்ட சூரியனுக்கும் பூமிக்கும் நேர்கோட்டில் புதன் சஞ்சரிக்கும் நிலை ஏற்படும். இப்படி வரும் போது புதனின் ஒரு பகுதி சூரியனை நோக்கி இருக்கும் மற்றொரு பகுதி பூமியை இருக்கும். சூரியனை நோக்கி உள்ள புதன் அதிக பிரகாசமாக இருக்கும் பூமியை நோக்கி உள்ள பகுதி இருட்டாக இருக்கும். இதன் காரணமாக நமக்கு புதன் புலப்படுவதில்லை. இதை தான் நாம் மறைந்த புதன் நிறைந்த கலைஎன்கிறோம்.
இதை பெரும்பாலும் ஜோதிடர்கள் ஜாதக்க்தில் குறிப்பிடுவதில்லை .
புதனின் – வக்கிரம் , அஸ்தமனம் – நான்கு நிலை
1. சகஜ நிலை
2. மகா அஸ்தமனம்
3. வக்கிரம்
4. வக்கிர அஸ்தமனம்

No comments:

Post a Comment