Tuesday, 24 June 2014

மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால்

மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால் அவர்கள் இருவர்க்கும் அடிக்கடி சண்டை வரும், நிம்மதி இருக்காது. இவ்வாறு அமைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார கோவிலாக காஞ்சிபுரம் அருகில் உள்ள திருமால் ஈஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது கணவன் மனைவி சேர்ந்து சென்று வழிபட இருவருக்கும் ஒற்றுமை சந்தோஷ வாழ்வு அமையும் ஓம் திருமால் ஈஸ்வரரே போற்றி


அருள்மிகு திருமால் ஈஸ்வரர் திருக்கோயில்
சிங்கடிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிக்கு கிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் திருபுரசுந்தரியம்மன் பிரகாரத்தில் பரிவார மூர்த்தங்களும் உள்ளன. இங்குள்ள மூலவருக்கு நாமம் அணிவிக்கப்படுவதால் இறைவனுக்கு திருமால் ஈஸ்வரர் என்று பெயர். 250 வருட முற்பட்ட கோயில்.

No comments:

Post a Comment