Thursday, 12 June 2014

நிருதி மூலை

ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை.    அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் அதற்குரிய திசை தேவன்கள் உண்டு. அவற்றில் – வடகிழக்குக்கு – ஈசான்யன். அதனால் அது ஈசான்ய மூலை. தென்கிழக்குக்கு – அக்னி தேவன். அதனால் அது அக்னி மூலை. தென்மேற்குக்கு – நிருதி தேவன். அதனால் அது நிருதி மூலை. வடமேற்குக்கு – வாயு தேவன். அதனால் அது – வாயு மூலை.  இப்படியாக ஒவ்வோரு திசைக்கும் அதன் ஒவ்வோரு மூலைக்கும் தேவதைகள் – அதிபதிகள் உண்டென வாஸ்துகலை சாஸ்திரம் சொல்கிறது. இவர்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தும் போதுதான், அதனால் உண்டாகும் பிரச்சனைகளை வாஸ்துகுறை – வாஸ்துதோஷம் என்கிறோம். குறிப்பாக கிழக்கும் – மேற்கும் ஆண்களுக்குரிய திசை. வடக்கும் – தெற்கும் பெண்களுக்குரிய திசை. ஒருமனையில் கட்டப்படும் கட்டடமானது, கிழக்கு திசையில் வழி தராமல் ஒட்டிக்கட்டிவிட்டால் அந்த கட்டடத்தில் ஆண்களுக்கு தோஷத்தை உண்டாக்குகிறது. தோஷம் என்றால் எந்த வகையில்? எனில், உத்தியோகமோ அல்லது அது தொழிலோ, எதுவும் சரியாக அமையாது – தடை உண்டாக்கும். அந்த ஆண் மகன் எங்கேயும் மதிக்கப்பட மாட்டான். மிக மிக சாதாரண நிலையிலேயே அவன் வாழ்க்கை நிலை போய் கொண்டிருக்கும். அவனது வாழ்க்கையும் அர்த்தமற்றதாக இருக்கும். அதனால் ஒரு வீடு வாஸ்துபடி அமைய வேண்டும் என்றால் அந்த கட்டடத்தின் கிழக்கு பகுதி பாதிக்கப்படக்கூடாது.  கிழக்கு இந்திரன் திசை.    இந்திர திசை என்றால், இந்திரனுக்குரிய தகுதிகளான இராஜ மரியாதை, புகழ், பொருள் அந்தஸ்தாகும். இந்திர திசை எனும் கிழக்கு திசை கெட்டால், அதற்குரிய நான்கு யோகங்களும் கெடும்.  அடுத்ததாக – நாம் கவனிக்க வேண்டிய பகுதி வடக்கு திசையாகும்.  இதுவும் இந்திர திசைக்கு இணையானதே. வடக்கு குபேரனுக்குரியது. ஆதலால் அது குபேர திசை என்று முன்னரே அறிந்தோம்.  குபேர திசை என்று சொல்லி விட்டாலே நமக்கு இந்த திசைக்குரிய சிறப்பு என்ன? பெருமை என்னவென்று தெளிவாக புரிந்து விடுகிறது. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை“ என்கிறது வள்ளுவம். ஒரு மனிதன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், பணம் இல்லாததால் சோதனைக்கு ஆளாகிறான். வில்லங்கமானவன் ஆனாலும் பணக்காரன் என்றால் முதலில் அவனுக்குதான் எங்கேயும் மதிப்பு கிடைக்கிறது. இந்திய தேசத்தை நம் ஆன்மிகத்தை உலக உச்சிக்கு கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர், அமெரிக்க பயணத்திற்கு பிறகு கூட அடிபடை பொருளாதரம் இல்லாமல் அவதிக்குள்ளானார் என்கிறபோது சாதாரண நாமெல்லாம் எந்த மூலைக்கு?. இராமனை விட பரதன் இராஜயோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகதானே அதுவரையில் நல்லவளாக இருந்த கைகேயி வில்லி ஆனாள். கைகேயின் பொன் – பொருள் – பதவியாசை, நல்லவனான இராமனை காட்டுக்கு அனுப்பியது. இப்படி பணம் ஒருவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனை சுற்றி இருப்பவனையும் கதிகலங்க செய்கிறது. அவ்வளவு புகழுக்குரிய திசைதான் குபேரனின் வடக்கு திசை.  வடக்கு திசையை ஒட்டி கட்டடத்தை கட்டிவிட்டால் நிச்சயமாக அந்த வீடு பொருளாதரத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் தரவே தராது. ஜாதகப்படி உங்களுக்கு நல்ல நேரம் வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டுமே தவிர, அதுவரையில் வாஸ்து பரிகாரம் கூட பலன் அளிக்காது. வாஸ்துகலை சொல்லும் இந்த உண்மையை சமீபத்தில் ஒரு அன்பரின் வீட்டில் பார்த்தேன.  நல்ல வசதியாக வீட்டை கட்டி உள்ளார். ஒரு சில வருடங்கள் சுமாராக இருந்த அவர்களின் பொருளாதர நிலை படிபடியாக குறைந்து, அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த வீட்டை வாஸ்து ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் வாஸ்து தோஷம் என்று சொல்வதற்கு பெரியதாக ஏதுமில்லை. வாஸ்து சாஸ்திரம், எந்தெந்த இடத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ அவையெல்லாம் அந்த வீட்டில் அப்படியே இருந்தது. ஆனாலும் சிறப்பான வாழ்க்கை தரமோ அல்லது ஒரளவாவது நல்ல நிலையோ கூட அந்த வீட்டில் இல்லை. நிம்மதியே இல்லை என்றார்கள். காரணம், பணம் இல்லை.  பணம் மட்டுமே நிம்மதியை தராது என்று இரண்டு பேர் மட்டும்தான் சொல்வார்கள்.  அதில் ஒருவன் – பணக்காரன்.  மற்றோருவன், எவ்வளவு பல்டி அடித்தும் பணத்தையே பார்க்காதவன்.  ஆக பணத்தின் அருமை, நன்றாக சம்பாதித்து படிபடியாக அதை இழந்தவனுக்குதான் தெரியும். அப்படி ஓர் நிலையில் நண்பர் இருந்தார். அந்த வீட்டில் எதில்தான் வாஸ்துகுறை என்று சுற்றி சுற்றி பார்க்கிறேன். சரியாகவே விளங்கவில்லை.  கடைசியில் ஒரு இடம்தான் இடித்தது.  அங்கே….

No comments:

Post a Comment