Friday, 27 June 2014

ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது ஏன்?

ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது ஏன்?

பல சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது. செய்யக் கூடாது என்ற வழக்கமும் உள்ளது. அதற்கும் காரணம் உள்ளது. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் என மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். பல்வேறு ஊர்களில் நடக்கும் விழா, உற்சவங்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கும். ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டி இருப்பதால் மற்ற விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கும். அதனால் இந்த மாதத்தை ஆன்மிகத்துக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

இறைவனை துதிப்பதற்கும் பல்வேறு திவ்ய ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற வீட்டில் நடக்கும் விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் சுபவிசேஷங்கள் தவிர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment