Tuesday, 24 June 2014

விவாஹ காலம் என்பது என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் தசாபுக்திகளின் செயல்பாட்டால் அனைத்து விஷயங்களும் நடக்கின்றன அதில் திருமணமும் ஒன்று.

ஜாதகத்தில் குருபலம் வந்துடுத்து திருமணம் கைகூடி வரும்னு சொல்றாங்க ஆனா அமைய மாட்டேங்குதே என்று அன்பர் கேட்டார். 

பொதுவா விவாஹ காலம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் 7மிடத்திலிருப்பவனுடைய 7மிடத்தை பார்ப்பவனுடைய 7மிடத்துக்குறியவனுடைய தசை புத்தி நடைபெம் காலத்தில் கோச்சாரரீதியாக லக்னாதிபன் 7ம் இடத்தில் வரும்போது குரு திரிகோணம் எனப்படும் 1,5,9ம் இடத்தில் வரும்பொழுது திருமணம் நடக்கும்.

மேலும் 7க்குடையவன் இருக்கும் ராசி அம்ஸம் இவற்றின் அதிபர்கள் சந்திரன் சுக்ரன் இவற்றுள் பலம் வாய்ந்த கிரஹம் எதுவோ அதனுடைய தசையில் 7க்குடையவன் இருக்கும் ராசி அம்ஸம் இவற்றிலோ இவற்றுக்கு திரிகோணத்திலோ குரு கோச்சார ரீதியாக சஞ்சாரிக்கும் போது திருமணம் நடை பெறும்.

ஆக திருமணம் நடைபெற பொருத்தம் மட்டும் பார்க்காமல் இருவருக்கும் திருமண காலம் வந்துவிட்டதா என்பதை அவர்களின் ஜாதகத்தின் நடப்பு தசை புக்தி விவரங்களை பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment