Friday, 4 July 2014

வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?

ஒருவர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
மேஷம்,கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சரராசிகள்.
1.லக்ன ரீதியாக 9,12 ஆம் வீடுகள் சரராசிகளாக இருத்தல்.
2.மேலும் 9,12ஆம் வீட்டின் அதிபதிகள்,சரராசிகளில் இருத்தல்.
3.சந்திரன் சரராசிகளில் இருத்தல்,மற்றும் 9,12ஆம் வீட்டின் அதிபதிகள் உடன் தொடர்பு கொண்டு இருத்தல்.
4.லக்னம் சரராசிகளாக இருத்தல்.லக்னாதிபதி சரராசிகளில் இருத்தல். சரராசிகளில் இருக்கும் ஒரு கிரகம், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ பார்ப்பது.
5.லக்னாதிபதிக்கும், 9,12 வீட்டின் அதிபதிகளுக்கும் நட்புறவு இருப்பது.
6.லக்னாதிபதியும், பாக்யாதிபதியும் பரிவர்த்தனை செய்தல்.
7. 12 ஆம் வீட்டில் இருக்கும் கிரகம், அந்த வீட்டிற்கு நட்பு கிரகமாய் இருத்தல்.அந்த வீடு சரராசியாக இருத்தல்.
8. 12ஆம் வீடும்,12 ஆம் அதிபதியும், உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற கிரகத்தால் பார்வை செய்ய படுவது.
9. 12 ஆம் அதிபதி உச்சம் மற்றும் மூல திரிகோண வீட்டில்,சுப கிரக சேர்க்கை பெற்று இருப்பது.
10. 12 ஆம் அதிபதி, எட்டாம் வீட்டில் மறைவு பெற்று இருப்பது.
11.குரு பகவான் கன்னி,மகரம்,மீனம் ராசிகளில் இருப்பது.
12 குரு பகவான் மகரம்,மீன ராசிகளை பார்வை செய்வது.
13.ஜாதக ரீதியாக,3,7,9,12 ஆகிய வீட்டு அதிபதிகளின் திசை நடப்பது.
14.ஜாதக ரீதியாக,3,7,9,12 ஆகிய வீட்டில் இருக்கும் கிரகங்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பது.

No comments:

Post a Comment