Tuesday, 12 August 2014

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷ பரிகாரங்கள்

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷ பரிகாரங்கள்
நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷ பரிகாரங்கள்

சந்திர தோஷம் நீங்க…….

கடுமையான சந்திர தோஷ பாதிப்பு உள்ளோர், குறிப்பாய் தாய்வகை சாபம் உள்ளவர்கள், கிரக தோஷ பாதிப்பு உள்ளோர், கலைத்துறையில் சிறப்பு பெற விரும்புவோர், வெள்ளி, முத்து, பால், வெண்பட்டு, வெண்குடை, பூநூல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம், வெண் அல்லி, பூ இவற்றை தானம் செய்யலாம். இதை அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலோ, திங்கள் கிழமைகளிலோ, சந்திர ஓரையில் தானம் செய்து சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

புதன் கிரக தோஷம் நீங்க……….

புதன் கிரக தோஷத்தால் தீராத பிரச்சினைக்கு ஆளானோர், கல்வியில், வியாபாரத்தில், உயர விரும்புவோர், ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் மேம்பட விரும்புவோர், தங்க விக்ரகம், மரகதம், சர்க்கரைப் பொங்கல், நெய், பச்சை பயிறு, பட்டு துணி, சந்தனக் கட்டை, யானை தந்தம், வெண் காந்தகம், இவைகளை ஜென்ம நட்சத்திரத்தில், (அ) புதன்கிழமை, புதன் ஓரையில் தானம் செய்ய வேண்டும்.

குரு கிரக தோஷம் நீங்க……..

கடுமையான குரு தோஷப் பாதிப்பு, குரு சாபம் பெற்றோர் குரு துரோகம் செய்தோர், தெய்வ சாபம், பூர்வீக சாபம் பெற்றோர், புத்திர தோஷம் உள்ளவர்கள். தங்க விக்கிரகம், மஞ்சள், சந்தனம், குதிரை, புஷ்பராகக்கல், மஞ்சள் பட்டு, சர்க்கரை, நவரத்ன மாலை, அவரை, முல்லைப்பூ இவைகளை மனப்பூர்வமாக தானம் செய்ய குரு தரும் தோஷங்கள் துன்பங்கள் நீங்கி, சுகம் உண்டாகும். இதை ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் (அ) வியாழக்கிழமைகளில் வியாழ ஓரையில் தானம் செய்ய வேண்டும்.

சுக்கிர தோஷம் நீங்க…….

கலைத்துறையில், வியாபாரத்தில், அன்னிய நாட்டில் புகழ் பெற விரும்புவோர், வெள்ளி விக்கிரகம், வைரம், வெண்பட்டு, வெண் தாமரைப் பூ, வெள்ளக் குதிரை, அவரை, அலங்கரிக்கப்பட்ட பசு, தாம்பூலம் இவைகளை தானம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தானம் செய்ய வேண்டும்.

சனி தோஷம் நீங்க…….

கடுமையான சனி பாதிப்புள்ளோர் இரும்பு விக்கிரகம், நீலக்கம்பளி, கருப்புப்பட்டு, கருப்பு பசு, சாலிக்கிராமம், எள்ளுடன் கூடிய பாத்திரம், அரசு வேம்பு உற்பத்தி செய்து திருமணம் செய்வித்தல், கருங்குவளைப் பூ, நீலம் இவைகளை தானம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தில் மற்றும் சனிக்கிழமையில் தானம் செய்ய வேண்டும். கடுமையான முன்பாவ வினைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.

ராகு தோஷம் நீங்க……...

1. கடுமையான ராகு தோஷம் நீங்க ஈயவிக்கிரகம் கோம்தகம், எருமை, பூமிதானம், குடை, எண்ணையுடன் பாத்திரம், உளுந்து, மந்தாமரை மலர் இவைகளை ஒரு சுப நாளில் தானம் செய்யவும்.

2. ராகு திசை நடப்பவர்களும் ராகுவுக்கு கிரக பரிகாரம் செய்ய நினைப்பவர்களும், ராகு பகவானை வேண்டி கோமேதகக் கல்லை ஆபரணங்களில் சேர்த்து அணிந்து கொண்டு சனிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும்.

3. 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் (அ) செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

No comments:

Post a Comment