Monday, 4 August 2014

சண்டாளா… படவா ராஸ்கல்ஸ்களா…!

சண்டாளா என்று பலர் திட்டுவது உண்டு, அதே போல் படவா ராஸ்கல்ஸ் என்று சிலர் திட்டுவதும், சிலர் கொஞ்சுவதும் உண்டு. சண்டாளா, படவா ராஸ்கல்ஸ் அப்படி என்றால் என்ன…? தெரிந்துகொள்ளுங்கள் பிறகு திட்டுவதா கொஞ்சுவதா என முடிவெடுங்கள்.
பார்ப்பன பெண்ணிற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஆணுக்கும் பிறப்பவர்கள் தான் “சண்டாளர்கள்”. அக்காலத்திலேயே ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பிறந்தவர்கள் (சண்டாளர்கள்).
அவர்களை தீட்டுப்பட்டவர்கள் என்று ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பிச்சை எடுத்து வாழ சொல்லி, விவசாயம் செய்யக்கூடாது, இரவில் நடமாடக் கூடாது என்று இச்சமுகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதையெல்லாம் செய்தது “இந்து மதம்” தான்.
எங்கே இந்து மதத்தை தூக்கிபிடிப்பவர்களே பதில் சொல்லுங்கள், இப்போது பலர் ஜாதிமறுப்பு திருமணம் செய்துகொள்கிறார்களே அவர்களது பிள்ளைகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடலாமா…? கழுதை மேய்க்க விடலாமா…?எல்லாரையும் சண்டாளர்கள் என்று சொல்லலாமா…? சொல்லத்தான் விடுவீங்களா…?
உயர்ஜாதிக்காரன் வீட்டிற்கே சென்று அங்கிருபவர்களின் அந்தரங்க உறுப்பை மழித்து சுத்தம் செய்பவர்கள் பெயர்தான் “படவா”.
தாயின் ஒழுக்கக் கேடால் (ஆண்கள் மட்டும் ஒழுக்கமானவர்களா…?) முறைகேடாகப் பிறப்பவர்களின் பெயர் தான் “ராஸ்கல்”.
இந்த இழிவெல்லாம் நீங்கி நாம் இப்பொழுது வாழ்கிறோம் என்றால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் தான் காரணம். உங்கள் இந்து மதமோ, ப்ரோகிதமோ, மந்திரமோ, கடவுளோ, வெங்காய வெளக்க மாரோ காரணம் இல்லை.
நண்பர்களே நீங்கள் சண்டாளர்களா…? படவாக்களா…? ராஸ்கல்ஸ்களா…? முடிவெடுத்துக் கொள்ளுங்கள்…
(நன்றி தலித் முரசு)

1 comment:

  1. ஆஹா! இதற்கு விளக்கம் தெரியாமலே தான் அநேகர் பலர், சிலர் என பேசியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவள். விளக்கத்தில் தான் எவ்வளவு அசிங்கம். இதற்கு விளக்கம் தெரிந்தவர்கள், இனி பேசவே மாட்டார்கள். எங்கிருந்தய்யா, விளக்கத்தை தேடிப்பிடிக்கிறீர்கள்? அருமை.

    ReplyDelete