Thursday, 7 August 2014

சிதறு தேங்காய்

''சிதறு தேங்காய்''
பொதுவாக பூசைகள் தொடங்கும் போதோ அல்லது நல்ல காரியங்கள் தொடங்கும் போதோ முதலில் வினாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் ஒரு சமயம் வினாயகர் “ மகோற்கடர் ” என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். வினாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அவனை வதம் செய்தார். அதாவது ஒரு காரியத்திற்கு செல்லும் முன் ஏற்பட்ட தடையை தேங்காயை வீசி எறிந்து வினாயகர் நீக்கினார். நாம் எந்த காரியம் செய்யும் முன்னும் தடைகளை நீக்க வேண்டும் என வினாயகரை வழிபடுவது வழக்கம். அவர் காட்டிய வழியில் தேங்காயை அவரிற்கு பலி கொடுத்து எடுத்த காரியம் செவ்வனே முடிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். மற்றும் நமது பாவங்கள் தேங்காயைப் போன்று வினாயகர் அருளால் சிதற வேண்டும் என்றும் சிதறு காய் போடுவதாக ஒரு கருத்தும் உள்ளது

No comments:

Post a Comment