Monday, 8 September 2014

ராகுகாலம்,எமகண்டம்100 சதவிகிதம் யாருக்கு நன்மையாக அமையும்?

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு லக்கனத்தில் ( இலக்கின பாவத்திற்கு உட்பட்ட பாகைக்குள் ) ராகு அமர்ந்து இருக்குமானால், அது எந்த லக்கினமானாலும் அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் 100  சதவிகித நன்மையை மட்டுமே செய்யும் இது நடைமுறை உண்மை , மேலும் ஜாதகருக்கு இந்த நேரங்களில் துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

சுய ஜாதக அமைப்பில் ராகு எந்த பாவகத்தில் இருந்தாலும், அந்த பாவகத்திர்க்கு 100  சதவிகித நன்மையை மட்டும் செய்து கொண்டிருந்தாள், அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் நன்மையையே வாரி வழங்கும் .

இதில் அந்த பாவகம் சர தத்துவத்தில் அமைந்து இருப்பது மிக 
நல்லது , மேலும் ராகுவுடன் சேர்ந்திருக்கு மற்ற கிரகங்கள் வக்கிரக நிலையில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு நிச்சயம் ராகுகாலம் நன்மையையே வாரி வழங்கும் .    

இதற்க்கு எதிர்பதமாக சுய ஜாதகத்தில் ராகு அமர்ந்தால், ஜாதகருக்கு தீமையான பலன்கள் ராகுகாலத்தில் நடப்பதிற்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் ராகுகாலத்தை தவிர்ப்பது நல்லது . மேலும் இந்த தீமையான பலனை ஜாதகரின் நண்பர்கள் மூலமாக 100  சதவிகிதம் நடத்தும்.

சுய ஜாதக அமைப்பில் கேது நில தத்துவ ராசியில் அமர்ந்து அது சர ராசியாக இருந்து 100  சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால்,அந்த ஜாதகருக்கு நிச்சயம் எமகண்டம் தீமையாக அமையும் மேலும் இந்த நேரங்களில் ஜாதகர் பயணம் துவங்குவதை தவிர்ப்பது மிகுந்த நலம் தரும், அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பயணம் செய்வதையும் தவிர்ப்பது நலம் . 

சுய ஜாதக அமைப்பில் லக்கினம் , எட்டாம் பாவகம் , ராகு கேது , சனி ஆகிய கிரகங்கள் வழுத்து நிற்கும் ஜாதகருக்குஎமகண்டம் எனும் நேரம் யோக நேரமாக அமையும் .

ஜாதகர் ஒருவர் இந்த கால நேரத்தை பற்றி கவலை கொள்ளாமல் , தமது கடமையே முக்கியம் என்று ஒரு பணியை செய்து கொண்டு இருப்பாரே ஆயின், நிச்சயம் அவருக்கு இந்த நல்ல நேரம் , கெட்ட நேரம் எதுவும் வேலை செய்யாது, ஏனெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன்  கிரகங்கள் வழுவாக அமைந்து இருக்கும்.

No comments:

Post a Comment