Thursday, 4 September 2014

செவ்வாய், சனி சேர்க்கை

லக்கினத்தில் செவ்வாய்சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறதுகௌரவம்பாதிக்கச் செய்கிறதுதேவை இல்லாமல் குழப்பம்மன உலைச்சல் கொடுக்கிறது.
லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்சண்டையை மூட்டுகிறதுதேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறதுகண்உபாதை உண்டாக்குகிறது.
லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம்இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதரபாவத்தை பாதகம் செய்கிறதுசகோதரர் ஒற்றுமை குறைக்கிறதுஉடல்நலனில்தொண்டை பகுதியை பாதிக்கிறதுபுகழ்கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது.
லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும்.தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும்வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும்பிரயாணசமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.
லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம்படிப்புபாதிக்கச் செய்கிறதுபூர்வீக சொத்து விஷயத்தில் கோர்ட்டு வரை இழுத்துசெல்கிறதுஇதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருகசெய்கிறதுவிரோதங்கள் தொடர செய்கிறதுஉடல்நலனில் ஒருமுறை அறுவைசிகிச்சை செய்து வைக்கிறது.
லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கைதிருமண தடை உண்டாக்கும்அப்படிதிருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறதுகூட்டு தொழிலில் விரோதம்வளரும்மனைவி (கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு.
லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும்.அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்வாழ்க்கையில்தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும்முன்கோபம் தவிர்க்க முடியாமல்அதனால் துன்பமே உண்டாகும்.
லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில்கவனம் தேவைஇல்லை என்றால் ஏமாற வைக்கும்அயல்நாடு சென்றால் அங்குஅவஸ்தை படவைக்கும்தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும்தெய்வநம்பிக்கை குறைய வைக்கும்சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது.
லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில்நிதானம் செய்யும்.  போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும்அதேபோல் உத்தியோகத்தில்மேல்பதவி கிடைப்பது அரிதுமேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும்.நிலை இல்லா தொழிலே அமையும்.
லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினைஉண்டாக்கும்அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம்தொழில்,வேலைகளில் இரண்டிலும்ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்கவைக்கும்ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.
லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்குவம்பு வந்த வண்ணம்இருக்கும்நிம்மதியான தூக்கம் இருக்காதுஎன்னடா வாழ்க்கை என்று சலிக்கவைக்கும்ஜான் ஏறினால் முழம் சறுக்கும்விரயங்கள் விரைந்து வரும்தூரபயணத்தில் வெகு கவனம் தேவை.

பரிகாரம்

இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும்செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்குகட்டுப்படும்சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும்கட்டுப்படும்முருகன் திருத்தலங்களும்பெருமாள் மற்றும் விநாயகர்திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்இந்த வழிபாட்டைஎதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாதுஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள்தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும்,ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்இந்தஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களைவணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும்.விநாயகப் பெருமானையும்ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட,ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள்செவ்வாய்க்குஅதிபதியான முருகப் பெருமானையும்சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனிசிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள்நம்பிக்கையுடன் வழிப்படுங்கள்.துன்பம் செய்ய வேண்டிய அவர்களே நம் அன்புக்கு கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்வழிபடுவோம் – வளம் பெறுவோம்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment