பீட்ரூட் ஜூஸ் குடிங்கள்
காய் கனிகளில் எண்ணில் அடங்கா சத்துக்களை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அவைகளில் பீட்ரூட் தனிசிறப்பு வாய்ந்தது. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுபடுத்தும் கருவியாக செயல்படுவதாக மருத்துவர்கள் அராய்ந்து கூறியுள்ளனர். அவற்றால் என்னென்ன நன்மைகள் தொடர்ந்து படியுங்கள்..
ரத்த நாளங்கள் விரிவடையும்:
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வலிகளை குறைக்கிறது:
அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்தை சேமிக்கிறது:
நைட்ரேட் சத்தை சேமிக்கிறது:
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின்
பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட் :
நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர். இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீர் இளஞ்சிவப்பாகும் :
இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா. அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பரபரப்பான வாழ்க்கை சூழலில் உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவே இதயநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் முதன்மையானதாக இருக்கிறது. இந்த நிலையில் பூண்டு சாப்பிட்டால் பீபி யை குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டு பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் தலைமையிளான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 140 எம் எம் எச்ஜிக்கும் அதிக அளவு பீபி உள்ள 50 பேருக்கு நாள்பட்ட பூண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரை 12 வாரங்களுக்கு தரப்பட்டது.
பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் அதிகபட்சமாக 10 எம்எம்எச்ஜி வரை பீபி குறைந்திருந்தது தெரியவந்தது. பீபி அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது நிருபணமாகி உள்ளது. குறிப்பாக குறைந்தபட்சமாக 5 எம்எம் அளவுக்கு பீபி குறைவதன் முலம் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 சதவீதம் வரை குரையும் என்கிறது ஆய்வு முடிவு எனினும் பச்சை அல்லது வேகவைத்த பூண்டை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
பூண்டு ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய ரசாயன பொருட்களை உற்பத்தி செய்கிறது. இது ரத்த அணுக்கள் ஒய்வெடுக்க உதவுகிறது. எனவே ரத்தஅழுத்தத்தை கட்டுபடுத்த பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உதவும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment