Thursday, 18 September 2014

பூஜை அறை ஆகம ரகசியம்

பூஜை அறை ஆகம ரகசியம்


வீட்டிலேயே பூஜை அறை என்ற அமைப்பு முதலில் ஹிந்து மதத்தில் தான் வந்தது. 

அந்த பூஜை அறையை சுத்தமா வச்சுக்கணும்.  போற இடத்திலே கண்ணுல படுற சாமி படங்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அடுக்க கூடாது.   அப்பறம் பாரமரிக்க முடியாது.  ஒட்டடை பிடிக்கும். 

சரி.. வீட்டிலே எந்த மாதிரியான சாமி படங்களை வச்சுக்கலாம்? 

குடும்ப சகிதமா உள்ள சாமிகளைதான் வீட்டிலே வச்சுக்கணும்.   தனித்த முருகனை வீட்டிலே வைக்கிறது தப்பு.  வள்ளி தெய்வானையோடு வையுங்க. 

நெஞ்சை திறந்து காட்டுற ஆஞ்சநேயரை வீட்டிலே வைக்கவே கூடாது. 

சூலத்தால குத்துற காளியம்மன்,  ஆவேசமாக இருக்கிற துர்க்கை அம்மன்,  மண்டையோட்டை  போட்டு இருக்கிற மயான காளி இப்படி துர்குணமா இருக்கிற எந்த சாமி படத்தையும் வீட்டிலே வைக்க வேண்டாம்.

ஹால்ல மார்டன் ஓவியத்தை மாட்டி வைக்கிற மாதிரி லக்ஷ்மி, குபேரன், வெங்காடாசலபதி  படத்தை வைக்க வேண்டாம்.  இவங்க எல்லாம் செல்வம் தருகிற கடவுள்.  அதனால் பூஜை அறையில் தான் வைக்கணும்.  

அப்படியே வச்சாலும் வாசலை பார்த்து வைக்க கூடாது.  உள்பக்கம் பார்த்தபடிதான் வைக்கணும்.  
வீட்டிலே சாமி படங்கள் அந்து பூச்சி அறிச்சி பழசா போச்சு.  புது படம் பிரேம் போட்டு வாங்கி வந்து மாடாலாம்னு நினைக்கிறேன்.  பழைய படத்தை என்ன செய்றது? தூக்கி போட்டுடலாமா? 
நல்ல கதை போங்க.  நேத்து வரை சாமி.  இன்னைக்கு அது வேஸ்ட் பேப்பரா.  அந்த படத்தை புது படம் வாங்கி பிரேம் போடும் போது,  பின்னால வச்சு பிரேம் பண்ணுங்க.  அதுதான் நல்லது. 
 
எங்க அப்பா எனக்கு தெய்வம் மாதிரி.  அவர் இப்போ இல்லை.  அவர் படத்தை பூஜை அறையில் சாமி  படத்தோட மாட்டி வைக்கலாமா?

உங்க அன்பை பாராட்டுறேன்.  ஆனால் இது ஆகம ரீதியா தப்பு. இறந்தவங்க படத்தை தனியாதான் வைக்கணும்.  பூஜை அறையில் வைக்கவே கூடாது.
 
வீட்டிலே செல்வம் தங்க சில யோசனைகள்.

வெள்ளிகிழமை அன்று  மாலை நேரத்தில் ஒரு பாக்கெட்  உப்பு வாங்கி, உப்பு ஜாடியில் கொட்டுற  பழக்கத்தை கொண்டு வாங்க.  வீட்டுல காசு தங்கும்.

காலையில தூங்கி எழுந்ததும் கொல்லைபுற கதவை திறங்க. தூக்கம் என்பது முதேவியாம்.  இரவு  வீட்டிலே இருக்கிற முதேவியை கொல்லை புற வழியா அனுப்பிட்டு,  தெருவாசலை திறந்து மகாலக்ஷ்மியை அழைக்க வேண்டும்.

மாலையில் கொல்லைபுற வாசலை பூட்டிவிட்டு தெரு வாசலை திறந்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பொதுவா குடும்ப பொண்ணுங்க  வீட்டில் விளக்கேத்தி வச்ச பிறகு வெளியே போக கூடாது.

No comments:

Post a Comment