Sunday, 7 September 2014

பெளர்ணமி அன்று காந்த சக்தி பூமியில் அதிகம்............

திங்கள் கிழமை ,பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும். அது பிரபஞ்ச சக்தியால் கிரகிக்கப்பட்டு, அது உங்களை வந்தடையும் .விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று காந்த சக்தி பூமியில் அதிகம்..அன்று தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான, சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில் இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்களாம்

No comments:

Post a Comment