Monday, 8 September 2014

காரகத்துவம்

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன . நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன . அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும்.

அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன . அந்த 9 கிரகங்கள்.











இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ?

முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன் , சுக்கிரன் ஆ கியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, 

இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ?

தொடர்பு நிறைய இருக்கிறது . சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் 
மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன.

இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு 
தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? சரி ! 

மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்?

ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த
நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது . இந்த நட்சத்திரக்கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகின்றது.





























நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? 

ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல்
இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன . அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாற்றுவிடுகின்றன , சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு.

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீ திதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.

இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங் கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள்.

நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவு கணிதம் Ÿதெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

நாம் தற்போது காலத்தை எப்படிக் கணக்கிடுகின்றோம் ? 

இன்று 05/13/2014, நாம் ஜனவரி மாதம் 13ம் நாள், 2014 ஆண்டு எனக் கூறுகின்றோம். இது நமக்கு 
ஆங்கிலேயர் கற்றுக் கொடுத்த முறை. நமது பண்டைய முறை அப்படி அல்ல. நாம் கணிதம் செய்ய வேண்டியது எல்லாம் நமது பண்டைய முறைபடித்தான். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு.

1. கிருதயுகம். 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம்.

இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் இப்பொது 3 யுகங்கள் முடிந்து கலியுகத்தில் இருக்கின்றோம். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சூரியன் இந்த வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். சூரியன் ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. 

இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக்கூறுகின்றோம். அதாவது சூரிய பகவான் வானமண்டலத்தை சுற்றி முடித்து அடுத்த சுற்று அன்று ஆரம்பம் செய்கின்றார்.வானவெளி மண்டலத்தின் ஆரம்ப இடம் எது ? இது இருந்தால்தானே அங்கிருந்து ஆரம்பம் செய்ய முடியும். அது தெரிந்து கொள்ள நாம் வானமண்டலத்தின் படத்தைப் போடுவோம். வானமண்டலம் நீள வட்ட வடிவமான பாதையாக் இருக்கிறது என மேலே கூறியுள்ளோம். நாம் நீளவட்டம்மாகப் போடாமல் சதுரமாகவே போடுவோம். அதுதான் எளிது. வானமண்டலத்தைச் சதுரமாகப்போட்டு அதை 12 பகுதிகளாக அதுவும் சம பகுதியாக போடுவோம். அது கீழே காட்டியுள்ளபடி இருக்கும்.

Image


நாம் மேலே வானமண்டலத்தின் படத்தைப் போட்டு 12 பகுதியாகப் போட்டு இருக்கிறோம். இந்த வானமண்டலத்தின் ஆரம்ப இடம் ஒன்று என்று இலக்கம்மிட்ட கட்டம்தான். அதன் ஆரம்பப் பகுதியை 2 கோடுகள் போட்டுக் காட்டியுள்ளோம். இந்த இடத்திலிருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது . இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய சுற்றும் . இந்தம்காலம் தான் ஒராண்டாகும். இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். இந்த ஆண்டின் பெயர் "ஜய" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 
6. ஆங்கீர ஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 
13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷ¤ 16. சித்ரப ¡னு 17.சுபாணு 
18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 
23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 
29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 
34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 
39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீல க 43. சௌமிய 
44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 
48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 
53. சித்தாத்திரி 54. ரௌத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 
57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய

பஞ்சாங்கம் என்றால் என்ன ?

பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது. 

அவையாவன : 1.திதி 2.வாரம் 3.நட்சத்திரம் 4.யோகம் 5.கரணம். இந்த ஐந்தையும் நாம் பஞ்சாங்கதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் திதி, வாரம், யோகம், கரணம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நாம் எல்லா கிரகங்களும் வான மண்டலத்தைச் சுற்றி வருகின்றன என்று கூறி இருந்தோம். வான மண்டலத்தில் 27 நட்சத்திரங்களும் பரவி இருக்கின்றன. அவைகளின் மேல் தான் 9 கிரகங்களும் வலம் வருகின்றன. சென்ற பாடத்தில் வான மண்டலத்தை 12 பகுதியாகப் போட்டு காட்டி இருந்தோம். அந்தப் 12 பகுதியையும் நாம் ராசி என்றோ அல்லது வீடு என்றோ இனிக் கூறுவோம்.

ராசியில் 1ம் எண் போடப்பட்ட வீடு அல்லது ராசியின் பெயர் மேஷம்.














Image


இப்போது 12 ராசிகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 12 ராசியிலும் நாம் 27 நட்சத்திரத்தையும் அடைக்கப்போகிறோம்.

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர். ஆக 4 பாதங்கள் கொண்டது ஒரு நட்சத்திரம். இப்போது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம். முதல் ராசி அல்லது வீடான மேக்ஷத்திற்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள்,கார்த்திகை 1ம் பாதம். ஆக மொத்தம் 9 பாதங்கள். அதைப் போல் ஒவ்வொரு ராசிக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்கி இருக்கின்றன எனப் பார்ப்போம். 

ராசியின் பெயர்நட்சத்திரங்கள்
மேக்ஷம்அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள்,கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம்கார்த்திகை 2,3,4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்.
மிதுனம்மிருகசீரிஷம் 3,4 பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்கள்.
கடகம்புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம்மகம்,பூரம்,உத்திரம் 1ம் பாதம்
கன்னிஉத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்
துலாம்சித்திரை 2,3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3, பாதங்கள்
விருச்சிகம்விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசுமூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்
மகரம்உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்
கும்பம்அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1,2,3 பாதங்கள்
மீனம்பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம். எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த ராசியில் வருகின்றன என்பதை நீங்கள் மனப்பாடமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியம். அடிப்படையும் கூட.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது. இப்போது வைகாசி மாதம். சூரியன் ரிஷபத்தில் வலம் வருவார். ரிஷபத்தில் இருக்கும் போது கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி அல்லது மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் மேல் வலம் வருவார். நாம் சூரியன் ஒரு ராசியில் 30 நாட்களில் கடப்பார் என்று கூறி இருந்தோம். அப்படியானால் ஒரு நட்சத்திர
பாதத்தை கடக்க 3 1/3 நாட்கள் ஆகும். இதை இன்னும் விளக்கமாக எழுதுகிறோம். 

வைகாசி 1-ம் தேதி கார்த்திகை 2-ம் பாதத்தில் (ரிஷபத்தில் ) சூரியன் இருக்கிறார். 

2-ம் பாதத்தைக் கடக்க அவருக்கு 3 1/3 நாட்கள் ஆகும். 

அதற்குப்பின் கார்த்திகை 3-ம் பாதத்தைக் கடக்க இன்னும் ஒரு 3 1/3 நாட்கள் ஆகும். ஆக கார்த்திகை 3 பாதங்களையும் கடக்க அவருக்குத் தேவையானது 10 நாட்கள் ஆகும்.

11-ம் நாள் அவர் ரோகிணி முதல் பாதத்தில் சஞ்சாரம் செய்வார். 

இவ்வாறாக அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தின் மேலும் சஞ்சாரம் செய்து 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறார். எந்தெந்தத் தேதியில் எந்தெந்த நட்சத்திரத்தில் எந்தெந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும். இப்போது எல்லா கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், ஒரு நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும் எனத் தெரிந்து கொண்டீர்கள்.

இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் ஜோதிட உலகம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். உதாரணமாக வைகாசி மாதம் 1-ம் தேதியை எடுத்துக் கொள்வோம்.அன்றைக்கு அவிட்டம் நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அன்றைக்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் அவிட்டம் ஆகும். என் நட்சத்திரம் மூலம் என்று எழுதி இருந்தேன். அதாவது நான் ஜெனித்த அன்று மூல நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தார் ஆகவே என் ஜென்ம நட்சத்திரம் மூலம் ஆகும். மூலம் எந்த ராசியில் இருக்கிற்து ?. தனுர் ராசியில் இருக்கிறது. ஆகவே என் ஜென்ம ராசி தனுர் ராசி ஆகும்.

இதே போன்று ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் செல்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் எந்த ராசியில் இருக்கிறதோ அதுவே ஜென்ம ராசி ஆகும். இப்போது ஒரு சிக்கல் வருகிறது. மே 1-ம் தேதி அவிட்டம் நட்சத்திரம் என்று கூறி இருந்தோம்.
அவிட்ட நட்சத்திரம் மகரத்திலும், கும்பத்திலும் இருக்கிறது. அப்படியானால் என்ன ராசி ? மகரமா அல்லது கும்பமா ? பதில் மிக எளிது.

அவிட்டம் முதல் பாதம், அல்லது இரண்டாம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் மகர ராசி ஆகும். 3-ம் பாதம் அல்லது 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் கும்ப ராசி ஆகும். சந்திரன் எந்தப் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்கும் முறையை நாம் பின்னால் எழுதுகிறோம். இப்போதைக்கு இவ்வளவு தெரிந்து கொள்ளுங்கள். போதும். ஒவ்வொரு நாளும் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் சஞ்சாரம் எவ்வளவு செய்வார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில்
கொடுக்கப்பட்டு இருக்கும். அதைப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் மட்டும் அல்ல; எல்லாக்கிரஹங்களும் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். பஞ்சாங்கத்தை எப்படிப் பார்ப்பது என்று விளக்கும்போது உங்களுக்கு அதைச் சொல்லித்தருகிறோம்.

சரி! எந்தப் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது? கடையிலே சென்றால் பலவிதமான பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. எதை வாங்குவது ? இது முக்கியமான கேள்வி. இதற்கு மிக விளக்கமாக பதில் எழுத வேண்டும்.

திருகணிதமா அல்லது வாக்கியமா ?

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய காலத்திற்குச் செல்வோம். அக்காலம் தான் "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்க்ப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஒட்டி பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன. கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கியப் பஞ்சங்கம்" எனப்பட்டது.

வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டனர் அதற்குப் பிறகு வந்த பெரியவர்கள். அவைகளை திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் "திருகணித முறை" எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் "திருகணிதம்" பஞ்சாங்கம் எனப் படும். அப்படியானால் நாம் எந்தப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்த வேண்டும்? இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கின்றதே!

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "டெலஸ் கோப்புகள்" வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆக திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளனர் இக்காலத்தில். ஆகவே திருகணித முறை தான் சிறந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று பழமையைக் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவோம்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருதமும்" திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது. மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகையும்" இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. (உத்திர காலம்ருதம், பலதீபிகை எல்லாம் ஜோதிட நூல்கள்.)

சரி! திரு கணிதப் பஞ்சாங்கங்கள் எவை?

1.ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியாள் மடத்துப் பஞ்சாங்கம்.

2.ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியாள் பாரத் கணிதப் பஞ்சாங்கம்

3.ஆனந்த போதினி திருகணிதப் பஞ்சாங்கம்


இவைகள் எல்லாம் திருகணிதப் பஞ்சாங்கம். இவைகள் மூலம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் சரியாக வரும். தவறு வர வாய்ப்பில்லை. ஆகவே நீங்களும் திருகணிதம் தான் உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோம்.

இப்போது கடிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன மணி, எத்தனை நிமிஷங்கள் எத்தனை வினாடிகள் என்று காட்டுகின்றன. இது நமக்கு வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்தமுறை. ஆனால் நமது பண்டைய முறை அப்படி அல்ல. அவர்கள் கணக்கு எல்லாம் நாழிகை, வினாழிகையில் வரும். அந்தக் கணக்கை நாம் கீழே கொடுத்துள்ளோம். 

60 வினாழிகை1 நாழிகை
60 நாழிகை1 நாள்
2 1/2 நாழிகை1 மணி
2 1/2 வினாழிகை1 நிமிஷம்


இந்தக் கணக்கு மனப்பாடமாகத் தெரிந்து இருக்க வேண்டும். இது இல்லாமல் நாம் எந்தக் கணக்கும் போட முடியாது.

அடுத்தது நாள் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01க்கு மறுநாள் பிறந்து விடுகிறது. இது நமக்கு ஆங்கிலேயர் சொல்லிக்கொடுத்த முறை. இரவு 12.01மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள். நமது பண்டைய முறை அப்படி அல்ல. இன்று சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் முடிய ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

சூரிய உதயம் எத்தனை மணிக்கு ஆகிறது என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? யாரைக் கேட்டால் தெரியும்? யாரையும் கேட்க்க வேண்டாம். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். வரும் இதழ்களில் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது? என்று சொல்லிக்கொடுக்கிறோம். நாம் திருகணிதப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகின்றோம். இருப்பினும் நாம் வாசகர்களின் உபயோகத்திற்காக வாக்கியப் பஞ்சாங்கத்தையும் உபயோகிக்கிறோம்.
திதி என்றால் என்ன ?
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் தான். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். தினமும் சுமார் 12டிகிரி வரைநகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அதாவது சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார். சூரியன் இருந்த வீட்டையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற வீடு 7-வது வீடாக இருக்கும்.

அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள். அதேபோல் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசைக்கு 15 நாட்கள். மொத்தம் 30-நாட்கள். சந்திரன் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் சேர்ந்து கொள்வார். அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் என்று சொன்னோம் அல்லவா. அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அல்லவா ? அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை. 

4-ம் நாள் சதுர்த்தி. 
5-ம் நாள் பஞ்சமி. 
6-ம் நாள் சஷ்டி.
7-ம் நாள் சப்தமி. 
8-ம் நாள் அஷ்டமி. 
9-ம் நாள் நவமி. 
10-ம் நாள்தசமி.
11-ம் நாள் ஏகாதசி. 
12-ம் நாள் துவாதசி. 
13-ம் நாள்திரயோதசி. 
14-ம்நாள் சதுர்தசி. 
15-ம் நாள் பௌர்ணமி. 

சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்க்ஷம்
என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித்திதிகளில் நல்ல காரியங்கள் எதுவும் செய்வது இல்லை. நாம் இப்போது ஒரு சிறிய கதை கூறப் போகிறோம்.

அஷ்டமித்திதியும், நவமித்திதியும் நம் நாட்களில் எல்லோரும் நல்ல காரியங்கள் செய்வதில்லையே என்று வருத்தப் பட்டனவாம். அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று வருத்தப்பட்டன. உடனே பகவான் அவைகளிடம் "நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்" எனக் கூறினார். ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் அவர் முறையே நவமியிலும், அஷ்டமியிலும் அவதாரம் செய்தார். நாமும் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இப்போது திதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். அடுத்தது வாரம்.

வாரம்
வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நக்ஷ்க்ஷத்திரம்
நக்ஷ்க்ஷத்திரட்த்தைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். 27நக்ஷ்க்ஷத்திரங்களும் இப்போது மனப்பாடமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம். இதை மனப்பாடம் செய்வது மிக முக்கியம். இது மனப்பாடமாகத் தெரியாமல் ஜோதிடம் யாரும் பார்க்க முடியாது. ஆக 27-நக்ஷ்க்ஷத்திரத்தையும் அவைகள் இருக்கும் ராசிகளையும் எப்போதும் மனதில் வைத்திருத்தல் அவசியம். அடுத்தது கரணம் ஆகும்.

கரணம்
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,

1.பவ 2.பாலவ 3.கௌலவ 4.தைதூலை 5.கரசை 6.வணிசை 7.பத்தரை 8.சகுனி 9.சதுஷ்பாதம் 10.நாகவம் 11.கிம்ஸ்துக்னம். இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் நாம் சமயம் வரும் போது எழுதுகிறோம். அடுத்தது யோகம்.

யோகம்

இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம் 2.ப்ரீதி 3.ஆயுஷ்மான் 4.சௌபாக்யம் 5.சோபனம் 6.அதிகண்டம்
7.சுகர்மம் 8.திருதி 9.சூலம் 10.கண்டம் 11.விருதி 12.துருவம் 13.வியாகாதம்
14.ஹர்ஷணம் 15.வஜ்ரம் 16.சித்தி 17.வியதிபாதம் 18.வரீயான் 19.பரீகம்
20.சிவம் 21.சித்தம் 22.சாத்தீயம் 23.சுபம் 24.சுப்ரம் 25.பிராம்யம்
26.ஐந்திரம் 27.வைதிருதி.

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது நக்ஷ்க்ஷத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம் கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நக்ஷ்க்ஷத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்க்ஷத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம்,புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்க்ஷத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மீதியுள்ள நக்ஷ்க்ஷத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நக்ஷ்க்ஷத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும். பஞ்ச அங்கங்களான திதி,வாரம்,நக்ஷ்க்ஷத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனிமேல் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது என்று பார்ப்போம்.

நாம் முதலில் திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் மடத்துப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். பிறகு வாக்கியப் பஞ்சாங்கத்தையும் பார்ப்போம். முதலில் மடத்துப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம்.

இந்த ஆண்டு ஆடி1-ம் தேதிக்கு (16-07-2002) பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். முதல் கட்டத்தில் அமிர்தாதி யோகம் எனப் போட்டு அதில் "சி" எனப் போட்டு இருக்கிறாகள். "சி"- ஏன்றால் சித்தயோகம் எனப் பொருள். அடுத்த கட்டத்தில் நேத்ரம்-1, ஜீவன் -1/2 எனப் போட்டு இருக்கிறார்கள். அவைகளைத் தற்போது விட்டு விடுங்கள். இங்கிலீஷ் என்ற கட்டத்தின் கீழ் '16' எனப் போட்டு இருக்கிறார்கள். தமிழ் என்ற கட்டத்தின் கீழ் போட்டிருப்பது 1-ம் தேதி. அதாவது அன்றைக்குத் தமிழ்த் தேதி 1-ம் தேதி. அடுத்து திதி என்ற தலைப்பின் கீழ் "தச-17.23" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது தசமித்திதி சூரிய உதயத்தில் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை இருக்கிறது எனப் பொருள்.

அன்றைக்கு எத்தனை மணிக்கு சூரிய உதயம்? பஞ்சாங்கத்தின் அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அதாவது பக்கம்-17. அன்றைய தேதிக்கு நேராக "சூரிய உதயம் காலை" என்ற கட்டத்திற்கு நேராக 5.56 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்றைய சூரிய உதயம் காலை 5 மணி 56 நிமிஷங்கள். இந்த 5.56ல் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை தசமித்திதி இருக்கிறது. பக்கத்தில் ஆங்கில மணியையும் 12-54 எனக் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது பகல் 12 மணி 54 நிமிஷம் முடிய
தசமி திதி இருக்கிறது. 12 மணி 54 நிமிஷத்திற்குப் பிறகு என்னதிதி ?ஏகாதசித் திதி.

அடுத்த கட்டதில் "நக்ஷ" எனக் குறிப்பிட்டு "பர-02.30" எனக்குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது பரணி நக்ஷ்க்ஷத்திரம் சூரிய உதயத்திலிருந்து 2 நாழிகை 30 விநாழிகை வரை இருக்கிறது எனப்பொருள். அடுத்த கட்டத்தில் 6 மணி 56 நிமிஷங்கள்வரை இருப்பதாகப் போட்டு இருக்கிறார்கள் மணிக்கணக்கில். சரி! 7.00 மணிக்கு என்ன நக்ஷ்க்ஷத்திரம் ? சொல்லுங்கள் பார்ப்போம். அடுத்த நக்ஷ்க்ஷத்திரம் தான். அதாவது கார்த்திகை.

திரும்பப் பஞ்சாங்கத்திற்கு வாருங்கள். பக்கம் 12-ஐப் பாருங்கள். சூல-17-44 எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது 17 நாழிகை 44 வினாழிகை எனப் போட்டு இருக்கிறார்கள். அது முடிய சூலம் யோகம் ஆகும்.

இப்போது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களான திதி,வார, நக்ஷ்க்ஷத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். கடக ரவி 19-59(IST) 1-56 P.M. எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது பகல் 1-மணி 56-க்கு சூரியன் கடக ராசிக்குப் பிரவேசம் செய்கிறார் எனப் பொருள். இது வரை திருகணிதப் பஞ்சாங்கத்தைப் பார்த்தோம். இனி வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம்.

இதில் ஆடி மாதம் பிறப்பதே செவ்வாய்க்கிழமை ஜூலை 17-ம் தேதி தான். திதி ஏகாதசி திதி ஆகும். இது சூரிய உதயத்திலிருந்து 6-நாழிகை 44-விநாழிகை வரை இருக்கிறது. அதற்குப்பின் வரும் திதி துவாதசி திதியாகும். நக்ஷ்க்ஷத்திரம் ரோகிணி. அது 54 நாழிகை 42 வினாழிகை வரை இருக்கும். யோகம் கண்டம் 8.00 நாழிகை வரை இருக்கும். சூரியன் திங்கள் இரவு 34 வினாழிகைக்குத்தான்
கடகத்தில் பிரவேசம் செய்கிறார். ஆனால் திருகணிதப்படி பகல் 1-மணி 56 நிமிஷத்திற்கே பிரவேசம் செய்து விட்டார். இப்போது பஞ்சாங்கம் பார்க்கத்தெரிந்து கொண்டு விட்டீர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் அதிபதி உண்டு. அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைக் கீழே பட்டியல் போட்டுக்காட்டி இருக்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.


ராசிகள்அதிபதி
மேஷம்செவ்வாய்.
ரிஷபம்சுக்கிரன்.
மிதுனம்புதன்
கடகம்சந்திரன்
சிம்மம்சூரியன்
கன்னிபுதன்
துலாம்சுக்கிரன்
விருச்சிகம்செவ்வாய்
தனுசுகுரு
மகரம்சனி
கும்பம்சனி
மீனம்குரு


Image


இதை நாம் கீழே நாம் கட்டம் போட்டுக் காட்டியுள்ளோம். பார்த்துக் கொள்ளவும்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்களேயானால் சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகஹங்களுக்கு இரண்டு, இரண்டு வீடுகள் சொந்தமாக இருக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் ஒவ்வொரு வீடுகள் இருக்கும். இதற்கு நாம் ஒரு கதை சொல்லப் போகிறோம்.

கும்பத்திலிருந்து கடகம் வரையிலான 6-வீடுகள் சந்திரனுக்குச் சொந்தமாக இருந்ததாம். அதேபோன்று சிம்மத்தில் இருந்து மகரம் வரை சூரியனுக்குச் சொந்தமாக இருந்ததாம். மற்ற கிரஹங்களுக்கு வீடுகளே இல்லையாம். புதன் சந்திரனிடம் போய் "நீதான் 6 வீடுகள் வைத்து இருக்கிறாயே. எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டாராம். சந்திரனும் போனால் போகிறது என்று கடகத்திற்குப் பக்கத்தில் உள்ள வீடான மிதுனத்தைக் கொடுத்தாராம். புதன் சும்மா இருக்கவில்லை. உடனே சூரியனிடம் சென்று "எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டார். சூரியனும் "சரி சிம்மத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீடான கன்னியை எடுத்துக் கொள்" என்று கூறினார். புதனுக்கு இரண்டு வீடுகள் இவ்விதமாகக் கிடைத்தன. சுக்கிரன் இதைப் பார்த்துச் சும்மா இருப்பாரா? தானும் சந்திரனிடம் சென்றார். தனக்கு ஒரு வீடு தருமாறு கேட்டார். சந்திரனும் போனால் போகிறது என்று மிதுனத்திற்குப் பக்கத்தில் உள்ள ரிஷபத்தைக் கொடுத்தார். சுக்கிரன் ரிஷபம் வீட்டை வாங்கிக்கொண்டு நேராக சூரியனிடம் சென்றார். புதனுக்குக் கொடுத்தது போல் தனக்கும் ஒரு வீடு தருமாறு கேட்டார். சூரியனும் போனால் போகிறது என கன்னிக்குப் பக்கத்தில் இருக்கும் துலாம் வீட்டைக் கொடுத்தார். இப்போது சுக்கிரனுக்கு ரிஷபமும், துலாமும் இரண்டு வீடுகள் சொந்தமாயின. இதையெல்லாம் செவ்வாய் பார்த்துக் கொண்டே இருந்தார். தானும் சந்திரனிடம் இருந்து ரிஷபத்திற்குப் பக்கத்து வீடான மேஷத்தை சந்திரனிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதே போன்று
சூரியனிடமிருந்து துலாத்திற்குப் பக்கத்து வீடான விருச்சிகத்தைப் பெற்றுக் கொண்டார்.

குரு மட்டும் என்ன இளிச்சவாயறா? தனக்கும் ஒரு வீடு தருமாறு சந்திரனிடம் கேட்டார். சந்திரன் மேஷத்திற்குப் பக்கத்து வீடான மீனத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். சூரியனிடமிருந்து இவ்வாறே விருச்சிகத்திற்குப் பக்கத்து வேடான தனுசைப் பெற்றுக் கொண்டார். சனி என்ன எல்லாருக்கும் இளைத்தவறா என்ன? தானும் சந்திரனிடமிருந்து மீனத்திற்குப் பக்கத்து வீடான கும்பத்தைப் இரந்து பெற்றுக்கொண்டார். சூரியிடமிருந்து தனுசுவிற்குப் பக்கத்து வீடான மகரத்தையும் மற்றவர்களைப் போல் பெற்றுக் கொண்டார். இப்போது சந்திரனிடமும், சூரியனிடமும் முறையே கடகத்தையும், சிம்மத்தையும் தவிர வேறு வீடுகளே இல்லையாம்.

ராகு, கேதுக்கள் எல்லா வீடுகளும் போன பின்பு கடைசியாகச் சந்திரனிடமும், சூரிய நிடமும் போய் வீடுகள் கேட்டன. அதற்கு சூரியனும், சந்திரனும் "எங்களுக்கே ஆளுக்கு ஒரு வீடுதான் இருக்கிறது. சிம்மத்தையும், கடகத்தையும் தவிர எங்களுக்கே வேறு வீடுகள் கிடையாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு வீடு கொடுக்க இயலாமல் இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் எந்த வீட்டில் இருக்கிறீர்களோ அதுவே உங்களுக்குச் சொந்த வீடாகும்" என வாக்களித்தனர். அதன்படி ராகு,கேதுக்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி கொடுக்கக் கூடிய பலன்களை
இவர்கள் கொடுப்பார்கள்.

ரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும். உதாரணத்திற்குக் கீழே உள்ள ராசிக் கட்டத்தைப் பாருங்கள்.

Image


இதில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். கடகம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு பலம் அதிகரிக்கிறது. ஆகவே அவர் தன் தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்வார். சந்திர தசையோ, அல்லது சந்திர புக்தியோ அவருக்கு நல்லதையே செய்யும். அதே போன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் அவர் நல்லதையே செய்வார். கிரகங்களின், உச்ச, மூலத்திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச,மூலத்திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்- ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும். மேற் கண்ட உதாரண ஜாதகத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் நல்ல மனநிலையுடன் இருப்பார் எனக்கொள்ளலாம். தாயாரும் நல்ல விதமாக இருப்பார் எனக்கொள்ளலாம். சந்திரனுடன் ராகு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அந்த ஜாதகர்மிகுந்த சுயநல வாதியாக இருப்பார். சனி இருந்தால் அவர் எதையும் மறைக்கக் கூடியவறாக இருப்பார். வெளிப் படையாக எதையும் கூற மாட்டார். (HE WILL BE A SECRETIVE PERSON). கீழே உச்ச, நீச்ச, மூலத்திரிகோண வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
.

கிரகங்கள்உச்ச வீடுமூலத்திரிகோண வீடுநீச்ச வீடு. 
சூரியன்மேஷம்சிம்மம்துலாம்
சந்திரன்ரிஷபம்ரிஷபம்விருச்சிகம்
செவ்வாய்மகரம்மேஷம்கடகம்
புதன்கன்னிகன்னிமீனம்
குருகடகம்தனுசுமகரம்
சுக்கிரன்மீனம்துலாம்கன்னி
சனிதுலாம்கும்பம்மேஷம்


ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.

சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோ கிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1,2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.

அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் நினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்தி மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண் டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி விஞ்ஞானத்திற்கு வருவோம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பௌர்ணமியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்கிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்கிறார். அதைத்தான் நாம் பௌர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும். அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் ஆச்சாரியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேதிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.

ரிஷபத்தில்சனி, சுக்கிரன்
மிதுனத்தில்ராகு,குரு,புதன்
கடகத்தில்சூரியன்
விருச்சிகத்தில்செவ்வாய்
தனுசில்கேது


ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன்
13 - கடகம் புதன்
28 - சிம்மம் புதன்

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்சிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

முதலில் ஜாதகக் கட்டத்தைப் போடுங்கள். 12-கட்டங்களையும் போட்டு விட்டீர்கள் அல்லவா? சுக்கிரனை மிதுனத்தில் போடுங்கள். புதனை சிம்மத்தில் போடுங்கள். மற்ற கிரகங்களை பஞ்சாங்கத்தில் கொடுத்துள்ள படி போடுங்கள்.ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Image


எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? ஒன்பது கிரகங்கள் இருக்கின்றனவா? இல்லையே! எட்டு கிரகங்கள் தானே இருக்கின்றன. சந்திரனைக் காணோம். நாம் சந்திரனைப் போடவில்லை. அதை எப்படிப் போடுவது என்று நாம் பிறகு சொல்லிக் கொடுக்கிறோம்.

அதற்குமுன் வாக்கியரீதியாக ஆடி -30-க்கு ஜாதகம் கணிக்கலாம். வாருங்கள். பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஆடி மாதத்திற்கு ஜாதகக் கட்டம் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள். 5-ம்தேதி புதன் கடகத்திற்கு வந்துவிட்டு 22-ம் தேதி சிம்மத்திற்குப் பிரவேசம் செய்கிறார். 11-ம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு வருகிறார். செவ்வாய் 22-ம் தேதியே தனுசிற்குப் பெயர்ந்து
விட்டார். மேற்கண்ட பெயர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு நாம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Image


இப்போது திருகணிதரீதியாகவும், வாக்கியரீதியாகவும் ஜாதகம் கணிக்கக் கற்றுக்கொண்டீர்கள். ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறதா ? இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தில் செவ்வாய் தனுசில் இருக்கிறார், திருகணிதத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். இதுதான் இப்போதைய வித்தியாசம். மற்ற வித்தியாசங்கள் முழுவதும் போட்ட பின்புதான் தெரியும்.

இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் என்பது ஆந்திராவிலுள்ள கோல்கொண்டாவின் ரேகாம்சம் 82 1/2 டிகிரிக்கு உள்ள நேரமாகும். இந்த நேரத்தையே இந்தியா முழுவதற்கும் நாம் வைத்துள்ளோம். ஆனால் Longtitude, Latitude க்குத் தகுந்தவாறு நேரம் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. ஊருக்கு ஊர் மாறுபடும் இந்த நேரத்திற்கு சுதேச மணி அல்லது local meantime என்று பெயர். சரி! இந்த சுதேச மணியைக் கண்டு பிடிப்பது எவ்வாறு ? அதற்கு முதலில் ஒவ்வொரு ஊரின் longtitude தெரிய வேண்டும். இதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒவ்வொரு ஊரின் Longtitude, Latitude ஆகியவற்றை அளிக்கின்றன. அந்த விபரம் எல்லாம் நாம் பின்னால் எழுதுகிறோம்.

இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியை நாம் கண்டுபிடிப்போம். தஞ்சாவூரின் ரேகாம்சம்கள் என்ன ?

Longtitude 79 Degrees 10 Minutes

Latitude 10 Degrees 47 Minutes.

இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியைக் கண்டு பிடிப்போம்.

இந்தியாவின் Longtitude 82. 30

தஞ்சாவூரின் Longtitude 79. 10

வித்தியாசம் 3. 20

இந்த வித்தியாசமான 3.20 ஐ 4-ல் பெருக்கவும். 13.20

நாம் ஏன் 4-ஆல் பெருக்கினோம் என்றால் பூமி ஒரு DEGREE நகர்வதற்கு 4 நிமிடங்கள் ஆகின்றன. அப்படியானால் 3 டிகிரி 20 நிமிஷம் நகர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனப் பார்த்தோம். விடை 13 நிமிஷம் 20 வினாடி ஆகும். இந்த 13டிகிரி 20நிமிஷத்தை இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்-ல் யிருந்து கழிக்க வேண்டும். ஏன்? அதாவது இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்திற்குக் குறைவாக இருக்கும் ஊர்களுக்கெல்லாம் நாம் கழிக்க வேண்டும். கூடுதலாக இருக்கும்ஊர்களுக்கெல்லாம் நாம் கூட்ட வேண்டும். அதாவது ஒரு ஊரின் ரேகாம்சம் இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அந்தஊர் இந்தியன் ஸ்டாண்டர்டு ரேகாம்சத்திற்கு மேற்கே இருக்கிறது எனப் பொருள். கூடுதலாக இருந்தால் அந்த ஊர் கிழக்கே இருக்கிறது எனப் பொருள்.

தஞ்சாவூரின் ரேகாம்சம் குறைவாக இருப்பதால்நாம் கழிக்க வேண்டும். நமது கணக்கு இத்தோடு முடியவில்லை. ரேகாம்சத் திருத்தம் என்று ஒன்று உண்டு. அதையும் கணக்கில்எடுத்துக்கொள்ள வேண்டும். ரேகாம்ச திருத்தம் எப்படிச் செய்யவேண்டும்?

தஞ்சாவூரின் ரேகாம்சத்தை 2-ல் பெருக்குங்கள்.

வந்த விடையை 3-ல் வகுங்கள். = 79.10 x 2 =158.20/3 = 52-46

இந்த 52-ஐ மட்டும் வினாடியாக எடுத்துக் கொண்டு 13 நிமிஷம் 20 வினாடியுடன் கூட்ட நமக்குக் கிடைப்பது 14 நமிஷம் 12 வினாடிகள். இதுதான் இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும் சுதேச நேரத்திற்கும் உள்ள வித்தியாசம். உதாரணமாக இந்தியன் ஸ்டாண்டர்ட் மணி இரவு 9.00 எனக் கொள்வோம். தஞ்சாவூரின் சுதேச மணி 8மணி 45 நிமிஷங்கள் 48 வினாடியாகும். சுதேச மணி தெரியாமல் நாம் லக்கினம் கணிக்க இயலாது. அதற்காகத்தான் நாம் சுதேசமணியைப் பற்றி விரிவாக எழுதினோம். நாம் தமிழ் நாட்டிலுள்ள முக்கியமான ஊர்களுக்கெல்லாம் Longtitude, Latitude, நேர வித்தியாசங்களைப் பட்டியல் போட்டுக் காட்டி இருக்கிறோம். இது ஜாதகம் கணிக்க உதவும்.

ஊர்களின் பெயர்Longtitude(Deg. Min)Latitude(Deg. Min)நேர வித்தியாசம் (நி நொ)
1. அம்பா சமுத்திரம்77-2908-43-20.55
2. ஆனை மலை76-4010-24-24.11
3. அறந்தாங்கி79-0210-10-14.44
4. ஆற்காடு79-2412-56-13.16
5. அரக்கோணம்79-4313-05-12.01
6. ஆரணி79-1912-40-13.36
7. அருப்புக்கோட்டை78-0809-31-18.20
8. போடி நாயக்கனுர்77-2410-01-21.15
9. சிதம்பரம்79-4411-24-11.57
10. கூனூர்76-5011-20-23.31
11. கடலூர்79-4911-43-11.37
12. திண்டுக்கல்78-0010.22-18.52
13. ஈரோடு77.4611.20-19.47
14. குடியாத்தம்78.5512.57-15.12
15. ஹோசூர்77-5212.44-19.24
16. காஞ்சீபுரம்79.4512.50-11.53
17. காரைக்கால்79.5210.55-11.25
18. கோயம்புதூர்77.0011.00-22.51
19. கரூர்79.0710.58-18.24
20. காயல்பட்டினம்78.0808.34-18.12
21.கீழக்கரை78.5009.14-15.32
22.கோடைக்கானல்77.3210.1320.43
23.கிருஷ்ணகிரி78.1612.32-17.48
24.கும்பகோணம்79.2510.58-13.13
25.சென்னை80.1713.04-09.45
26.மதுரை78.1009.58-18.12
27.மதுராந்தகம்79.5612.30-11.09
28.மன்னார்குடி79.2910.40-12.57
29.மேட்டுப்பாளையம்79.5911.18-22.75
30.மேட்டூர் டேம்77.5011.5219.31
31.நாமக்கல்78.1311.13-18.00
32.நாங்குனேரி77.4408.09-19.55
33.நீலகிரி76.4711.24-23.43
34.உதகமண்டலம்76.0011.24-26.50
35.பாளையங்கோட்டை77.4608.43-19.55
36.பழனி77.3310.27-20.39
37.பண்ருட்டி78.3511.47-12.33
38.பட்டுக் கோட்டை79.2210.26-13.28
39.பெரியகுளம்77.3510.07-20.31
40.ராஜபாளயம்77.3609.26-20.27
41.ராமனாதபுரம்78.5209.22-15.24
42.ராமேஸ்வரம்79.2209.17-13.24
43.சேலம்78.1211.39-18.04
44.சங்கரன் கோவில்77.3509.10-20.31
45.சாத்தூர்77.5809.21-19.00
46.சத்தியமங்கலம்77.1711.30-21.43
47.செங்கோட்டை77.1808.59-21.39
48.சிவகங்கை78.3209.51-16.44
49.திருநெல்வேலி77.4408.44-19.55
50.திருச்சி78.4610.50-15.48
51.தொண்டி79.0409.45-14.36
52.உடுமலைப்பேட்டை77.1710.36-21.43
53.வேலூர்79.1112.55-14.08
54.விருதாசலம்79.2411.32-13.17
55.ஏற்காடு78.3111.48-18.00


தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்குண்டான longtitude, மற்றும் latitude, இந்திய நேரத்திற்கும், சுதேச நேரத்திற்கும் உண்டான வித்தியாசத்தையும் மேலே கொடுத்துள்ளோம். ஊங்கள் ஊர் சிறிய ஊறாக இருப்பின் பக்கத்திலுள்ள பெரிய நகரத்தின் longtitude, latitude-ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் பூமியை 12 பாகமாக மேலிருந்து கீழாகப் பிரித்து இருக்கிறோம். அவைகள் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிகளாகும். இந்தப் 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12-ராசிகளும் சூரியன் முன் உதயமாகும். நமக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த ராசி சூரியன் முன் உதயமாகிறதோ அதுவே லக்கினம் ஆகும்.

லக்கினம் கணிக்க நமக்குத்தேவையானது latitude. இந்த latitude -ஐ வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சூரியோதயம் கண்டுபிடிக்க முடியும். நாம் பூமியை 12 ராசிகளாகப் பிரித்து இருக்கிறோம் அல்லவா? ஒவ்வொரு ராசியும் சம அளவாக இருக்கிறதாக என்றால் இல்லை என்று தான் நாம் சொல்ல வேண்டும். latitude-க்குத் தக்கவாறு ராசிகளின் அளவும் மாறுகிறது.

நாம் கீழே 8 degree முதல் 13 degree வரை ஒவ்வொரு ராசியின் அளவு என்னவென்று பட்டியல் போட்டுக் காட்டியுள்ளோம். தமிழ் நாட்டில் உள்ள ஊர் களெல்லாம் இந்த அளவுக்குள்தான் இருக்கின்றன. கீழேகொடுத்து இருக்கும் அளவுகள் எல்லாம் நாழிகை, வினாழிகையில் தான் இருக்கின்றன.


LATITUDE
ராசி8 DEG9 DEG10 DEG11 DEG12 DEG13 DEG 
நா.விநா.விநா.விநா.விநா.விநா.வி
மேஷம்4.374.364.344.324.304.28
ரிஷபம்5.085.075.065.055.045.03
மிதுனம்5.275.275.285.285.285.29
கடகம்5.165.175.185.205.215.22
சிம்மம்4.585.005.025.045.065.08
கன்னி4.544.564.585.005.025.04
துலாம்5.085.105.125.135.165.17
விருச்சிகம்5.265.275.285.295.305.30
தனுசு5.215.205.205.205.195.19
மகரம்4.524.514.494.484.464.45
கும்பம்4.264.234.224.204.184.16
மீனம்4.214.194.174.144.124.04
மாதம், தேதி7 & 8 Deg9 & 10 Deg.11 & 12 Deg.13 & 14 Deg
A.M.A.M.A.M.A.M.
Apr 6 - 105.585.565.555.54
Apr 11 - 185.555.535.515.49
Apr 19 - 265.515.495.475.45
Apr 27 - May 45.495.455.445.42
May 5 - 125.475.465.425.39
May 13 - 205.465.435.405.36
May 21 - 285.465.435.405.36
May 29 - Jun 55.475.435.405.36
Jun 6 - 135.485.445.405.37
Jun 14 - 215.495.465.425.39
Jun 22 - 295.515.475.445.40
Jun 30 - Jul 75.535.495.465.42
Jul 8 - 155.545.555.485.45
Jul 16 - 235.565.535.505.47
Jul 24 - 315.575.545.515.48
Aug 1 - 85.575.555.525.50
Aug 9 - 165.575.555.535.51
Aug 17 - 245.575.555.545.52
Aug 25 - Sep 15.565.515.545.52
Sep 2 - 95.555.545.535.52
Sep 10 - 175.535.535.535.52
Sep 18 - 255.525.535.535.53
Sep 26 - Oct 35.515.525.525.53
Oct 4 - 115.505.515.525.53
Oct 12 - 195.505.515.535.54
Oct 20 - 275.505.525.545.56
Oct 28 - Nov 45.505.535.565.58
Nov 5 - 125.535.565.586.01
Nov 13 - 205.565.596.016.04
Nov 21 - 285.596.026.056.08
Nov 29 - Dec 66.016.066.096.13
Dec 7 - 146.066.106.146.17
Dec 15 - 226.106.146.186.21
Dec 23 - 306.146.186.216.25
Dec 31 - Jan 76.176.216.246.28
Jan 8 - 156.206.236.276.30
Jan 16 - 236.226.256.286.31
Jan 24 - 316.226.256.276.30
Feb 1 - 86.226.246.266.29
Feb 9 - 166.206.226.246.26
Feb 17 - 246.186.196.216.22
Feb 25 - Mar 46.156.166.176.18
Mar 5 - 126.126.126.136.13
Mar 13 - 206.086.086.086.08
Mar 21 - 286.046.046.036.03
Mar 29 - Apr 56.046.046.046.04


நாம் கொடுத்துள்ள எல்லா விபரங்களும் பஞ்சாங்கங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். இருப்பினும் வாசகர்களின் வசதிக்காக நாம் திரும்பவும் கொடுத்துள்ளோம்.

இப்போது நமக்கு,
  1. எல்லா ஊர்களின் சூரியோதயம் கண்டுபிடிக்கத்தெரியும்.
  2. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராசியை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியும்.
  3. ஒவ்வொரு ஊருக்கும் சுதேச மணி கண்டு பிடிக்கத்தெரியும்.

இந்த மூன்றும் தெரிந்தால் எந்த ஊருக்கும் சுலபமாக லக்னம் கண்டு பிடிக்கலாம். நாம் ஏற்கனவே ஒரு ஜாதகம் கணித்து வைத்துஇருக்கிறோம். அதற்கு இப்போது லக்னம் கணிப்போம்.

ஆடி மாதம் 30-ம் தேதி மாலை 5.00 மணிக்கு ஜாதகம் கணித்தோம். ஆனால் எந்த ஊருக்கு என்று கணிக்கவில்லை. இப்போது சென்னையில் அந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தது எனக் கொள்வோம். அதற்கு இப்போது லக்னம் கணிப்போம்.

முதலில் அன்று சென்னையில் சூரிய உதயத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 30-ம் தேதிக்கு சரியான ஆங்கிலத்தேதி ஆகஸ்ட் 14. சென்னையின் latitude 13 டிகிரி 04-மினிட்ஸ். இதை 13 டிகிரி என முழுமை ஆக்கிக் கொள்ளுங்கள். இதற்கு என்ன சூரியோதயம் எனப் பாருங்கள். மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். காலை 5மணி 51 நிமிஷம் ஆகும்.

குழந்தை பிறந்த நேரம் (மாலை 5.00 மணி அல்லது)17.00.00
அன்று சூரியோதயம்05.51.00
சூரியோதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் முடியஆன நேரம்11.09.00
இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும்,சென்னையின் சுதேச நேரத் திற்கும் உண்டான வித்தியாசம்(-)0.09.45
10.58.15


இதை நாழிகை ஆக்குங்கள். கிடைப்பது 27 நாழிகை 25 விநாழிகை வரும். அதாவது சூரிய உதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் வரை 27 நாழிகை 25 வினாழிகை ஆகி இருக்கிறது. இந்த 27நாழிகை 25 விநாழிகை எந்த லக்கினத்தில் வருகிறது எனப் பார்க்க வேண்டும்.

நாம் பார்க்கும் மாதம் ஆடி மாதம். அப்போது சூரியன் கடகத்தில் உதிப்பார். 30-ம் தேதிக்கு கடகத்தின் கடைசியில்தான் உதயமாவார். திருகணிதப் பஞ்சாங்கத்தில் ஆடி 30-க்கு எதிராக உதய லக்ன முடிவு என்ற கட்டத்தைப் பாருங்கள். அங்கே 0.33 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்று கடகத்தில் 0.33விநாழிகை பாக்கி. இப்போது கணக்குப் போடலாம் வாருங்கள்.
நா. வி.
அன்று கடகம் இருப்பு0. 33
சிம்மம்5. 08
கன்னி5. 04
துலாம்5. 17
விருச்சிகம்5. 30 
தனுசு5. 19 
26.51
மகரம்4.45
31.36


26 நாழிகை 51 வினாழிகை முதல் 31 நாழிகை 36 வினாழிகை முடிய மகர லக்னம் வருகிறது. நமக்குக் குழந்தை பிறந்த நேரம் 27நாழிகை 25 வினாழிகை. ஆகவே மகர லக்னம் தான் குழந்தை பிறந்த லக்னம். ஆகவே மகரத்தில் "ல" என்று போடுங்கள். "ல" என்பது லக்னத்தைக் குறிக்கும். இப்போது ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி 30-ம் தேதிக்கு கடகம் 0.21 நாழிகை தான் இருக்கிறது. அவர்கள் 0.21 நாழிகையை எடுத்துக்கொண்டு கணக்குப் போட வேண்டும்.

இப்போது லக்னம் போடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். இதற்குப் பின் நவாம்சம், ஜனன கால இருப்புதிசை, போட்டால் ஜாதகக் கணிதம் முடிந்து விடும்.

நாம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுக்குத்தான் Longtitude, Longtitude கொடுத்துள்ளோம். இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களுக்குத் தேவை என்றால் "latitude, longtitudes and local meantimes for 5000 places in India" என்ற புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளவும். அதே போல் ஜாதக கணிதம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமாயின் - First Reader (காஸ்டிங் of Horoscopes- by. K.S. Drishnamoorthy- என்ற புத்தகத்தைப் படிக்கவும்.
1. நவாம்சம்
2. பாவம்
3. திரேக்காணம்
4. ஓரை
5. திரிசாம்சம்
6. சப்தாம்சம்
7. சஷ்டியாம்சம்.

இவைகளையெல்லாம் போட்டால் நாம் இன்னும் துல்லியமாகப் பலன் சொல்லலாம்.

ஆனால் எல்லோரும் எல்லாச் சக்கரங்களையும் போடுவதில்லை. நவாம்சம் மட்டும் தான் போடுகின்றனர். நாமும் இப்போதைக்கு நவாம்சம் மட்டும் போடக் கற்றுக் கொடுப்போம். முதலில் நவாம்சம் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நவாம்சம் என்பது ஒன்பது அம்சம் என்று பெயர். அதாவது ராசியிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் ஒன்பதாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் எப்படி ஒன்பதாகப் பிரிப்பது?

மிகவும் எளிது. ஒரு ராசிக்கு அல்லது வீட்டிற்கு ஒன்பது நக்ஷ்க்ஷத்திரப் பாதம் அல்லவா ? ஒவ்வொரு நக்ஷ்க்ஷத்திரப் பாதமும் ஒவ்வொரு பாகம் ஆகும்.
பார்த்தீர்களா! எப்படி மிக எளிதாகப் பிரித்து விட்டோம்.

நாம் முன்பு கணித்த ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். லக்கினம் முதல் ஒன்பது கிரகங்களை நாம் ராசியில் போட்டிருந்தோம். இந்த ஒன்பது கிரகங்களும், மற்றும் லக்கினமும் எதாவது ஒரு நக்ஷ்க்ஷத்திரத்தின் மேல் தான் சஞ்சாரம் செய்துகொண்டு இருக்க வேண்டும் அல்லவா? இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த விஷயங்களையெல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிரக நிலைகளை 17-ம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் சூரியனைப் பாருங்கள். ஆடி 29-ம் தேதி 12 நாழிகை 28 வினாழிகைக்கு ஆயில்யம் 4-ம் பாதத்தில் இருக்கிறார். ஆடி 32-ம் தேதி 40 நாழிகை 35 வினாழிகைக்கு அவர் மகம் 1-ம் பாதத்திற்குச் செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில்தான் இருக்கிறார். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதி மாலை 5-00 மணி. அதாவது உதயாதி நாழிகை 27 வினழிகை 25க்கு அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். சூரியனின் நட்சத்திரப் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

சந்திரனின் நட்சத்திரப் பாதத்தை 5-ம் பாடத்திலேயே கண்டு பிடித்து விட்டோம். அதாவது மிருகசீரிஷம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். இது திருகணிதப்படி.
வாக்கியப்படி திருவதிரை 2-ம் பாதம் எனக் கண்டுபிடித்தோம்.

அடுத்தது செவ்வாய். அவர் ஆடி 23-ம் தேதி 16 நாழிகை 01 வினாழிகையில் இருந்து கேட்டை 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
ஆக செவ்வாயின் நட்சத்திரப் பாதம் கேட்டை ஆகும்.

அடுத்தது புதன் ஆகும். அவர் ஆடி 29-ம் தேதி 43 நாழிகை 47 வினாழிகையில் இருந்து 31-ம் தேதி 28 நாழிகை 42 வினாழிகை முடிய மகம் 2-ம் பாதத்தில்
சஞ்சாரம் செய்கிறார். ஆக புதனின் நட்சத்திரப் பாதம் மகம் இரண்டு.

அடுத்தது குரு. அவர் ஆடி 15-ம் தேதி முதல் அதாவது 55நாழிகை 22 வினாழிகையில் இருந்து 32-ம் தேதி 37 நாழிகை 17 வினாழிகை முடிய திருவாதிரை 2-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆக குருவின் நட்சத்திரப் பாதம் திருவாதிரை இரண்டு.

அடுத்தது சுக்கிரன். அவர் ஆடி 29-ம் தேதி 28 நாழிகை 28 வினாழிகையில் இருந்து ஆடி 32-ம் தேதி 19 நாழிகை 18 வினாழிகை முடிய புனர்ப்பூசம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். ஆக சுக்கிரனின் நட்சத்திரப் பாதம் புனர்ப்பூசம் 1-ம் பாதம். 

அடுத்து வருபவர் சனி. அவர் ஆடி 2-ம் தேதியிலிருந்து அதாவது 23 நாழிகை 18 வினாழிகையில் இருந்து ரோகிணி 3-ம் பாதத்தில் இருக்கிறார். அப்படியானால் சனியின் நட்சத்திரப் பாதம் ரோகிணி 3.

கடைசியாக வருபவர்கள் ராகு, கேது. ஆடி 27-ம் தேதி 58 நாழிகை 9 வினாழிகையிலிருந்து திருவாதரை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதே
போன்று கேது அதே தேதியிலிருந்து மூலம் 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இப்போது நவாகிரகங்களின் நட்சத்திரப் பாதத்தைத் தெரிந்து கொண்டீர்கள். நாம் இப்போது லக்னம் எந்த நட்சத்திரப் பாதத்தில் வருகிறது எனக்கண்டு பிடிக்க வேண்டும். இது பஞ்சாங்கத்தில் கிடைக்காது. நாம் லக்னம் எப்படிக் கண்டு பிடித்தோம் என்பதைப் பாருங்கள். அதாவது போன பாடத்தைப் பாருங்கள்.

நாம் லக்கினம் மகரம் எனப் போட்டிருந்தோம். அதாவது உதயாதி நாழிகை 26-51-ல் இருந்து 31-36 முடிய மகர லக்கினம். இந்த இடைப்பட்ட காலமான 4 நாழிகை 45 வினாழிகையில் மகர லக்கினம் வருகிறது. இந்த 4 நாழிகை 45 வினாழிகை ஒன்பது நட்சத்திரப் பாதங்களைக் கொண்டது அல்லவா? அப்படியானால் ஒரு நட்சத்திரப்பாதத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

நாலு நாழிகை 45 வினாழிகையைநாழிகை ஆக்குங்கள். 285 வினாழிகை வரும். இதை ஒன்பதால் வகுங்கள். 285 / 9 = 32 நாழிகை சுமாராக. அப்படியனால் 9
பாதங்களும் எவ்வளவு நேரத்தில், எப்படி கடக்கப் படுகின்றன வென்று கீழே பாருங்கள்.

மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள், திருவோணம் 1,2,3,4, பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள். மொத்தம் 9 பாதங்கள். இந்த 9 பாதங்களும் கீழ்க்கண்டவாறு கடக்கப்படுகின்றன. 

மகர லக்கினம் (சென்ற பாடத்தைப் பாருங்கள்) ஆரம்பம் : 26.51 நாழிகை

உத்திராடம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
உத்திராடம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
உத்திராடம் 4-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 1-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 4-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
அவிட்டம் 1-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
அவிட்டம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை


அன்று குழந்தை பிறந்த நேரம் 27 நாழிகை 25 வினாழிகை. அது உத்திராடம் 3-ம் பாதத்தில் வருகிறது. ஆகவே லக்கினத்தின் நட்சத்திரப்பாதம் உத்திரடம் 3-ம் பாதமாகும். இப்போது லக்கினம் மற்றும் 9 கிரகங்களின் நட்சத்திரப் பாதம் கண்டுபிடிக்கும் முறையைத் தெரிந்து கொண்டீர்கள். நட்சத்திரப் பாதத்தைக் கீழ்க் கண்டவாறு அட்டவணைப் படுத்துங்கள். அது நவாம்சம் போட உபயோகமாக இருக்கும்.

கிரகங்கள்நட்சத்திரம்பாதம்.
லக்கினம்உத்திராடம்3-ம் பாதம்
சூரியன்ஆயில்யம்4-ம் பாதம்
சந்திரன்மிருக சீரிஷம்1-ம் பாதம்
செவ்வாய்கேட்டை3-ம் பாதம்
புதன்மகம்2-ம் பாதம்
குருதிருவாதரை2-ம் பாதம்
சுக்கிரன்புனர்ப்பூசம்1-ம் பாதம்
சனிரோகிணி3-ம் பாதம்
ராகுதிருவாதிரை1-ம் பாதம்
கேதுமூலம்3-ம்பாதம்


நவாம்சம் போடும் முறை
முதலில் 27-நக்ஷ்க்ஷத்திரங்களையும் கீழ்க்கண்டவாறு 3- பகுதியாக எழுதிக் கொள்ளுங்கள். இந்த மாதிரியாகப் பிரித்து எழுதுவது மிக முக்கியம்.

123
அஸ்வினிமகம்மூலம்
பரணிபூரம்பூராடம்
கார்த்திகைஉத்திரம்உத்திராடம்
ரோகிணிஹஸ்தம்திருவோணம்
மிருகசீரிஷம்சித்திரைஅவிட்டம்
திருவாதிரைஸ்வாதிசதயம்
புனர்ப்பூசம்விசாகம்பூரட்டாதி
பூசம்அனுஷம்உத்திரட்டாதி
ஆயில்யம்கேட்டைரேவதி


27-நக்ஷ்க்ஷத்திரங்களையும் 3 பகுதிகளாகப் பிரித்து எழுதி இருக்கிறோம். முதல் 9-நக்ஷ்க்ஷத்திரங்களான அஸ்வனி முதல் ஆயில்யம் வரை முதல் 4 ராசிகளில் அடக்கம். அடுத்த 9 நக்ஷ்க்ஷத்திரங்களான மகம் முதல் கேட்டை வரை சிம்மம் முதல் விருச்சிகம் உள்ள 4 ராசிகளில் அடக்கம். கடைசி 9 நக்ஷ்க்ஷத்திரங்களான மூலம் முதல் ரேவதி முடிய தனுசு முதல் மேஷம் முடிய அடக்கம்.

எந்த ஒரு கிரகமாவது அஸ்வனி, மகம், மூலம் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் நவாம்சத்தில் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் மிதுனத்தில் போடுங்கள். 
4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது பரணி, பூரம், பூராடத்தில் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள். 
4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது கார்த்திகை, உத்திரம், உத்திராடமில் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்திலிருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் மீனத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்திலிருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் கடகத்த்¢ல் போடுங்கள்.

எந்த கிரகமாவது மிருகசீரிஷம்,சித்தரை, அவிட்டம் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் துலாமில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது திருவாதரை,ஸ்வாதி,சதயம் ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தல் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது பூசம், அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நக்ஷ்க்ஷத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.

என்ன நவாம்சம் எப்படி போடுவது என்று தெரிந்து கொண்டீர்களா ?

மேலே சொன்ன விஷயத்தைக் கொண்டு நவாம்சம் கணித்தால் அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.

Zoom in (real dimensions: 1001 x 994)Image


இப்போது நவாம்சம் போடக் கற்றுக் கொண்டீர்கள். இன்னும் ஜனன கால இருப்பு திசை போடவேண்டும். போட்டுவிடால் ஜாதகக் கணிதம் முடிந்து விட்டது. அப்புறம் பலன் தான் சொல்லவேண்டும்.

நாம் திருக் கணிதப்படி ஜாதகம் கணித்து விட்டோம். சிலர் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி எப்படி நவாம்சம் போடுவது எனக் கேட்க்கலாம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 9-ம் பக்கத்தைப் பாருங்கள். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதிக்கு உதயாதி நாழிகை 27-25க்கு கிரக நிலைகள். சூரியனின் சாரம் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

சூரியன் ஆடி 28-ம் தேதி 34-03க்கே ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு வந்து ஆவணி 1-ம் தேதி 03-00 நாழிகை முடிய அங்கே இருக்கிறார். அம்ச லக்கினம் மீனம் என்று பஞ்சாங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். ஆக சூரியனை அம்சத்தில் மீனத்தில் போடுங்கள்.

அடுத்தது செவ்வாய். ஆடி 22 முதல் ஆவணி 1-ம் தேதி முடிய மூலம் 1-ல் இருக்கிறார். நவாம்சம் மேஷம் எனப் போட்டு இருக்கிறார்கள். மேஷத்தில் செவ்வாயைப் போடுங்கள். இவ்வாறே ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜனன காலத்தில் சந்திரன் இருக்கும் நக்ஷ்க்ஷத்திரம்ஆரம்பகால தசை
1. அஸ்வனி, மகம்,மூலம்கேது தசை
2. பரணி, பூரம், பூராடம்சுக்கிர தசை
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரிய தசை
4. ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்சந்திர தசை
5. மிருகசீரிஷம்,சித்திரை,அவிட்டம்செவ்வாய் தசை
6.திருவாதரை,ஸ்வாதி,சதயம்ராகு தசை
7.புனர்ப்பூசம்,விசாகம்,பூரட்டாதிகுரு தசை
8.பூசம்,அனுஷம்,உத்திரட்டாதிசனி தசை
9.ஆயில்யம், கேட்டை,ரேவதிபுதன் தசை


நமது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நக்ஷ்க்ஷத்திரம் மிருகசீரிஷம் ஆகும். ஆகவே இருப்பு தசை செவ்வாய் ஆகும். சந்திரன் ஆயில்யத்திலிருந்தால் என்ன தெசை ஆரம்பமாகும்? சொல்லுங்கள் பார்ப்போம்? புதன் தெசை ஆரம்பமாகும்.

சரி! ஒவ்வொரு தசையும் எவ்வளவு வருஷம் நடை பெறும். கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள்.

சூரிய தசை6 வருஷங்கள்
சந்திர தசை10 வருஷங்கள்
செவ்வாய் தசை7 வருஷங்கள்
ராகு தசை18 வருஷங்கள்
குரு தசை16 வருஷங்கள்
சனி தசை19 வருஷங்கள்
புதன் தசை17 வருஷங்கள்
கேது தசை7 வருஷங்கள்
சுக்கிர தசை20 வருஷங்கள்


மொத்தம் : 120 வருஷங்கள்

மனிதனுடைய ஆயுளின் அளவு மொத்தம் 120 வருஷங்கள் என ஜோதிடம் கூறுகிறது. மேலே ஒவ்வொரு கிரகத்திற்கும் எவ்வளவு வருஷம் எனக் கூறி இருக்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான சூரியனுக்கு ஏன் ஆறு வருஷங்கள், சுக்கிரனுக்கு ஏன் 20 வருஷங்கள், எதன் அடிப்படையில் வருஷங்கள் பகிர்ந்து அளிக்கப் பட்டன என்று காரணம் எதுவும் கிரந்தங்களில் காணப்படவில்லை. ஆகவே நாமும் காரணங்கள் எதுவும் கேட்க்காமல் மேற்கூறிய வருஷங்களை அப்படியே கையாளுவோம்.

ஜனன கால இருப்பு தெசை கண்டுபிடிக்க சந்திரனின் நக்ஷ்க்ஷத்திரப்பாதம் தெரிந்து இருக்க வேண்டுமென்று கூறியிருந்தோம். இப்போது நீங்கள் 5-ம் பாடத்திற்குச் செல்ல வேண்டும். சந்திரனின் மிருகசீரிஷத்தில் ஆத்தியந்த பரமநாழிகை 57நாழிகை 34 வினாழிகை என்று கூறி இருந்தோம். அதில் சந்திரன் 4 நாழிகை14 வினாழிகை சென்று விட்டதெனவும் எழுதி இருந்தோம். அந்தப் பாடம் ஞாபகம் இல்லாதவர்கள் திரும்பவும் ஒருமுறை படிக்கவும்.


சந்திரனின் ஆத்தியந்த பரம நாழிகை57-34
மிருக சீரிஷத்தில் சந்திரன் சென்ற தூரம்4-14
மிருக சீரிஷத்தில் சந்திரன் இன்னும் கடக்க வேண்டிய தூரம்53-20


ஜனன கால இருப்புதிசை என்பது ஒரு நக்ஷ்க்ஷத்திரத்தில் சந்திரன் எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமோ அதுவே இருப்பு தெசை என்பதாகும். புரிகிறதா? புரிவது போலவும் இருக்கிறது அதே சமயம் புரியாதது போலவும் இருக்கிறது. இல்லையா?

சரி! நாம் இப்போது இருப்பு தெசையைக் கண்டு பிடிப்போம். அப்போது எல்லாம் விளங்கி விடும்.

மிருக சீரிஷம் நக்ஷ்க்ஷத்திரத்திற்கு ஆரம்ப தெசை செவ்வாய் என்றும் அது 7 வருஷம் என்றும் எழுதி இருந்தோம் அல்லவா.

அதாவது மொத்தம் ஆத்தியந்த பரம நாழிகைக்கு வருஷங்கள் .. 7 ஆகும். அதில் சந்திரன் 4 நாழிகை 14 வினாழிகை கடந்து விட்டது. கடக்க வேண்டியது 53 நழிகை 20 வினாழிகை ஆகும். மீதமுள்ள 53 நழிகை 20 வினாழிகைக்கு எவ்வளவு வருஷங்கள் எனக் கண்டு பிடியுங்கள். நாம் கீழே கண்டு பிடித்துள்ளோம் பாருங்கள்.

57 நாழிகை 34 வினழிகையை நாழிகை ஆக்குங்கள். அது 3424 வினாழிகை வரும். கடக்கவேண்டிய தூரமான 53 நாழிகை 20 வினாழிகையை வினாழிகை ஆக்குங்கள். அது 3200 வினாழிகை வரும்.

(3200 / 3424 ) x 7 = 6 ஆண்டுகள் 06 மாதம் 15 நாட்கள் வரும்.

என்ன புரிந்ததா? திரும்பத்திரும்பப் படியுங்கள். புரியும்.
சூரியன் :இது ஒருவரின் தகப்பனாரைக் குறிக்கிறது. ஒருவரின் தகப்பனார் எவ்வாறு அமைவார் ? அவர் நல்லவரா அல்லது கெட்டவரா ? இது போன்றவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இவரைப் பிதுர்காரகன் என்பார்கள். இது ஒரு ஆண்கிரகம். சூரியனின் திசை கிழக்கு. இவரின் வண்ணம் ஆரஞ்சு அல்லது கனகாம்பர வண்ணம். இவர் எதிலும் தலமை தாங்கும் குணம் உள்ளவர். உதாரணமாக ஒருவருக்கு லக்கினத்தில் சூரியன் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். இவர் எங்கும் முன்னணியில் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் தலைதூக்கி நிற்கும். உடல் உறுப்புக்களில் இதயம், வலது கண், வாய், தொண்டை, மூளை, ஆகியவற்றைக் குறிப்பார். தைரியம், நல்ல குணாதிசயங்கள், ஆகியவற்றைக் கொடுப்பார்.

சந்திரன் :இவர் தாயார், மனது ஆகியவற்றைக் குறிப்பார். இவர் ஒரு பெண்கிரகம். குளிர்ந்த கிரகம். இது அடிக்கடி மாறும் தன்மை உடையவர். இவரை நீர்க்கிரகம் என்பார். உத்தியோகஸ்தானத்துடன் இவர் சம்பந்தப்பட்டால் நீர் உபயோகப்படும் இடங்களில் இவர் வேலை செய்வார். உதாரணமாகக் கப்பல், பால் வியாபாரம் போன்றவற்றில் இருப்பார். சந்திரன் வயிற்றையும் குறிப்பார். பெண்களுக்கு மார்பகங்களைக் குறிப்பவர் இவர்தான். சூரியன் அரசியல் வாழ்க்கையைக் குறிப்பவர். ஆனால் சந்திரன் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பவர். இவர் கொடுக்கக் கூடிய வியாதிகள்: மனோவியாதிகள், ஜலதோஷம், சளி, ஆஸ்த்மா, போன்றவை. வெள்ளை வண்ணம் தான் இவருடைய வண்ணம்.

செவ்வாய் :சகோதரர்களுக்குக் காரகம் வகிப்பவர் இவர்தான். சிகப்பு வண்ணம் இவரது வண்ணம். இவர் ஒரு ஆண் கிரகம். முரட்டுத்தன்மை உடையவர். சண்டை,சாகசம், இவற்றிற்கெல்லாம் இவர்தான் அதிபதி. தைரியத்தைக் கொடுப்பவர். முரட்டுத்தனமான காரியங்களில் ஈடுபட வைப்பார். ஸ்திர சொத்துக்களான வீடு, வாசல், நிலம், ஆகியவற்றிற்கு அதிபதி இவர்தான். விபத்துக்களைக் கொடுப்பவரும் இவர் தான். காயம், தழும்புகள், இவற்றையெல்லாம் கொடுக்கக் கூடியவர் இவர்தான். கூர்மையான ஆயுதங்கள், கத்தி, துப்பாக்கி, ஆகியவைகளுக்கும் இவர்தான் காரகம் வகிக்கிறார். நவரத்தினங்களில் பவழம் தான் இவர் ரத்தினம்.

புதன் :இது ஒரு ஸ்திரத்தன்மையில்லாத கிரகம். பெண் கிரகம். எளிதாக மாறும் தன்மை கொண்டவர். உதாரணமாக கன்னியா லக்கினம், மிதுன லக்கினம் இவற்றிற்கெல்லாம் இவர் தான் லக்கினாதிபதி. இதை லக்கினமாக வைத்துக் கொண்டு பிறந்தவர்களுக்கு ஸ்திரத்தன்மை என்பதே இருக்காது. புத்திசாலித்தனம், அறிவுகூர்மை இவற்றிற்கெல்லாம் இவர் தான் காரகம் வகிக்கிறார். எதையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் தன்மையுடையவர். பிரயாணங்கள் செய்வதில் ஆசையைக் கொடுப்பார். ஜோதிடம், மந்திரங்கள் ஆகியவற்றிற்கும் இவர்தான் காரகம் வகிப்பவர். அக்கவுண்ட்ஸ்களுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். இவருடைய வண்னம் பச்சை. மரகதம்தான் இவருடைய நவரத்தினக்கல். வடக்குதிசைதான் இவருடைய திசை. படிப்பு, தாய்மாமன், இவர்களுக்கெல்லாம் இவர்தான் அதிபதி. இவர் சூரியனுடன் சேருவாரேயாகில் மிகுந்த கெட்டிக்காரத்தனத்தைக் கொடுப்பார்.

குரு :குழந்தைகளுக்கு அதிபதி இவர் தான். அதனால்தான் இவரைப் புத்திரகாரகன் என்பார்கள். குருவுக்கு அதிபதி "தக்ஷ்க்ஷணாமூர்த்தி" ஆகும். குரு எங்கிருந்தாலும் நல்லத்தையே செய்வர். இவர் ஓர் ஆண் கிரகம். சாத்வீக குணம் உள்ளவர். தயாள குணம் உள்ள கிரகம் இவர். ஆசிரியர், சட்டம், பேங்குகள், பணம் புழங்குமிடம், ஆகியவற்றையும் இவர் குறிப்பார். கோவில்கள், மதங்கள், ஆன்மீகம் ஆகியவற்றையும் இவர் குறிப்பார்.

சுக்கிரன் : இது ஒரு பெண்கிரகம். இவர் அசுர குரு ஆவார். தெய்வத்தில் இவர் மஹாலெஷ்மியைக் குறிப்பார். இவர் ஒரு காதல் கிரகம். இவர் வசீகரமான உருவத்தைக் கொடுப்பார். அழகையும் கொடுப்பார். கனிவான தன்மையும் கொடுப்பார். வாகனங்கள், அழகு திரவியங்கள், துணிமணிகள், சினிமா, டிராமா,கலைகள்,நகைகள், வைரம், இவற்றிற்கெல்லாம் அதிபதி இவரே. இவரை களத்திர காரகன் என்பார்கள். வரப்போடும் வாழ்க்கைத் துணைவரையோ அல்லது துணைவியையோ குறிப்பார்.

சனி : இவர் பெயரைக் கேட்டாலே எல்லோரும் நடுங்குவார்கள். இவரை ஆயுள் காரகன் என்பார்கள். எல்லோர் ஆயுளையும் நிர்மாணிப்பவர் இவரே. "சனியைப் போல் கொடுப்பார் இல்லை; சனியைப்போர் கெடுப்பார் இல்லை" என்பது பழமொழி. இவர் ஒரு குளிர்ந்த கிரகம். இவருக்கு ஒருகால் நொண்டி. மெதுவாகத்தான் செல்வார். அதனால்தான் இவரை மந்தன் என்பார்கள். எதையும் தாமதப்படுத்தும் குணம் கொண்டவர். களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் சனியிருந்தால் திருமணமாவது தாமதப் படுத்தப்படும். ஜீவன்ஸ்தானமான 10-ம் வீட்டில் சனி இருந்தால் உத்தியோகம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.ஞாபகமறதியை அதிகம் கொடுப்பவர் அவர்.
இவருடைய வண்ணம் நீலம். இரும்பு, தலைமயிர், பூமிக்கு அடியில் இருக்கும் உலோகங்கள், தாதுப் பொருள்கள் இவற்றிற்கெல்லாம் அதிபதி சனி பகவானே.

ராகு, கேது : இவர்களுக்கு சொந்த வீடென்று எதுவும் கிடையாது. இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலனையே கொடுப்பார்கள். யாருடன் சேர்ந்து இருக்கிறார்களோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். யாரால் பார்க்கப்படுகின்றனரோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். ஜெயிலுக்குக் காரகத்துவம் வகிப்பது ராகு தான். இவர்கள் இரண்டு பேரும் பாப கிரகங்கள். இவர்கள் எந்த வீட்டிலிருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் எனப் பார்ப்போம்.

ராகு
1-ம் வீடு அல்லது லக்கினத்திலிருந்தால் : தழும்போ அல்லது மச்சமோதலையில் காணப் படும். நல்ல குணங்கள் குறைந்து காணப் படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

2-ம் வீட்டில் இருந்தால் பணத்தட்டுப் பாடு இருக்கும். சிலருக்கு மனைவி இரண்டு. ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

3-ம் வீட்டில் இருந்தால் தைரியசாலியாக இருப்பார். இளைய சகோதரத்துடன் ஏதாவது பிரச்சனை இருக்கும்.

4-ம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு உகந்தது அல்ல: வீட்டு விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட மாட்டார்.

5-ம் வீட்டில் இருந்தால் இதை சர்ப்ப தோஷம் என்பார்கள். குழந்தைப் பேருக்கு இடைஞ்சல் உண்டாகும். பூர்வ புண்ணிய மற்றவர்.

6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றி கொள்வர். தாய் மாமனுக்கு ஆகாது.

7-ம் வீட்டில் இருந்தால் சிலருக்கு மனைவியர் இரண்டு. மனைவி வியாதி உள்ளவளாக
இருப்பாள்.

8-ம் வீட்டில் இருந்தால் எப்போதும் கவலையுடன் இருப்பார். கஷ்டங்கள் இருந்து வரும்.

9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்கு ஆகாது. செய்யும் தருமங்களுக்குப் பெயர் இருக்காது. உயர் படிப்பில் தடை வரும்.

10-ம் வீட்டில் இருந்தால் தொழிலில் பல தொந்தரவு இருந்து வரும்.

11-ம் வீட்டில் இருந்தால் எத்தகைய குறையும் இல்லை. நல்லதே நடந்து வரும்.

12-ம் வீட்டில் இருந்தால் செலவுகள் இருந்து வரும். சிலருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.

கேது
1-ம் வீடு முகத்தில் மச்சம் அல்லது வடு உண்டாகும். நல்ல கிரகங்களின் சேர்க்கை இருந்தால் நன்மை உண்டாகும்.

2-ம் வீடு அவர் நாக்கே அவருக்கு எதிரி. எப்போதும் கவலைகள் இருக்கும். சிலருக்கு இரண்டு மனைவிகள்.

3-ம் வீடு தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க மாட்டார். நவீன நாரதர் என்றும் கூறலாம். இளைய சகோதரத்துடன் பிணக்கு.

4-ம் வீடு நல்ல கிரகங்கங்கள் சேர்க்கை இருந்தால் 4-ம் வீடு குறிக்கின்ற ஆதிபத்தியங்கள் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நன்மை இல்லை.

5-ம் வீடு இஷ்ட தெய்வம் வினாயகர். புத்திர தோஷம் உண்டு. நல்லவர் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நல்லது செய்வர்.

6-ம் வீடு:-எதிரிகளை வெற்றி கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறுவர். எல்லோர் நடுவிலும் பெயர் பெற்று இருப்பர்.

7-ம் வீடு சிலருக்கு 2 மனைவிகள் உண்டு. நல்ல கிரக சேர்க்கை இருப்பின் ஒரு மனைவிதான் உண்டு. சோம்பேரித்தனமாய் இருப்பர். கெட்ட கிரக சேர்க்கை இருப்பின் மனைவியால் துன்பம்.

8-ம் வீடு துன்பங்கள் தொடரும். வியாதிகள் வரக்கூடும். சிலருக்குப் பெண்கள் சம்மந்தமான நோய் வரக்கூடும்.

9-ம் வீடு தகப்பனாருடன் நல்ல உறவு இருக்காது. தற்புகழ்ச்சி உள்ளவர். தெய்வ நம்பிக்கை குறைந்தவர். சுறுசுறுப்புக் குறைந்தவர்.

10-ம் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் நடுவில் பெயருடனும் புகழுடனும் இருப்பர். நம்பிக்கைக்குறிய வேலைக்காரர்கள் இருப்பார்.

11-ம் வீடு பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில் ஈடுபடுவர்.

12-ம் வீடு பாப காரியங்களில் ஈடுபடுபவர். பிதுரார்ஜித சொத்துக்கள் போய்விடும். கண்பார்வையில் கோளாறு இருக்கும். பெயர் புகழை இழப்பர்.
ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் லக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் லக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

முதல் வீடு :இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது லக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

இரண்டாவது வீடு :இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.

இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கி திக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே
செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு :இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர்.யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு :இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள்,பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?

5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு : கடன்,வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா லக்கினம் எனக் கொள்ளுங்கள். லக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள்.புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு :திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக லக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.

9-ம் வீடு :தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள்,ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு :ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.
தல் வீட்டின் பலனை அதன் அதிபதியை வைத்தும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூற வேண்டும். இந்த ஜாதகம் No. 1 -ஐப் பாருங்கள். 

Zoom in (real dimensions: 792 x 790)Image


இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதியான குரு 11-ம் வீட்டில் இருக்கிறார். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம். லக்கினாதிபதி 11-ம் வீட்டில் இருப்பது அவர் வாழ்வில் பெறப்போகும் உயர்வைக் காட்டுகிறது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டில் வாழ்கிறார். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்கிறார். லக்கினத்தில் புதன் இருக்கிறார். புதன் ஒருவருக்கு அறிவு கூர்மையைக் கொடுக்கும் கிரகமல்லவா ? புதன் இருப்பதால் அவர் Phd வரைப் படித்து இருக்கிறார். லக்கினத்திலுள்ள புதன் இவருக்கு நல்ல அறிவைக் கொடுத்து இருக்கிறார். இந்த 2-ம் எண் உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். லக்கினாதிபதி 3-ம் வீட்டில் இருக்கிறார். 3-ம் வீடு உபஜெயஸ்தானம் என்றழைக்கப் படும். 3-ம் வீட்டில் குரு இருந்தால் சகோதர,சகோதரிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வர். லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் தலையில் காயம் ஏற்பட்டு அதனால் வடு உண்டாகும். லக்கினம் என்பது தலையைக் குறிக்கிறது அல்லவா? அதேபோல் செவ்வாய் ரணம், காயங்களை எல்லாம் கொடுப்பவர் அல்லவா? அதேபோல் இவருக்கும் தலையில் காயம் பட்டு வடு உண்டாகி இருக்கிறது.

Zoom in (real dimensions: 789 x 790)Image


நாம் பல ஜாதகங்களை அதாவது லக்கினத்தில் செவ்வாய் உள்ள ஜாதகங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். ஒருவர் Motor Cycle-ல் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால் சென்ற லாரி மண்ணுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அடித்த காற்றில் மணல் பறந்து வந்து கண்ணில் விழுந்ததாம். அவர் நிலை தடுமாறி கீழேவிழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாம். அடுத்தவர் ஒரு பெண்மணி. அவர் மாடியில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். அவரின் குழந்தை படியில் இறங்கச் சென்றது. குழந்தையைப் பிடிக்கச்சென்ற இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். தலையில் காயம். வடு ஏற்பட்டு இருக்கிறார். அடுத்தவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். Fan கழன்று தலையில் விழ பெரிய அளவில் காயம் பட்டு இருக்கிறது. ஆக செவ்வாய் லக்கினத்தில் இருப்பாரேயாகில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுக் காயம் ஏற்படும். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இதே போல் ஜாதகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். அதாவது அது அவருக்குச் சொந்த வீடு அல்லவா? நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர். 2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர். 2-ம் இடம் வாக்குஸ்தானம் அல்லவா ?சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர். 3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது அல்லவா? அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது. 4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர். 5-ம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.

6-ம் வீட்டில் ல்க்கினாதிபதி இருந்தால் ஜாதகன் வியாதி உடையவனாக இருப்பார். அவருக்கு விரோதிகள், சத்துருக்கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடனுபாதைகள் நிறைந்தவரும், மனம் அமைதியற்றவனாகவும் இருப்பான். 6-ம் வீடு மறைவு ஸ்தானம் என்றும் துஸ்தானம் என்றும் அழைக்கப் படும். இந்த வீட்டில் லக்கினதிபதி இருப்பது நல்லது அல்ல. 7-ம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் ஸ்திரீ லோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார். பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார். சிலருக்கு மனைவி மூலமாய் சொத்துக்கள் சேரும். நாம் கீழே ஜாதகம் No.3-ஐக் கொடுத்துள்ளோம்.

Zoom in (real dimensions: 790 x 790)Image


இவர் எந்த வேலையையும் பொறுப்புடன் செய்தது இல்லை. ஸ்திரி லோலனாக இருந்து இருக்கின்றார். எப்போதும் வெளியில் சுற்றுபவராக இருந்தார். இவருக்கு லக்னாதிபதி 7-ல்; நாம் மேலே கூறியவையெல்லாம் இவருக்குப் பொருந்தி இருக்கிறது. லக்கினாதிபதி 8-ல் இருந்தால் ஆயுள் நிறைந்தவராக இருப்பார். ஆனால் சிரமத்துடன் குடுப்பத்தை நடத்துவராக இருப்பார். வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார். சிலர் உடலில் தேவையான ஊட்டமைன்றி இருப்பர். 8-ம் இடம் மறைவு ஸ்தானம் என்று கூறுவார்கள். பொதுவாக 8-ல் லக்கினாதிபதி இருப்பது விரும்பத்தக்கது அல்ல; 9-ம் இடத்தில் லக்கினாதிபதி இருந்தால் தகப்பனாரின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார். அதேபோல் பித்துருக்களின் அன்பைப் பெற்றவருமாய் இருப்பார். சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார். லக்கினத்திற்குப் 10-வது வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார். அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர். பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார். 10-ம் இடத்தில் லக்கினாதிபதி இருப்பது மிக நல்லது. 11-ம் வீட்டில் இருந்தால் லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார். இவருக்கு மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும். வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். 12-ம் வீட்டில் இருந்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். சிலர் அடிக்கடி இட மாற்றம் செய்வர். அலைச்சல் அதிகமாக இருக்கும். சோம்பேரி எனவும் திறமையற்றவர் எனவும் மற்றவர்களால் அழைக்கப்படுவர். சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.

லக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். லக்கினாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கிறது. லக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருகிறார்.

கிரகங்கள் நமது உடலில் சிலவற்றை குறிக்கின்றனர். அவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


சூரியன்ஆத்மாவிற்கு
சந்திரன்மனதிற்கு
செவ்வாய்உடல் வலிமைக்கு
புதன்பேச்சுக்கு
வியாழன்மகிழ்ச்சிக்கு
சுக்கிரன்உணர்ச்சிகளுக்கு
சனிவறுமைக்கு


ஏழு கிரகங்களும் மேற்கூறியவற்றிற்குக் காரகம் வகிக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லப் பயன் படும். ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவம் நன்றாக இருக்கிறது எனப் பொருள். உதாரணமாக குரு வலுத்து இருந்தால் அவன் நல்ல குணங்களைப் பெற்றவனாகவும், பணவசதியுள்ளவனாகவும், குழந்தைப் பேரு உள்ளவனாகவும் இருப்பான் எனக் கொள்ளலாம். அதேபோல் புதன் வலுத்திருந்தால் அவன் கெட்டிக்காரனாகவும், பேச்சுவன்மை உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் சனி வலுத்து இருந்தால் துன்பங்கள் குறைந்து இருக்கும். சனி வலுவிழந்தால் துன்பங்கள் அதிகரிக்கும்.

நீங்கள் ஜோதிடப்புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கலாம். படித்தால் தான் ஜோதிட அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக் கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படியுங்கள். இனிமேல் உங்களுக்குப் புரியும்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.

ஆண், பெண் ராசிகள் : மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை லக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ லக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ராசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?

வடக்கு, தெற்கு ராசி
மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப் படும்.

நெருப்பு ராசி (Fiery Signs)
மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை லக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

நிலராசி (Earthy Signs)
ரிஷபம்,கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக்கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

காற்று ராசி (Airy sign)
நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப்பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.

ஜலராசிகள்(Watery Signs)
கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful சிக்னஸ் என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள்
கற்பனை வளம்மிக்கவர்கள்.

இதைத் தவிர ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசியங்களைக் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர நன்மை பயக்கும் ராசிகள், மலட்டுத் தன்மையுள்ள ராசிகள், நன்மை பயக்காத ராசிகள், ஊமை ராசிகள், முரட்டு ராசிகள், மனித ராசிகள், சப்த ராசிகள், நான்குகால் ராசிகள், இரட்டை ராசிகள், குட்டை ராசிகள் நீள ராசிகள் என பல வகைப்பட்ட ராசிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லும்போது மிக உதவியாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றியெல்லாம் அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

23 comments:

  1. Reall super things u explained. Great sir

    ReplyDelete
  2. Detailed information for beginners, wonderful article.

    ReplyDelete
  3. அருமை அருமை ஐயா

    ReplyDelete
  4. நன்றி, எண்ணம் போல் வாழ்க

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா திருக்கணித பஞ்சாங்க முறையில் கணிக்கப் பட்ட பஞ்சாங்கங்களில்... ஆனந்த போதினி திருக்கணித பஞ்சாங்கம், காஞ்சி (1) மடத்து பாரத் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ரிய பஞ்சாங்கம் என்பவையும் அடங்கும்... அய்யா.

    ReplyDelete
  12. அய்யா...நமஸ்காரம். ஜாதகர் பிறந்த நேரம் அறிய..இந்திய பொது நேரத்தில் இருந்து கழிக்க வேண்டியது, அட்ச ரேகை, தீர்க்க ரேகை..இவைகளில் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக உணர்கிறேன் அய்யா. தவறு எனக் கூற வரவில்லை.. சரி பார்த்துக் கொள்ளலாம் தானே அய்யா.

    எனக்குத் தெரிந்த ஒரு சில விளக்கங்களை தங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

    முதலாவதாக தங்கள் பதிவிலுள்ள மாற்றத்தைக் கூறிக் கொள்கிறேன்..அய்யா.

    * ஆனைமலை :
    தீர்க்க ரேகை : 79−40
    அட்ச ரேகை : 10 − 24
    கழிக்க வேண்டியது : 24 − 11
    * காஞ்சிபுரம் :
    தீ.ரேகை : 79 − 45
    அ. ரேகை : 12 − 50
    க. வேண்டியவை : 11 − 33
    * குடியாத்தம் :
    தீ. ரேகை : 78 − 58
    அ. ரேகை : 12 − 57
    க. வேண்டியவை : 15 − 12
    * கும்பகோணம் :
    தீ. ரேகை : 79 − 25
    அ. ரேகை : 10 − 58
    க. வேண்டியது : 12 − 13
    * சென்னை :
    தீ. ரேகை : 80 − 17
    அ. ரேகை : 13 − 14
    க. வேண்டியவை : 9 − 45
    * பண்ருட்டி :
    தீ. ரேகை : 79 − 35
    அ. ரேகை : 11 − 47
    க. வேண்டியவை : 12 − 33
    * நாங்குனேரி :
    தீ. ரேகை : 77 − 47
    அ. ரேகை : 8 −09
    க. வேண்டியது : 19 − 55
    * மன்னார்குடி :
    தீ. ரேகை : 79 − 29
    அ. ரேகை : 10 − 40
    க. வேண்டியவை : 12 − 47
    * மேட்டுப்பாளையம் :
    தீ. ரேகை : 76 − 59
    அ. ரேகை : 11 − 18
    க. வேண்டியவை : 22 − 55
    * ராஜபாளையம் :
    தீ. ரேகை : 77 − 36
    அ. ரேகை : 9 − 27
    க. வேண்டியவை : 20 − 27.

    ReplyDelete
  13. அய்யா.. விளக்கம் கொடுக்கிறேன் சரி பார்த்துக் கொள்ளுங்கள் அய்யா.

    360 டிகிரி பாகை கொண்டது பூமி.
    உருண்டை வடிவமான பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 1− நாள் ஆகிறது(24 − மணி). அல்லது 1440 −நிமிடங்கள் ஆகும். (24 × 6 = 1440−நி) எனவே பூமி 360 டிகிரி பாகை சுற்ற எடுத் துக் கொள்ளும் நேரம் 1440 − நிமி டங்கள்.

    1 பாகை சுற்ற ஆகும் நேரம்
    =1440 × 1 / 360 டிகிரி.
    1440
    ---------- = 4 நிமிடங்கள்.
    360

    ஃ 1 பாகை சுற்ற ஆகும் நேரம் = 4 நிமிடங்கள் ஆகும்.

    பூமி தன்னைத்தானே மேற்கில் இருந்து கிழக்காக சுற்றுகிறது.

    அவ்வாறு மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும் பொழுது... முதலில் சூரிய ஒளி 180 டிகிரியில் பட்ட பின்பே.. 179 , 178 , 177− ன் மேல் படும். எனவே 180 டிகிரி பாகையில் உள்ள ஊரில் காலை 6− மணியாக இருக்கும் பொழுது... 179 பாகையில் காலை 5.56. 1 பாகைக்கு 4− நிமிடம் குறைவாக இருக்கும். இதே போல .. 80. 13 தீ. ரேகையில் உள்ள சென்னையில் காலை 6 மணயாக இருக்கும் பொழுது... 79.12ல் உள்ள பாபநாசத்தில் இன்னும் சூரிய ஒளி படாததால் 1 பாகைக்கு 4− நிமிடம் வேறுபாடு.

    எனவே... கிழக்கு செல்ல 1பாகைக்கு 4−நிமிடங்கள் வீதம் கூட்ட வேண்டும்.

    மேற்கு உள்ள ஊர்கட்கு 1 பாகைக்கு 4− நிமிடங்கள் கழிக்க வேண்டும்.

    எனவே... 82.30 கிழக்கு தீ. ரேகையைப் பொது நேரமாகக் கொண்ட இந்தியாவின் 82 . 30 பாகையைவிட அதிகமாக பாகை கொண்ட ஊர்கட்கு 1 பாகைக்கு 4−நிமிடம் வீதம் கூட்டியும்....
    82.30 பாகையைவிட குறைவாக பாகை கொண்ட ஊர்கட்கு ...1 பாகைக்கு 4− நிமிடங்கள் வீதம் குறைக்கவும் வேண்டும்.. இவை தான் ஃபார்முலா அய்யா.

    ReplyDelete
  14. அய்யா.. அடுத்துக்கய்யா.. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்று கிறது. தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரமாகும். சூரியனைச் சுற்ற 365 1/4 நாள் ஆகிறது. அது 1− ஆண்டு. எனவே சூரியன் பூமியை விட்டு ஒவ்வொரு நாளும் 1− பாகை , விட்டு விலகுவது போல தெரியும்.

    மார்ச் 21−ம், செப்டம்பர் 21−ம் உலகம் முழுவதும் இரவு பகல் சமம்.

    மார்ச் 21 பூமி மேலுள்ள சென்னையில் பகல் 12− மணிக்கு சூரியன் செங்குத்தாக பிரகாசிக்கிறான். மார்ச் 22− பகல் செங்குத்தாக பட பகல் 12− மணி நேரமும் 4 நிமிடமும் ஆகிறது..
    ஏனெனில்... மார்ச் 22−ஆம் தேதி பூமி தன்னைத் தானே சுற்றி, 1 பாகை முன்னே வந்துவிட்டது. எனவே சூரியன் செங்குத்தாக பட 12மணி 4 நிமிடம் ஆகும். அப்போ மார்ச் 23− ஆம் தேதி 12 மணி 8− நிமிடம் ஆகும்.

    எனவே ஓர் ஊரின் மேல் செங்குத்தாக பட்ட சூரியன் ஒளி, மீண்டும் அவ்வூரின் மேல் செங்குத்தாகப் பட ஆகும் நேரமே... "நட்சத்திர மணி" ஆகும்.

    இவ்வாறு... மார்ச் 22− ஆம் தேதியில் இருந்து... 1 நாளைக்கு கடிகார மணியை விட 4 நிமிடம் அதிகமாகிக் கொண்டு செல்வது நட்சத்திர மணி எனப்படும்.

    ஜாதகர் பிறந்த ஊரின் மேல் படும் இம்மாற்றத்தை ரேகாம்சம் திருத்தம் என்கிறோம்.

    இதன்படி... 1 நாளைக்கு வேறுபாடு... 4 நிமிடங்கள் . அதாவது 360 பாகைக்கு வேறுபாடு = 4 நிமிடங்கள். அல்லது 240 நொடி ஆகும்.

    1 பாகைக்கு வேறுபாடு =

    240 2
    1 × --------- = ----- நொடி ஆகும்.
    360 3

    எனவே ... 82.30−ஐ விட அதிகமாக பாகை உள்ள ஊர்கட்கு... 2/3 நொடி வீதம் கூட்ட வேண்டும். குறைவாக உள்ள ஊர்கட்கு 2/3 நொடி வீதம் குறைக்க வேண்டும்.

    எனவே பிறந்த நேரத்தை அறிய .. தீர்க்க ரேகை திருத்தம்,ரேகாம்ச திருத்தம் இரண்டையும் இணைத்து பிறந்த நேரம் அறிய வேண்டும்.

    பிறந்த நேரத்தில் இருந்து, பிறந்த ஊர் எதிராக கூட்ட வேண்டும் என்றால் கூட்டியும், கழிக்க வேண்டும் என்றால் கழித்தும் பிறந்த நேரத்தை அறிய வேண்டும்.

    பிறந்த நேரத்தை அறிந்த பிறகே..அந்த நேர்த்திற்குரிய லக்னத்தை... * உடனடி முறை * கடிகார மணி முறை *வாக்கிய பஞ்சாங்க முறை * திருக்கணித பஞ்சாங்க முறை * நட்சத்திர மணி முறையென 5−முறைகளில் லக்னம் அறியலாம்.

    குறிப்பு : 82.30 பாகைக்கு அதிகமாகியுள்ள ஊர்கட்கு நிமி டங்கள் வினாடிகளைக் கூட்டியும், குறைவாக உள்ள ஊர்கட்கு கழித்தும் பிறந்த நேரம் அறியவும். இது தான் ஃபார்முலா அய்யா.

    ReplyDelete
  15. பின்னும் விடுபட்ட கூடுதலான விபரம்...

    * அதிராம்பட்டிணம் :
    அட்ச ரேகை : 10−21
    தீ. ரேகை : 79−25
    கழிக்க வேண்டி யவை : 13−12.

    * ஆத்தூர்(சேலம்) :
    அ. ரேகை : 11−36
    தீ. ரேகை : 79−39
    க. வேண்டியவை : 16−40

    * ஆத்தூர் (மதுரை) :
    அ. ரேகை : 10−16
    தீ. ரேகை : 77−53
    க. வேண்டியவை : 19−20.

    * உடையார் பாளையம் :
    அ. ரேகை : 11 − 11
    தீ. ரேகை : 79.20
    க. வேண்டியவை : 13−32.

    * ஊத்தங்கரை :
    அ. ரேகை : 12−16
    தீ. ரேகை : 79−35;
    க. வேண்டியவை : 16−32.

    * எண்ணூர் :
    அ. ரேகை : 13−14
    தீ. ரேகை : 80−22
    க. வேண்டியவை : 9.25.

    * தஞ்சாவூர் :
    அ.ரேகை : 10−47
    தீ. ரேகை : 79−10
    க.வேண்டியவை : 14−12.

    * திருவண்ணாமலை :
    அ. ரேகை : 12−15
    தீ. ரேகை : 79−07
    க. வேண்டியவை : 14−24.

    * திருமங்கலம் :
    அ. ரேகை : 9−49
    தீ. ரேகை : 78−01
    க. வேண்டியவை :18−48.

    * பரமக்குடி :
    அ. ரேகை : 9−51
    தீ. ரேகை : 78−39
    க. வேண்டியவை : 16−36.

    * பல்லாவரம் :
    அ. ரேகை : 12−58
    தீ. ரேகை : 80−13
    க. வேண்டியவை : 10−00.

    * பொள்ளாச்சி :
    அ. ரேகை : 10−39
    தீ. ரேகை : 77−03
    க. வேண்டியவை : 22−33.

    * மகாபலிபுரம் :
    அ. ரேகை : 12−37
    தீ, ரேகை : 80−14
    க. வேண்டியவை : 9.57.

    * மயிலாடு துறை( மாயவரம்):
    அ. ரேகை : 11−06
    தீ. ரேகை : 79−42
    க. வேண்டியவை : 12−05.

    ReplyDelete
  16. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா என் மகனுக்கு ஜாதகம் கணிக்க வேண்டும். தங்கள் முகவரி தெரியுங்களேன். தங்களை எப்படி தொடர்பு கொள்வது..எனத் தெரியவில்லை. என் மகனின் ஜாதகம் தங்களிடம் தான் கணிக்க வேண்டும் என்பது பல வருட ஆசை எனக்கு. பதில் தெரிவிப்பீங்களா..?

    ReplyDelete
  17. சூர்யாஷ்டக வர்க்கம் :

    அஷ்டவர்க்கம் :

    அஷ்டக வர்க்கம் என்பது , சூரியன் முதல் சனி வரையுள்ள கிரஹங்கள் 7; லக்னம் −1 இந்த எட்டும் தான்... அஷ்டவர்க்கம் எனப்படும்.

    இந்த எட்டையும் கொண்டு.. கோசாரத்தில் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கிற ஒவ்வொரு கிரஹத்திற்கும் உள்ள சுபாசுப பலன்கள் அஷ்ட வர்க்கத்தால் நிருபிக்கப்படுகின்றன.

    இவற்றுள் முதலில் சூரியாஷ்டக− வர்க்கம் முதலில் காணலாம்.

    * சூரியன் ஜன்ம காலத்தில் தான் இருக்கும் ராசியில் இருந்து ...
    1 , 11 , 4 , 8 , 2 , 10 , 9 , 7 இவ்விடங் களை அடைந்தால் சுபானாவான்.

    * அங்காரகன் தான் இருக்கும் இடத்தில் இருந்து, தான் ஜன்ம காலத்தில் இருந்த ஸ்தானத்தில் இருந்தது போலவே(1, 11,4, 8, 2, 10, 9, 7) இருந்தால் சுபானாவான்.

    * சனி இருக்கும் இடமிருந்து, மேலே கூறியது போன்று (1, 11, 4, 8, 2, 10, 9, 7)
    இருந்தால் சுபானாவான்.

    * சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து... 7, 12, 6 − இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான்.

    * குரு இருக்கும் இடத்தில் இருந்து...
    9, 5, 11, 6 − இவ்விடத்தில் இருந்தால் சுபானாவான்.

    * சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து... 10, 3, 11, 6, இவ்விடத்தில் இருந்தால் சுபானாவான்.

    * புதன் இருக்கும் இடத்திலிருந்து..
    10, 3, 11, 6, 12, 9, 5 இவ்விடத்தில் இருந்தால் சுபானாவான்.

    * ஜன்ம லக்கனத்தினின்றும் , 4, 12 ஸ்தானங்களுடன் கூடிய 10, 3 , 6 அதாவது...4 , 12 , 10 , 3 , 11 , 6 இவ்விடங்களில் இருந்தால் சுபானாவான்.

    இவற்றில் குறிக்கப்பெறாத ஸ்தானங்கள்...அசுபஸ்தானங்கள் ஆகும்.

    STATEMENT : 1

    சூர்யாஷ்டக வர்க்கம் − சுபம்
    -------------------------------------------------

    கிரஹம் | இ.இடத்தில்| ஸ்தானம்
    ----------------|----------------------|------------------|-----------
    சூரியன் | தான் இ.இ |1,11, 4 ,8, 2,10,9,7
    " | செவ்வாய் | " " " "
    " | சனி | " " " "
    " | சுக்கிரன் | 7 , 12 , 6
    " | குரு | 9 , 5 , 11 , 6
    " | சந்திரன் |10 , 3 , 11 , 6
    " | புதன் |10, 3,11, 6,12, 9, 5
    " | லக்னம் |10, 3, 11, 6, 4, 12
    ----------------------------------------------------------------------
    சுபன் மொத்தம் = 48
    ( 8 + 8 + 8 + 3 + 4 + 4 + 7 + 6 = 48 )
    ----------------------------------------------------------------------

    ReplyDelete