Thursday, 18 September 2014

ஜனன தீட்டு

பிறப்புதோஷம் (ஜனன தீட்டு)

      ஒருவருக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு தீட்டு உண்டாகிறது. இந்த தீட்டு ஷத்திரியர்களுக்கு 12 நாட்களும், வைசியர்களுக்கு 15 நாட்களும் தீட்டு உண்டு, இந்த காலங்களில் கோவில்களுக்கு செல்வதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதும், இறப்பு வீடுகளுக்கு செல்வதும் கூடாது. சிலருக்கு கருகலைவதும் உண்டு. அவ்வாறு கருகலைந்தால் கலைந்த கருவுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நாட்களுக்கு தீட்டு உண்டு.
        பிரசவித்த பெண்ணை தொட்டலோ அல்லது பிரசவமான வீட்டில் உணவு சாப்பிட்டாலோ அவர்களுக்கும் பத்து நாட்களுக்கு தீட்டு உண்டாகும், அவர்களும் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.குழந்தை பிறந்த வீட்டில் ஜன்மதை என்னும் தேவதை வந்து குடிகொள்ளும் அந்த தேவதைக்கு குழந்தை பிறந்த மூன்று, ஆறு அல்லது பத்தாவது நாளில் தீட்டு கழித்து பூஜைகள் செய்யவேண்டும்.
       ஆண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஆறாவது மாதமும், பெண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஐந்தாவது மாதமும் சிறப்பானது

No comments:

Post a Comment