Tuesday 23 September 2014

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. 

வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை,
FILE

(1) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

(2) ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

(3) ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.

(4) ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.

(5) உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

(6) ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.

No comments:

Post a Comment