Saturday, 27 September 2014

அழகிய மனைவி யாருக்கு அமைவாள் ? .

அழகிய மனைவி யாருக்கு அமைவாள் ? .
அழகு என்பது எது/ அதை தீர்மானிப்பது எப்படி? 
எதுவெல்லாம் மனதிற்கு அமைதியையும், மகிழ்வையும், இனிமையையும், நிறைவையும் தருகிறதோ அதுவே அழகாகும். எதிலும் மனம் இலயிக்க மறுக்கிறதோ, எதில் மனம் நிறைவை அடையவில்லையோ, அதில் அழகு இல்லையென்று அர்த்தம்.
எனக்கு அழகாகத் தோன்றுவது, மற்றவர்க்கும் அழகாக தோன்றவேண்டும் என்பதில்லை. எனக்கு அழகாகப்பட்டது, மற்றவர் மனதில் சலனத்தை ஏற்படுத்தாதபோதும் அது அழகுதான். என் மனதுக்குப்பிடிக்காத எதுவும், மற்றவர்க்கு அழகாகத் தோன்றினால், அதில் தவறொன்றுமில்லை.
நான் வசிக்கும் குடிசை வீடு, எனக்குப்பிடிக்காத போது, வெளிநாட்டுக்காரன் கண்களுக்கு அழகாகத் தெரிவது எப்படி?
வெள்ளையனுக்கு வைரமாய் தெரிந்தது: ஆனால் ஆப்ரிக்கனுக்கு கண்ணாடிச் சில்லாக அல்லவா தெரிந்தது|
எனக்குப் பிடிக்காத அந்தபெண்ணுக்கு, என்னைப் பிடிக்கவில்லையாம்?
அதனால் இது தான் அழகு; இது அழகில்லையென்று, வரையறை வைக்கமுடியாது.
மனதை வருடும் எதுவும் அழகுதான்.
எப்போதுமே உருவத்தின் வடிவத்தைத்தான் அழகுயென்கிறோம். உருவத்துள் இருக்கும் ஒளிவடிவை யாரும் அறிவதில்லை. அதற்கு அறிவும் இடம் கொடுப்பதில்லை.
எப்போதெல்லாம் அறிவு தடுமாறுகிறதோ, அப்போதெல்லாம் மாயைகளில் வீழ்வோம். அந்த மாயைகளில் ஒன்றுதான் புற அழகு.
ஜோதிடரீதியாக எந்தெந்த கிரக இணைவுகள், அழகான மற்றும் அன்பான மனைவியைத் தரும் எனக் காண்போம். 
ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்குரியவன் கேந்திர கோணம் பெற்றாலும், ஏழாம் வீட்டில் சுபக்கிரகத்துடன் சுக்கிரன் அமரவும், அல்லது சுக்கிரன் நின்ற இராசிக்கு, ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் நின்றாலும் வரக்கூடிய மனைவி அழகானவள். பாக்கியம் நிரைந்தவள். மேலும், குடும்பத்தின் “தேவி” எனப் போற்றத் தகுந்தவள்.
இலக்கினத்துக்கு நான்கு, பதினொன்றில் ஏழாம் அதிபதி அமரவும், இலக்கினத்துக்கு பதினொன்றாம் அதிபதி குடுமப வீடான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும், அல்லது, ஏழு, பதினொன்றுக்கு உடையவருடன், இரண்டாம் அதிபதி தொடர்பு கொண்டாலும் அழ்கும், குணமும், சொத்தும் நிரம்பிய பெண்ணே மனைவியாக வருவாள். சுக்கிரனும், பத்தாமதிபனும் எப்படித்தொடர்பு கொண்டாலும், பார்ப்பதற்கே பேரழகான பெண்ணே மனைவியாக வருவாள்.
ஏழில் குருவிருந்து, சுக்கிரன் பலம்பெறவும், இரண்டாமதிபதி நட்பு வீடேறவும், அல்லது ஏழாமதிபதி குருவுடன் கூடியோ, பார்த்தோ இருந்தாலும், மேலும், பிறப்பு ராசியில் குருவும், சந்திரனும் கூடியிருந்து, ஏழாமதிபதி புதன் காணவும் எழிலான வடிவுடைய, இரக்கச்சிந்தனை நிரம்பிய, தான தர்மம் செய்யும் பெண் துணைவியாக வருவாள்.
ஏழில் சுக்கிரன் நின்றால், எடுப்பும், மிடுக்கும் நிரம்பியவள் மனைவியாக வருவாள்.
ஏழுக்குடையவன் நான்கு, பத்தில் அமர, கற்புக்கனலே மனைவியாக வருவாள்.
நவாமச இலக்கினத்துக்கு ஏழில் குரு, சந்திரனிருக்க பேரழகான பெண் அமைவாள். 
ஏழாமதிபதியும், பத்தாமதிபதியும் கூடி, ஏழாம் வீட்டில் அமர, வருமானம் மிகுந்த அழகியை மணப்பான்.
பொதுவாக, இலக்கினாதிபதி, இலக்கினத்தில் உள்ள கிரகங்களையோ, குடும்பஸ்தானத்திலுள்ளகிரகத்தையோ காணவேண்டும். அல்லது இவ்விடங்களிலுள்ள கிரகத்தையோ காணவேண்டும். அதுவும் இல்லை என்றால், அவ்விடங்களின் அதிபதியைக் காணவேண்டும். மேலும்,
ஏழாமிடம் சுக்கிரன், சந்திரன் வீடாகி, அவர்கள் சுபக்கிரகச் சேர்க்கையோ சுப நவாம்சமோ அடைய வேண்டும்.ஏழாமிடத்தை குருபோன்ற சபக் கிரகமும் காணவேண்டும். அப்போதுதான் “ ஜாதக பாரிஜாதத்தில்” கூரியபடி, “ வாழ்வினில் ரூபியாக வரும் குணவதியாய் பெண்டீர்” தான் வாழ்க்கைத்துணைவியாக வருவாள்.
இலக்கினத்தில் சந்திரன் நின்று, சூரியன் உச்சம்பெற, அழகான, மிகவும் சாதுவான பெண் மனைவியாக வருவாள்.
புதனும், குருவும் ஏழிலமர, புனிதமானவள்.
தன் வீட்டில் தான் அமரந்த சுக்கிரன், அழகான பெண்ணை மனைவியாகத் தருவான்.
அசுரனும், தேவனும் ஒருவரையொருவர் நோக்க, பெரிய இடத்துப்பெண் மனைவியாக வருவாள்.
அழகானப் பெண்ணைப் பற்றிய கட்டுரையில், அழகான சந்தக்கவி இடம்பெற வேண்டும் அல்லவா?
வாரும் குறுமுனியே | கவி
தாரும் சுவை இனிதே |
1. இரண்டு, நான்கு, ஏழு, பத்துக்குடையவர்களுடன், இலக்கினாதிபதி ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.
பாடுமொழித் தோகையினை நாகரீகமாக இவன்
பாலியத்தில் மணம் செய்வான்.
2. இலக்கினாதிபதி கேந்திர, கோணம்பெற. 
வேலமனை நீலவிழி கோலமனை பாலியமே
வேட்டல் செய்வான்.
3. இலக்கினத்துக்கு இரண்டாமதிபதியும், ஏழாமதிபதியும் ஆட்சிபெற,
இவ்வுலகில் நவ்விழி செவ்வியளைப் பவ்வியமாய்
ஏகக் களத்திரத்தின் இன்புறுவான்.
4. சனி, புதனுடன், ஏழாமதிபதி கூடி, குரு காண, அல்லது சனிபுதன், ஏழாமதிபதி கூட,
மலர் மென்கொடி உலவுமெனத் தவமும் புகழ் குலமங்கையை
வதுவை செய்வான் குணசீலியைத் தான்.
5. இலக்கினத்தில் ஏழாமதிபதி அமர, பத்தில் புதன், சந்திரன் இருக்க,
தோகை மயிலாக எனப் பாகு மொழியாகி நற்
சுந்தரியும் சுகம் நல்குவாள்.
6. சுக்கிரனுக்கு ஏழாம்வீட்டில் புதன், குரு, சந்திரன் கூடியிருக்க,
துடியிடை நற்பிடிநடை பொன்குட முலையின்
வடிவுடைய 
தோகை பாக்கியத்தில் துலங்குவாள். என அகத்தியமுனிவர் பாடிமுடித்தார்.

No comments:

Post a Comment