Thursday, 25 September 2014

"ஆயுளைக் கூட்ட ஆயிலைக்(oil) குறை"

இன்றைய வாசகம் இதுதான் "ஆயுளைக் கூட்ட ஆயிலைக்(oil) குறை"
அறை வெப்பத்தில் (Room Temperature) உறையக் கூடிய எந்த எண்ணெயையும் உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - உதாரணங்கள் - நெய், தேங்காய் எண்ணெய், டால்டா.
ஆலிவ் எண்ணெயைப் போல கெனோலா ஆயிலும் (Canola) மிக நல்லது.
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் எண்ணெயில் இயற்கையாக உள்ள சத்துக்களை அழித்து விடுவதால் இக்காலத்திய வெஜிடபிள் ஆயில்களும் (Corn, Sunflower) எந்த ஊட்டமும் தருவதில்லை; மாறாக ரீஃபைண்ட் செய்யப்படாத நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அளவு குறைத்து சமையலில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டால் உடனே மிகச் சூடாக வெந்நீர் குடித்தால் உணவுக் குழாயில் எண்ணெய் படிவதையும், அஜீரணக் கோளாறுகளையும் ஓரளவு தவிர்க்கலாம்

No comments:

Post a Comment