PF DETAILS
வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம், 6,500 ரூபாயை வரம்பாக வைத்து, பெரும்பாலான நிறுவனங்கள் பி.எப்., பிடித்தம் செய்து வருகின்றன. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில், அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து, 12 சதவீத தொகையைபிடித்தம் செய்வது நடைமுறை.இதே அளவு தொகையை, நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.தற்போது, பி.எப்., பிடித்தம் செய்வதற்கான சம்பளத் தொகை வரம்பு, 6,500 ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் எனில், அதிகபட்சமாக, 6,500 ரூபாய்க்கு, 12 சதவீதம் என, 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பி.எப்., இப்போது, 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத் தும் தொகையில், 8.33 சதவீத தொகை பி.எப்., பென்ஷனுக்காகவும், மீதமுள்ள, 3.36 சதவீத தொகை, பி.எப்., கணக்கிலும் வரவு வைக்கப்படும்.இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம், 541 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை, 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.இது மட்டுமின்றி, வரும் செப்., 1 முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு, சந்தாதாரராக இருந்த, 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். ஆக., 31 வரைக்குமான பென்ஷன் ஊதியத் தொகை 6,500 ரூபாய் ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும், தொடருகிற காலத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப்படும்.
2014 செப்., 1ம் தேதி முதல், ஓய்வூதிய திட்டமானது, 15 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிற பி.எப்., உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். செப்., 1 தேதி முதல், 15 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுபவர்களுக்கு, தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பி.எப்., சந்தா தொகையிலிருந்து, ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது.பி.எப்., அமைப்பு, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள், தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையை, குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், 50 லட்சம் தொழிலாளர் கள் பயன் அடைவர்.- என்று சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் எஸ்.டி. பிரசாத்:தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment