Saturday, 4 October 2014

ராகு கேது பீரிதி பரிகாரம்

ராகு கேது பீரிதி பரிகாரம் !

சரி இந்த அமைப்பில் ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் என்ன பரிகாரம் செய்தால் இந்த பாவக அமைப்பில் இருந்து நன்மை பெற முடியும் :


மற்ற ஜோதிடரை கேட்டால் அவர்கள் சொல்லும் பரிகாரம் :

ஒரு வெள்ளி கிழமை நாளில் உங்களுக்கு பக்கத்தில் உள்ள ஒரு பாம்பு புற்று கண்ணுக்கு , சிகப்பு ஆடை அணிந்து சென்று மஞ்சள் , குங்குமம் அனைத்தையும் அந்த புற்று கண்ணை துவி விட வேண்டும் , பிறகு அந்த புற்றினை 48 முறை வளம் வரவேண்டும், பிறகு தான் கொண்டு சென்ற மஞ்சள் நீரில் நனைத்த நூல் கண்டினை வலமிருந்து இடமாக புற்றின் மீது ஒன்பது சுற்றுகள் , சுற்ற வேண்டும் . பிறகு கிழக்கு முகமாக திரும்பி நின்று நாக தேவதையை நன்றாக வழிபட வேண்டும் , ஒரு லிட்டர் பசும் பாலை புற்றின் அருகே வைக்க வேண்டும் , சிறிது நேரத்தில் நாக சர்ப்பம் அந்த பாலை வந்து குடித்துவிட்டு சென்று விடும் , உங்களுக்கும் ராகு கேது அன்றிலிருந்து நன்மையை மட்டுமே செய்யும் . ( படையப்பா, மற்றும் நாகாத்தம்மா படத்தில் சத்தியமாக இதுதான் நடந்தது )

(
ஜோதிடர் அதிகம் தமிழ் பக்தி படம் பார்த்து அதை அப்படியே நமக்கு பரிகாரமாக சொல்லிவிடுவார், உண்மையில் எந்த பாம்பும் பால் குடிப்பதில்லை, காரணம் பாம்புக்கு பிளவு பெற்ற இரட்டை நாக்கு கொண்டது, இரையை முழுங்க மட்டுமே முடியுமே தவிர பால் , பாயசம் எல்லாம் சாப்பிட வாய்ப்பு இல்லை)

சரி முன்னோர்கள் செய்தது எல்லாம் தவற என கேள்வி உங்களுக்கு வரலாம் ? அதற்க்கு உண்மை விளக்கம் பாம்பு புற்றுக்கு மஞ்சள் , மற்றும் குங்குமம் ஆகியவைகளை துவியதர்க்கு காரணம் பாம்புகள் இந்த வாசனையை நுகர்ந்தால் மறுமுறை அந்த இடத்திற்கு வாராது என்ற அறிவியல் உண்மையே . மனிதர்களை பாம்புகள் தீண்டாமல் இருப்பதற்கே இந்த முறையை முன்னோர்கள் கடை பிடித்தனர் .

எங்களிடம் இருந்து வரும் சரியான பதில் மற்றும் பரிகாரம் :

ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் தனது தாய் வழி அப்பிச்சி , ஆத்தாளையும் , தகப்பன் வழி பாட்டன் , பாட்டியையும் நன்றாக பார்த்து கொள்வதும் , அவர்களது மன விருப்பங்களையும் , ஆசைகளையும் நிறைவேற்றி , அவர்களது அன்புக்கு பாத்திரமாவதே சரியான பரிகாரம் ஆகும் , காரணம் இவர்கள் வழியில் இருந்தே ராகு கேது நன்மை தீமை பலன்களை வழங்கு கின்றனர்

இனி வரும் தலை முறைகள் இதை உணர்வது அவசியம் நவகிரங்கள் இந்த வகையிலிருந்தே அதிக நன்மைகளை நமக்கு நிச்சயம் வழங்கும் , தாய் வழி அப்பிச்சி , ஆத்தாளையும் , தகப்பன் வழி பாட்டன் , பாட்டியையும் சரியாக கவனிக்காமல், நீங்கள் எந்த புத்து கண்ணுக்கு லிட்டர் கணக்கில் பால் வார்த்தாலும், நமக்கு எந்த வித நன்மையையும் நடந்து விட போவதில்லை

No comments:

Post a Comment