Saturday 4 October 2014

பலி பீடம்

பலி பீடம்

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என
நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment