Wednesday, 15 October 2014

காகம் உண்ணுவதால் திருப்தி அடைகிறார்களா?

 காகம்  உண்ணுவதால் திருப்தி அடைகிறார்களா?

எள்விதையும் அரிசியும் கொண்டு செய்யப்பட்ட பிண்டத்திற்கும் அதை உண்ணும் காகத்திற்கும், என்ன தொடர்பு என பலர் வியக்கக்கூடும். காகம் பிண்டத்தை உண்பதால், மறைந்த நமது மூதா தையர்கள் ஒருவருட கால த்திற்கு மனநிறைவு  அடைகிறார்கள் என நமது ஆன்மீக ஆராய்ச்சி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நீத்தார் சடங் கில்(சிரார்த்தம்) பிண்டத்தைப் படைத்து மூதா தையர்கள் வேண்டி வரவழைக்கப்படுவது, அவர் களது தீராத ஆசைகள் நிறைவுபெற உதவுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு பல ஆசை கள் இருப்பதால், அவனது சூட்சும உடல் ரஜோ- தாமோ அதிர்வலைகளை அதிகப்படியாக வெளியிடும். அதிகப்படியான ரஜோ-தாமோ அதிர்வலை களை கவர்ந்து  இழுக்கக்கூடிய பறவை காகமாகும். அதனால் அந்த அதிர் வலைகளை காகத்தால் கண்டுணர முடியும். மறைந்த மூதாதையர்கள் பிண்டத்தால் கவரப்பட்டு வருவதால், அப்பிண்டம் அந்த ரஜோ-தாமோ அதிர்வலைகளை தன்னுள் கிரகித்துக்கொள்கிறது. அந்த அதிர்வலைகளை காகம் கவர்ந்து இழுக்கப்படுகிறது. பிண்டத்தை காகம் கொத்தி உண்பதுதான், அந்த சிரார்த்த இடத்திற்கு மூதாதையர்கள் வந்துள்ளார்கள், நமது படை யலினால் அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்பதற்கு அறிகுறியாகும். இந்த நடைமுறைக்கு “காகம் கொத்துதல்” என்று அறியப்படும்.இப்படியாக,காகம் மனிதர்களுக்கும், நிறைவேறாத ஆசைகளோடு திரியும் சூட்சும உடல்களுக்கும் இடையே இணைக்கும் பாலமாக இருக்கிறது

No comments:

Post a Comment