Tuesday 18 November 2014

பெண்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான காரணங்கள்!!

1.மோதிரம்
மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரல் மோதிரங்கள் உதவுகின்றன. பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் கூட தங்கள் விரல்களில் மோதிரம் அணிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
2.தோடு
சிறு வயதில் காது குத்தி, தோடு போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் மற்றும் உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன.
3.மூக்குத்தி
மூக்குத்தி பெண் குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கு நடக்கும் போது, மூக்குக் குத்தும் படலமும் அரங்கேறுவது வழக்கம். வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைப்பதற்காகவே அவர்களுக்கு மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிந்து கொள்வதால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நரம்பு உயிர் உற்பத்தில் செய்யும் உறுப்புக்களைத் தூண்டுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் எளிதாவதாகக் கூறப்படுகிறது.

4.தாலி () நெக்லஸ்
தாலி () நெக்லஸ் பெண்கள் தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. குறிப்பாக, தாலிகளில் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு சிறு அணிகலனும் பெண்களின் உடம்பையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.
5.வளையல்

வளையல் சீரான இரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களும் பெண்களுக்குக் கை கொடுக்கின்றன. அவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல் உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுடைய எனர்ஜி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன.

6.நெற்றிச் சுட்டி
 
நெற்றிச் சுட்டி தலையிலிருந்து தவழ்ந்து வந்து நெற்றியில் அழகாகக் குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.
7.இடுப்பணி

இடுப்பணி பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் அல்லது அரைஞான் கயிறை அணிந்து கொள்வது வழக்கம். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்குமாம்! வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
8.கொலுசு
கொலுசு பூமியுடன் பெரும்பாலும் தொடர்பிலிருக்கும் கால்களில் பெண்கள் அணியும் கொலுசு, அது தரும் ஒலியின் மூலம் அவர்களிடம் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம்! மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும் கொலுசு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

9.மெட்டி

மெட்டி இரு கால்களிலும் உள்ள கட்டை விரலுக்கு அருகிலிருக்கும் விரலில் மெட்டி அணியப்படுவது வழக்கம். பெண்களின் கருப்பையையும் இதயத்தையும் இணைக்கும் நரம்பு, இந்த விரல் வழியாகப் பாய்வதால், அவர்களுடைய மாதவிடாய் கால இரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

No comments:

Post a Comment