சுக்கிரபகவான்
இறை அருளால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரபகவான் குடும்பம் , மற்றும் களத்திர பாவகத்தின் அதிபதியாக பதவி வகிக்கிறார் , இது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு என்ற பொழுதும் , ஒருவருடை ஜாதக அமைப்பிற்கு களத்திர காரகன் என்று பொதுவாக அழைக்க படுபவர் சுக்கிர பகவனே . பொதுவாக இவருடைய திசை ,புத்தி , அந்தாரம் நடக்கும் பொழுது திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உண்டு என்று பொது பலனாக பல ஜோதிடர்கள் சொல்வதும் உண்டு , மேலும் ஜாதக அமைப்பில் சுக்கிர பகவான் நல்ல நிலையில் அமரும்பொழுது , அந்த ஜாதகர் மிகசிறந்த அதிர்ஷ்டசாலியாகவே கருதப்படுகிறார் என்பது எவராலும் மறுக்க முடியாது , இவரின் பரிபூரண அருள் பெற்றவர்கள் சமுதாயத்தில் மிக சிறந்த உயர்வான நிலையில் இருக்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை , பூமியில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் , சகல செல்வ வளங்களையும் வாரி வழங்கும் தன்மை பெற்றவர் இவர் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இந்த சுக்கிர பகவானை பற்றி இந்த பதிவில் கொஞ்சம் சிந்திப்போம் .
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரன் பெரும் முதல் நிலை :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தான அதிபதியாக, சுக்கிரபகவானை ரிஷபராசி , ஸ்திர மண் தத்துவ, அமைப்பில் அதிகாரம் செய்ய அருள் புரிந்து இருக்கிறார், இந்த அமைப்பை நாம் காணும் பொழுது , ஒரு மனிதனுக்கு குடும்ப வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை நிச்சயம் உணர முடியும் , ஸ்திரம் என்றால் நிரந்தரம் , ஒரே நிலையான அமைப்பு , ஸ்திரமான புத்தி , தடுமாற்றம் அற்ற நிலை ஆகியவைகளை குறிக்கும் . மண் தத்துவம் என்பது அன்பு , பாசம் , பற்று ,பொறுமை , அனைத்தையும் உணர்ந்து செயல் படும் தன்மை , சூழ்நிலை உணர்ந்து சிறப்பாக பேசும் தன்மை , உடல் அமைப்பு , பெருந்தன்மை , விட்டு கொடுக்கும் மனப்பான்மை , பொதுநலம் ஆகியவைகளை குறிக்கும் .
ஆக ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை என்பது மேற்கண்ட தத்துவ அமைப்பில், அமையும் பொழுது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகருக்கு இடம் பொருள் ஏவல் தெரிந்து நடந்து கொள்ளும் ஆற்றல் , தனம் எனும் வருமானமும் , வாக்கு பேச்சு திறன், அமைப்பு ஸ்திர மண் அமைப்பில் நிலையாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் இதன் மூலம் உணர முடியும், ஒருவருக்கு எந்த லக்கினம் என்றாலும் , ரிஷப வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அமைதியான குடும்ப வாழ்க்கை , நிலையான வருமானம் , நிலையான பேச்சு , குடும்பம், மனைவி வழியில் இருந்து மகிழ்ச்சி ,சந்தோசம் ,முன்னேற்றம் போன்ற அமைப்புகள் மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது .
ஆக ஒருவருக்கு தனம், குடும்பம் ,வாக்கு சிறப்பாக அமைய வேண்டும் எனில் இந்த ரிஷப வீடும், அவரது சுய ஜாதக அமைப்பிற்கு இரண்டாம் பாவகமும் நன்றாக அமைய வேண்டு , அப்படி அமையும் ஜாதகர் அனைவருக்கும் , நிச்சயம் குடும்ப வாழ்க்கை நிச்சயம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும்.
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரன் பெரும் இரண்டாம் நிலை :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தான அதிபதியாக, சுக்கிரபகவானை துலாம் ராசி , சர காற்று தத்துவ, அமைப்பில் அதிகாரம் செய்ய அருள் புரிந்து இருக்கிறார், இந்த அமைப்பை நாம் காணும் பொழுது , ஒரு மனிதனுக்கு வாழ்க்கை துணை , நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் , மக்கள் செல்வாக்கு , சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகள், அமையும் நிலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , சரம் என்றால் இயக்க நிலை , காற்று தத்துவம் அறிவாற்றலை தரும் , எனவே ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணை நிச்சயம் நல்ல சமயோசித புத்தியுடன் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் , மேலும் இவருக்கு அமையும் நண்பர்கள் , கூட்டாளிகள் அனைவரும் இந்த அமைப்பில் இருந்தால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி என்பதில் சந்தேகம் இல்லை , ஜாதகருக்கு ஏற்ப்படும் அனைத்து நன்மை தீமைகளுக்கும், ஒன்று ஜாதகரின் வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் , அல்லது நண்பர்களாக இருக்க வேண்டும் , அவரது தொழில் முறை கூட்டாளியாக இருக்க வேண்டும் .
எனவே ஜாதகருக்கு வாழ்க்கை துணை , நண்பர்கள் , கூட்டாளிகள் மேற்க்கண்டது போல் நன்றாக இருக்கும் சர காற்று தத்துவ, துலாம் ராசியை போல் அமைந்து விட்டால் , ஜாதகரின் முன்னேற்றம் எந்த வகையிலும் நிச்சயம் பாதிக்க வாய்ப்பு இல்லை , இதை தான் ஒரு மனைவி என்பவள் சிறந்த மதியுகி மந்திரியாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர் , மேலும் இது போன்றே மதியுகி மந்திரியாக நண்பர்களும் , கூட்டாளிகளும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அந்த நபர் வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் பெற்று விடலாம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .
ஆக ஒருவருக்கு வாழ்க்கை துணை , நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் , மக்கள் செல்வாக்கு , சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகள் சிறப்பாக அமைய வேண்டும் எனில் இந்த துலாம் வீடும் , அவரது சுய ஜாதக அமைப்பிற்கு களத்திரம் எனும் ஏழாம் பாவகமும், நன்றாக அமைய வேண்டு , அப்படி அமையும் ஜாதகர் அனைவருக்கும் , களத்திர வாழ்க்கை , கூட்டு தொழில் , மக்கள் செல்வாக்கு ஆகியவைகள் நிச்சயம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும்.
பொதுவாக சுக்கிரன் குடும்ப ஸ்தான அமைப்பில் நிலையான தன்மையும், களத்திர வாழ்க்கையில் சந்தோஷமான அமைப்பையும் தருகிறார் , மேலும் சுய ஜாதகத்திற்கு எந்த லக்கினம் என்றாலும் சரி இந்த ரிஷப , துலாம் வீடுகள் நல்ல நிலையில் அமர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அருமையான குடும்ப வாழ்க்கையும் , அதிர்ஷ்டமான களத்திர வாழ்க்கையும் அமைத்து தந்து விடுகிறார் என்பது கண்கூடாக கண்ட உண்மை .
ஒரு வேலை இந்த வகையில் சுக்கிரனால் பாதிக்க பட்டவர்கள் , விரைவில் நலம் பெற ஸ்ரீரங்கம் வளர்பிறை வெள்ளி கிழமை சென்று , ரங்கநாதருக்கு மல்லிகை மலர் மாலை சாற்றி சுக்கிர ஹோரையில் வழிபடும் பொழுது , ரங்கநாதர் மனம் மகிழ்ந்து குடும்பம் மற்றும் களத்திர வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைந்து தந்து விடுவார் , ரங்கநாதரை வழிபடுங்கள் நலம் பெறுங்கள் .

No comments:
Post a Comment