Thursday, 27 November 2014

புரோக்கொலி

புரோக்கொலி எனப்படும் முட்டைக்கோஸ் போன்ற வெளிநாட்டு காய்கறியில் உள்ள சில சத்துகள், ஆட்டிசம் எனப்படும், மனச் சிதைவு குறைபாட்டிற்கான சில அறிகுறிகளை நீக்குகிறது என, ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாஸ் ஜெனரல் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோக்கொலி, காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றில் உள்ள, சல்போராபேன் என்ற மூலக்கூறு, ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் செயல்பாடு மற்றும் தகவல் தொடர்பு அறிகுறிகளை குறைத்து, நீண்ட காலம் உட்கொள்ளப்பட்டால், நோயின் பாதிப்பை நான்கு வாரங்களிலேயே குறைக்கிறது.
  
இதற்கான ஆய்வில், 13 27 வயது வரையுள்ள, 44 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மிகவும் குறைவாக, நான்கு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதையும், தொடர்ந்து, 18 வாரங்கள் இந்த காய்கறிகளை சாப்பிட்ட ஆட்டிசம் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் கண்டறியப்பட்டது.

No comments:

Post a Comment