Monday 10 November 2014

பிரிந்து வாழும் தம்பதியர்களுக்கான

பிரிந்து வா [டு] ழும் தம்பதியர்களுக்கான .



  பிரிந்து வா [டு] ழும் தம்பதியர்களுக்கான பதிவு இது.  ஆயிரம் கனவுகளுடன் ஆசைகளுடன் திருமண பந்தத்தில் இனைந்து, பின் வாழுகிற வாழ்க்கை திருப்பங்களால் பிரிவு வருகிறது.  ஜாதக ரீதியாக இதற்கு தீர்வு காண கண்வன் அல்லது மனவி ஜாதகம் மட்டும் கொண்டு பலன் அறிய பலர் முற்படுகிறனர்.  சில ஜோதிடர்களும் அதற்கு சம்மதித்து பலனும் சொல்கிறனர்.  இதனால் முழுமையான தீர்வு கிடைத்துவிடாது என்பதையும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் கட்டுரை இது.  கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரிவினைக்கான காரணங்களை பார்க்கலாம்..  1 திருமண பொருத்தம் பார்க்கும்போது தவறு செய்வது.  2.  சரியான முஹூர்த்த நேரம் குறிப்பதில் தவறு செய்வது.  3.  குறிக்கப்பட்ட நேரத்தில் மாங்கல்யம் சூட்டாமல் காலம் தவறுவது.  4.  ஜாதக கட்டத்தை ஆராயமல் விடுவது.  5. வாழும் போது வருகிற தசாபுக்தி கோசர கிரக காரணங்கள் ஆகியவை. இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1.  திருமண பொருத்தத்தின் எண்ணிக்கை பத்து.  இதில் பாதிக்கு மேல் சேர்ந்தால் பொருத்தம் என்று முடிவு கட்டுவது தவறானதாகும்.  இப்படி முடிவு செய்யப்பட்ட ஜாதகர்கள் பிரிந்து வாழுகின்றனர்..  தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகியவை மிக முக்கியமானவை.  இந்த ஐந்தில் ஒன்று பொருந்தவில்லை என்றாலும், அந்த ஜாதகர்களை இணக்க வேண்டாம் என்கிறது சாஸ்த்திரம்.  இதில் ராசி, ரஜ்ஜு, கணம் ஆகிய பொருத்தங்கள் இல்லாத ஜாதகங்களையும் இணைக்கலாம் என்பதற்கு சில விதி விலக்குகள் உள்ளன.  இத்துடன் தோஷ பொருத்தமும் பார்க்கப்பட வேண்டும்.  இதை தோஷ சாம்யம் என்கிறது சாஸ்த்திரம். இவைகளையெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆராயும்போதுதான் கண்டுகொள்ள முடியும். இருவர் நக்ஷத்திரங்களை வைத்துக்கொண்டு, பொருத்த அட்டவணை பார்க்கும்போது, மேற்கூறியவைகள் விடுபட்டுபோகிறன.  இப்படி விடுபட்டு போன ஜாதகர்கள் இணைவே, பிரிவினைக்கு காரணமாகிவிடுகிறது.

2.  முஹூர்த்த நேரம் குறிப்பதில் நிறைய தவறுகள் நடக்கிறன. உதாரணத்திற்கு....................சுபாவ அசுப கிரகம் என்று சொல்லப்படும் சூரியன் தினமான ஞாயிற்றுக்கிழமையை முஹூர்த்ததிற்கு தேர்வு செய்யக்கூடாது. எனகிறது சாஸ்த்திரம்.  இதிலும் சில விதிவிலக்குகளுடன் ஞாயிறை தேர்வு செய்யலாம்.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா ஞாயிறையும் நம் வசதிக்காக தேர்வு செய்வது தவறாகிவிடுகிறது.  இது போல் முஹூர்த்த நேரம் குறிப்பதில் பல குளறுபடிகளை செய்துவிடுகிறார்கள்.  அது திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்களை பாதித்து விடுகிறது.

3.  ஆராய்ந்து தேர்வு செய்யப்பட்ட முஹூர்த்த நேரத்தில் மாங்கல்யம் சூட்டிவிட வேண்டும்.  உதாரணத்திற்கு காலம் தவறும்போது குளிகை வந்து விட்டது என்று கொள்வோம்.  குளிகையில் மாங்கல்யம் சூட்டினால், மணமகன் மீண்டும், மீண்டும் மாங்கல்யம் சூட்டும் நிலைக்கு ஆளாகிவிடுவார்.  அதாவது குளிகை தத்துவப்படி, அந்த நேரத்தில் ஒரு காரியம் நடந்தால், அது திரும்ப திரும்ப நடக்கும்.  அதன்படி மணமகன் மீண்டும், மீண்டும் திருமணம் செய்துகொள்வார்.  அதேகதி மணமகளுக்கும்..........................இதனால் பிரிவினை வராமல் என்ன செய்யும். எனவே காலம் தவறுதலும் பிரிவினையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

4.  ஜாதக கட்டத்தில் குடும்பஸ்தானம், களத்திரஸ்தானம் ஆகியவற்றை இருவருக்கும் சரி பார்க்கப்படல் வேண்டும்.  இதில் சிக்கல் இருந்தால், பரிகார வழிபாடு செய்து இணைக்கலாம்.  அல்லது யார் விட்டுக்கொடுத்து வாழ்வது என்று முடிவு செய்துகொள்ளலாம்.  சிலர் ஜாதகம் பரிகாரவழிபாடுக்கு இடம் தராது.  அப்படிப்பட்ட ஜாதகங்களை இணக்காமல் இருந்துவிடுவதே நல்லது. இதில் தவறு நடந்தால், தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்துவிடுவார்கள்.  ஆகஃவே ஜாதக கட்டங்களை கவனிப்பதும் அவசியமாகிறது.

5.  சில நேரங்களில் தசா புக்திகளும், கோசர நிலைகளும் தற்காலிக பிரிவினைக்கு வழிவகுத்துவிடுகிறன.  உதாரணத்திற்கு............ஏழரைசனி, கண்டசனி, அஷ்டமசனி ஆகியவை கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமையை உருவாக்கி தற்காலிக பிரிவினையை ஏற்படுத்தும்.  இதற்கான பரிகார வழிபாடுகள் உள்ளன.  அவைகளை மேற்கொள்வதன் மூலம் பிரிவினை தீவிரத்தை குறைத்துக்கொள்ளலாம்.  சனி முன் சொல்லப்பட்ட நிலையிலிருந்து விடுபடும்போது தானாகவே பிரிந்தவர்கள் கூடிவிடுவார்கள்.

ஆக தம்பதியர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால், அதில் ஜாதக ரீதியாக இவ்வளவு காரணங்கள் உள்ளன.  இவைகள் அனைத்தையும் ஒரு ஜோதிடர் ஆராய்ந்தால்தான், தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்ட முடியும். எனவே பிரிவினைக்கான காரணம் அறிய விரும்பும் ஜாதகர்கள், தம்பதியர் இருவர் ஜாதகத்துடன், திருமண நாள், நேரம், சரியாக மாங்கல்யம் சூட்டிய நேரம் ஆகிய தகவல்களுடன் ஜோதிடரை சந்திக்க வேண்டும்.  இவற்றில் திருமண பொருத்தம் பார்த்து இணைத்ததில் தவறு ஏற்பட்டிருப்பின் அதை சரி செய்ய இயலாது.  வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும்.  ஜாதககட்டம் சரிபார்க்காமல் இணைத்திருந்தால் பரிகார வழிபாடுகள் செய்து பிரிவினையிலிருந்து விடுதலை பெற்று இணைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.   எனவே இறைவன் திருவருள் துணை கொண்டு, தடைகளை தகர்த்து இனிதே இணைந்து வாழ

No comments:

Post a Comment