பெருமாள் கோயில்களில் நவகிரகங்கள் இல்லை..அப்போ வைணவர்களுக்கு சனிபெயர்ச்சி பயம் இல்லையா..அவங்க திருநள்ளாறு போகலாமா..? வைணவம் நவகிரகங்களை தனியே பார்ப்பதில்லை...பரமாத்மாவான விஷ்ணுவே சனி தோசத்திலிருந்தும் நம்மை காக்கிறார் அதனால்தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த கிழமையாக இருக்கிறது....
சனிக்கிழமை பெருமாளை வழிபடுவதன் மூலம் வைணவர்கள் சனி தோசத்தில் இருந்து விடுபடுகிறார்கள்...மனம் செம்மையாக இருப்பின் நல்லது கெட்டது பகுத்து சனி பாதிப்பான புத்தி மந்தத்தில் இருந்து உடல் மந்தத்தில் இருந்து விடுபடலாம்....சந்திரன் ஸ்தலம் திருப்பதி...வளர்பிறை திங்கள் கிழமை அல்லது பெள்ர்ணமி அன்று திருப்பதி பெருமாளை வழிபட்டால் மனம் செம்மையாகும்...வேங்கடவன் அனுகிரகம் பல மடங்கு நமக்கு கிடைக்கும்..!!
No comments:
Post a Comment