Friday, 26 December 2014

ஜோதிட ரீதியாக விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

ஜோதிட ரீதியாக விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
இதற்கெல்லாம் காரணம் என்ன எனப் பார்க்கின்ற போது ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பதே ஆகும். 8ம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்திருந்தாலோ, 8ம் வீட்டதிபதி பாவ கிரக சேர்க்கை பெற்று பகை வீட்டில் அமையப் பெற்றாலோ, எதிர் பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது-.
ஆயுள் காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும், உடல் ஊனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். அது போல ரத்தக்காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் ரத்த சம்மந்தப்பட்டவற்றிற்குக் காரகனாக விளங்குகிறார்.
பொதுவாகவே சனி, செவ்வாய் 8ல் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது. குறிப்பாக இம்மாதிரி கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு சனி திசை செவ்வாய் புக்தி காலங்களில் செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் அதிகமான பாதிப்புகளை உண்டாகுகிறது.
ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ 8ம் வீட்டையோ, பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும். லக்னாதிபதி பலம் இழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம் நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளில் கண்டம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
வாகன காரகன் என்று சொல்லக் கூடிய சுக்கிரன் சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
கால புருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக் கூடிய விருச்சிகத்தில் சனி செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும்.
சூரியன் செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்.
சனி ராகு சேர்க்கை பெற்றிருந்தால் செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் ராகு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் விபத்துக்கள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 8ல் பாவிகள் இருந்தால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றாலும் சுபர் பார்வை இருந்தால் பாதிப்புகள் குறையும். இவை பொது பலன் தான்.

No comments:

Post a Comment