Thursday 25 December 2014

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். இந்தப் பழமொழியைச் சொல்லாதவர்களும் திரைப்படங்களும் மிகக் குறைவே. ஆனால் ஒரு குறை, யாரும் பொருள் தெரிந்து - அறிந்து சொல்லுகிறார்களா என்பது கேள்விக்குறியே.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதில் என்ன புரிய வேண்டும், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில்தானே பழமொழியே இருக்கிறது என்று கேட்கக்கூடும். இதோ உண்மையான பழமொழி.
கல்லன் (கல்லாதவன்) ஆனாலும் கணவன் புல்லன் (இழிந்தவன்) ஆனாலும் புருசன். இதை கல்லனானாலும் கணவன் புல்லனானாலும் புருசன் என்று சேர்த்துக் கூறப்பட்டதானது நாளடைவில் தொடக்கத்தில் உள்ளது போல திரிந்துவிட்டது.
இனியேனும் பழமொழிகளைப் பொருளறிந்து, பிழை களைந்து உரிய முறையில் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment