Friday 26 December 2014

அர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:-

அர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:-
1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.
2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.
3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.
4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.
5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.
6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.
7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.
8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.
9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.
10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.
11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்
12. மரியாதையைப்போல் மலிவான பொருள் வேறில்லை.
13. அச்சம், எதையும் நம்பும்படி செய்துவிடும்.
14. எவருக்கு அளிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவும்.
15. பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகான் இல்லை.
16. காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவும் இல்லை.
17. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் யாவும் வந்துவிடும்.
18. செல்வங்களை வணங்குவதால் ஒழுக்க விதிகள் பாழாகின்றன.
19. செயல் மறக்கப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன.
20. அதிர்ஷ்டக்காரன் என்பதைவிட நல்லவன் என்று பெயரெடு.
21. மனிதர்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் சிந்திக்கும்போது விழிப்படைகிறார்கள்.

1 comment:

  1. அய்யா...வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.,,
    ;
    தத்துவப் பழமொழிகள் அருமை அய்யா.

    ReplyDelete