Saturday, 31 January 2015

கார் பிரேக் பிடிக்கவில்லை



 அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.
அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்


தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்:-
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.
மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.
அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.
7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.
12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.
13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்

தர்மம்



ஒரு விறகு வெட்டி இருந்தார் …!
ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவரது கோடரி காணாமல் போய்விட்டது…!
கடவுளே என்று உரத்து கத்தி …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினார்…!
கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..!
அவரது சக்தியால்
* தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் விறகு வெட்டி இல்லை சாமி -என்றார்
* வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் விறகு வெட்டி இல்லை சாமி -என்றார்
* அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் ஆமா சாமி ..என்றார்..
கடவுள் இவரது பண்பை அவதானித்து அவரிடம்
நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் …
நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசை பிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச்செல்ல மன்றாடினாள்..
அவரும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில் காணாமல் போய்விட்டாள்…!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினார் …!
கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
* சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …? அவர் ஆமாசாமி என்றார்
கடவுள் திகைத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …?
இல்ல சாமி நீங்கள் …..!
* முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்..நான் இல்லை என்பேன் …
அடுத்து தமண்னாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்.. நான் இல்லை என்பேன்
என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்....நான் ஆம் என்பேன்
நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள் நானோ விறகு வெட்டி எப்படி சாமி… அதனால் தான்..என்றார்

"LEUCODERMA"

மீன்கள் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்க்க கூடாது..!! "LEUCODERMA" எனும் வெண்புள்ளிகள் தோன்ற இதுவும் காரணம்!! gasp emoticon
✿• முடிந்தவரை இதை அனைவரிடமும் பகிருங்கள் •✿

"மரு" (Skin Tag) உதிர

"மரு" (Skin Tag) உதிர...
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.
அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.
இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.
இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.
முடிந்தவரை பகிருங்கள்....பகிருங்கள்....பகிருங்கள்..

Monday, 26 January 2015

Sashtashtaga Dosham


Sashtashtaga Dosham: 
If the Girl's Raasi and the Boy's Raasi fall on 6th or 8th to each other, then it is considered as Sashtashtaga Dosham.
This is a general indicator of Sashtashtaga Dosham.  There are exemptions.   There are certain certain Sashtashtaga Raasis which are exempted.  In Tamil Astro terminologies, these are called Anuhoola Sashtashtagam.
Such Anuhoola Sashtashtaga Raasis are not Doshams - and they can well be considered as  matching to each other.       
Such  Anuhoola Sashtashtagams are favourable matches in so far as Raasi Porutham is concerned.
The Girl's Raasis exempted from Sashtashtaga Dosham in respect of particular Boy's Raasis are follows:                  
Girl's Raasi                          Boy's Raasi
Mesham        >>>>        Kanni
Midhunam     >>>>        Vrichigam 
Thulam         >>>>         Meenam
Dhanur          >>>>        Rishabham
Kumbam       >>>>        Katagam    If Mesham, Midhunam, Thulam, Dhanur or Kumbam is the Raasi of the Girl, it is exempted from Sashtashtaga Dosham from their respective  6th Raasi Kanni, Vrichigam, Meenam, Rishabham and Katagam respectively.
Other Raasis falling 6th or 8th from the Girl's Raasi  suffer Sashtashtaga Dosham.

செவ்வாய் தோஷம்

முதலில், செவ்வாய் தோஷம் உள்ள நபர், தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து கொண்டால், பொருத்தத்துடன் திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையை விட, இவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் சார்ந்த சான்றோ அல்லது ஆராய்ச்சியோ இல்லை.
சாஸ்திரங்களின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரபுகள் மூலமாக ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு இது கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் செவ்வாய் தோஷத்துடன் பிறந்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பல சிக்கலான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பல இந்துக்கள் நம்புகின்றனர். சொல்லப்போனால், இதனால் உங்களுக்கு விவாகரத்து ஆகும் அல்லது உங்கள் கணவனின் உயிர் பறிபோகும் எனவும் சில இந்து பூசாரிகள் கூறுவார்கள்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிரகம் சந்திர அட்டவணையில் 1, 2, 4, 7, 8 அல்லது 8 ஆவது வீட்டில் இருந்தால், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கக்கூடும். இந்த ஒவ்வொரு வீடும் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சங்களை வெளிப்படுத்தும். உதாரணத்திற்கு மனநிறைவு மற்றும் மன அமைதி (4), திருமணம் (7) மற்றும் நீண்ட ஆயுள் (8).

செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் சுய மரியாதை, மனப்போக்கு, ஈகோ மற்றும் விவாதத்தை குறிக்கும். ஜாதக கட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் போது, நீங்கள் மூர்க்கத்தனமாகவும், உக்கிரமாகவும் செயல்படலாம். இதனால் உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படலாம். இப்படி வந்தது தான் செவ்வாய் தோஷ கோட்பாடு.
செவ்வாய் தோஷ தாக்கத்தினால் மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் இடையே உள்ள பொருத்ததில் லேசான தடைகள் ஏற்படலாம் என செவ்வாய் தோஷத்தை நம்புபவர்கள் நம்புகின்றனர். உங்கள் ஜாதகத்தை பொறுத்து தான் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். நீங்கள் பிறந்த தேதி, வருடம், நேரம் மற்றும் பிறந்த இடத்தை பொறுத்து தான் உங்கள் ஜாதகம் கணிக்கப்படும்.

திருமணமாக போகும் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை போல், சில பொய்யான நம்பிக்கைகளும் இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட பொய்களில் சில, இதோ!

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் நாளான செவ்வாய்க்கிழமையில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என சில தவறாக கூறுவார்கள். இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி அது உண்மையல்ல.

இப்படிப்பட்ட புகழ்பெற்ற நம்பிக்கைக்கு பின், எந்த ஒரு அறிவியல் சார்ந்த அல்லது பகுத்தறிவு சார்ந்த சான்றும் இல்லை. இது ராம் கோபா வர்மா ஷோலே படத்தை ஆக் என ரீ-மேக் செய்ததை போல் தான் - முரண்பாடானது, அடிப்படையற்றது

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் முதல் திருமணத்துடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் தான் இதனை பொதுவாக புரோகிதர்கள் சொல்வார்கள். அதனால் நீங்கள் உங்கள் கணவனை திருமணம் செய்யும் போது, முதல் திருமணத்தில் ஏற்பட இருந்த பிரச்சனைகள் இல்லாத, இரண்டாம் திருமணம் போன்றதாகும் அது.

உண்மையற்ற மற்றொரு புகழ் பெற்ற நம்பிக்கை இது. நீங்கள் செவ்வாய் தோஷம் உடையவர் என்ற காரணத்தினால் உங்கள் கணவரோ அல்லது நெருங்கிய உறவினரோ இறந்து போக மாட்டார்.

உங்கள் திருமணம் வெற்றியடைவது உங்கள் வாழ்க்கை துணை மற்றும் உங்கள் கையில் தான் உள்ளது.
அது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் மற்றும் பொருத்தம் ஆகியவற்றினாலேயே தீர்மானிக்கப்படும். உங்கள் செவ்வாய் தோஷ பலன் உங்கள் திருமண வாழ்க்கையில் ஆயுளை முடிவு செய்யாது!
செவ்வாய் தோஷம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் என்பதில்லை.
 ஜோதிடம் என்பது மனிதன் வாழும் உலகத்திற்கும், வானியல் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள உறவின் அடிப்படையாகும். அதனால் செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தில் இருந்தால், அது அனைத்து மதத்திற்கும் பொருந்த வேண்டும். இருப்பினும் அது அப்படி இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே அதை நம்புகிறது. அதனால் செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தையும் தாண்டி மதத்துடன் தொடர்பை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
* செவ்வாய் தோஷத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து தீய தாக்கங்களையும் போக்க இந்து பூசாரிகள் பல வழிகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் திருமணம் என்பது இரு மனதுக்கு இடையே ஏற்படும் காதலும் புரிதலும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதகத்தில் பொருத்தங்கள் அருமையாக இருந்த போதிலும் கூட பல திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அதே போல், ஜாதகத்தில் பொருத்தங்கள் சரியாக இல்லாத போதிலும் கூட பல திருமணங்கள் வெற்றிகரமாய் முடிந்துள்ளன

Sunday, 25 January 2015

நவக்கிரக தோஷம் போக்கும் ரதசப்தமி வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று ரத சப்தமி வருகிறது. 
 
ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன. 
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். 
 
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
 
இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பதும் ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர்.
 
ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.
 
இந்நாள் தியானம் செய்ய உகந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது இவ்வாறு எருக்க இலையைத் தலையில் வைத்துக் குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
 
இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது ;
 
காலவமுனிவர் என்பவர் தனக்கு தொழு நோய் வரப் போவதை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்தார்.
உடனே அவர் நவக்கிரகங்களை வழிபட்டு தொழுநோய் பிடிக்காமல் இருக்கும் வரத்தை பெற்றார். இதை அறிந்த பிரம்மா, வரம் கொடுக்கும் அதிகாரம் நவக்கிரகங்களுக்கு இல்லை என்று கோபம் கொண்டார். பிறகு அவர் நவக்கிரகங்களுக்கு தொழு நோய் பிடிக்கட்டும் என்று சாபமிட்டார். இதனால் நவக்கிரகங்களை தொழுநோய் பிடித்தது. 
நவக்கிரகங்கள் சாப விமோசனம் பெறும் வழியை அகத்தியர் கூறினார். அதன்படி எருக்கம் இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டு தொழு நோயை நவக்கிரகங்கள் போக்கின. அன்று முதல் 7 எருக்கம் இலை, எள், அட்சதையை தலையில் வைத்து குளித்தால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
 
எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். 
 
பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். 
 
இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். 
 
அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, 
சூரியனை நோக்கி,
 
 
"ஓம் நமோ ஆதித் யாய...
ஆயுள், ஆரோக்கியம்,
                                                                     புத்திர் பலம் தேஹிமே சதா''     -  என்று சொல்லி வணங்கலாம். 
 
 
நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட ரத சப்தமி தினத்தன்று சூரிய பகவானை வழிபடுவோம்.

நித்தியப்பிரதோஷம்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாதப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
16ம் பெற்று பெரு வாழ்வும் வாழ்க

Saturday, 24 January 2015

Little finger

Little finger doesn’t reach the first joint of ring finger



2.Little finger passes the first joint of ring finger


1.Little finger reaches the first joint of ring finger


2.十letter


A.The first half of thumb is longer than the second one

Wednesday, 21 January 2015

அவசர கால முதலுதவி முறைகள்...!

அவசர கால முதலுதவி முறைகள்...!
வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :
உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.
வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.
தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.
வயிற்றுப் பிரச்னைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்

Sunday, 18 January 2015

ரதசப்தமி ஸ்நான‌ம்

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார்

பீஷ்ம பிதாமகர்.வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.


Posted Image

Posted Image


வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.


விரத முறை: ரதசப்தமி அன்று விரதம் இருப்பது மிகவும் சுலபமானது. சூரிய உதய சமயத்தில் (காலை 6.10) குளிர்ந்த நீரில் நீராடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். வசதிப்படுபவர்கள் மவுன விரதமும் இருக்கலாம். பெரியவர்கள் தனி இடத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானம் செய்யலாம். பணிக்கு செல்பவர்கள் உபவாசம் மட்டும் கடைபிடித்தால் போதுமானது.


ரதசப்தமி ஸ்நான‌ம்
7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள்,அட்சதை,மஞ்சள் தூள்,
சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள்
மட்டுமே பயன் படுத்தவேண்டும்.பெற்றோர் இல்லாதவர்கள்,எள்,
பச்சரிசி,சேர்க்கவேண்டும்.இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

Wednesday, 14 January 2015

Vastu Remedies

Natural Remedies
As mentioned at the onset there are no external remedies that can be offered for a problematic accommodation. The best way is the alter it to a custom Vastu or to move away to a better place. However, the below listed points act as self-remedies:
  • If a widow, separated wife/husband, aged spinsters/bachelors, Physically challenged, couple without issues, orphans live (in house) or work (in case of business); the Vastu non-compliance gets nullified by itself to a greater extent.
  • By ideal destiny, if a person has to be moving higher in prosperity, the accommodation either adapts to any of the above self-remedy or circumstances will move the person away from the place to another better one.
  • Having Cow, petting a dog, feeding crows proves to be greatest remedy!
  • Choosing to buy/register properties in name of your wife/woman at home & running business with woman in your family front-leading will ensure prosperity.
  • Daily prayers offered to Sun (Surya Namaskar), regular prayers to your God as directed by your ancestors (Kula Devatha) will ensure safety for you at all times. Indulge and spend for renovation, maintenance of holy places, temples, Cow inhabitation (GhoShaala)
  • Help for education, offer clothing, aid for marriages to the needy/poor.
  • Ensure the spread of good deed in your house and business places. Money earned should not be against the rule of Dharma.
  • Ensure elders/parents are not left to suffer at any cost which will have an impact on judging the effects of your accommodation.
  • To have a cleansed mind and environment, the windows in the North-East, windows facing the North and East should be left opened 24X7.
  • Ensure not to earn, live out of the money earned via wrong deeds including from unfair money brokerage.