Thursday, 1 January 2015

பெயரியல்

`A' - முன்னேற்றத்தின் வழிகாட்டி
ஒருவரின் வெற்றிக்கு மிக அதிகமாக உதவுவது பெயரின் முதல் எழுத்து. நாம் ஒரு வாகனத்தைச் செலுத்தும்போது அதன் முன் சக்கரம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அதனைத் தொடர்ந்துதான் பின் சக்கரமும் செல்கிறது. அதுபோல் பெயரின் முதல் எழுத்து அதற்கு அடுத்து வரும் அனைத்து எழுத்துக்களுக்கும் சக்தியைத் தருகிறது. இந்த விஷயத்தைத்தான் முன்னோர்கள் எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கும் என்றனர்.

ஒருவரது பிறப்பு எண், விதி எண்ணுக்கு ஏற்ப அவரது பெயரின் முதல் எழுத்து அமையாவிட்டால் அவர் எவ்வளவு முயற்சித்தாலும் முழுப்பலனை அடைய முடியாமல் போய்விடும் என்கிறது பெயரியல். ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் வரும் எண் விதி எண் எனப்படும். இந்த விதி எண்ணுக்கு ஏற்ப ஒருவரது பெயரின் முதல் எழுத்து அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அவர் தனது வாழ்க்கையின் முழுப்பலனையும் அனுபவிக்க முடியும்.

பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர் எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டே இருப்பர். இவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவர். தாங்கள் சொன்னதுதான் வேதம் என்பர். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் ஆகியவை இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் பேசுவதைப் பிறர் வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பர். உஷ்ண உடம்புக்காரர்கள். அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் இருக்கும். அடங்கிப் போகமாட்டார்கள். ஏற்கும் எந்தப் பதவியிலும் சுதந்திரத்தை விரும்புவர். அடிமை வேலை செய்ய மாட்டார்கள். படிப்பிலும் கெட்டிக்காரர்.

ஏற்றுக்கொண்ட பதவியில் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவர். உடம்பு ஒல்லியாக இருக்கும். இனக்கவர்ச்சியில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மாற்று இனத்தவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். இவர்களுக்கு வாய்க்கும் துணைவி அல்லது துணைவர் கிழக்குப் பார்த்த வீட்டில் குடியிருந்தால் நன்மையாக அமையும்.

எதிலும் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். இரவுப்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வதை விரும்புவர். தோல்விகளை எப்படி வெற்றியாக்குவது என்பதை இவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நேர்மையாளர்களான இவர்களுக்கு நாணயமான நண்பர்கள் அனேகம். நிர்வாகத்திறன் அதிகம். நாட்டுநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதள பாதாளத்திற்குப் போய்விடுவார்கள்.

முதல் எழுத்தாக பெயரில் `A'யைப் பெற்ற பிரபலங்கள்
அரவிந்தர்
ஆல்பிரட் ஹிட்ச்கொக்
ஆல்பிரட் நோபல்
அன்னிபெசண்ட்
அனில் அம்பானி
அசிம் பிரேம்ஜி
யாரையும் தன் வசப்படுத்தும் 'B' எழுத்து

பெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம். சூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

பேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள். வாயுவேகம், மனோவேகம் என்பார்களே... அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.

உடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடுவர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.

பெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. நாஸ்டர்டாமுக்கு நெருங்கிய உறவினர் போல், பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.

அடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும்.

பெயரில் 'B' யை முதல் எழுத்தாகப் பெற்ற பிரபலங்கள்
பெஞ்சமின் பிராங்ளின்
டைரக்டர் பாலச்சந்தர்
டைரக்டர் பாரதிராஜா
டைரக்டர் பாக்கியராஜ்
வீணை பாலச்சந்தர்
நடிகை பானுமதி
பெனாசிர்
பாலகங்காதர திலகர்
பகத்சிங்
நீதியின் மறுவடிவமான 'C' எழுத்துக்காரர்கள்

C என்ற ஆங்கில எழுத்தைத் தங்கள் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் சீரும், சிறப்பும், பக்தியும் கொண்டு விளங்குவர். சூரியக்கதிர்கள் இவ்வெழுத்தில் பட்டு கிரகித்து பெயரின் மற்ற எழுத்துகளுக்கும் சக்தியைத் தருவதால் எங்கும் பிரபலமாக ஜொலிப்பர். இந்தக் கில்லாடிகள் செய்யும் அல்லது செய்யப் போகும் காரியங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பார்வைக்கு அசடாகத் தெரியும் இவர்களின் மனவலிமையை, யாராலும் எடைபோட இயலாது. எதிலும் தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். இவர்கள் சொல்வது அப்படியே நடக்கும். தன்னலத்தை விட நாட்டின் நலமே இவர்களுக்குப் பெரிது. எப்பொழுதும். எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பர். இவர்களின் மகோன்னதமான கட்டளைகளுக்காக நாடே காத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு செயற்கரிய காரியங்களைச் செய்வர்.

இவர்கள் நீதியின் மறுவடிவம். ஆய்வுப் பணிகள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நீதித்துறையிலும், ஆராய்ச்சிப் பணியிலும், அரசுப் பணியிலும் ஆன்மீகத்திலும் முத்திரை பதிப்பர். மக்களுக்காக அதிக நேரம் ஒதுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. தினமும் வீட்டுக்குச் செல்ல நேரமில்லாமலோ, சென்றாலும் குடும்பத்தை யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையிலோ இருப்பார்கள். மூளைபலம் மிகுந்த இவர்கள் நேர்மையாளராக இருப்பதால் மக்களுக்கு இவர்களை அதிகம் பிடிக்கும். கணினி;த்துறையில் வல்லவர்கள். எப்படி வியூகம் அமைத்தால், யாரை எளிதில் கவிழ்க்கலாம் என்று திட்டமிடுவதில் சமர்த்தர்கள்.

பண விஷயத்தில் சிக்கனமான இவர்கள் பிறரிடம் பணத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. தனது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். நியாயமான கோபம் அடிக்கடி ஏற்படும். சொந்த வேலைகளை யாரிடமும் சொல்வதில்லை. பிறர் செய்தாலும் பிடிப்பதில்லை.

புலால் உணவை வெறுப்பர். இனிப்பை விரும்புவர். இருந்த இடத்திலிருந்தே மலையையும் தகர்க்கும் அறிவு இவர்களுக்கு உண்டு Cயில் முதல் எழுத்து அமைவது போல் ஜென்ம புண்ணியம் எனலாம். நிச்சயம் பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கும்.

Cயில் பெயர் ஆரம்பித்து 6ஆம் எண்ணில் கூட்டுத்தொகை அமைந்துவிட்டால் மட்டும் வாழ்வு முழுக்க போராட்ட நிலை ஏற்படலாம். இவர்களுக்கு திருமணத் தடை. தொழில் முடக்கம், பதவி உயர்வு இல்லாமை, வேலை வாய்ப்புத் தடை, மக்களிடம் மரியாதைக் குறைவு போன்றவை ஏற்படலாம்.

முதல் எழுத்தாக 'C'யைப் பெற்ற மேன்மையாளர்கள்
 
சந்திரிகா பண்டாரநாயகா
வ.உ. சிதம்பரனார்
கார்ல் மார்க்ஸ்
சார்லி சாப்ளின்
சந்திரபாபு
சந்திரபாபு நாயுடு
சோ
ஜாதி பேதமில்லாத D எழுத்துக்காரர்கள்
 'D' என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க  பேச்சால் பலதரப்பு மக்களின் நட்பையும் பெறுவார்கள். அதேவேளை, எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள். குடல், கண், தொடர்பான நோய்கள், மூட்டுவலி, பித்தம் போன்றவற்றால் அவ்வப்போது அவதிப்படுவார்கள்.

ஆணாயினும், பெண்ணாயினும் இல்லறத்துணை சிறப்பாக அமையும். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். கடவுள் நம்பிக்கையும் கைகொடுக்கும். துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். சுவை மிகுந்த உணவு வகைகளில் விருப்பம் அதிகம். சாப்பாட்டில் காரமும், அசைவ வகையும் அதிகமாக இருக்கும். சிலர் தொண்டு நிறுவனங்கள் நடத்திப் பெரும் புகழும், பணமும் சேர்ப்பர். அரசின் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், எல்லோரும் ஏற்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும் எனப் போராடுவார்கள்.
சோர்ந்து கிடக்கும் நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும்படி அறிவுரை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். தான் செய்தது தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டார்கள்.

உடற்பயிற்சியிலும், அழகுக்கலையிலும், வாகனங்களை ஓட்டுவதிலும் மிகுந்த நாட்டமுடையவராக இருப்பார்கள். புராதன பொருட்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் வாசனைத் திரவியங்கள் பூசுவதிலும், அழகான ஆடை அணிவதிலும் தனிச்சுவை காண்பார்கள். சாணக்கியர்களான இவர்களுக்கு வாய்தான் எதிரி. இறைவன் தந்த அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க ஆசையுடன் காத்திருக்கும் இவர்கள் முயன்றால் முடியாத விஷயமே இல்லை.

எதிர்;காலத்தில் என்ன நடக்கும் என்ற தீர்க்கதரிசனத்துடன் காய்களை நகர்த்துவார்கள். கம்பீரம் மிக்கவர்கள். எதிலும் கவனமாக இருப்பார்கள். வீர, தீரச் செயல்களில் ஆர்வம் இருக்கும். சில சமயங்களில் பிடிவாத குணம் மேலோங்கும். சூரியக்கதிர்கள் இந்த எழுத்தின் வழியாக உள்ளே புக முடியாது என்பதால் சிலரிடம் இவர்களது கருத்துகள் எடுபடாமல் போகலாம். அந்தக் கோபத்தில் தன் கருத்து எடுபடும்வரை பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் கெட்ட பெயர் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகலாம்.

எந்த நாடும் தன் சொந்த நாடு, எந்த ஜாதியும் தன் சொந்த ஜாதி என்று கூறுவார்கள். பல மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் இருக்கும். அவற்றைச் சரளமாகவும் பேசுவார்கள். அங்க அசைவின் மூலம் பெண்களைக் கவரும் சக்தி உண்டு. பெரும்பாலான நாட்களை வெளியூர்களிலேயே  கழித்து விடுவார்கள்.

பிறருக்கு மனமுவந்து உதவும் குணம் இவர்களிடம் இருந்தாலும், இவர்களுக்கு உதவத்தான் ஆளில்லை. மந்திர, தந்திரங்களில் நாட்டம் அதிகம். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே சிலருக்கு அதிக நாள் பிடிக்கும். மிக நெருக்கமானவர்கள். இவர்களின் ஆலோசனைகளை விரும்பி ஏற்றுப் பலனடைவர். தன் மனதுக்கு சரியெனப் பட்டதை, அடுத்தவரிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிக நாசூக்காகத் திணித்து விடுவர்.

Dயை முதல் எழுத்தாகக் கொண்ட பிரபலங்கள்

தயானந்த சரஸ்வதி சுவாமிகள்
தயாநிதி மாறன்
தேவா
ட்ராவிட்
தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்கும் E எழுத்துக்காரர்கள்
அடுத்தவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, தாராளமாக ஆலோசனைகளை அள்ளி வழங்கும் இவர்கள், அதிக சுதந்திரத்தை விரும்புவர். எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் இவர்களின் எழுத்தில் சூரியக்கதிர்கள் படுவதால், எப்பொழுதும், சுறுசுறுப்பாக இருப்பர். தங்களைப் பற்றித் தாங்களே எதையாவது பெருமையாகவோ, தன்னடக்கம் உள்ளவர் போலவோ பேசிக்கொண்டிருப்பார்கள். மிகச் சீக்கிரமாக முன்னேறும் வழியைத் தேடுவதில் முனைப்பாக இருப்பர்.

எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படும் இவர்கள் கோபப்படாமல் தான் எண்ணியதை செயலுக்குக் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள்.  இவர்களுக்கு என்று ஒரு கூட்டமுண்டு. ஏதேனும் ஒரு காரியம் செய்து இவர்கள் பெயரை நிலைக்க வைத்துக்கொள்வர். பிறர் கைவிட்ட பல காரியங்களை சிரமேற்கொண்டு எடுத்துச்செய்து வெற்றியும் அடைந்துவிடுவர். நலிந்துபோன பல நிறுவனங்களை இவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம்.

அடுத்தவரிடம் வேலை செய்வதை விட சொந்தத் தொழில் செய்து பெரும் பொருளீட்டவே விரும்புவர். இவர்களின் ஜாலமான பேச்சு வாடிக்கையாளர்களைக் கவரும். புதுப்புது யுக்திகளைக் கொண்டு வெற்றி பெறுவதால் சிலர் வலிய வந்து இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடைவர். சில வேலைகளில் வெற்றி பெற இயலாதபோது மனம் நொந்து போவர். ஆயினும், சுதாரித்துக்கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள்.  இவர்களைப் பார்த்தால் யாருக்கும் ஒரு சுறுசுறுப்புத் தொற்றிக்கொள்ளும்.

இவ்வகையில் இவர்கள் மானிடத் தேனீயாவர். நாட்டுநலனில் அக்கறை இல்லாதவர்களை ஓரங்கட்டிவிடுவர். இவர்களின் மனம் விக்ரமாதித்தனின் வேதாளம் போன்றது. ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தினால் இவர்கள் வெற்றியடைவதைத் தடுக்க முடியாது.

இவர்கள் திறமையை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுககு லாட்டரி அடித்ததுபோல்தான். தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் வெறுப்பர்.  பகல், இரவு பார்க்காமல் உழைக்கும் இவர்கள் உடம்பையும் பேணுவது நலம். காதலில் அதிக விருப்பமிருக்கும். எந்த ஊர், நாடு சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு நட்பு வளையத்தைத் தக்கவைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதையும் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் ரகசியங்களை மட்டும் பிறரிடம் கொட்டி விடுவர். அடுத்தவரை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வர்.

வயிறு அடிக்கடி சேஷ்டை செய்யும். மனமும், உடலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவதால் உடம்பு உஷ்ணத்தால் குழப்பமடையலாம்.  இயல்பாகவே ஞானம் பெற்ற இவர்களின் முதல் எழுத்து, வாழ்வின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி.

கலைத்துறையில் ஜொலிக்கும் வல்லமையுடைய இவர்களுக்கு ஞானமும், தியானமும், யோகமும் கைவந்த கலை. அடுக்குமாடி கட்டிடம் போல், புதுப்புதுத் திட்டங்களைத் தன் மனதில் அடுக்கி வைத்துக்கொண்டேயிருக்கும் இவர்களை ஒரு சரித்திரப் பெட்டகம் என்றே அழைக்கலாம். இவர்களால் நண்பர்கள் கூட்டம் நிறைய பலன் அடையும். ஏதேனும் ஒரு வழியில் எளிதில் மற்றவரைத் தன்வசப்படுத்திவிடும் இவர்கள், எல்லாரிடமும் வளைந்து கொடுத்துப் போகும் பக்குவமுடையவராவார்கள்.

பெயரின் முதல் எழுத்தாக நுப் பெற்ற பிரபலங்கள்
எமரால்ட் மைக்ஸ் - மருத்துவ அறிஞர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மத்திய அமைச்சர்
எல்.ஆர். ஈஸ்வரி - பாடகி
குழந்தை மனதுடைய F எழுத்துக்காரர்களுக்கு...
எங்கும் துணிச்சலுடன் சென்று காரியங்களை முடித்துக்கொள்பவர்கள் F எழுத்துக்காரர்கள். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், குழந்தை மனது இவர்களுக்கு. இவர்களின் நிர்வாகத்திறன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர அழைப்பு வரும். இவர்கள் நட்பின் இலக்கணமாக விளங்குவர். நண்பர்களை அரவணைத்துச் செல்லும் இவர்கள் நண்பர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டால் வாழ்வில் உயரலாம்.

ஆன்மீகத்தின் மீது பற்று இருக்கும். பெரும்பாலானவர்கள் அறிஞராக விளங்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இதன் காரணமாக இவர்களை ஆணவம் பிடித்தவர் என காது படும்படியே சிலர் தூற்றுவார்கள். ஆனால், அதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் தங்கள் சொந்தப் புராணத்தைத் தொடர்வார்கள். செய்நன்றி மறக்காதவர்கள். உடல், மனபலம் நிறைந்த இவர்களை வியாதிகள் அதிகமாக அண்டாது. அப்படியே வந்தாலும் தாங்கும் சக்தி அதிகம். இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு பெயரின் மற்ற பகுதிக்கும் பரவுவதால் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவர்.

சோர்வுடன் இருப்பவர்களை உத்வேகப்படுத்தி சுறுசுறுப்படையச் செய்து விடுவர். பேச்சினால் அடுத்த வரை ஈர்க்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. எப்பொழுதும் நாட்டைப் பற்றியும், எளிமை பற்றியும் பேசும் இவர்கள், தங்கள் பிடிவாதத்தால் பல நண்பர்களை இழக்க நேரிடலாம். பலருக்கு ஆலோசனை சொல்லும் இவர்கள். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்பதில்லை. நல்ல ஆலோசனைகளை ஏற்று நடந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அதிகமான பேச்சாற்றலால் பல நண்பர்கள் காணாமல் போய்விடுவர். இயற்கையின் சீற்றம்போல் இவர்களின் நடவடிக்கை இருக்கும். யாரும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நண்பர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உறவினர்களும் இவர்களுக்கு எதிராகச் செயல்பட நேரிடலாம். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலருக்குத் தங்கள் பழங்காலக் கதையை மற்றவர்களிடம் அளந்து விடுவதில் அலாதிப்பிரியம் உண்டு. ஆனால், தேவையற்ற விஷயங்களைப் பிறரிடம் கூறினால் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். இதை இவர்கள் தவிர்ப்பது நல்லது. பிறவியிலேயே பெருந்தன்மை கொண்ட இவர்களுக்குத் தன்னம்பிகை அதிகம். சுதந்திரமான மனப் போக்கை விரும்புவார்கள்.

இளகிய மனமும், இரக்க சுபாவமும் அதிகமான இவர்கள் தர்மவான்களாய் விளங்குவர். அறிவியல் ரீதியாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். தங்களைப் பற்றிப் பெருமையடித்தாலும் பிறரது சிறப்புத் தன்மையையும் ஏற்றுக் கொள்வார்கள். இரும்பு போன்ற உறுதியான உள்ளம் உண்டு. நிதானத்துடன் நடந்து எதிலும் வெற்றி காண்பார்கள். A,I,J,Q போன்ற முன் எழுத்து வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நலம்.

இந்த எழுத்துக்குரிய பிரபலங்கள்:

ஃபரூக் அப்துல்லா (காஷ்மீர் முன்னாள் முதல்வர்)
ஃபிராங்களின் ரூஸ்வெல்ட் (அமெரிக்க முன்னாள் அதிபர்)
ஃபாரா கான் (நடன இயக்குநர்)
Gஐ முதலெழுத்தாகக் கொண்டவர்கள் புத்திசாலிகள்
ஊக்கமும், உழைப்பும், கடுமையான கட்டுப்பாடுகளும், அடக்கமும், பிறரிடம் மரியாதையும் தனக்கு மரியாதை தர வேண்டுமென எதிர்பார்ப்பும், நாணயமும், நல்லியதமும், நியாயமும், சிக்கனமும், படாடோபத்தை விரும்பாத குணமும் கொண்டவர்கள் பு எழுத்துக்காரர்கள். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள், தன் சொத்துகளைப் பிறருக்கு அளிப்பதில் அளவுகோல் ஒன்றை வைத்துக்கொள்வர். ஆனால், பிறரை நிறைய தர்மம் செய்யுங்களேன் எனப் பிறருக்கு அறிவுரை சொல்வார்கள்.
ஒரு காரியத்தைத் துவங்கிவிட்டால், முடிக்காமல் விடமாட்டார்கள். இடைவிடாத முயற்சி உடையவர்கள். பல நற்குணங்களால் உயர்பதவிகள் இவர்களைத் தேடி வரும். எந்தப் பதவியில் இருந்தாலும் உயரதிகாரிகளுக்குத் கட்டுப்பட்டுப் பணியாற்றுவர். தொழில் தர்மம் தவறமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். தேசநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வர். இளவயதிலேயே பல நற்காரியங்களைச் செய்து புத்திசாலி எனப் பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர்தான்.

கண்களில் காந்த சக்தியுடையவர்கள். புதிய பல விஷயங்களை உலகிற்குத் தருவர். பின்னால் நடக்கப்போகும் பல நிகழ்வுகளை சரரியாக யூகித்துச்; சொல்வர். சொன்னது நடக்கும். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து நற்பெயர் எடுப்பர். உணவுக் கட்டுப்பாடு மிகுந்த இவர்கள் இனிப்பு, பருப்பு வகை, நெய் கலந்த சைவ உணவையே அதிகம் விரும்புவர். நடக்காது எனத் தெரிந்தும் சில விஷயங்களில் அபரிமிதமான தன்னம்பிக்கை வைப்பது இவர்களின் பலவீனம். இதனால் சில நிகழ்வுகள் தோல்விப் பாதைக்கு இழுத்துச் செல்லலாம். இவர்கள் யாரையும் நம்புவது இல்லை. சரித்திர கால இடங்கள், மன்னர்கள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக விருப்பமுடையவர்கள்.

உயர்ந்த தோற்றம், களையான முகம், நிமிர்ந்த நடை உடையவர்கள். பணக்காரராக இருப்பாரோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு வெளித்தோற்றம் கொண்டவர்கள். தன் செல்வாக்கைக் குறைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கமாட்டார்கள். பேச்சால் கவர முடியாதவரிடம் மீண்டும் பேசமாட்டார்கள். வியாபாரியாக இருந்தால் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத்தான் தரகு பெறுவர். அசையாத் தொழில் பெரும் செல்வம் தரும்.

கல்வி நிறுவனத்திலும், ஆன்மிகத் துறையிலும் வங்கிகளிலும் வேலை கிடைத்து, நற்பெயரும், புகழும், பொருளாதார ஏற்றமும் பெறுவர். லட்சியவாதிகளாக விளங்கும் இவர்கள் F,Q,P ஆகிய முதல் எழுத்தைப் பெற்றவர்களிடமும் 6 எண் வரும் நாட்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

Gஐ முதலெழுத்தாகக் கொண்ட பிரபலங்கள்:
குருநானக்
ஜோர்ஜ் பெர்னாட் ஷா
கோபால கிருஷ்ண கோகலே
`H' என்றாலே ஹேப்பி தான்!
`H'  என்ற எழுத்தில் உங்கள் பெயர் துவங்குகிறதா? குதிரை வேகத்தில் பாய்ந்து சென்று விரைவில் காரியம் முடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி பேச்சினாலும், செயல்களாலும் பிறர் கவனத்தை எளிதில் கவர்வீர்கள். கவலையான நேரத்திலும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் இவர்கள். உங்கள் எழுத்தில் சூரியக்கதிர்கள் குவிக்கப்படுவதே இதற்குக் காரணம். சில நேரங்களில் நிதானம் தவறுவதுண்டு. எனவே, கட்டுப்பாட்டை மனத்தளவில் வளர்த்துக் கொள்வது நல்லது.

இவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் அவசியம் தேவை. கேலி, கிண்டலுடன் ஹாஸ்ய வெடிகளை வெடித்து. மற்றவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர். ஆடை அணிவதில் தனிக் கவனம் செலுத்துவார்கள். எந்த உணவையும் தவிர்க்க மாட்டார்கள். வாசனைத் திரவியங்களின் பேரில் அதிக விருப்பம் உண்டு.

எந்தக் காரியத்திலும் வெற்றி உறுதியாகக் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகே அதில் இறங்குவர். அடுத்தவர்களை அன்பாகப் பேசி வேலை வாங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தச் செயலைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். அழகான தங்குமிடங்களும், வர்ணஜாலமுள்ள காட்சிகளும். அலங்கார வீடுகளும் இவர்கள் மனதில் ஆழப்பதிந்தவை. பெண் விஷயத்தில் சிலர் கொஞ்சம் `வீக்' என்பதால், சுதாரிப்பாக இருப்பது சிறந்தது. மசால் கலந்த உணவு வகை, மாமிச உணவை விரும்பி உண்பர். இதனால், அடிக்கடி வயிறு உபாதைகளுக்கு உட்படுவர். நடத்த முடியாத விஷயங்களைக் கூட, உறுதியான பேச்சினால் நடத்தி பிறரை ஆச்சரியமடையச் செய்வர்.

அனாவசியச் செலவு செய்வதிலும் கில்லாடி. இதைக் கட்டுப்படுத்துவது வாழ்வின் பிற்பகுதிக்கு நலன்தரும். வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்து, பொருளாதாரக் குறைபாட்டை ஏற்படுத்திக் கொள்வர். இதைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தை நலமாக்கிக் கொள்ளலாம்.

வெற்றிகளைக் குவிப்பது இவர்களின் திறமை. மாயமந்திர, தந்திரங்கள் இவர்களுக்கு அத்துப்படி, பொதுவாழ்க்கையில் நிரம்ப அக்கறை கொள்ளும் இவர்களால், நலிந்து போன தொண்டு நிறுவனங்கள் நிமிர்ந்து நிற்கும் பெருமையுண்டு. முண்டாசுக் கவிஞன் பாரதி போல் வரிந்து கட்டிக் கொண்டு, நாட்டிற்காக உழைக்கும் இவர்களுக்கு நன்றியைச் சொல்லலாம்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டேயிருப்பதால் இவர்களின் பின்னால், ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இலவச ஆலோசனைகளை எல்லாருக்கும் சொல்வர். வெளியூருக்குச் சென்றால், `இது புது இடமாயிற்றே. பழக்கமில்லாமல் என்ன செய்வது?" என்பது போன்ற தயக்கம் வரவே வராது. ஏதோ, அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் போல் மக்களை, தன் சொல்லால் மயக்கி, அவ்வூரின் நம்பர் 1 ஹீரோ ஆகிவிடுவர்.

மற்றவர்களைத் தன் வசம் இழுக்கும் திறமை கொண்டவர்கள். உலகில் எத்தனையோ பேரின்பம் உண்டு என்பதை மனதில் கொண்டவர்கள். உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் இவர்கள் பல வியாதிகளை விரட்டி விடலாம்.

முதல் எழுத்தாக 'H' பெற்றவர்கள்
ஹர்பஜன்சிங் (கிரிக்கெட் வீரர்)
ஹரி (டைரக்டர்)
ஹரிஹரன் (பாடகர்)
'I'யில் பெயர் துவங்குவோர் வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள்
மனோதிடம் கொண்டவர். தெளிவான சிந்தனை உடையவர். தோல்விகளைத் துச்சமாக மதிப்பவர். கடின உழைப்பும் காந்த சக்தியுடைய கண்களும் கொண்டவர். அரசாங்க, அரசியல் செல்வாக்கும் நாநயமும் உள்ளவர். இந்த எழுத்தில், கதிரவனின் கதிர்கள் பட்டு, இடமும் வலமும் சிதறுவதால், உறுதியும் குழப்பமும் சம அளவில் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் இருக்கும். இவர்களுக்கு அரசியல் பண்ணுவது மிகவும் பிடித்த சமாச்சாரம். அதிகாரம் செலுத்துவதில் மிக முனைப்பாக இருப்பர். யூகத்தின் அடிப்படையில் காரியமாற்றி வெற்றியடைவர். ரோஷக்காரர்களான இவர்களிடம், "உங்களால்தான் எல்லாம் நடக்கிறது" என அவரது புகழ் பாடினால், நமக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வர்.

இடைவிடாத உழைப்பால் பெரும் பதவியையும் பொருளாதார ஏற்றத்தையும் அடைந்துவிடுவர். பொறாமைக்காரர்களைக் கண்டால் பொசுக்கிவிடுவர். அந்த அளவிற்கு புறங்கூறுதல் இவர்களுக்குப் பிடிக்காத காரியமாகும். இவர்களுக்கு சூடான, காரம் அதிகமுள்ள உணவு வகை பிடிக்கும். கௌரவப் பிரச்சனையால் பல நண்பர்களை இழக்கவேண்டி வரலாம்.

இவர்களின் குணாதிசயம் போன்றே உடல்வாகும் நன்றாகவே இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எதிர்ப்புகளைத் துச்சமாக மதிக்கும் இவர்களுக்கு, கண்கள் எரிச்சலாக இருக்க வாய்ப்பு உண்டு. எந்தச் செயலிலும் தீர்க்கமான சிந்தனைக்குப் பின் இறங்குவதால், தோல்வி என்பது மிகக் குறைவு.

இவர்களுக்கு அரசாங்கப் பதவி எளிதில் கிடைத்துவிடும். பணியில் ஏனோ, தானோ என்று இருப்பதில்லை. நேர்மை, நீதி, நியாயம், கண்ணியம், நாட்டு நலன் - இவற்றைக் கடைப்பிடித்து நற்பெயர் பெறுவர். அடிமைப்படுவது என்பது அறவே ஆகாது. மாபெரும் நிறுவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்யும் இவர்கள், தன் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது, அவர்களைக் குதூகலமடையச் செய்யும். தன் நுண்ணிய அறிவால் பலரும் அறியாத விடயங்களை வெளிக்கொண்டு வருவர். சாஸ்திரம், வானியல், மருத்துவம், இசை, சினிமா, பத்திரிகைத்துறை போன்றவற்றில் சரித்திரம் படைப்பார்கள்.

பொருளாதார ரீதியாக இளம் வயதில் துன்பப்பட்டாலும் 40 வயதிற்கு மேல் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனப் புலம்பும் அளவிற்குச் சம்பாதிப்பர். கிராமங்களில் இவர்களுக்கு `நாட்டு வக்கீல்' எனப் பெயருண்டு. அந்த அளவிற்கு மிகச் சரியான நீதி வழங்குவர். நற்பண்புகளால் மற்றவர்களை எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவர். தான் வசிக்குமிடத்தில் அழகும் ஒழுங்கும் உயர்வும் இருக்க வேண்டும் என நினைப்பர்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஏழை எளியோருக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பொது நிறுவனங்கள் நடத்தி, நலிந்தோரை வாழவைக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர் 'I'இல் பெயர் அமைந்தோர் புத்திசாதுர்யமானவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை.

முதல் எழுத்தாக 'I'ஐப் பெற்றவர்கள்:
இந்திரா காந்தி - முன்னாள் இந்தியப் பிரதமர்
ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி
இளையராஜா - இசையமைப்பாளர்
ஐஸ்வர்யா ராய் - முன்னாள் உலக அழகி, நடிகை
`J' என்றாலே ஜெயம்தான்
சிறந்த நிர்வாகத் திறமை, நல் எண்ணம், எதிரிகளை பந்தாடும் குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், பின்வாங்காத தீரமும், கடமையை கண்ணியத்துடன் செய்யும் பக்குவம் ஆகிய பண்புகளுக்கு சொந்தக்காரர்கள் ஒ யில் பெயர் துவங்குபவர்கள்.

கம்ப்யூட்டர் போன்ற நுண்ணிய துறைகளில் அறிவு அதிகம்.  எதையும் இலக்கு வைத்து அடைவதி விடாமுயற்சி உடையவர்கள்.  சுயகவுரவத்திற்காக எதையும் தாங்கும் இதயம் உடைய இவர்களது எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு, இடப்புறம் அதிகமாக சிதறுவதால், மனதில் போட்ட திட்டங்கள், முடியும் நேரத்தில் மனநெருடலை தருவதாக இருக்கும்.

மகிமை பொருந்திய பூமியின் மேல் உள்ள கடல்நீர் மற்ற கிரகங்களின் மேல் ஊற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் ஆகும்.  இதுபோல் இவர்கள் மேல் பற்று வைத்தவர்கள் வேறு யார் பக்கமும் சாயமாட்டார்கள்.  எதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பக்குவம் இவர்களை மாபெரும் ஆற்றல் மிகுந்தவர்களாக வெளிப்படுத்தும்.

தவறு செய்தவர்களை கண்டிப்பதில் யானையைப் போன்றவர்கள்.  சிறப்பான வாழ்க்கை, கம்பீரம், சுதந்திரத்தன்மை போன்றவற்றை அடி பிறழாமல் காப்பாற்றுவார். அரசாங்கப் பதவிகளும், அரசியல் பதவிகளும் விடாமல் துரத்தி வந்து இவர்களை அலங்கரிக்கும்.  பிறர் செய்தது தவறு என்று தெரிந்துவிட்டால் போதும்.  தண்டனையை உடனே நிறைவேற்றிவிடுவர்.

தவறு செய்தவர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு, "நீங்கள்தான் என் தெய்வம், மன்னித்து என்னை நல்வழிப்படுத்துங்கள்" என்றால் போது குழந்தையாகிவிடுவர்.  எதிரிகள் இந்த குணாதிசயத்தை பயன்படுத்தி இவர்களை மாட்டிவிட வாய்ப்புண்டு.  கவனம், நுண்ணிய அறிவு படைத்த இவர்கள், அரிதான விஷயங்களை மிக எளிதாக புரிந்து கொள்வர்.  யூக அடிப்படையிலான ஜோதிடம், சாஸ்திரம், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபட்டால் பெரும் பணமும், புகழும் அடைவர்.

பேச்சுத்திறமை, எழுத்தாற்றல் மிக்கவர்களின் நட்பை பயன்படுத்தி வி.ஐ.பி.க்கள் ஆகிவிடுவர்.  வியாபாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாளர்களாக இருப்பர்.  இதனால் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்து, கோடிகளை அடைந்து உச்சத்தில் இருப்பர்.

வாழ்வில் முதல் பகுதியில் நினைத்துப் பாராத அளவிற்கு புகழ் அடைவர்.  பிற்பகுதியில் பணம் குவியும்.  பொது காரியங்களில் அதிகம் ஈடுபடுவதால் பணத்தால் எந்த டென்ஷனும் இவர்களுக்கு வருவதில்லை.

படாடோபமான வாழ்க்கையில் மிகுந்த விருப்பமுடைய இவர்கள், சுற்றுலா விரும்பிகளாவர்.  நிறைய நண்பர்கள் இருந்தாலும் நெருக்கமாக யாரையும் வைத்துக்கொள்வதில்லை. மாபெரும் நிறுவனங்களின் பொறுப்பு இவர்களை வந்தடையும், அரசின் உயர்பதவிகளில் பதவி பெற வாய்ய்புண்டு. இந்த பெயரைக்கொண்டவர்கள் 2,6 ஆம் தேதி பிறந்திருந்தால் அவமரியாதை ஏற்படும்.

உஷ்ணம், காரம், உப்பு மிகவும் ருசித்து உண்பர்.  சிறிதளவு சாப்பிட்டாலும் சிறப்பாக உண்ண வேண்டும் என்பர்.  அழகை ரசிக்கும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணையும் அழகாகவே அமையும்.  ஆனாலும் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாகவே இருப்பர்.

பகலில் நடப்பவை, சூரிய சக்தியால் இயங்குபவை, உஷ்ணம் சார்ந்தவை, ஏற்றுமதி, இறக்குமதி கமிஷன், கல்வி நிறுவனம் போன்ற தொழில்கள் இவர்களின் பெரும் வெற்றிக்கு வித்திடும். எங்கு சென்றாலும் தனித்துவம் வாய்ந்த இவர்கள், பிறரின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

முதல் எழுத்தாக `J' வைப் பெற்ற பிரபலங்கள்
ஜவகர்லால் நேரு
ஜான்சி ராணி
ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயலலிதா
ஜோதிபாசு
ஜான்.எப்.கென்னடி
கடவுள் பற்றுமிக்க `K' எழுத்து
அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம் மிகுந்தவர்களாகவும் மாயசக்தி, மனோவசியம், கற்பனை வளம், கதை, கட்டுரை படைக்கும் ஆற்றல மிக்கவர்களாகவும் இருப்பர். பிறரின் பாராட்டுதலும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

மனதை ஒருமுகப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்று நினைத்து, அந்த நினைப்பையே ஒருமுகப்படுத்திவிடுவர். இவர்களின் பயந்த சுபாவமே இவர்களுக்கு பலமாகும். பல இடங்களில், "முகத்தைப் பார்த்தாலே பாவமாக உள்ளது. அவருக்கு என்ன வேண்டும் கேள்" எனப் பல பிரபலங்கள், இவர்களின் வேலையை உடனே முடித்துத் தந்துவிடுவர். இவர்கள் எவரையும் நம்புவதில்லை. தன்னுள் உள்ள ஆற்றலை அடிக்கடி மறந்துவிடுவர். ஒன்று மற்றும் எட்டாம் எண்ணினர் மட்டும்தான் இவர்களை வலுவேற்றக்கூடியவர்கள். ஏழாம் எண்ணினரைத் தேர்ந்தெடுத்தல் நலமாகும்.

எந்தச் செயலையும் மிகைப்படுத்திப் பேசுவது இவர்களால் மட்டும்தான் முடியும். பிறருக்குப் போதிப்பதில் புத்தனாவர். அடுத்தவர் ஆலோசனையை இவர்கள் விரும்புவது இல்லை. உடல் உழைப்பை விரும்பாத இவர்களுக்குக் கிடைக்கும் பணிகளும் எளிதாக அமைந்துவிடும். வரவேற்பாளர், ஆசிரியர், திரைப்படக்கதை எழுத்தாளர், ஆன்மீகப் போதனையாளர் போன்ற பணிகளில் இருப்பர்.

ஞானத்தையும் கல்வியையும் அண்டங்களைப் பற்றியும் பேசுவர். பலமுறை யோசித்தாலும் செயற்பட வேண்டிய நேரத்தில் பின்வாங்கிவிடுவது இவர்களின் மனோபாவம். இவர்களின் சாந்தமான முகம் பெண்களுக்கு மிகப் பிடிக்கும். இவர்களாகக் காதலிக்க மாட்டார்கள். ஆனால், இவர்களைக் காதலிக்க பெண்கள் கூட்டமே வரும். காரணம், இவர்களின் அப்பாவியான முகத்தோற்றம்தான். ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமுள்ள இவர்கள், உடையணிவதில் மிகுந்த கவனம் செலுத்தவர். சூழ்நிலைக்கேற்றவாறு தன் செ யற்பாட்டை மாற்றிக்கொள்வதில் வல்லவர். சதாரண விடயங்களைப் பூதாகரப்படுத்துவதில் சூரர். குடும்பத்திற்குள்ளும் எதையாவது இப்படிக் குழப்பிக்கொள்வர். தோல்விகளைக் கண்டு துவண்டுபோவர். இருப்பினும் தோல்விகள் ஏற்படாவண்ணம் செ யல்களை வடிவமைக்க ஒன்றாம் ஏழாம் எண்ணினரை அருகில் வைத்துக்கொள்வது நலம்.

அம்மனின் அனுக்கிரகம் பெற்ற இவர்களுக்குப் பெண்களால் பேருதவி கிடைக்கும். பிறரின் உள்மனதை அறிந்து, அதற்கேற்ப செ யற்படுவது இவர்களின் தனிச்சிறப்பாகும். தெய்வீகம், ஞானம், தத்துவம் என்பனவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. வயிற்று உபாதை, நீர்சம்பந்தமான வியாதிகள் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும். இவற்றைப் போக்குவதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். வானம் கருத்தால் போதும். ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். சித்தா, ஹோமியோ மருத்துவம் இவர்களுக்கு அருமருந்தாகும்.

எழுதுகருவிகள், விவசாயம், பெண்களைக் கவரும் தொழில், தண்ணீர் சம்பந்தமானவை, கடல்வழி வியாபாரம், நகைக்கடை, ஜவுளி, நறுமணப் பொருள், பல்பொருள் அங்காடி, மருந்துக் கடை, திரைப்படம், சோதிடம், சாஸ்திரம், எண்சாத்திரம் போன்றவை இவர்களுக்கு ஒப்பான தொழில்களாகும்.

வம்புச் சண்டைக்குப் போகாத இவர்கள், வந்த சண்டையையும் விட்டுவிடுவர். வசீகரத் தோற்றமுடைய இவர்கள், பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாவதைத் தவிர்க்கவேண்டும். இந்த மனித நேயப் பிரியர்கள், சோம்பலை எதிர்த்து, சுறுசுறுப்பை வரவழைத்து, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நி ச்சயம் வாழ்வில் உயர்வு உண்டு.

முதல் எழுத்தாக 'K'யைப் பெற்றவர்கள்
கிருபானந்த வாரியார்
கண்ணதாசன்
காமராஜர்
கருணாநிதி
கமலஹாசன்
"L" இல் பெயர் துவங்கினால் `லக்கி'தான்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் கொண்ட இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பாய்ந்து பெயர் முழுக்கப் பரவுவதால் பரபரப்பும், சுறுசுறுப்பும், புத்திகூர்மையும், மனதில் பட்டதை தயங்காமல் கூறும் குணாதிசயமும் இவர்களை என்றும் அரங்கத்தில் முந்தியிருக்கச் செய்யும்.

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும்.  உண்மைக்குப் பெயர் போன இவர் களால் உலகிற்கே பெருமை கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள் இவர்கள். இதனால் பலருடைய வருத்தத்தைச் சம்பளமாகப் பெறும் சங்கடங்களுக்கு உட்படுவர். இறைவன் மேல் கடும் பற்று உள்ள இவர்களுக்கு, மத நம்பிக்கையும் அதிகம். ஆனால் மூட நம்பிக்கைகளை அதிகம் வளர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

`புராணங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துக்களையும், சாஸ்திரங்களையும் மனிதர்கள்தானே இயற்றினர்! அதுபோல எனது கருத்துகளும் வருங்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறும்' என இவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறுவர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் நல்ல உழைப்பாளியாகவும், நாணயம் மிகுந்தவராகவும், அடுத்தவர் சொல்லை மதிப்பவராகவும் இருப்பர்.

`திருட்டை ஒழிப்பது எப்படி' எனக் காவல் துறையினரும், சட்ட வல்லுநர்களும்கூட இவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது போதனைகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமுண்டு. இவர்களைக் கொண்டு பொதுக் காரியங்களை எளிதில் மக்களிடம் எடுத்துச் செல்லலாம். அந்தளவிற்கு மக்கள் இவர்களை நம்புவர்.

ஆச்சார, அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள். பல உயர்பதவிகள் இவர்களை நாடி வந்து கொண்டேயிருக்கும். `நாம் இவரைப் போன்று வசதியாக இல்லையே, இந்தப் பதவி கிடைக்காமல் போய்விட்டதே' எனப் பிறரைப் பார்த்துப் பேராசை கொள்ளமாட்டார்கள்.  

ஆசிரியர்களைக் கடவுளாக மதிக்கும் இவர்கள் சுயகௌரவத்தை அதிகம் விரும்புவர். தன் யோசனைப்படிதான் காரியங்கள் நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர். இதனால் நட்புக் கூட்டம் நகர்ந்துபோக வாய்ப்பு உண்டு.  பேச்சாற்றலால் உலகையே வளைக்கும் திறமை உண்டு. அதர்மத்தின் எதிரியான இவர், அசாத்திய துணிச்சல் மிக்கவர்.  கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர். எதிலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு தனித்து நிற்பர். தர்ம காரியங் களில் எப்பொழுதும் தன் மனதை ஈடுபடுத்திக்கொள்வர். ஞாபகசக்தி அதிகம் கொண்ட இவர்கள், சிறந்த நடிகர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், போதனை செய்பவராகவும் திகழ்வர்.  நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்து ஆலோசனை வழங்குவர்.

கருணையும், நீதியும் இயற்கையாகவே கலந்து பெற்ற இவர்கள், கணக்கில் சூரர்களாக இருப்பர். அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை இவர்களால் தவிர்க்க இயலாது. எவ்விடத்திலிருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வர்.  பிறர் கஷ்டங்களை அறிந்து உதவுவர். இவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, பலர் இவர்களைப் பின்பற்றுவதில் பெருமை கொள்வர்.  யூகத்தின் அடிப்படையில் பொருளீட்டுவதில் வல்லவர். கல்வி நிறுவனம், ஆன்மீகப் பொருள் விற்பனை, திரைப்படத் துறை, மருத்துவத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டால் செல்வம் கொழிக்கும்.

நினைத்ததைச் சாதிக்கும் இவர்களுக்கு அலர்ஜி ஏற்படலாம்.  மூளை மட்டும்தான் இவர்களுக்கு முதலீடு. யாரும் எளிதில் மடக்க இயலாத ராஜதந்திரம் படைத்த இவர்கள், 6ஆம் எண்ணினரிடமும் யு, வி, டபிள்யூ என்ற முன்னெழுத் தைப் பெயரில் கொண்டவர்களிடமும் மிகக் கவனமாக நடந்துகொள்வது நல்லது.

9, 1ஆம் எண்ணினரும், சி, ஜி, எல், எஸ் மற்றும் ஏ, ஐ, ஜே, கியூ ஆகியவற்றை முதல் எழுத்தாகப் பெற்றவர்களிடமும் தாராளமாக நட்புக் கொள்ளலாம். முன்னேற்றத்திற்கு மிக உதவிகரமாக இருப்பர். தியாக சீலர்களான இவர்களுக்கு மறுபிறவி இல்லை. உண்மையை, உண்மையாகக் கடைப்பிடித்தால் எதிலும் வெற்றிதான் `எல்' எழுத்தைக் கொண்ட `லக்கி' மனிதர்களுக்கு!

முதல் எழுத்தாக "L" ஐப் பெற்ற பிரபலங்கள்
லால்பகதூர் சாஸ்திரி
லெனின்
லாலா லஜபதிராய்
லியோ டால்ஸ்டாய்
லட்சுமி காந்த் பியாரிலால் (இந்தி இசைமைப்பாளர்)
லட்சுமி (நடிகை)
'M' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M' என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.

இவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். "அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்" எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர்.

உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரசித்து இன்புறுவர். மசால் பொருட்களை உண்பதில் பிரியம் காட்டுவர். தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி, அடுத்தவர்களை அசரச் செய்வர். சோதிடம், சாஸ்திரம், வானியல், விஞ்ஞானம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். தோல்வி என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம் என்பர்.

அரசியல் தந்திரம் வாய்ந்த இவர்கள், பிறருக்குப் புரியாத புதிராக இருப்பர். எது பற்றியும் கவலை கொள்ளாத இவர்கள், வெட்டவெளிச்சமாகத் தன் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்வர். மென்மையான செயற்பாடுகளை எதிர்ப்பார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் இவர்கள், பிறர் கருத்துகளைத் துச்சமாக மதிப்பதை நிறுத்தினால், மேலும் பிரகாசம் அடையலாம். அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இவர்களுக்கு, 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நன்மை செய்வர். மற்றவர்கள் இவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விலகிவிடுவர்.

கருத்துக் கருவூலமான இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. கடுமையான செலவாளியாக இருப்பர். வாசனைத் திரவியங்கள், உயர்ந்த ஆடைகள் போன்றவற்றை விரும்புவர்.

அடிக்கடி மூட்டு வலி, வயிறு சம்பந்தமான நோய்கள், கண்நோய் போன்றவற்றால் அவதி ஏற்படலாம். எந்தச் செயலிலும் லட்சியத்துடன் செயற்படும் வல்லமை வாய்ந்தவர்கள். அரசியல், திரைப்படம், புத்தகம் வெளியிடுதல், இரும்பு, வாகனத் தொழில், இரசாயனம், வழக்கறிஞர், மருத்துவர், கடல் கடந்த வியாபாரம், கட்டடம், கலைப்பொருள் விற்பனை போன்ற தொழில்கள் இவர்களுக்கு வெற்றியளிக்கும்.

சமூக விரோத சக்திகளை சந்தர்ப்பம் அறிந்து தட்டிக் கேட்பது நலம். இல்லையேல் வீண் பிரச்சினைக்கு உட்பட நேரிடும். எந்தத் தொழிலையும் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், ஒரு தொழிலை உறுதியாகப் பற்றுவதால் பொருளாதார ஏற்றம் காணலாம். சமுதாயக் காவலரான இவர்கள், மிகப் பெரிய காரியங்களைக் கூட மிக எளிதில் செய்ய வல்லவர்கள். மாந்திரிகம், பொருள் வரவழைத்தல், ரகசியங்களைத் தெரிந்துகொள்வது இவர்களின் பொழுதுபோக்கு. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிகளில் பதில் அளிக்கும் இவர்கள், ஒரு தகவல் களஞ்சியம்தான்.

`M' எழுத்தை முதல் எழுத்தாக பெற்ற பிரபலங்கள்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
மொரார்ஜி தேசாய்
முத்துராமலிங்கத் தேவர்
முலாயம்சிங் யாதவ்
மைக்கேல் ஜெக்ஸன்
யாராலும் அடக்க முடியாத `N' எழுத்துக்காரர்கள்!
எந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.

நடை, உடை, பாவனைகளாலும் இவர்கள் பிறரை அசத்துவர். ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். பிரபலங்கள் தன் ஆஸ்தான ஆலோசகர்களாக இவர்களை வைத்துக்கொள்வதுண்டு. பிறரின் கருத்துகளை உடனடியாக உட்கிரகித்துக்கொள்வதில் வல்லவர். சினிமா, நாடகங்களில் நீண்ட வசனங்கள் கொடுத்தாலும் நொடியில் பேசிவிடுவர். எதையும் பரபரப்பாகச் செய்வதில் விருப்பம் கொள்வர். இவர்களில் பலர் 9ஆம் வகுப்பு படிக்காமலேயே 12ஆம் வகுப்பு படித்துத் தேறிவிடுவர். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள்.

பழைமை வாதத்தை எதிர்ப்பர். எந்தச் செயலிலும் சிறிதும் தயக்கமின்றி தானியங்கிபோல் தனியராய்ச் செயற்படுவர். மனதில் பட்டதை அப்படியே கூறி, ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் உண்டு. மனிதகுலம் நன்றாக இருக்கப் பாடுபட்டுக் கொண்டே இருப்பர். தூரதேசப் பயணங்களில் விருப்பமுடையவர். பொதுக் காரியங்களில் தானாகவே முன்வந்து செயல் புரிந்து நற்பெயர் எடுப்பர். சிலர் சூதாட்டம், மோட்டார் கார்ப் பந்தயம், அதிர்ஷ்டலாபச் சீட்டு என்பவற்றை நம்பி ஏமாறுவதும் உண்டு.

நல்ல மனதுடைய இவர்களுக்கு ஒரே எதிரி பிறரிடம் முரண்பாடான கருத்துகளை அள்ளிக் கொட்டுவதுதான். இரவு, பகல் பாராது எப்பொழுது எழுப்பினாலும் துள்ளிக் குதித்து ஓடிவருவர். சமுதாய மாற்றங்கள் நிகழவேண்டும், அரைத்த மாவையே அரைக்கக் கூடாது, உயிர்களின் நலனுக்காக சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் எனத் தைரியமாகப் பொது இடங்களில் கூறுவர்.

இவர்களின் பலவீனம் எதுவென்றால், எந்தப் பழக்கத்திற்கு இளவயதில் ஆட்படுகிறார்களோ, அதைக் கடைசிவரை விடமாட்டார்கள். எனவே, சிறு வயது முதல் நல்லவர்களுடன் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. புதுப்புது நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வர். காதலிலும் அப்படித்தான் என்கிறது பெயரியல். பிறர் தவறுகளை மன்னிக்கும் மனப்பாங்கு இவர்களின் நல்ல குணாதிசயம். நாளொரு திட்டத்தை அறிவித்து அசத்துவர். அறையை வாஸ்துப்படி மாற்றுவர். நிறுவன பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவர். கேட்டால், எதில் வேண்டுமானாலும் நல்ல மாற்றங்கள் நிகழும் என்பர். திருமணத்திற்கு முன் பெரியவர்களைக் கேட்டு முடிவெடுப்பது நலம். வஞ்சப் புகழ்ச்சியை உண்மை யெனக் கருதி, எதிரிகளுக்குப் பலவிதங்களில் நன்மை புரிந்து அவர்கள் வாயை அடைத்து இனிய நண்பர்களாக்குவது இவர்களின் சிறப்பாகும். முடியாது எனக் கருதப்படும் வேலைகளை இவர்களிடம் ஒப்படைத்தால், தங்கள் அணுகுமுறையால் வெற்றிகாண்பது நமக்கு பிரமிப்பாக இருக்கும். உடல் உழைப்பு குறைவாகவே இருக்கும். புத்தி கூர்மையால் எளிதான வழியில் பணம் பண்ணுவதில் சமர்த்தர்.

கண்கள் காந்தம்போல் இருக்கும். அரசியல், திரைப்படம், தரகுத் தொழில், சோதிடம், இசை போன்ற துறைகள் வெற்றிதரும். நரம்பு சம்பந்தமான நோய்கள், வாயுக்கோளாறு, உடல்வலி அடிக்கடி ஏற்படும். கணனி போன்ற திறமையான மூளையுள்ள இவர்கள் `கழுவுற மீனில் நழுவுற மீன்' போன்ற குணம் உடையவர்கள்!

`N' எழுத்தை முதல் எழுத்தாக பெற்ற பிரபலங்கள்
நந்தனார்
நேதாஜி
நெல்சன் மண்டேலா
எம். என். நம்பியார்
நாகேஷ்
`O' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்து தான் விளைகின்றன. சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டையாகத்தான் உள்ளன. வேற்றுக் கிரகத்திலிருந்து எந்தப் பொருட்கள் வந்தாலும் அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. தானுண்டு, தன் வேலை உண்டு, யாரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, பிறர் தொந்தரவையும் ஏற்பதில்லை என்றிருக்கும் `O' என்ற எழுத்தில் சூரியக்கதிர்கள் முற்றிலுமாக உட்புக முடியாமல் இருப்பதால் இவ்வெழுத்தில் உள்ளவர்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் முற்றிலுமாக மாறுபாடான குணாதிசயத்தைப் பெற்றவர்களாக இருப்பர்.

ஆன்மீகத் தென்றலான இவர்கள் மாபெரும் ஆராய்ச்சியாளர்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்தி, மனவசியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருப்பர். இவ்வுலகத்தில் நடக்கும் அதர்மங்களை நினைத்துக் கண்ணீர் விடுவர். கானகங்களில் குடியிருக்க விரும்புவர். இருப்பினும் சோம, சுராபானங்களில் மூழ்கிவிடுவர் (போதை வஸ்துக்கள்). 50 வயதிற்கு மேல் உலக விடயங்கள் பொய்யானவை, எதுவும் நிலையற்றது என்று புலம்புவர். ஞான வழியைப் பின்பற்றுவர். சென்ற பிறவியில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற விடயங்களை இவர்கள் மனம் அடிக்கடி அறிவித்துக்கொண்டேயிருக்கும். மனிதர்கள் மனத்திற்கு மாறுபட்ட விடயங்களை அலசுவதும், மாற்று கிரகங்கள் எப்படி இருக்கும், அதில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பது பற்றியும் அனுதினமும் பேசுவர். ஆடைகள் அணிவதில் அன்னம் போன்று பிரகாசிப்பர். கண்களில் தெய்வீகம் தெரியும். மத விடயங்களில் மாபெரும் ஈடுபாடு உண்டு.
உயிர்ப்பலி வேண்டாமென்பர். கடல் கடந்து சென்று ஊதியம் பெறும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் அமைதியுடன் காணப்படும் இவர்கள், தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பிவிடும் குணமும் கொண்டவர்கள். கேட்டால் தத்துவம் என்பர். புலன் அடக்கம் இவர்களுக்கு அதிகம் உண்டு என்றாலும், காதல் தோல்விகளின் கதாநாயகர்களும் இவர்களே. கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். இவர்கள் பேச்சில் மயங்கும் மனிதர்கள் ஒரு கூட்டமாக தினசரி கூடுவர். இவர்களின் கருத்தை கேட்டவண்ணமிருப்பர். கற்பனைக் கடலான இவர்கள் வாழ்வே மாயம் என்பர். மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் இவர்கள் உலகப் புகழ் பெறும் வாய்ப்புகள் உண்டு. எதைச் சொன்னாலும் மக்கள் கேட்டுக்கொள்வர் என்பதால், தேவையற்ற (உலகிற்கு) கருத்துகளைக் கூறுவதை விட்டு விடுவது அனைவருக்கும் நலம். இவர்களின் பல கருத்துகள் தண்ணீரில் எழுத்துப் போன்றவையே.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தி குறைவாக இருக்கும். இதைத் தவிர்க்க தூய்மையான இடங்களில் வசிப்பதும், உணவு அருந்துவதும் மிக முக்கியம். பயணக் கட்டுரை எழுதுவதில் வல்லவர். பொருள் வரவு - பல தடைகளைக் கடந்து வரும். வர ஆரம்பித்தால் அவ்வளவுதான். யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. மனோ தைரியம் அவசியம் வேண்டும். வாழ்வில் மாபெரும் நன்மைகளை இவர்களுக்கு மனமுவந்து செய்பவர்கள் R,K,B என்ற எழுத்துகளில் ஒன்றைப் பெயரின் முதல் எழுத்தாக உடையவர்களே ஆவர்.

இவர்களுக்கு சினிமா, கவிதை, புத்தகம் எழுதுவதாலும், விவசாயம், பால் பண்ணை, காகித ஆலை, இலத்திரனியல், வானசாஸ்திரம் போன்றவையும் பெரும் பொருள் தரும். நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறர் கூறிக்கொள்ளும் அளவிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டுவர். அடுத்தவர் கருத்தை அன்புடன் கேட்பர். தனக்கு ஒத்துவராத காரியங்களில் இறங்கமாட்டார்கள். திடீர் அதிர்ஷ்டத்தில் அறவே நம்பிக்கை இல்லாதவர். அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொள்வர். தலைவலி, தோல்நோய், மூட்டுவலி, வயிறு சம்பந்தமானவற்றை ஒடுக்கி மனச்சோர்வை விட்டு, உணவுக் கட்டுப்பாட்டிற்கு வந்தால் போதும்.

மதப்பற்று அதிகம் உள்ள இவர்கள் மாற்று மதத்தினரையும் மனிதர்களாகக் கருதுவது மாபெரும் மாண்பாகும். குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குதூகலமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ இறை நம்பிக்கை கைகொடுக்கும். `O' வில் பெயர் அமைந்தோர் கூறும் கருத்துக்கள் நன்மையளிக்கும்.

`O' வில் பெயர் அமைந்த பிரபலங்கள்
ஓஷோ (ஞானி)
ஓஸ்கார் ஒயில்ட் (அறிவாளி)
ஓமர்கயாம் (கவிஞர்)
ஓனாசிஸ்
ஒபராய்
ஒபாமா
'U' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
வாழ்க்கை வாழ்வதற்கே, உலக சுகங்களே சுகங்கள் மற்றையவை எல்லாம் போலித்தனமானவை, என்று கூறும் 'U' ன் உள் சூரியக்கதிர்கள் முழுமையாக குவிக்கப்பட்டு உள்ளேயே இருப்பதால் நன்மையும், சில நன்மை குறைவுகளையும் ஏற்படுத் தும். அதிக உஷ்ணத்தை தருவதால் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. அடிக்கடி நீர் சம்பந்தமான நோய் களை தரலாம் (ஜலதோசம் குளிர்ச்சியாலும், உஷ்ணத்தாலும் வரும்).

நடை, உடை, பாவணைகள் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும் இவர்களை. அடிக்கடி அயல் தேசங்களுக்கு பயணிக்க வாய்ப்பு தரும். அறுசுவை உணவை விரும்பி உண்ணும் இவர்கள் - கனிவான பேச்சும் - கவர்ச்சியும் கொண்டவர்கள். அழகை ஆராதிக்கும் இவர்கள் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர்கள். பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பர். இதனால் பலர் இவர்களின் விசிறிகளாகி விடுவர். கஷ்டமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உடல் உழைப்பு என்பது மிகக் குறைவுதான். உலகில் வருங்காலத்தில் நடப்பவைகளை உள்ளுணர்வு மூலம் முன்பே தெரிவிப்பர். சாஸ்திர சம்பிர தாயங்களில் விற்பன்னராக இருப்பர். கலைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டு இருக்கும் வேலையை உதறிவிட்டு விடுவர். எந்த வேலையையும் ஆரம்பித்தால் முடிக்காமல் விடமாட்டார்கள். பூலோக சுகங்கள் கிடைத்த வண்ணமிருக்கும். நல்ல மனோதிடம் படைத்த இவர்கள் C, G, L, S போன்ற முதல் எழுத்துடையவர்களிடம் வீண், வம்பு, வழக்குகளுக்கு செல்லாமல் இருந்தால் கோர்ட்டு, வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மந்திரம், தந்திரம், மாயாஜாலம் மனதிற்கு பிடித்த விஷயம்.
கல்வியிலும் சிறந்து விளங்கும் இவர்களுக்கு உயர் பதவிகள் பல வந்து சேரும். அவ்வப்பொழுது ஏற்படும் தோல்விகளை துரத்திவிடுவர். இளமை காலங்கள் இனிமையான காலம் என்பர். முதுமை என்பது பேச்சில் கூட பிடிக்காது. திடீரென கோபப்படுவது இவர்களின் எதிரியாகும், இதனால் பல காரியங்கள் பாதியில் நின்றுபோக வாய்ப்புள்ளது. பிறந்த தேதிக்கேற்ப பெயர் எழுத்தான 'U' என்ற பாசிடிவ் ஆக துவங்குகிறதா என அவசியம் பார்த்துக் கொள்வதால் பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். புகழுக்கு அடிபணியும் இவர்கள் யாரையும் பாராட்ட தயங்குவர். முக வசீகரம் படைத்த இவர்களுக்கு மேலும் மேலும் பொலிவேற்ற மேக்கப் போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். கலைகளை கரைத்து குடித்திருக்கும் இவர்கள் திறமையாக பிழைத்துக் கொள்வர்.

'U' இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
உஷா உதுப்
உன்னி மேனன்
உன்னி கிருஷ்ணன்
'P' என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும்
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibNlx1p93bAYg1SZ10QzocOpTuA_eTI-PLARqoAslVsjWX4wZ-l33NHCrH4gfABrw6_GzxenuU_ToGWawcK_oVnIB4bgy_euyC_Xm_AaqXbcSZk5WcDeT6hvzdYlYjPxabmz8QstrXIcLh/s400/Padmini_Actress.jpgபிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த 'P' என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அன்பான இவர்களுக்கு அடிக்கடி துன்பங்கள் வந்து ஒரு மகானைப் போன்று மனதை மாற்றிவிடும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து தெய்வீகத்தில் அதிகபட்ச நம்பிக்கை அல்லது நம்பிக்கை குறைவு கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறையிலும் ஆர்வமாக உழைப்பர். இவர்களிடம் மன உறுதி பெற்றவர்களை நோக்கி நல்ல நேரம் தேடிவரும். எங்கு பணியாற்றினாலும் அங்கு இவர்கள்தான் ஆதிக்கம் பெற்றிவராயிருப்பர். பல பேருக்கு உதவிகரமாக இருக்கும் இவர்களுக்கு, யாவரும் உதவமாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சென்று பணம் பெறலாம் என்று துர்போதனை கூறும் நண்பர்கள் சில வேளைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

மனம் ஒரு நிலைப்படாமலும், முடிவெடுக்க முடியாமலும் பல காரியங்கள் சிதைந்து போகலாம். யாருடனும் நெருங்கிய பழகமாட்டார்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி சிக்கல் அல்லது விபத்தில் மாட்டிக் கொள்வர். பொருள் விரையம் அடிக்கடி ஏற்படுவதால் மனம் சஞ்சலமடையும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்துப்படி, ஆனால், முற்போக்குவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வர்.

இரும்பு சம்பந்தமான துறை, மருத்துவம், கிரானைட், சினிமா, எண்ணெய், பெட்ரோல், கெமிக்கல் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. இவற்றில் இருந்தால் பெரும் பொருள் சேர்ப்பர். அழகான தோற்றமிருந்தும் இவர்களுக்கு இளவயதில் திருமணம் நடப்பதில்லை. போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்பு வெகுவேகமாக கிடைக்கும். கவனம் தேவை.

ஏதேனும் ஒரு காரியத்தை பகீரதப் பிரயத்தனம் செய்து முடித்தவுடன் அடுத்த பிரச்னை தலைதூக்கும். வாழ்வில் இன்பங்களை விட துன்பங்களைக் களைவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வர். சாதாரண காரியங்களைக் கூட அதிக முயற்சி செய்தால் தான் முடிக்க முடியும். சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற இவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

இவர்கள் 8, 17, 26 தேதிகளில் பிறந்திருந்தால், கடும் மன உளைச்சலையும், இளவயதில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதும், தொழிலில் இருப்போருக்கு நிர்வாக தொந்தரவுகளுக்கு வழக்குகளும், கல்வித் தடைகளும் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த மகான்களுக்கு இது பொருந்தாது.

'P' எழுத்தை முதல் எழுத்தாக பெற்றவர்கள்

பிரணாப் முகர்ஜி
பிரியங்கா
பத்மினி
பிரபு
பிரசாந்த்
`Y' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
 மற்றவர்களை வழி நடத்தி செல்லும் போக்கும், தனக்கு யாரும் புத்தியை புகட்டக் கூடாது என்பதில் முனைப்பும், புகழில் நாட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், தான் மிகுந்த சக்தியுடையவன் என அடிக்கடி சொல்லிக் கொள்வதுமான குணத்தையுடைய `Y'என்ற எழுத்திற்குரியவர்களுக்கு சூரியக்கதிர்கள் உட்குவிவதால் `பலான' விசயதில் சற்று பவர்புல்லானவர்களாக இருப்பது இயல்பு. நேர்மையின் இலக்கணமாக திகழும் இவர்கள் பெண்களுக்கு அடிபணியும் வாய்ப்பு உள்ளது. வாழ்வில் எவ்வளவு முயற்சி செய்தும் உயர்வுகள் என்னவோ இவர்களை விட்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கும். கையொப்பமிடும் போது இடதுபுறம் சாய்த்து போடுவதால் வந்த வினை இது.
எனவே கையொப்பமிடுவதை `பாசிட்டிவ்' ஆக மாற்றிக்கொண்வது அவசியம். சில வேலைகளில் முடிவெடுக்க தெரியாமல் இருதலைக் கொள்ளியாக அல்லாடுவதை சரி செய்ய தகுந்த ஆலோசனைகளை C,G,L,S பெயராக கொண்டவர்களை நாடுவது சிறப்பாகும். அடிக்கடி ஜலதோசம், காய்ச்சல், மூட்டுவலிகள் ஏற்படலாம். உணவுக்கட்டுப்பாடுடன் உறவு கொண்டு இதை நிறுத்தி வாழ்வில் உயரலாம்.
`Z' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
 தெய்வீகத்தை தன் தனிக்கொள்கையாக கொண்ட இவர்கள் சொல் எந்த இடத்திலும் சபை ஏற மறுக்கும். காரணம் சூரியக்கதிர்கள் தட்டையான மேற்புரத்தில் தங்க முடியாததுதான். மேலும் கர்வம் கொண்டவர்கள் என்ற இலவச பட்டம் வேறு. மக்களிடம் தகுந்த மரியாதை கொண்ட இர்கள் மதத்தின் பேரில் மலையளவு நம்பிக்கை கொண்டவர்கள். ஆன்மீக கருத்துக்கள் பரப்புவதில் வல்லவர்களாவர். யார் எவ்வளவு புத்திமதி சொன்னாலும் தன் முடிவுப்படி தான் நடப்பர். இவர்களிடம் இருக்கும் உன்னதமான சக்தியைப் பயன்படுத்தி பலபேர் காரியங்களை சாதித்துக் கொண்டு இவர்களை கழட்டி விட்டு விடுவது உண்டு. உழைப்பை உயர்வுடன் கருதும் இவர்களுக்கு வேலை வாய்புகள் மிக குறைவாகவே கிடைக்கும்.
இருப்பினும் உணவுக்கு பஞ்சமில்லை. மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருப்பர். கடைசி காலங்களில் மகானுக்கு ஒப்ப இவர்கள் பேசப்படுவர். எந்த காரியத்தையும் அவசரப்படாமல் செய்து வெற்றியின் விளிம்பிற்கு கொண்டுவந்து விட்டு அதன்மேல் சலிப்படைந்து வேண்டாம் என ஒதுக்கி தள்ளி நாட்களையும், பொருட்களையும் வீணடிப்பதை தகர்த்து ஒளிவிளக்காய் திகழ எந்தநிலையிலும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது உயர்வுக்கு வழி தரும்.
'R' இல் பெயர் துவங்கினால் ராஜ்யம் ஆளலாம்
'R' என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர்.

நல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும்.

குடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெரிவிக்க சங்கோஜப்படுவர். அதிக உழைப்பினால் உயர்வுண்டு என்பதை பேச்சில் மட்டுமின்றி செயலிலும் காட்டுவர். பிறர் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நண்பர்களை அதிகமாக பெற்றிருப்பர். எதுவம் தன்னால் முடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டுவர். பல நண்பர்கள் இவர்களுக்கு உதவ காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு ஆட்சிக் கட்டிவில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்.

கண்ணியமான உங்கள் நற்குணத்தால், நாடு போற்றும் அளவிற்கு புகழும், பொருளும் மத்திம வயதில் கிடைக்குமு;. இவர்களிடம் ஆலோசனை கேட்க பெரும் கூட்டமே வரும். ஆனால், இவர்கள்தான் அடுத்தவர் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். ஆழ்நிலை, தவம், தியானம், மேலுலகு, மருத்துவம், பிரணாயாமம், அமானுஷய சக்தி இவற்றில் மனம் அடிக்கடி லயிக்கும். சிலர் அரசியலில் எதிர்பாராத விதமாக புகுந்து கலக்குவர்.

இவர்களை நம்பியவர்களை ஒருநாளும் கைவிட்டு செல்ல மாட்டார்கள். சாதாரணமாக நடக்க வேண்டியதை கூட, யோசனை என்ற பெயரில் நாட்கணக்கில் கிடப்பில் போட்டு விடுவதுண்டு. இவர்களின் கற்பனையில் உதித்த நிகழ்வுகள், நிஜமாகவே நாட்டில் நடக்கும்பொழுது மிகவும் மகிழ்வார்கள். இவர்களின் உயர்வுக்கு, A,C,I,T ஆகிய முதல் எழுத்தில் பெயர் அமைந்தோர் உறுதுணையாக நிற்பர்.

சப்தமில்லாத பேச்சு, நளினமான நடை, இனிய குரல் வளம், மனிதநேயம் போன்றவைகளால் எங்கும், எப்பொழுதும் இவர்கள் விரும்பப்படுவர். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுடனும், இவ்வெண்ணில் பெயர் எண் அமைந்தோரிடமும் முன் ஜாக்கிரதையாக இருப்பது பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாத்தக் கொள்ள உதவும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பலாம்.

இந்த எழுத்தில் பெயர் துவங்கும் பிரபலங்கள்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
ரமண மகரிஷி
ஈ.வெ. ராமசாமி
எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்)
ரஜினிகாந்த்
'S' என்ற எழுத்தில் துவங்கினால் தனித்தன்மை மிளிரும்
முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது 'விதிவிலங்கு' கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.

இறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.

பூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். 'செய்யும் தொழிலே தெய்வம்' கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.

வாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.

பொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்.

'S' இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
சுப்பிரமணிய பாரதி
சத்யஜித்ரே
சஞ்சய்காந்தி
எம்.எஸ். சுப்புலட்சுமி
சிவாஜிகணேசன்
ஸ்ரீதேவி
'T' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
அரசுக்கே ஆலோசனை சொல்வீர்கள்!
'T' என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு பேரைக் கேட்டு செய்வது நல்லது என்று பேச்சுக்கு சொல்லி வைப்பர். இந்த எழுத்தின் மேல் சூரியக்கதிர்கள் பட்டு இடமும் புறமும் சிதறுவதால், இவர்களால் எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வெட்டு ஒன்று, துண்டு மூன்று என்று அதிரடியாகப் பேசும் இவர்கள் சமுதாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் அபரிமிதமான பற்று வைத்திருப்பர். மக்கள் மத்தியில் புதுமை விஷயங்கை பரப்பிக் கொண்டேயிருப்பர. வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள நிலைமைகளை எல்லாம் விபரமாகத் தெரிந்து வந்து மற்றவர்களிடம் பெருமையடிப்பர். சுதந்திரமாக இருக்க விரும்புவர்கள். யாராக இருந்தாலும் தானாக வலிய முன்வந்து நற்பெயர் பெறுவர். முக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கு பெற விரும்புபவர். தானாகவே போய் முன் வரிசையில் அமர்ந்து விடுவர். அது மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும் உதவி செய்வர். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு அதிகம்.

சரித்திரகால சுவடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். மேலும், கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டே இருப்பர். குழந்தைப் பருவதில் அது உளறலாகக் கூட இருக்கும். ஆனால் பிற்காலத்தில் இவர்களுக்கு இதுதான் உரமாக அமைந்து வாழ்வை விருத்தியடையச் செய்யும். அசைபோடுவதிலும், ஆய்வு செய்வதிலும் அலாதி பிரியம் இவர்களுக்கு, திரைப்படத் துறையிலும், அரசியலிலும், அரசு உயர் பதவிகளிலும் அதிக பங்கு கிடைக்கும். இரும்பு, கிரானைட், கெமிக்கல், வக்கீல் தொழில், வானவியல், கார் தொழில்களில் ஜாம்பவனாக இருப்பர்.

நண்பர்கள் இவரைக் கண்டாலே விலகி ஓடுவர். ஆனால், இவர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு. அவர்களுக்காக செலவழிப்பதை கவுரவமாக எடுத்துக்கொண்டு பணத்தை வாரிவிடுவர். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்டுவர். வறுத்து, பொரித்த மசால் அயிட்டங்களை விரும்பி உண்பர். அழகு சாதன பொருட்கள் மேல் ஒரு கண் இவர்களுக்கு.

எப்பொழுதும் பரபரப்பும், மிடுக்குமு;, சுறுசுறுப்பும் நிறைந்த இவர்கள் சமூக சேவைக்காக வீட்டையே மறந்துவிடுவதும் உண்டு. யாராவது இவர்களு;ககு உதவி புரிந்தால், அதற்கு மாற்றாக அதிகம் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என நினைப்பர். தான்தோன்றித்தனமாக நடப்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது.

'உங்களால் முடியாதது ஏதுமில்லை' என ஐஸ் வைத்தால் போதும். அந்த புகழ்ச்சி வார்த்தைகளில் மதிமயங்கி, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்களால் சமுதாயத்திற்கு அதிக நன்மையே. சற்று பிடிவாதம் அதிகம். விட்டுக்கொடுத்து போனால் வெற்றி மேல் வெற்றிதான்.

'T' இல் பெயர் துவங்கும் பிரபலங்கள்
அன்னை தெரசா - சமூக சேவகி
தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி
திப்புசுல்தான் - மன்னர்

'V' யில் துவங்கினால் வெற்றியாளர்கள்
'V' என்ற எழுத்து உலகெங்கும் பிரபலமானது. அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் வரை தங்கள் வெற்றியைக் குறிக்க இந்த எழுத்தைப் போன்ற அடையாளத்தையே இரண்டு விரல்களால் காட்டுகிறார்கள். இந்த எழுத்தில் பெயர் துவங்கினால் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பக்தியாளர்களான இவர்கள் ஆன்மீக உலகில் கால் வைத்தால் சிறந்த எழுத்தாளர்களாக வருவர். கவிதை, கதை, கட்டுரை மற்றும் கலையுலகில் கால் பதித்து வெற்றி பெறுவர். மனதிற்குள்ளேயே ரகசியத்தை புதைத்து வைப்பதில் மகா கில்லாடிகள். இறக்கும் வரை வெளியே சொல்லமாட்டார்கள். இவர்கள் தங்களுக்காகவோ, பிறரைக் கவிழ்க்கவோ செய்யப் போகும் செயல்களை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து அமைதியாகவே செய்வர். தங்களால் யார் கவிழ்ந்தார்களோ, அவர்களிடமே சென்று 'இப்படி ஆகி விட்டதாமே' என்று ஆறுதலும் சொல்லிவிட்டு வந்து விடுவார்கள்.

அப்பாவி போன்ற முகத்தோற்றம் இருந்தாலும், தன்னம்பிக்கை உணர்வுள்ளவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். ஒன்றையே நினைப்பார்கள். சிறப்பாக திட்டமிடுவார்கள். இதில் தோல்வி ஏற்பட்டாலும், 'போனால் போகட்டும் போடா' என்று ஒரு பாட்டு பாடிவிட்டு, மீண்டும் அதே வேலையைத் தொடங்கி ஓயமாட்டார்கள். இவர்கள் ஜோசியக்காரர்கள் மாதிரி. நடந்தது, நடப்பது என புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே அமையும். சிந்தனைவாதிகளான இவர்கள் வேதாந்த கருத்துகளிலும் வல்லவர்கள். இவர்களை உண்மையின் வடிவம் என்றால் மிகையாகாது. நீதித்துறையில் புகுந்தால் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அஞ்சாமல் வாதாடுவார்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இவர்களை வாழ்க்கைத் துணையாக அடைபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பணரீதியாகவும், மனரீதியாகவும் ஆறுதலாக இருப்பர். அறிவாளிகளான இவர்கள் செய்யும் செயல்களுக்காக அரசின் பாராட்டையும் பெறுவர். இவர்களிடம் முரட்டு குணமும் அதிகம். யாரையும் எதற்காகவும் கவிழ்க்க தயங்கமாட்டார்கள். பிச்சைக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. பட்டினி கிடந்தாலும் பிறரிடம் கடன் வாங்கவும் பிடிக்காது. கையேந்திபவன் ஓட்டல்களில் காசு கொடுத்து சாப்பிடுவதைக் கூட கேவலமாக நினைப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

சிக்கனமாக இருப்பார்கள். சேமிப்பை பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். கோபம் அடிக்கடி ஏற்படும். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். கசப்பு சுவையை விரும்புவர். கடவுளின் அருள் கடாட்சம் உண்டு. இந்த எழுத்து இவர்களுக்கு பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் தடை, சகோதர கருத்து வேறுபாடு, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி நேரும். ஆனால், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் என்பதால் இதுபற்றி கவலைப்பட மாட்டார்கள்.

'V' என்ற எழுத்தில் பிறந்த பிரபலங்கள்
என்ற எழுத்தில் பிறந்த பிரபலங்கள்
விவேகானந்தர்
விஜயலட்சுமி பண்டிட் (நேருவின் சகோதரி)
எம்.எல்.வசந்தமாரி (பாடகி)
விஜயகாந்த்
`X' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
நாலா பக்கங்களிலும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வருவதில் அதிக ஆர்வமும், அதைப்போல் செயல்பாடுகளும், பிளான் மனதிற்குள் போடுவதில் வல்லமையும், பிறர் உள் மனதை எளிதில் தெரிந்து கொண்டு அவர்கள் நினைப்பதிற்கேற்ப செயல்புரிந்து அவர்களை வளைத்து போடுவதும், ஜனங்களை வசீகரிக்கும் திறமையும், புகழ் தன்னைத் தேடி வருவது போல் செய்துவிடும் பக்குவமும், எந்த பணியிலிருந்தாலும் அதை தன் சொந்த பணியாக ஏற்றுக்கொள்வதும், பிறர் ஒதுக்கிய காரியங்களை மிக எளிதில் செய்து விரைவாக பணியாற்றுகிறார் என்ற பெயரும், தன்மேல் அதீத நம்பிக்கையும் கொண்ட `X' என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக பெற்ற உங்களுக்கு சூரியக்கதிர்களின் ஒரு புள்ளி குவிப்பு உள்ளேயே இருந்து செயல்படுவதால் கண்களிலும், பேச்சுவன்மையிலும், காதல் கலைகளிலும் நீங்கள் ஒரு ஜாம்பவான்தான்.
எந்த இடத்தில் வேலை செய்தாலும் அங்கே உங்கள் சுறுசுறுப்பு பற்றி ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கும். மூளையைப் போட்டு கசக்கி கொண்டிருக்கும் இக்கட்டான பணி பற்றிய செய்தி தெரிவித்தால் ப்பூ இவ்வளவுதானா இதோ முடித்து தருகிறேன் என்று மழைக்கு முன் ஏற்படும் `மின்னல்' போல் பளிச்சென முடித்து ஒரு புன்னகையை வெட்டுவது உங்களால் மட்டும் முடியும். உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு சான்றோர்களே அறிந்திராத தகவல்களை திரட்டி அவர்களையும் மிரட்டும் உங்களைக் கண்டாலே, நான்தான் பெரியவன் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட மிரள்வது வேடிக்கைதான். அயல் தேசங்களில் சென்று சுற்றித் திரிந்த சுகம் காண்பீர்கள். மடைதிறந்த வெள்ளமென புதுமையான கருத்துக்களும், மதிநுட்பமும், சிந்தனை வேகமும் கிடைத்துக்கொண்டிருப்பது மிகப்பெரிய `கிப்ட்'தான். எங்கு சென்றாலும் உங்களின் அட்வான்ஸ் குணத்தால் அளவிற்கடங்கா நண்பர்கள் சேர்க்கை உண்டு.
சோம்பேறிகளை கண்டால் சுத்தமாக பிடிக்காது. உலகம் அனைவரும் சுபிட்சமாக வாழ ஏதேனும் ஒரு உதவிகளை மனமாற செய்து கொண்டே இருப்பர். கலைநயமும், கருத்தாழம் மிகுந்த பேச்சும், நகைச்சுவை உணர்வும் தங்களின் தரத்தை உயர்த்திக் கொண்டேயிருக்கும். தோல்விகளைக் கண்டு துச்சமாக மதிக்கும் உங்களுக்கு கால் நரம்பு இழுப்பு; கண்களில் உபாதை, பலக்குறைவு, உடல் அசதி போன்றவைகளை நாற்பது வயதிற்கு மேல் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் உணவு கட்டுப்பாடுடன் இருந்து உலகிற்கு மேலும் உதவிடலாம். திடீர், திடீரென திட்டங்களை மாற்றிக்கொள்வது, எந்த செயலிலும் அதிக அவசரம் காட்டுவது, படைத்தவன் நான்முகன் என்றால் `ஐந்து முகன்' என்று கூறி அடம்பிடிப்பது போன்ற முரண்பட்ட கருத்துக்களை விட்டுவிட்டால் நிச்சயம் நாடு போற்றும் நாயகனாக வலம் வருவது உறுதி வெற்றி வீரர்களே!
'W' என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா?
வெற்றி பெறும் காரியங்களை மட்டும் தன் அறிவாற்றலினால் எடுத்துக்கொண்டு அதிலேயே முனைப்பாக செயல்பட்டு வெற்றிக்கனியை வெகு எளிதில் பெற்றுவிடும் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் இரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளேயே தங்கி விடுவதால் அடிக்கடி ஜலதோசம், தும்மல், இருமல் போன்றவற்றை வாரி வழங்கும், தங்களின் தனி முயற்சியால் முத்திரை பதிக்கும் செயல்களால் பெரும் பெயர் பெறுவீர்கள், காதல் திருமணங்களை செய்து புரட்சிகளை ஏற்படுத்துவீர்கள். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு முனைப்பு, ஒழுங்குடன் செயல் புரிவதால் ஏற்றத்தை மிக விரைவில் சந்திக்க முடியும். பிரபலங்கள் உங்கள் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல விதங்களில் நன்மைகள் புரிவர்.
வெள்ளை நிறத்தையும், பச்சை நிறத்தையும் அதிகம் விரும்பும் நீங்கள் வெகுளித்தனமாகவும் இருப்பீர்கள். சிறு வயதிலேயே வீடு, வாகனம், ஆள்பலம் போன்றவற்றை பெற்று அனுபவிப்பீர்கள், பெண்களால் வெகு எளிதில் சுவரப்படுவதை தங்களின் 'பிளஸ்' பாயிண்ட் என கருதி வியாதிகளை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு, பெற்றோர்கள் சொல்படி கேட்காதது இவர்களின் 'மைனஸ்'. இதனால் பல பின்னடைவுகள் உண்டு என்பதை மனதில் கொள்க. பல இடங்களில் இவர்களின் சமயோசித புத்தியால் புகழ்ப்படுவர். எந்த வேண்டாத நிகழ்வுகளையும் தன் மன உறுதியால் விரட்டியடிக்கும் சக்தி பெற்ற இவர்கள் C,G,L,S - ஐ முதல் எழுத்தாக பெயரில் பெற்றவர்களிடம் மட்டும் அடங்கி போய்விடுவர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் இவர்கள் அரசியலை விட, திரைப்பட துறையில் அதிகம் ஜொலிப்பர். சந்தில் 'சிந்து' பாடும் இவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கடும் கோபம் என்பது வராது. துவங்கும் தொழிலில் முனைப்புடன் செயல்பட்டாலும் அடிக்கடி தொழிலை மாற்றிக்கொள்ளும் சுபாவத்தினால் நிலையில்லா கொள்கையுடையவர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது நிலையை விட மேல் நிலையானவர்களே வாழ்வின் துணையாக கிடைப்பர், இருப்பினும் இதைவிட மேலானது எது என மீண்டும் தேடுவதை நிறுத்தினால் நிலையான வாழ்வை நீடித்து அடையலாம். பெரும்பாலும் கலைத்துறையிலும், அரசியலிலும், ஆன்மீகத்திலும், புத்தக வெளியீட்டாளர்களாகவும், மாபெரும் தொழில் அதிபர்களாகவும் அழகு நிலையங்களின் உரிமையாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும், ஆபரண கடை முதலாளிகளாகவும், கார், விமானம், கப்பல் பயண அதிபர்களாகவும் திகழ்வது இவர்களின் ஆள் பலத்தை அதிகரிக்க செய்யும். முக்காலத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் உள்ள இவர்கள் மது, மாது, சூது இந்த மூன்றையும் தவிர்ப்பது நலமாகும். எந்த காரியத்திலும் தன்னலம் நிறைந்து நிற்கும், நீர் மற்றும் காமத்தால் ஏற்படும் நோய்களிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நலம், எப்படியோ வாழ்வை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இந்த 'வின்'னர்கள்.

Wஎழுத்தில் பிறந்தவர்கள்
வின்ஸ்டன் சர்ச்சில்

No comments:

Post a Comment