Tuesday, 17 February 2015

சந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா ?

சந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா ?



பொதுவாக சந்திரன் ராசிக்கு, எட்டம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது , ஜாதகருக்கு மன ரீதியான சிறு பிரச்சனைகளும் , உடல் ரீதியான சிறு பாதிப்புகளையும் , மற்றவர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வழங்கும் என்பாதாக பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , அதிலும் குறிப்பாக தொலைகாட்சியில் ராசி பலன்கள் செல்லும் ஜோதிட மாமணிகளின் கணிப்பு என்பது சந்திராஷ்டமத்தல் பலன் பெரும் ராசி அன்பர்களின் நிலை பற்றி, மிகவும் மோசமாக பலன் சொல்வது என்பது சர்வ சாதரணமாக இருக்கிறது , சந்திராஷ்டமத்தில் குறிப்பிட்ட ராசி அமைப்பை சார்ந்தவர்கள் இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று சொன்னாலும் சொல்ல கூடும் அன்பர்களே ! இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .

பொதுவாக ராசி அமைப்பை வைத்து பலன் சொல்வது என்பது ? எங்க ஆத்துக்காரரும் பஞ்சாயத்துக்கு போகிறார் என்பதற்கு ஒப்பானது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுதே ஜாதகரின் உண்மை நிலையம் , தற்பொழுது ஜாதகருக்கு நடந்துகொண்டு இருந்த , இருக்கின்ற , இருக்க போகிற பலன்களை தெளிவாக, துல்லியமாக எடுத்து சொல்ல இயலும்.

குறிப்பாக ஒருவருடைய ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து சிறப்பான பலனை தந்துகொண்டு (திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்) இருக்கும் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது அந்த பாவகம் கோண வீடாக இருந்து , சந்திரன் கோண அதிபதியாக குறிப்பிட்ட பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது மிகுந்த நன்மையையே செய்வார் , இங்கே சந்திரன் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம், லக்கினத்தில் இருந்து பாவக அமைப்பிற்கு நன்மை செய்யும் பொழுது, சந்திராஷ்டமம் மிகுந்த நன்மையே செய்யும் . 

எடுத்துகாட்டாக :

ஒரு மேஷ இலக்கின , கடக ராசி ஜாதகருக்கு, தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி 11ம் பாவகத்தின் பலனை செய்கிறது என்று வைத்துகொண்டால், லக்கினத்திற்கு 11ம் பாவகமான  கும்பத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ( அவர் தேய்பிறை சந்திரன் என்றாலும் சரி , வளர் பிறை சந்திரன் என்றாலும் சரி ) 100 சதவிகித நன்மையே செய்வார் , இங்கே சந்திரன் கடக ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்கிறார் ( சந்திராஷ்டமம்) என்று ஜாதகர் கவலை கொள்ள தேவையில்லை .

இங்கே ஜாதகருக்கு 11ம் பாவகத்தின் பலனே மிகுந்து நடக்கும் ராசிக்கு சந்திரன் எப்படி இருந்தாலும் அதை பற்றி எவ்வித கவலையும் நாம் கொள்ளத்தேவையில்லை என்பதே எமது கருத்து , இதில் பதினொன்றாம் பாவகமான மகரம் ஸ்திர காற்று தத்துவம் என்பதால் கும்பத்தில்  உலவும் சந்திரன் ஜாதகருக்கு ஸ்திரமான அறிவாற்றலையும் சிறந்த புத்திசாலித்தனத்தையும் விரைந்து தருவார் , அப்பொழுது ஜாதகரின் நடவடிக்கை என்பது மற்றவர்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் , ஜாதகருக்கு லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதாக இருக்கும் என்பதே உண்மை .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் கானும்போழுதே சரியான பலன்களை சொல்ல இயலும் , பல ஜோதிடர்கள் இன்றைய ராசிபலன் என்ற தலைப்பில் பலன் சொல்கிறார்களே , இவர்கள் மனிதர்களுக்கு ராசி பலன் சொல்கிறார்களா? அல்லது 12 ராசிகளுக்கு பலன் சொல்கிறார்களா ? என்ற சந்தேகம் ஜோதிட தீபத்திற்கு பல நாட்களாக உண்டு. மனிதர்களுக்கு சொன்னால் நிச்சயம் அந்த மனிதனின் சுய ஜாதகம் இல்லாமல் பலன் சொல்ல இயலாது ? ராசிகளுக்கு சொன்னால் இவர்கள் சொல்லும் பலன்களை கேட்டு அதன் படி நடக்கூடிய நிலையில் 12 ராசிகளும் இல்லை என்பதே உண்மை .

ஆக சந்திராஷ்டமம் என்பது தங்களுது சுய ஜாதகத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை , இதை போன்று ராசி பலன் சொல்வதை கேட்டு , அன்றைய கடைமைகளில் இருந்து தவறுவது என்பது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மேலும் காலம் கண்போன்றது அதை சரியாக பயன்படுத்து அன்பர்களே வாழ்க்கையில்  மற்றவர்களை விட ஒரு படியாவது முன் நிற்கின்றனர் , மற்ற அனைவரும் கால நேரத்தை குறை சொல்லிக்கொண்டு தோல்வியையே தழுவுகின்றனர், இறை நிலை தங்களுக்கு வழங்கி இருக்கும் நல்ல நேரத்தை தவற விடாமல் பயன்படுத்தி  வாழ்க்கையில் 100 சதவிகித வெற்றியை பெறுங்கள் .

உண்மையில் அஷ்டமம் எனும் 8ம் பாவகம் இரண்டு விதமான நன்மை தீமை பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது, ஒருவருக்கு இந்த 8ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும் , தனது நண்பர்கள் வழியில் இருந்தும் திடீர் தான சேர்க்கையும் , திடீர் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் தரும் , மேலும் பொதுமக்களை தொடர்பு படுத்தி  செய்யும் அரசியல் , தொழில் , பொது சேவை ஆகியவற்றில் இருந்து 100 சதவிகித வெற்றியை தரும் , ஒருவேளை அந்த ஜாதகருக்கு இந்த 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மேற்கண்ட அமைப்பில் இருந்து கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் தரும் மேலும் வாழ்க்கை துணை , நண்பர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே ஒவ்வொரு பாவகமும் இரண்டு வித பலனை வழங்கும் என்பதே உண்மை , நல்ல நிலையில் இருந்தால் நன்மையையும் பாதிக்கபட்டு இருந்தால் தீமையும் வழங்கும் என்பதனை ஜோதிட கணிதம் கொண்டு ஆராய்ந்தால் , தெளிவாக புரிந்து கொள்ள இயலும்

No comments:

Post a Comment