Tuesday 17 February 2015

அளவற்ற நன்மைகள் வாரி வழங்கும் புரட்டாசி அமாவாசை வழிபாடு !

அளவற்ற நன்மைகள் வாரி வழங்கும் புரட்டாசி அமாவாசை வழிபாடு !



புத்திர பாக்கியம் உண்டாக :

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல், குடும்பத்தில் குழந்தை செல்வம் இருப்பின் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை என்பதே இருக்காது, பல காலங்கள் அல்லது வருடங்கள் குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியர்கள் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தங்களது குல தேவதை எங்கு உள்ளதோ அங்கு சென்று , தங்களது வழக்கமான குல தேவதை வழிபாட்டினை செய்யும் பொழுதும் , தங்களது பிதுருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யும் பொழுது 54 வருடங்களாக இருந்துவரும் குல தெய்வ சாபமும், பித்ரு சாபமும் நீங்கி எதிர்வரும் ஒருவருட காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், புத்திர சந்தானமும் உண்டாகும்.

கல்வியில் தடை நீங்க :

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கு ஏற்ற போல் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கல்வியில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் வெற்றிவாகை சூட , எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் குலதேவதைக்கு வஸ்திர தானம் செய்து வழிபடும்பொழுது சம்பந்த பட்ட குழந்தைகள் கல்வியில் மிகப்பெரிய வெற்றியையும் , சிறந்த மதிப்பெண்களையும் பெறுவார்கள்.

 மேலும் தான் கற்ற கல்வியின் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த உறவுகளுக்கும் பெற்றோருக்கும், வாழ்க்கையை கற்றுத்தரும் இந்த சமுதயத்திற்கும் பயனுள்ள வகையில் தனது வாழ்க்கையை தானாகவே சுயமாக அமைத்துகொள்ளும் தன்மையை பெறுவார்கள், எவருடைய உதவியும் நாடாமல் தனது சொந்த காலில் நிற்கும் தனி திறமையை தரும் மேற்கண்ட குல தேவதை வழிபாடு.

உடல் நலம் மேலோங்கவும், விபத்தினை தவிர்க்கவும் :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத விஷயமாக கருதலாம், பல இடங்களுக்கு சென்று வரும் நமக்கு எந்த நேரத்தில் என்ன ? நேரும் என்று சொல்ல இயலாது, ஒரு விபத்தில் உயிர் பிழைக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் வாக்கியம் "என்ன புண்ணியம் செய்தார்களோ இவரது பெற்றோர்கள்" பெரிய பாதிப்பில்லாமல் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டார் என்பதாக இருக்கும் , இந்த புண்ணிய பதிவினை ஜாதகனுக்கு சரியான நேரத்தில் கொடுத்து உயிர் காக்கும் தன்மையை தருவது பித்ரு வழிபாடு என்றால் அது மிகையில்லை.

 ஒருவர் அல்லது அவரை சார்ந்த முன்னோர்கள் பல புண்ணிய காரியங்களை செய்திருந்தாலும் அதை பெறுவதற்கு, சம்பந்த பட்ட ஜாதகர் வருடம் தவறாமல் பித்ரு கடமையை செய்து வந்தால் மட்டுமே, ஜாதகர் தாம், தமது முன்னோர்கள் செய்த புண்ணிய பதிவின் பலன்களை அனுபவிக்க இயலும், எனவே எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் பித்ரு கடமைகளை முறையாக பிண்டம் வைத்து செய்யும் பொழுது , சம்பந்தபட்ட ஜாதகரின் குடும்பத்தில் உடல் நலம் இன்றி இருந்தவர்களின் ஆரோக்கியம் மேம்படும், திடீர் என நிகழும் விபத்துகளில் இருந்து ஜாதகரும், ஜாதகரின் குடும்பமும் காப்பாற்ற படும் .

செய்யும் தொழில் சிறக்கவும், திடீர் பொருள் இழப்பை தவிர்க்கவும் :

சில அன்பர்கள் செய்யும் தொழில் திடீர் என முடங்கிவிடும், அல்லது பணியாற்றும் இடத்தில் இருந்து வேலை பறிபோய்விடும், இதனால் ஜாதகர் செய்வது அறியாமல் திகைக்கும் சூழ்நிலையை தரும் , சில நேரங்களில் கூட்டு  தொழில் செய்யும் அன்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு தொழில் பிரிவினை ஏற்படும் , இதனால் சம்பந்தபட்ட இருவரும் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், மேலும் செய்யும் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான தொழில் சிக்கல்களை தர கூடும் இதனால் ஜாதகரும், ஜாதகரை சார்ந்தவர்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

 இந்த நிலையில் இருந்து மீண்டு வரவும் செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம் பெறவும், திடீர் பண பொருள் இழப்பில் இருந்து மீண்டு செய்யும் தொழில் முன்னேற்ற பாதையிலே செல்லவும் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெறவும், ஜாதகர் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தேவதைக்கு பால்,தேன்,இளநீர்,மஞ்சள்,குங்கும அபிஷேகம் செய்து , கனி வகைகளை தானம் செய்து தொழில் முன்னேற்றத்தை பெறலாம், இதை தொடர்ந்து வருடம் தவறாமல் செய்யும் பொழுது ஜாதகருக்கு படிப்படியான தொழில் முன்னேற்றத்தை மட்டுமே இறைஅருள் தந்துகொண்டு இருக்கும் .

திருமண தடை நீங்கவும் தம்பதியர் ஒற்றுமை ஓங்கவும் :

சரியான பருவ வயதில் திருமணம் நடை பெறாமல், திருமணம் வாழ்க்கை தள்ளி போவதற்கும், திருமணம் ஆன தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு திருமண வாழ்க்கையில் மன முறிவு ஏற்படுவதற்கும் அதி முக்கிய காரணமாக அவர்களது ஜாதகத்தில் பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமுமே காரணமாக அமைகிறது, குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த நிலை ஏற்ப்படும் பொழுது அவர்களின் வாழ்க்கை நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது, பெற்றோர் அதரவின்றியும், வாழ்க்கை துணையின் ஆதரவின்றியும், சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, கடுமையான மன போராட்டத்திற்கு தள்ளிவிடும் தன்மையை தரும்.

 மேலும் வாழ்க்கையை நேர்கோட்டில் வழ தவறிவிட்டால் அவர்களின் நிலை இதைவிட மோசமான சூழ்நிலையையும், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையை தந்துவிடும் , இந்த நிலையில் இருந்து சம்பந்தபட்டவர்கள் வாழ்க்கை நிலை மாறவும், தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பான திருமண வாழ்க்கை அமையவும் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில், அவரவர் குல தெய்வ கோவிலுக்கு சென்று தனது பெற்றோர்களுக்கு புத்தாடை தானம் செய்து ( அல்லது பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் ) அவர்கள் கையால் அட்சதை ஆசிர்வாதம் பெற்றால், சம்பந்த பட்ட அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் சிறப்பான முறையில் அமையும், திருமணம் செய்துகொண்ட தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தாம்பத்தியம் சிறக்கும், மன வாழ்க்கை இனிக்கும் .

மேற்கண்ட பெருமைகள் பெற்ற புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தெய்வ கடமையையும், பித்ரு கடமையையும், பிராமண தர்மத்தையும் சிரத்தையுடன் செய்து தங்களது வாழ்க்கையில் இறையருளின் கருணையினால் சகல நலன்களையும் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறை அருள் துணை நிற்கட்டும் .

No comments:

Post a Comment